சமூக,அரசியல், மனித உரிமை மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளரான சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் 27. அவரது பிறந்த தினமும் ஆகஸ்ட் 14. மொறட்டுவைப் பல்கலைககழகத்தில் கட்டடக்கலைத் துறை பட்டதாரி. விழுது என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகர். 'இருக்கிறம்' என்னும் மாதச்சஞ்சிகையை அந்நிறுவன்ம் மூலம் வெளியிட்டவர். ஆங்கிலம் , தமிழ் மொழிகளில் இவரது சமூக, அரசியல் மற்றும் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன.
'பெண்களின் சுவடுகளில்' (தமிழியல் வெளியீடு) , 'வறுமையின் பிரபுக்கள்' (மன்று வெளியீடு) , 'தடைகளைத் தாண்டி' (விழுது வெளியீடு) மற்றும் 'சரிநிகர் சமானமாக' (விழுது வெளியீடு) என்னும் நூல்களை எழுதியவர். இவரது தந்தையாரான வல்லிபுரம் சச்சிதானந்தம் வழக்கறிஞர். லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் நல்லூரில் போட்டியிட்டவர். இவரது கணவரான அமரர் மனோரஞ்சன் ராஜசிங்கம் அவர்களும் ஒரு சமூக, அரசியற் செயற்பாட்டாளராக இயங்கியவரே.
இவர் என்னுடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்த சக தமிழ் மாணவி. இவரைக் கடைசியாக 83 கலவரக்காலத்தில் சரஸ்வதி அகதி மண்டபத்தில் இவரது கணவருடன் சந்தித்தேன். சிறிது நாட்கள் அம்முகாமில் தங்கியிருந்தார். அப்பொழுது தன் கணவரை அறிமுகப்படுத்தினார். பின்னர் பல வருடங்களின் பின்னர் முகநூலில் நண்பர்களில் ஒருவராக வந்து இணைந்தார். சிறிது காலத்திலேயே நோய்வாய்ப்பட்டு மறைந்து விட்டார்.
எம்முடன் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே பெண் விடுதலையையொட்டிய பெண்ணியக் கருத்துகளில் தெளிவாகவும், உறுதியாகவுமிருந்தார். நன்கு பாடும் திறமை மிக்கவர். ஓய்வு நேரங்களில் இவர் பாடுவதைக்கேட்டு இரசிப்பதுண்டு. நண்பர் லெஸ்லி இரவிச்சந்திரா (மட்டக்களப்பு), மோகன் அருளானந்தம் (மட்டக்களப்பு) ஆகியோரும் இவருடன் இணைந்துப் பாடி எம்மை மகிழ்வித்த பல்கலைக்கழக நண்பர்கள்.
'பெண்களின் சுவடுகளில்' நூலை வாசிக்க - https://noolaham.net/project/73/7294/7294.pdf
'சரிநிகர் சமானமாக' நூலை வாசிக்க - https://noolaham.net/project/142/14175/14175.pdf
பெண்களின் சுவடுகளிலிருந்து சில அடிகள் - https://noolaham.net/project/665/66429/66429.pdf
'பெண்ணொடுக்கு முறையின் ஒரு வரலாறு' என்னும் இவரது 'திசை'க் கட்டுரையை வாசிக்க - https://noolaham.net/project/249/24823/24823.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.