ஓவியம் AI -
காக்கைவிடுதாது ஆசிரியா பாந்தவூர் வெண்கோழியார் ஆவார். புறப்பொருள் பற்றிய தூது நூலாகும். 1937-39ஆ ம் ஆண்டு வரை சென்னை மாநில முதலமைச்சராக பள்ளிகளில் கட்டாயமாக்கப் பெறவில்லை. ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது அந்திலையில் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் இந்தி மொழியினைக் கட்டாயப்பாடமாக்க உத்தரவிட்டார். அப்பொழுது தமிழ் விருப்பப்படாமாகவே இருந்தது. தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்காமல் அயல் மொழியாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாக்குதல் கூடாது என மறைமலை அடிகளார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பேராசிரியர் சோமசுந்தரபாரதியார், தமிழ்வேள் உமாமகேசுவரம் பிள்ளை போன்றோர் இத்திட்டத்தினை எதிர்த்தனர் மூதறிஞர் இராசாசி அவர்கள் நமது கட்சிப் பெரும்பான்மையைக் கொண்டு தமது திட்டத்தை கைவிட வில்லை இதிட்டத்தை எதிர்த்து பெரியார், துறவிகள், பெண்கள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சூழலில் 1989 ஆம் ஆண்டில் பாடப்பெற்றதே காக்கைவிடு தூது என்னும் நூலாகும்.
அண்டங்காக்கை - பெயர்க்காரணம்
கருங்காக்கையை அண்டங்காக்கை என நிறத்தை மையப்படுத்தி மனிதர்கள் கூறுவதுண்டு ஆனால் ஆசிரியரோ கடவுளுக்கும் கருமை நிறம் உண்டு உனக்கும் கருமைநிறம் உண்டு. அண்டம் என்றால் உலகம், காக்கை என்பதற்கு காத்தல் என்று பொருளும் உண்டு. ஆக அண்டங்காக்கை என்பது உன் நிறம் குறித்துக் கூறுவதன்று. உன்னைப் பெருமைப்படுத்தும் பெயர் என்கிறார். இதனை,
"அண்டங்காக கையென்ன ஆயினாய்
மண்டு நிறத்தைக் கருதாது
நின்பெருமை நின்னை யுறவே
கருங்காக்கை யென்பர் திறல்சேர்
கருமைநிறத் தானுங் கடவுளமைத்திட்ட
பெருமை யடையாளப் பேரே"
என்ற பாடலடிகள் வழி அறிந்து கொள்ளலாம்.
காக்கை தேன் போன்ற வண்டமிழை கா…கா…. என்று தமிழ் பேசி உலகில் பரப்பி வருவதாகவும், உலகத்தைக் காக்க கூவியதனால் அண்டங்காக்கை என்று பெயர் பெற்றதாகவும் ஆசிரியர் கூறுவது எண்ணுவதற்குரியது. மேலும் ஆசிரியர் கருமையே காக்கையின் நிறம் எனினும் அந்நிறம் கடவுளுக்கும் உரிய நிறம் என்பதனால் காக்கையின் நிறமும் பெருமைக்குரியது என்கிறார்.
"காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா"
என்ற வரிகளில் பாரதியார் காக்கைக்கும் திருமாலுக்கும் கருமை நிறம் உள்ளதைக் காட்டுகின்றார்.
காக்கையின் சிறப்பு
மக்கள் அனைவரும் காக்கையை தங்கள் முன்னோர்களாகக் கருதுகின்றனர். ஆகையால் உணவு உண்ணும் முன்னர் காக்கைக்கு முதலில் உணவினைப் படைப்பதைப் பண்டைக் காலந்தொட்டு வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
''பல்லோருந் தாமுண்ணு முன்னர்த்
தனை நினைந்தவ் வின்னடிசில்
ஏம முடனேற்க என்றுரைக்கும்"
என்கிறார் ஆசிரியர். காக்கை பற்றிய நம்பிக்கை சங்க காலத்திலிருந்தே இருந்து வருகிறது. சான்றாக,
"திண்தேர் நள்ளி கானத் தண்டர்
பல்ஆ பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
ஒருகலத் தேந்தினுஞ் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே"11-
என்ற பாடல் மூலம் அறியலாம்
வீட்டின் மேல் காக்கை அமர்ந்தது என்றால் விருந்தினர் வருவார்கள். எனவே உன்னுடைய தலைவன் வருவான் என்று குறுந்தொகையில் தோழி தலைவியை ஆற்றுவிப்பதை அறிய முடிகிறது.
காக்கையின் ஒற்றுமைக் குணம்
காக்கை ஒற்றுமையுடன் வாழ்க்கூடிய பண்பினைக் கொண்டது. தனக்குக் கிடைத்த உணவைத் தான் மட்டும் உண்ணாது தன இனத்தையும் சேர்த்து உண்ண அழைக்கும் சிறப்பினை உடையது.
"வாம மயில் வைத்த வள்ளுலுமொத்
தேமமாயத் தன்னினத்தை யெல்லாமூன் தாணுன்னும் வேளையில்
இன்னுரையா லேயழைத்தின் பூட்டித் தன்னுடனே (12)
என்பதன் மூலம் காக்கையின் ஒற்றுமைக் குணத்தையும் அதன் விருந்தோம்பும் பண்பையும் ஆசிரியர் சிறப்பித்துக் கூறுகின்றார்.
கண்ணின் சிறப்பு
காக்கையின் கண்ணைப் பற்றித் தவறாகக் கூறும் வழக்கம் வெகுகாலமாக வழக்கில் உள்ளது காக்கை எப்போதும் நேராகப் பார்க்காது. ஒரு சாய்வாக ஒரு கண்ணில் தான் பார்க்கும் அதற்கு ஒரு கண் தான் உள்ளது என்பது மக்களின் பொதுவான கருத்தாகும். தவறாகக் கூறப்படும் இச்செய்தியையும் ஆசிரியர் தன் சொல் வன்மையால்,
"இருகண்கள் உற்ற வனக்கொருகணே யென் றுலகத்திற்
குற்ற முடையார்குறிப்பரால் மற்றதுவும் ஒப்பற்ற கண்னுடையாய்"35
என்று சிறப்பிக்கிறார்.
சனியின் வாகனம்
கடவுளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாகனம். அவ்வகையில் சனிக் கடவுளின் வாகனம் காக்கையாகும். சனிபகவான் காக்கையின் மீது அமர்ந்து வந்து தான் துன்பத்தைத் தருவான் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உண்டு. எனவே சனி பகவானோடு இருப்பதால் காக்கையைப் பழிப்பவரும் உண்டு எனக்கூறும் ஆசிரியர்,
"இப்பிறவியில் மக்கள் தமைவருத்தவன் சனியோடுற்றுறையும்
ஒக்க லெனவே யுனைப்பழிப்பார் மிக்கவன்றான்
மாந்தர் தமை வருத்த வல்விரைந்து செல்லாமுன்
எந்தவன்றன் ஊாதியாய் எய்தியே தேர்ந்துனது
தந்திரத்தி னாலவனைத் தாறுமா றாயிழுக்கும்
இந்த விரகறிவார் யாவரோ"
எனக் கூறுவதன் மூலம், சனிபகவான் மக்களுக்கு துன்பத்தைக் கொடுக்க வரும் போது காக்க தனது ஒற்றைக்கண தந்திரத்தினால் அவ்வாகனத்தை வேறு திசைக்கு இழுத்துச் சென்று விடும். அதனால் சனிபகவான் செல்வதற்கு தாமதமாகும். மக்களுக்குத் துபைத்தைத் தரக்கூடிய சனியிடம் இருந்து. மக்களை காக்கப் போராடும் சிறப்புமிக்கது எனக் காரணம் காட்டி ஆசிரியர் காக்கையினை மிகவும் புகழ்ந்து கூறுகிறார்.
காக்கையைத் தூதாக அனுப்புவதன் காரணம்
தலைவி தன் காதலைத் தலைவனிடம் கூறுவதன் பொருட்டு தூது அனுப்புவதாகப் பாடப்பட்ட நிலை மாறி அரசியல் போன்ற பிற காரணங்களைக் கொண்டும் பாடப்பட்டுள்ளன. அவ்வகையில் சி.ராஜகோபாலச்சாரியாரிடம் பள்ளிகளில் இந்திக்கல்வி வேண்டாமெனக்கூற ஆசிரியர் பலரைத் தூது அனுப்புகிறார். ஆனால் அவரின் ஆணவம் கண்டு அனைவரும் பயந்து திரும்பி வந்துவிட்டதனை.
"காக்கைப்பிள் ளாய்யாம் கடியமுதன் மந்திரியைப்
பார்க்கப் பலரை அனுப்பினோம் போக்குமவர்
தம்முறை கொள்ளாது தருக்கினிவர்ந் திட்டதனால்" 15.
எனக் கூறுகிறார் . எனவே, தேன் போன்ற வண்டமிழினால் காகா என்று பேசுவதாலும் உலகத்தைக் காக்கக் கூவியதனால் அண்டங்காக்கை எனப் பெயர் பெற்றதாலும் மேலும் காக்கையின் சிறப்புகளையும் பெருமைகளையும் உணர்ந்தே காக்கையைத் தூதுப் பொருளாக அனுப்புவதை,
''காவாவென் றார்த்தெழுமின் என்றவரைக் கூவியே
காகாவென் றோலமிருங் காக்கையே மாகாதல்
தாய்த்தமிழிற் கொண்டார் தலைவர் நின்போல
ஏத்து புகழோரை யான்காணேன்" என்கிறார் ஆசிரியர்.
அடிக்குறிப்புகள்
1. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், அழகா கிள்ளைவிடுதூது ப-68
2. மேலது. ப - 64
3. மேலது. 0-40
4. மேலது. 65
5. மேலது, U-79
6 மேலது. ப 71
7. திருவள்ளுவர். திருக்குறள் அதி (தூது 69 ) குறள் 687
8. பாந்தளூர் வெண்கோழியார். காக்கைவிடுதூது ப - 4
9. மகாகவி சி.சுப்ரமணியபாரதி, பாரதியார் கவிதைகள் 178
10 பாந்தளூர் வெண்கோழியார். காக்கைவிடுதாது
11 காக்கை பாடினியார் குறுந்தொகை ப 210
12 பாந்தவூர் வெண்கோழியார் காக்கைவிடுதூது -u -4
13. மேலது. ப - 5
14. மேலது, ப - 5
15. மேலது. ப - 9
16. மேலது, ப - 4
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.