கவிதை: மனசுக்குள்ள மனசுக்குள்ள குடிசை கட்டி கதைகள் சொல்லும் கடலம்மா - தமயந்தி (தமயந்தி சைமன்) -
- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -

* (கிராஞ்சி மீனவர்களின் போராட்டத்துக்குச் சமர்ப்பணம்)
மனசுக்குள்ள மனசுக்குள்ள
குடிசை கட்டி கதைகள் சொல்லும் கடலம்மா
தாத்தன் அப்பன் வேட்டை கொண்ட
கதைகள் சொல்லும் கடலம்மா
விதைத்துக் கிடக்கும் துயரை எல்லாம்
அழித்து எழுதும் கடலம்மா
ஓ... கடலம்மா
இராவணன் மீசை நடனம் புரிந்த
மணல் மேடெல்லாம் போனதெங்கே
கெளதாரி மடியில் நாவல் பாலை
மருந்துக்கும் இல்லை ஆனதிங்கே
நாவட்டப்பாறை தாமரை காத்தான்
எதுவுமே இங்கு காணவில்லை
என்னடி என்னம்மா
மவுனம் என்ன சொல்லம்மா
மண்ணடி வேரில் எல்லாம்
நெருப்பைக் கொட்டியதாரம்மா


தக்ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும் கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப் பொறுத்தமட்டிலன்றி பொதுவாகவே தற்கால நாவல்கள் குறித்து, உள.
மாதிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பளபளவென ஒளிரும் வெண்ணிற ஹெவெல்ஸ் வெர்ஷ்டன் டைப் கழிப்பானைக் கண்டு கண்டுச் சிரித்தாள்.
பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று, கிறித்துவம் நமக்கு போதிக்கிறது. இங்கே, பரிசுத்த ஆவி என்பது, இறைத்தன்மை கொண்ட, ஒற்றை ஆத்துமாவைக் குறிக்கிறது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்று, இந்துமதத்தின் அத்வைதம், நமக்கு போதிக்கிறது. இந்துமதத்தின் இன்னொரு நிலையான, த்வைதம், பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்று நமக்கு போதிக்கிறது. ஆக, இந்து மதம் சொல்லும் மனிதனின் ஜீவாத்மாவும், ஒரு ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. மனிதனின் படைப்பைக் களிமண்ணில் துவக்கிய இறைவன், பின்னர், அவனது சந்ததிகளை, நீரின் சத்திலிருந்து உருவாக்கி, பின்னர் அவனைச் சீரமைத்து, தனது உயிரை அவனிடம் ஊதினான் என்று, இசுலாம் நமக்கு போதிக்கிறது. இங்கே, இசுலாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தை, ஆத்துமாவைக் குறிக்கிறது. ஆக, இந்த மதத்தில் சொல்லப்படும் ஆத்துமாவும், ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. இப்படி, இன்று உலகில், பெரு விருட்சமாய் வளர்ந்து நிற்கும் மதங்கள், ஆத்துமாவைப் பற்றி, இரண்டு விசயங்களை, நமக்குப் பொதுவாய்ச் சொல்லுகின்றன.

அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக நேரம் அவளால் அனுபவிக்க முடியவில்லை. பூப்போன்ற சின்னஞ் சிறிய அந்த உதடுகளின் தேடலில் அங்கே சுரப்பதற்கு எதுவுமில்லை என்று தெரிந்த போது குழந்தையின் ‘வீல்’ என்ற அந்த அலறல் சத்தம்தான் அவளது செவிகளில் முட்டி மோதி நின்றது.
லண்டனில் மிருதங்க இசையின் தனிப் பெரும் ஆசானாகத் திகழ்ந்த ஸ்ரீ கந்தையா ஆனந்த நடேசன் அவர்கள் கொரோனாவின் ஆரம்பத்தாக்குதலில் மறைந்த செய்தி துரதிஷ்டமானதாகும். குறிப்பாக அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்று இன்றும் அக்கலையை ஆர்வத்தோடு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் குமுறல்கள் மனதை உருக்கும் செய்தியாகும். இவ்விதம் அவரிடம் மிருதங்ககலையைப் பயின்ற இளம் கலைஞர்கள் அவரது 2ஆவது வருட நினைவை கலை வடிவங்களாக்கி பல்வேறு தடங்கல்களின் பின்னர் வெளிப்படுத்தியிருந்தார்கள். 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஊடாக பல முற்போக்கு எழுத்தாளர்களை அறிந்துகொண்டேன். அத்துடன் தமிழக முற்போக்கு இலக்கிய இதழ்கள் சரஸ்வதி, தாமரை முதலானவற்றில் எழுதிய படைப்பாளிகள் பற்றியும் தெரிந்துகொண்டேன். அவர்களில் ஒருவரான எச். எம். பி. மொஹிதீன் பற்றி ஜீவா சொன்ன செய்திகள் வியப்பூட்டுவதாக இருந்தது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவர் எனவும், 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சியையடுத்து கைதாகி சிறைவைக்கப்பட்டிருந்தார் எனவும் ஜீவா சொன்னார். யாழ்ப்பாணம் சிறையில் அக்காலப்பகுதியிலிருந்தவர்களில் ஒருவர்தான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான ரோகண விஜேவீரா. மற்றவர் எழுத்தாளர் எச். எம். பி. மொஹிதீன். ரோகண விஜேவீரா, தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களை எழுச்சிகொள்ளச்செய்து ஆயுதக்கிளர்ச்சியை மேற்கொண்டமைக்காக கைதானவர். ஆனால், மொஹிதீன் எழுத்தாயுதம் ஏந்தியமையால் கைதானவர் என்பதை தெரிந்துகொண்டேன். வட கொரியாவின் கிம் இல் சுங் எழுதிய சில புத்தகங்களை மொஹிதீனும் அவர் மூலமாக அவரது நண்பர்கள் சிலரும் மொழிபெயர்த்தனர். 1971 ஏப்ரில் கிளர்ச்சிக்கு வடகொரியாவின் சித்தாந்தங்களும் காரணமாக இருக்கலாம் என அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசின் புலனாய்வுப்பிரிவு தீர்மானித்ததன் விளைவுதான் எச். எம். பி. மொஹிதீனின் சிறைவாசம்.
ஒரு அகதியின் வாழ்வும் உணர்வுகளும் அவனாக வாழ்ந்தாலன்றி புரிந்து கொள்வது சிரமமானது. கடந்த சில தசாப்தங்களில் முன்னேற்றமடைந்த மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரிய எம்மவர்களின் பயண மற்றும் வாழ்வியல் அவலங்கள், தாயகத்தில் இருக்கும் உறவுகளால் சரியான விதத்தில் மனம் கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதில் இன்றளவும் 'இல்லை' என்பதாகவே அமையும். இத்தகைய ஒரு சூழ்நிலையில் தனது புலம்பெயர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தரமான படைப்பாளி தன்னிலை ஆறுதலை மட்டுமல்ல, தனது அனுபவப் பதிவுகளின் மூலம் அகதி வாழ்வின் கொடூரமான மறுபக்கத்தை வாசகருக்காகவும் வரலாற்றுக்காகவும் விட்டுச் செல்கிறான். வ.ந. கிரிதரன் அவர்களின் அமெரிக்கா (முதற்பதிப்பு 1996 இரண்டாம் பதிப்பு 2019), குடிவரவாளன் ( 2015) ஆகிய இரு நாவல்களும் இவ்விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

கிராமத்தின் மிக முதிர்ந்த வயதுடைய பெரியவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடைய அன்றைய உணவுப் பழக்கவழக்கங்களும் உளவடுவற்ற வாழ்வியல் அம்சங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுத்திருக்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது. அது உண்மைதான் போலும். ஒரு தலைமுறை, ஓடித் திரிந்து வளர்கின்ற பருவத்தில் யுத்தமும் சேர்ந்து வளர்ந்ததால் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாமல் குந்தவையின் கதைகள் நினைவுக்கு வருகின்றன. 
காலையில் குளித்து விட்டு , நேற்றைய , மிஞ்சிய கோழிக்கறி இருந்தது . அதை அவனுக்கு பாணுடன் சாப்பிடக் கொடுத்து விட்டு , முட்டையையைப் பொரித்து சன்விச் செய்து சாப்பிடுகிறார்கள் . பூமலருக்கு சுமி பிறந்ததிலிருந்து நீரழிவு ஏற்பட்டிருக்கிறது . மாத்திரைகளை எடுப்பவள் . " கிழமையிலொரு தடவை இன்சுலின் வேறு ஏற்றிக் கொள்கிறேன் " என்கிறாள் . குட்டித் தங்கச்சியாக இருந்தவளை காலம் எப்படி மாற்றி விட்டிருக்கிறது . உதயனுக்கும் ( அண்ணர் ) , பானுவுக்கும் ( அக்கா ) ..கூட .. நீரழிவு இருக்கிறது . அவனுக்கும் , குணவதிக்கு... இன்னம் தொந்தரவு கொடுக்கவில்லை . வழக்கம் போல கராஜிலிருந்து காரை சிரமப்பட்டு எடுக்க . இட பக்கக் கண்ணாடியை மடக்கி விடுகிறான் . சுலபமாக வெளியே வர பூமலர் வீட்டைப் பூட்டி விட்டு வருகிறாள் . ஒரு தடவை, வீதியில் குறுகலான லேன் என்ற உணர்வில் கரைக்கு இறக்கி விட . தடபுடல் என ...சத்தம் , அவனையும் குலுக்க . ஏன் ஓரங்களை ... சீர்படுத்தாது விடுகிறார்கள் " என ஒரேயடியாய் பற்றிக் கொண்டு வருகிறது . பார்த்து ஓடு " என்கிறாள் பூமலர் . ரொரொன்ரோவில் இந்த குலுக்கல் இராது . ' வரி குறைப்பு ' .... என்றால் அதற்கேற்ப கஸ்டமும் கொடுக்கிறது . போக்குவரத்து அமைச்சராக ஒரு தேடல் உள்ள பொறியிலாளர் ...தெரிவாக வேண்டும் . இல்லாதது சீரழிவாகவே கிடக்கிறது . 
பழம் பெருமைகளைச் சொல்லி மார்தட்டிக் கொள்வதில் யாழ்ப்பாணத்தவராகிய நாம் வல்லுனர்கள். லெமூரியாக் கண்டத்தில் தொடங்கி, சிந்துவெளியூடாக உலகின் நாகரிகம் வளர்ந்த இடங்களை அலசி எல்லாமே எங்களுடையதுதான் என்று பெருமை பேசிக்கொள்ளும் பலர் நம் மத்தியில் உள்ளனர். பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது. உள்ளூரில் எங்களுடைய வரலாறு, நம் முன்னோருடைய வாழ்வியல், பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும் சின்னங்களைப் பார்க்கவேண்டும் என்று நமது பிள்ளைகள் கேட்டால், அவர்களுக்குக் காட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் நாம் எவற்றை விட்டுவைக்கப் போகிறோம் என்று முதலில் சிந்திக்க வேண்டும். 




எழுத்தாளர் , கல்விமான், மார்க்சியவாதி என அறியப்பட்ட லெனின் மதிவானம் மலையகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். அவரின் மறைவுச் செய்தி அதிர்ச்சி தருமொன்று. 2013, 2014 ஆண்டுகளில் பதிவுளில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களைப் பதிவுகளின் நிகழ்வுகள் பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரைப் பெரிதும் பொதுவெளியில் காணவில்லை. ஏன் ஒதுங்கிப்போனார் என்பதை இப்பொழுதுதான் அறிய முடிகின்றது. உடல் நிலை சீரற்றுப் போன காரணத்தினாலேயே அவர் ஒதுங்கி விட்டார் என்பதை வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள், நண்பர்கள் , கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவர்தம் துயரில் பதிவுகளும் இணைந்து கொள்கின்றது. 
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









