ஓவியம் AI
- இசை & குரல்: AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=syd_-1rqcL4
இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.
இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.
இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.
இருளின் மத்தியில் ஒளியென்னும்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
அதிகாலை விடிவெள்ளி என்பேன்.
அங்கு அது கோள் என்றபோதும்.
நட்சத்திரம் என்னும் சொல்லை
நான் ஒரு குறியீடாகவே
இங்கு பாவித்தேன். அறிவீர்.
இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.
இரவு வானை எனை மறந்து
இரசிப்பேன். எத்தனை முறை என்றாலும்.
இரவு வானில் கொட்டிக் கிடக்கும்
நட்சத்திரக் கன்னியரின் பேரெழிலில்
நான் மறந்து கிடப்பேன் எனை.
இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.
இரவில் சுடரும் அனைத்தும் அறிவைச்
சுரக்கும் அறிவுச் சுரங்கங்கள் என்பேன்.
சுடர்பவை மதி என்றாலும் மற்றும்
சுடர் என்றாலும் அவ்விதமே கூறுவேன்.
இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.
இருள் நீக்கி வரும் ஒளி.
இவ்விதமே அவற்றை நான் கருதுவேன்.
அவ்வகையில் எவை எனக்குப் போதிக்கும்
ஆசிரியர்கள். ஆம்.போதிக்கும் ஆசிரியர்களே.
இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.