கல்வி, மற்றும் ஆய்வுக்கான புதியதொரு சிங்கள இணையத்தளம் விமர்சி.காம்! - வ.ந.கிரிதரன் -
புதியதொரு இணையத்தளம் சிங்கள மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் விமர்சி.காம். விமர்சி என்பது தமிழ் , சிங்கள மொழிகளில் ஒரே அர்த்தம் தரும் சொல். விமர்சிப்பது என்பது பொருள். இது பற்றி அதன் இணையத்தளத்தில் மும்மொழிகளிலும் விபரிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் விபரிப்பு வருமாறு:
'“விமர்சி” கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான அறிவினை பகிர்ந்துகொள்வதனை நோக்காகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற கல்வியியல் இணையத்தளமாகும். இங்கு வெளியிடப்படும் கட்டுரைகளின் பொறுப்பு, கருத்து, கருத்தியல் மற்றும் அப் புலமைச் சொத்தின் உரிமைகள் என்பன குறித்த கட்டுரையின் எழுத்தாளர், ஆய்வாளர், அல்லது நேர்காணப்படுபவருக்கு உரித்துடையதாகும். புகைப்படங்கள் அந்தந்த புகைப்படக் கலைஞர்கள், அல்லது இணையத்தளங்களின் பதிப்புரிமை பெற்றவையாகும்."