இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

ஓவியம் - AI -
இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம். எந்த அளவாக நாம் இருக்கின்றோம், எமது அறிவு பிற உயிர்களுடன் ஒப்பிடும் பொழுது எப்படியானது என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரை.
நாம் வாழும் பூமி சூரியக்குடும்பத்தைச் சேர்ந்தது. இச்சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்களும், அக்கிரகங்கள் பிரயாணம் செய்கின்ற பாதைகளும் அமைந்த பரப்பு சிற்றண்டம் என்று அழைக்கப்படும். நாம் வாழுகின்ற பூமி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வரும் பாதை இந்தச் சிற்றண்டத்திலேயே அடங்குகின்றது. 1008 சிற்றண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு பேரண்டமாகும். 1002 பேரண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு புவனம் ஆகும். 2214 புவனங்கள் சேர்ந்த பரப்பு சாகரம் எனப்படுகின்றது. 7 சாகரங்கள் சேர்ந்த பரப்பு பதம் எனப்படுகிறது. 814 பதங்கள் சேர்ந்ததே இந்தப் பிரபஞ்சம் என பிரபஞ்சப் படைப்புப் பற்றித் “தொன்மைத் தத்துவங்களும் அண்மை அறிவியலும்” 1 என்னும் நூலில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் வாழும் பூமி 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீற்றர் கொண்டது. எனவே நாம் வாழுகின்ற பூமியில் நாம் வாழும் பகுதி எந்த அளவில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எந்த அளவில் இருக்கின்றோம் என்பதை இப்போது எம்மால் அறியக் கூடியதாக இருக்கின்றது.
நாங்கள் கண் இமைக்கின்ற நொடிக்குள் 60.000 நட்சத்திரங்கள் பிறக்கும். 60 மில்லியன் கோள்கள் உருவாகும். எங்களுடைய பால்வீதி 1000 கிலோ மீற்றர் கடந்து போயிருக்கும். 120 கருந்துளைகள் (Black Holes) உருவாகியிருக்கும். 1200 நட்சத்திரங்கள் வெடித்திருக்கும். இந்தப் பிரபஞ்சம் 20 கோடி விரிவடைந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இங்கு எங்களுடைய பங்கு என்ன இருக்கிறது.



கலாசாதனா கலைக்கூட நடன ஆசிரியை கவிதாலக்ஷ்மி அவர்களது மாணவிகள் ஹரிணி நகுலேஸ்வரதாஸ், தீபிகா மகேசன் இருவரும் 17.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு நோர்வே ஒஸ்லோ Sandvika Teater இல் ‘’தீதும் நன்றும்’’ எனும் தலைப்பில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தந்தனர். அன்றைய பொழுதைக் கலைப் பொழுதாக்கி கண்களுக்கும் மனதுக்கும் இரசனைப் பொழுதாக அமைத்துத் தந்த ஆடலரசிகள் இருவரும் பாராட்டுதல்களுக்குரியவர்களாவர்.



நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
இப்போது முருகேசர் முழுவதுமாகவே மாறிவிட்டார். இதை பெரியவன் சபேசன் அவதானிக்காமல் இல்லை.
மண்ணிலே நல்ல வண்ணம்

அழகனவன்
ஜோதிக்கு சாவு வீட்டுக்குச் செல்லும் சரியானத் தோரணை வந்துவிட்டது. தோரணை என்றால் அதற்கான இணக்கமாக்கிக் கொண்டு சாவு வீட்டுக்குச் செல்வது. முதலில் பொட்டு இடுவதை தவிர்த்து விடுவாள். சாதாரண சேவை உடுத்துவாள். எந்த வகையிலும் கவனம் பெற தக்க வகையில் சேலை இருக்காது. ஜாக்கிரதையாக சோகத்தை வரவழைத்துக் கொள்வாள். சாவு வீட்டுக்குச் செல்வதற்கான சரியான ஏற்பாட்டில் கண்ணீரை உற்பத்தி செய்து கொள்வாள். அப்படித்தான் சுகுமாரன் உறவு சார்ந்த ஒரு சாவிற்கு அன்று செல்ல வேண்டி இருந்தது.


இந்த அகாலத்தில்
மனிதமே உருவும்; என்றும்
' நான், இதுவரையில் காதல் கதை எழுதியதில்லை . ஏன் , எழுதக் கூடாது ? ... உமா உனக்கு ஏன் இப்படி , பையித்தியக்கார எண்ணங்கள் எல்லாம் வருகின்றன ' . நம்மவர்களிற்கு தமிழீழக்கனவு வரவில்லையா , அப்படி . கூடவே ,சொரூபி சரஸ்வதிப்பூஜையின் போது குச்சுப்பிடி பிடித்தது அவன் நினைவிற்கு வந்தது . நடனம் பழகியவள் , ஆடினாள் . குட்டிப் பெட்டை . நானும் அன்று குருணி தான் . கண் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன் .சினிமாவிலே அக்கா , அம்மாமார் ஆடுறதைப் பார்த்திருக்கிறேன். ' பத்மினி , தாரகை , இந்த குண்டு அம்மாவால் எப்படி உடம்பை வளைத்து , கிளைத்து உடற்பயிற்சி எடுக்க முடிகிறது ' ஆச்சரியம் என்றாலும் அங்கே அம்மா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது . உமாவிற்கு , இடம் பெயர்ந்த பிறகு இப்படி ஊர் நினைப்புகளை அசை போடுவதே பழக்கமாகி போய் விட்டது . இலங்கையோ... நம் தாய்நாடில்லை 'என்று மறக்க வைக்க முயல்கிறார்கள் . முட்டாள்கள் . இறந்த பிறகு 'ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது ' என்பது அவர்களுக்குப் புரியவில்லை . மறை இருந்தால் அல்லவா புரிவதற்கு ? . நம் பிராய காலத்தையாவது கலாயிப்போம் என நினைப்பை மாற்றினான்.
சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி. 




அப்பாச்சி அடிக்கடி சொல்வாள்.
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயன்படும் ஊர்தியே தேர்.அந்தத் தேரை ஓட்டுபவர் தேர்ப்பாகன் என்று அழைக்கப்பட்டார். நால்வகை படைகளில் ஒன்று தேர்ப் படையாகும். தேரில் நகர்ந்து தாக்கும் படை தேர்ப் படை. தேரில் குதிரைகள் பூட்டப்பட்டன. அதைத் தேர்ப்பாகன் செலுத்தினான். தேரை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். .சங்க இலக்கியத்தில் தேர்ப்பாகன் குறித்து நிறைய குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. கம்பரும் தன் இராமாயணத்தில் தேர்ப்பாகன் குறித்து கூறியுள்ள செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









