நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 43

- முடிவுக்கு வந்தது தொடர் நாவல் மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்). கொரோனா தந்த விடுமுறையினை நன்கு பயன்படுத்தி முனைவர் ஆர்.தாரணி மிக விரைவாக, சிறப்பாக நாவலைத் தமிழாக்கம் செய்துள்ளார். அதனை அவர் மிகவும் விருப்புடன், மகிழ்ச்சியுடன் செய்துள்ளார். ஜூலை மொழிபெயர்ப்பு நூலுருப்பெறவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேனாட்டு இலக்கியங்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று பாடினான் மகாகவி பாரதி. அதற்கமைய நல்லதொரு ஆங்கில நாவலைத்தமிழுக்குக் கொண்டு வருவதற்குப் 'பதிவுகள்' களமாக இருந்ததையிட்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றது. உண்மையிலேயே மகிழ்ச்சியும், திருப்தியும் தந்த பங்களிப்பு. இவ்விடயத்தில் முனைவர் தாரணியும் நிச்சயம் பெருமையும், மகிழ்ச்சியுமடையலாம். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அவர் இது போல் மேலும் பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்று வாழ்த்துகின்றோம். - - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் நாற்பத்தி மூன்று
முதல் தடவையாக, டாமை நான் தனிமையில் சந்திக்க முடிந்தது. அவனின் ஏய்ப்பு வேலை சமயத்தில் அவனின் மனதில் ஓடிய எண்ணங்கள்தான் என்ன என்று அவனிடம் வினவினேன். ஏய்ப்பு செய்தது வெற்றியடைந்து அவனும் எப்படியோ சமாளித்து முன்பே சுதந்திரம் அடைந்த ஒரு நீக்ரோவை மீண்டும் ஒரு முறை விடுவித்திருந்தால் அதன் பின் என்ன செய்யவேண்டும் என்று அவன் திட்டம் தீட்டியிருந்தான்? முதலில் இருந்து ஆரம்பித்து அதே விஷயத்தை பின்பற்றி, மீண்டும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருப்பேன் என்று அவன் பதில் கூறினான். எங்களின் பாதுகாப்பில் ஜிம் இருந்திருந்தால், நதியின் கீழ் பக்கமாக தோணியில் பயணம் செய்து, தப்பி ஓடி வந்த அவனைக் காப்பாற்ற வழி முழுதும் சாகசங்கள் செய்து நதியின் கரையை அடைந்திருப்போம் என்று கூறினான்.
அதன் பின்னர் ஜிம் ஒரு சுதந்திர மனிதன் என்ற உண்மையைக் கூறி, அவனை அங்கிருந்து ஒரு நீராவிப் படகில் ராஜமரியாதையோடு பாங்குடன் அழைத்து சென்றிருக்கலாம் என்றான். அவன் தொலைத்த நேரங்களை ஈடு கட்டப் பணம் கொடுத்து, அந்த ஊரின் அனைத்து நீக்ரோக்களையும் அழைத்து வரச் செய்து, ப்ராஸ் இசைக்குழுவினர் பாட்டிசைக்க, அவர்களை ஊரின் நடுவே ஒளிவிளக்கு அணிவகுப்பு மற்றும் வால்ட்ஸ் நடனம் ஆட வைத்திருக்கலாம் என்றான். அந்த ஆட்டத்தின் முக்கிய நாயகன் ஜிம்தான் என்றும் அப்புறம் துணை நாயகர்கள் நாங்கள் தான் என்றும் சொன்னான். ஆனால், திட்டம் அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டாலும், இத்தோடு முடிந்தது நல்லது என்றே நான் கருதினேன்.
கண் இமைக்கும் நேரத்திற்குள், சங்கிலிகளை கழற்றி வீசி ஜிம்மை விடுவித்தோம். டாமை நல்ல நிலைக்கு கொண்டு வர மருத்துவருக்கு ஜிம் செய்த உதவிகள் மற்றும் டாமுக்கு அவன் செய்த பணிவிடைகள் ஆகியவை அனைவருக்கும் தெரிய வந்ததும், போல்லி பெரியம்மா, சைலஸ் சித்தப்பா மற்றும் சேல்லி சித்தி ஆகியோர் ஜிம்முக்கு கணக்கிலடங்கா புகழாரம் சூட்டினார்கள். மிகச் சிறந்த முறையில் அவனை அவர்கள் நடத்தினார்கள். அவனுக்கு சாப்பிடத் தேவையான அனைத்தையும் கொடுத்து, அவன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரத்தையும் வழங்கினார்கள். சில முக்கியமான காரியங்களை விவாதிக்க, நோயாளி அறைக்கு அவனை நாங்கள் வரச் செய்தோம். சிறைக் கைதி பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும், பொறுமையுடனும் நடத்திக் கொடுத்ததைப் பாராட்டி, டாம் அவனுக்கு நாற்பது டாலர்கள் பரிசு கொடுத்தான். மட்டற்ற மகிழ்ச்சியில் ஜிம் உயிரையே விட்டுவிடுவான் போல இருந்தது. ஆனந்தத்தில் இவ்வாறு கூவினான்:

காலை உணவுக்கு முன்னதாக, அந்த முதியவர் திரும்பவும் ஊருக்குள் சென்று பார்த்தார். ஆனால், டாம் இருக்கும் இடம் பற்றி எந்தத் தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரும், சேல்லி சித்தியும் மேசையினருகே சோகமாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் உணவருந்தவில்லை. அவர்கள் முன் வைத்திருந்த காப்பியும் அருந்தப்படாமல் சில்லிட்டுப் போயிருந்தது. இருவரும் ஒன்றுமே பேசாது அமைதியாக இருந்தார்கள். இருவர் முகத்திலும் சோகம் ஒரு மெல்லிய திரை போலப் படிந்திருந்தது. சீக்கிரமே அந்த முதியவர் கேட்டார்: "நான் உன்னிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தேனா?"
வயதான அந்த மருத்துவர் மிகவும் கனிவு ததும்பும் முகத்துடன் நல்லவராகக் காணப்பட்டார். நானும், எனது சகோதரனும் ஸ்பானிஷ் தீவில் நேற்று வேட்டையாடிக்கொண்டு, நாங்கள் கண்டெடுத்த சிறு தோணியில் இரவு தங்கினோம் என்று அவரிடம் கூறினேன். இரவுத் தூக்கத்தில் ஏதோ கனவு கண்டதன் காரணமாகத் தெரியாத்தனமாக தனது காலால் துப்பாக்கியின் விசையை உதைத்ததால், அது விடுபட்டு அவனின் கெண்டைக்காலில் தோட்டா பாய்ந்து விட்டது என்றும் சொன்னேன். எனவே, என்னுடன் அந்த தீவுக்கு வந்து அவனின் காலைச் சரி செய்ய வேண்டும் எனவும், இது பற்றி யாருக்கும் தெரிவிக்கக் கூடாதென்றும் நான் அந்த மருத்துவரிடம் வேண்டிக் கொண்டேன். ஏனெனில், அன்றைய மாலை வேளையில் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் அளவு நாங்கள் தயாராகி, வீட்டில் உள்ளோர் அனைவரையும் வியப்பிலாழ்த்தப் போவதாக நாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கிறோம் என்று மேலும் கூறிச் சமாளித்தேன்.
காலை உணவுக்குப் பின், நாங்கள் இருவரும் மிகவும் சந்தோசமாக உணர்ந்தோம். என்னுடைய சிறு படகை எடுத்துக் கொண்டு ஆற்றில் மீன் பிடிக்க ஒரு சுற்று சுற்றிவரச் சென்றோம். மதிய உணவை எங்களுடனேயே எடுத்துக் கொண்டு வந்து விட்டபடியால், பொழுது இனிமையாகவே கழிந்தது. என்னுடைய தோணிக்கும் சென்று சரிபார்த்தோம். நல்ல நிலையிலேயே அது இருந்தது. பின்னர், வெகு நேரம் கழித்து இரவு உணவு சமயம் வீடு திரும்பிய நாங்கள், மிகவும் கலவரமடைந்த நிலையில் அந்தக் குடும்பம் உள்ளதைக் கண்டோம். தங்களுக்கு நடக்கவிருக்கும் ஆபத்தை நினைத்துக் குழம்பித் திகைத்து செய்வதறியாது கலங்கி இருந்தார்கள். எது அவர்களைக் குடைகிறது என்று அவர்கள் வெளியே கூறாவிடினும், அனைவரும் இரவு உணவு அருந்தி முடித்த கையோடு, நேராக அவரவர் படுக்கைக்குச் சென்றார்கள். மற்ற அனைவரையும் விட எங்களுக்கு அங்குள்ள நிலைமை புரிந்திருந்ததால், அவர்களின் பிரச்னை என்ன என்று அவர்கள் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை.
அன்று காலை ஊருக்குள் சென்று கம்பிகளோடு கூடிய எலிபிடிக்கும் கருவி நாங்கள் வாங்கினோம். அதை இருப்பதிலேயே பெரிய எலி வங்கின் அருகே வைத்து காத்திருந்தோம். ஒரு மணி நேரத்திற்குள்ளாகவும், புஷ்டியாய் தென்பட்ட பதினைந்து எலிகள் பிடித்து விட்டோம். பின்னர், எலி பிடிக்கப் பயன்படும் அந்தக் கருவியை, சேல்லி சித்தியின் படுக்கையின் கீழ் மறைத்து வைத்தோம்.ஆனால், கொஞ்ச நேரம் கழித்து, நாங்கள் சிலந்திகளைப் பிடிக்க அலைந்து கொண்டிருந்த நேரத்தில், குட்டி பிராங்கிளின் பெஞ்சமின் ஜெபர்ஸன் எலெக்சாண்டர் பிலிப்ஸ் அந்தக் கருவியைக் கண்டுபிடித்து, அந்த எலிகளால் வெளியே வர முடியுமா என்று சோதிக்க எண்ணி அதனின் கதவை திறந்து விட்டிருக்கிறான். அவைகளும் வெளியே வந்திருக்கின்றன. அந்த சமயத்தில் சேல்லி சித்தியும் அவள் அறைக்குள் வந்திருக்கிறாள்.
எழுதுகோலைத் தயாரிப்பது மற்றும் மரம்அறுக்கும் ரம்பம் ஏற்பாடு செய்வது போன்றவை எங்களின் சக்திக்கு மீறிய செயலாக இருந்தது. உண்மையாகவே, ஒரு சிறைக் கைதி போன்றே தன்னைப்பாவித்துக் கொண்டு எழுதுகோலைக் கொண்டு சுவற்றில் எழுத்துக்களைப் பொறிக்கும் வேலை தனக்கும் மற்ற அனைத்தையும்விட மிகவும் சவாலான வேலையாக இருக்கும் என்று ஜிம்மும் கருதினான். ஆனால், அதைக் கண்டிப்பாகச் செய்துதான் ஆகவேண்டும் என்று டாம் உறுதியாகக் கூறிவிட்டான். தங்களுடைய பெருமை மிகுந்த குடும்பப் பெயருடன் சேர்த்து சில கருத்துக்களைச் சுவற்றில் பொறித்து வைக்காமல் எந்த ஒரு மாநிலக் கைதியின் சிறை நிகழ்வும் இருந்ததில்லை என்று டாம் கூறினான்.
அனைத்தும் தயாரான நிலையில் இருந்தது. வீட்டை விட்டுக் கிளம்பி, பழைய கால்செருப்புகள், கம்பளிகள், காலியான சீசாக்கள், பழுதடைந்த தகரங்கள் மற்றும் வேண்டாத பொருட்கள் குவித்து வைத்திருக்கும் குப்பைகள் பின்கட்டுக்குச் சென்றோம். சமையல் பாத்திரங்கள் கழுவிப் போட்டு வைக்கும் பெரிய தகரப் பாத்திரம் ஒன்றைக் குப்பைகளை நன்கு கிளறிப் பார்த்து கண்டெடுத்தோம். அதினுள்ளே இருந்த ஓட்டைகளை எங்களால் முடிந்தவரை அடைத்து, அதை கேக் தயாரிக்கும் பாத்திரமாக மாற்றினோம். வீட்டின் கீழ்புறம் உள்ள மளிகைப் பொருட்கள் வைக்கும் அறைக்கு அந்தப் பாத்திரத்தை எடுத்துச் சென்று மாவு நிறையத் திருடி அதில் வைத்து நிரப்பினோம். பின்னர், காலை உணவு சாப்பிடத் தயாரானோம்.
அன்றிரவு அனைவரும் உறங்கி விட்டார்களா என்று உறுதி செய்துகொண்ட பிறகு, நாங்கள் அந்த இடிதாங்கிக் கம்பியைப் பிடித்து இறங்கி மேலிருந்த நிழல் சாளரத்தினுள் சுருண்டு ஒளிந்து கொண்டோம். சிறிது நேரத்திற்குப் பின்னர், அந்த நரித்தீ பூஞ்சைகளை எடுத்துக் கொண்டு எங்களின் வேலையைப் பார்க்கச் சென்றோம். சுவற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள மரக்கட்டையின் மத்தியில் ஒரு நான்கு அல்லது ஐந்தடி நீளம் முழுதும் இருந்த அனைத்துக் குப்பைகளையும் சுத்தம் செய்து அகற்றினோம். ஜிம்மின் படுக்கைக்கு நேர் பின்பக்கமாக நாங்கள் இருக்கிறோம் என்று டாம் கூறினான். அந்த இடத்தில் நாங்கள் பள்ளம் தோண்ட ஆரம்பித்தோம். ஜிம்மின் படுக்கையிலிருந்து கீழே தொங்கும் போர்வை தரையைத் தொட்டு அந்த பள்ளத்தை மறைத்து விடுமாதலால், அங்கே அப்படி ஒரு ஓட்டை இருப்பதே யாருக்கும் தெரியவராது என்று டாம் கூறினான். அந்தப் போர்வையை மேலே உயர்த்திப் பார்த்தால் மட்டுமே அந்த ஓட்டையைக் காண முடியும் என்றான். எனவே, நள்ளிரவு ஆகும்வரை பேனாக்கத்திகள் கொண்டு தோண்டினோம். அதன்பின், கடுமையான களைப்படைந்து, கைகள் தோல் உரிந்து காயமாக ஆரம்பித்தன. ஆயினும், எங்களை பார்த்தால் கடுமையாக உழைத்தது போல் தோன்றாது. இறுதியாக நான் சொன்னேன்:
காலை உணவு தயாராக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல இருந்தது. எனவே, வீட்டை விட்டுக் கிளம்பி அருகிலிருந்த வனத்தை நோக்கி நடந்தோம். இரவு பள்ளம் தோண்டும் வேளையில், எங்களுக்கு கொஞ்சம் வெளிச்சம் தேவைப்படும் என்று டாம் சொன்னான். லாந்தர் விளக்கின் ஒளி வெள்ளம் அதிகமாக இருந்து அதனால் நாங்கள மாட்டிக்கொள்ளக்கூடும் என்று அவன் கூறினான். நரித்தீ என்றழைக்கக்கூடிய காடுகளில் கிடைக்கும் அழுகிப் போன பூஞ்சைக் காளான்கள் இருளில் ஒளிர்ந்து வெளிச்சம் கொடுக்கும் தன்மையை கொண்டவை என்பதால் அவைகள் எங்களுக்குத் உதவும் என்று நினைத்தோம். கை நிறைய அவற்றை அங்கே சேகரித்து மரங்களுள் ஒளித்து வைத்தோம். பிறகு, அங்கே அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். நடக்கும் நிகழ்வுகள் எதிலும் டாமுக்கு திருப்தியே இல்லை.
நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு சிந்திக்க ஆரம்பித்தோம். வெகு விரைவிலேயே டாம் இவ்வாறு கூறினான்:
இவ்வாறாக முடிவு கட்டிய நான், குதிரை இழுத்துச் செல்லும் பாரவண்டியில் ஏறி ஊரை நோக்கிச் சென்றேன். பாதிதூரம் செல்லும்போதே, எனக்கு எதிரே ஒரு பாரவண்டி வருவதைக் கண்டேன். கண்டிப்பாக அது டாம் சாயர்தான். அவன் என் அருகே வரும்வரைக் காத்திருந்து பின்னர் கூறினேன், "நிறுத்துங்கள்" என்று. வண்டி என்னருகே நின்றது. என்னைக் கண்டதும் டாம் சாயரின் வாய் ட்ரங்க் பெட்டியின் மூடி போலப் பிளந்து அப்படியே நின்றும் விட்டது. தொண்டை வறண்டு போனவன் போல இரண்டு மூன்று முறை சிரமப்பட்டு எச்சிலை விழுங்கி விட்டு பின்னர் கூறினான்:
பிலிப்ஸின் பண்ணைக்கு நான் சென்று சேர்ந்த போது, சூரிய வெளிச்சத்துடன் வெப்பம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை நாட்களின் தேவாலயம் போல அங்கே அனைத்தும் அசையாது அமைதியாக இருந்தது. பண்ணையாட்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். வண்டுகளும், ஈக்கூட்டங்களும் காற்றில் மொய்த்துத் தொடர்ச்சியான ரீங்காரத்தை எழுப்பியது ஏதோ நீங்கள் இறந்து அங்கிருந்து அகன்று விட்டதைப் போன்றதொரு தனிமை உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியது. மெல்லிய தென்றல் காற்று அங்கிருந்த இலைகளைத் தாலாட்டி அசைப்பது உங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தும். ஏனெனில் இறந்து பல வருடங்கள் ஆன ஆவிகள் உங்களுடன் கிசுகிசுப்பாக ஏதோ ரகசியம் உங்களைப் பற்றி பேசுவது போன்று அது தோன்றும். பொதுவாக, அது போன்ற விஷயங்கள் நீங்கள் இறந்து இந்த பூவுலகை விட்டு தொலைந்தது போன்றதொரு மாய உணர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவை.
அடுத்து வந்த சில நாட்களில் நாங்கள் எந்த ஊரிலும் நிற்காமல் நதியில் மிதந்து கொண்டே இருந்தோம். மேற்கொண்டு தெற்கு நோக்கியே நாங்கள் சென்று கொண்டிருந்ததால், காலநிலை கொஞ்சம் சூடாகவே இருந்து வந்தது. எங்களது வீட்டிலிருந்து மிக நீண்ட தொலைவில் நாங்கள் இருந்தோம். நரைத்த தாடி போல மரத்தின் கொப்புகளிலிருந்து தொங்கி கொண்டிருக்கும் கிளைகளைக் கொண்ட ஸ்பானிஷ் மோஸ் என்ற மரங்களை எல்லாம் எங்களின் பயணத்தில் காண ஆரம்பித்தோம். அவை அப்படி வளர்ந்து தொங்கி கொண்டிருப்பதையும் அவைகளின் அடர்ந்த தோற்றத்தால் காடுகளை இருண்டதாவும், அச்சமூட்டுகிறவிதமாகவும் மாற்றியது என்பதையும் என் வாழ்வில் முதல் முறையாக அப்போதுதான் கண்டேன். ஆபத்துகளைக் கடந்து வந்து விட்டோம் என்று கணக்கிட்ட அந்த மோசடிப் பேர்வழிகள் வரும் வழியில் உள்ள சிறு கிராமங்களில் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் தோணியில் ஏறியதும் முதல் வேலையாக ராஜா என்னை நோக்கி வந்தார். எனது மேல் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பிடித்து உலுக்கியவாறே என்னிடம் கேட்டார்:
நேர்த்தியான தோற்றம் உடைய ஒரு முதிய கனவானையும், கூடவே காயம்பட்ட வலது கையை தாங்கி நிறுத்தும் ஒரு தூக்கி மாட்டியுள்ள இன்னொரு இளம் வாலிபனையும் அந்தக் கூட்டம் கூட்டி வந்தது. ஓ! என்ன ஒரு காட்சி அது! கூட்டம் கொக்கரித்துக் கொண்டு சிறிது நேரம் சிரித்துத் தீர்த்தது. அங்கே வேடிக்கையாய் சிரிக்க என்ன உள்ளதென்று எனக்குப் புரியவில்லை. ராஜாவும், பிரபுவும் என்னைப் போன்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருக்கும் என்று நினைத்து அவர்களை நோக்கினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் பயத்தில் வெளுத்துப் போகவில்லை. சந்தேகிக்கும் நிலையை பிரபு அங்கே உண்டு பண்ணவேயில்லை. பதிலாக வாயில் வெள்ளை நுரை தள்ளியவாறு கூ கூ என்று இன்னும் அதிகமாக சத்தமிட்டார்.
வெகு சீக்கிரமே நான் விழித்தெழும் காலைவேளை வந்து விட்டது. ஏணியில் இறங்கி கீழ்தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அவ்வாறு செல்லும் போது அந்த பெண்களின் அறைக் கதவு திறந்திருப்பதை எதேச்சையாக நான் காண நேர்ந்தது. அறையினுள் திறந்திருந்த பழைய ட்ரங்க் பெட்டியருகே மேரிஜேன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அந்தப் பெட்டியில் தன் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு, தன் மடியில் ஒரு நீண்ட மேலங்கியை மடித்து வைத்துக் கொண்டு, தனது இரு கரங்களையும் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அது என் மனதைக் கரைத்தது. யாருக்குமே அதைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்யும். எனவே, உள்ளே நான் சென்றேன்.
அவர்களின் அறைக்கு நகர்ந்து சென்று நோட்டமிட்டபோது அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது. எனவே மெல்ல அடிமேல் அடி வைத்து பத்திரமாகப் படிக்கட்டில் இறங்கினேன். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சிறு சத்தம் கூட கேட்கவில்லை. உணவருந்தும் அறையின் சின்ன சந்து வழியாக நுழைந்து பார்த்தபோது சடலம் வைத்திருக்கும் அறையில் பாதுகாவலாக இருந்த மனிதர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளிலேயே தூக்கத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். சவம் வைக்கப்பட்டுள்ள முன்னறையிலிருந்து வெளியே வராந்தாவுக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதவின் வழியே புகுந்து வராந்தாவுக்குள் நுழைத்தேன். அங்கேயும் யாருமில்லை. பீட்டரின் மிச்சம் மட்டுமே இருந்தது. அதையும் தாண்டி வாசலுக்குச் செல்லும் முன்புறக் கதவு பூட்டியிருந்தது. அதனின் சாவியும் அங்கே இல்லை.
கூட்டம் கலைந்து போனதும், அந்த வீட்டில் படுக்கை அறைகள் மிகைப்படியாக உள்ளதா என்று ராஜா மேரி ஜேனை வினவினார். அதிகப்படியாக உள்ள ஒரு அறையில் சித்தப்பா வில்லியம் உறங்கலாம் எனக் கூறினாள். அவளது பெரிய படுக்கை அறையை ஹார்வி சித்தப்பாவுக்குக் கொடுத்து விட்டு அவளும், அவளது சகோதரிகளும் சிறிய அறையில் உள்ள கட்டிலில் படுத்துக் கொள்ளப் போவதாக மேரி ஜேன் கூறினாள். பரணில் உள்ள சிறு மூலையில் ஒரு வைக்கோல் படுக்கையில் ராஜாவின் வேலைக்காரனான நான் படுத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று ராஜா கூறினார்.
அந்தச்செய்தி ஊர் முழுதும் இரண்டு நிமிடங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. நாலாத்திசைகளிலிருந்தும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்த காட்சியைத்தான் நீங்கள் காணவும் வேண்டுமே. சிலர் அவ்வாறு ஓடி வரும் போதே தங்களின் மேல் கோட்டை அணிந்தவாறே வேகமாக ஓடி வந்தனர். தட் தட் என்ற அவர்களின் காலடிச் சத்தம் ஏதோ வீரர்கள் போருக்கு அணிவகுத்து செல்லும்போது கேட்பது போலக் கேட்டது. விரைவிலேயே அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு எங்களை அழைத்துப் போனார்கள். கூட்டம் கூடியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கதவுகளும், ஜன்னல்களும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் கும்பலால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மதில் மேல் எட்டிப் பார்த்து விட்டு இவ்வாறு கூறுவார் "இது அவர்கள்தானா?" என்று அங்கே கும்பலாக மற்றவர்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் பதில் கூறுவார் "அடித்துச் சொல்கிறேன். அவர்கள்தான் அது."
அடுத்த நாள் இரவு நேரம் நெருங்கி வருகையில், நதியின் மத்தியப் பகுதியில், கரையின் இருபுறங்களிலும் கிராமங்கள் காணப்பட்ட இடத்தில் ஒரு சிறிய மணல்திட்டில் இருந்த அடர்ந்த வில்லோ மரங்களின் கீழ் எங்களின் தோணியை மறைத்து வைத்தோம். அந்த ஊர்களில் உள்ள மக்களை தங்களின் நடிப்பில் நம்ப வைக்க நமது ராஜாவும் பிரபுவும் நல்லதொரு திட்டம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே சிறிது நேரம் மட்டுமே நிறுத்தி வைக்கப் போவதாக ஜிம் பிரபுவிடம் கூறினான். மறைக்கப் பட்டுள்ள தோணியில் உள்ள கூம்பு வடிவக் குடிலுக்குள் முழு நேரமும் கட்டிவைக்கப்பட்டு மறைந்து கிடப்பது ஜிம்முக்கு மிகவும் அலுப்புத் தட்டியிருக்க வேண்டும். தோணியில் நாங்கள் தனியாக அவனை விட்டுச்செல்லும் வேளையில் கட்டிவைத்துவிட்டுப் போவது வழக்கம். யாரேனும் எதேச்சையாக அவனைக் கண்டுபிடித்தால் கூட, தப்பி ஓடிப்போன நீக்ரோவை நாங்கள் பிடித்துக்கட்டி வைத்திருப்பதாகத் தோன்றும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்வது வழக்கம். அப்படி கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் முழு நாளும் கிடப்பது மிகவும் கடினமான விஷயம்தான் என்று அந்தப் பிரபு ஒத்துக்கொண்டார். அதற்கும் கூடிய விரைவிலேயே ஒரு வழி கண்டுபிடிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
மேடை அமைப்பதிலும், அதில் திரைச்சீலை கட்டிவிடுவதிலும், மேடையில் தோன்றும் நடிகர்களின் பாதங்களை முன்னிலைப்படுத்திக் காட்டும் விதமாக மெழுகுவர்த்திகள் வரிசையாக வைப்பதிலும் ராஜாவும் பிரபுவும் மிகுந்த ஆர்வம் காட்டி உழைத்தார்கள். அன்றிரவு அங்கு கண்மூடித் திறப்பதற்குள் ஆண்கள் கூட்டம் வந்து கூடிவிட்டது. அதற்குமேல் இனியும் அந்த இடம் கூட்டம் கொள்ளாது என்ற நிலைக்கு வந்தபின் பிரபு அனுமதிச் சீட்டு கொடுப்பதை நிறுத்தினார்.. பின்னர் பின்புறமாக வந்து மேடையின் மீது ஏறினார். மூடியிருந்த திரைச்சீலையின் பின் நின்று தங்களின் சோக காவியம் இதுவரை யாருமே கண்டிராத அளவு மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று ஒரு சிறு உரை நிகழ்த்தினார். நாடகம் பற்றியும், அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள முதிய எட்மண்ட் கீன் பற்றியும் புகழ்ந்து அவர் சொல்லிக்கொண்டே போனார். கடைசியாக அனைவரது எதிர்பார்ப்பையும் போதுமான அளவு நன்கு தூண்டியபிறகு, திரைச்சீலையை உருட்டி மேலே உயர்த்தினார்.
தேனீக்கள் போன்ற மக்கள் கூட்டம் காட்டுமிராண்டிகள் போல் ஊளையிட்டுக் கொண்டும், கோஷமிட்டுக் கொண்டும் ஷேர்பம் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தக் காட்சி பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்தது. வழியில் இருந்த அனைத்து மக்களும் தங்களின் பொருட்களை எடுத்துக் கொண்டு தங்களை அந்தக் கூட்டம் மிதித்து விடும் என்ற பயத்துடன் வேகமாக நகர்ந்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அந்தக் கூட்டத்தை முந்திக் கொண்டு ஓடி வேறு பக்கம் ஒளிந்து கொண்டார்கள். தெருவின் பக்கங்களில் இருந்த வீட்டுச் சன்னல்களின் வழியாக தங்களின் தலையை நீட்டியவாறு பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறு நீக்ரோ சிறுவர்கள் மரத்தின் மீது ஏறி அமர்ந்திருக்க, இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் வீட்டின் மதில்சுவர் பக்கமிருந்து அதன்மேல் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கட்டுக்கடங்கா கூட்டம் அவர்களின் பக்கமாக வர, அவர்களின் பிடியில் மாட்டிகொள்ளாதிருக்க பின்தள்ளி நின்று கொண்டார்கள். பெரும்பான்மையான பெண்களும், சிறுமிகளும் பீதியுடன் அழுதுகொண்டிருந்தார்கள்.
சூரியன் உதித்து வெகு நேரம் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் தோணியைக் கரையில் கட்டாது அப்படியே அது போன போக்கிலேயே நதியில் மிதந்து கொண்டிருந்தோம். ராஜாவும், பிரபுவும் காலை கண்விழித்த பிறகும் இரவு குடித்த மதுவின் போதையால் தள்ளாடிக் கொண்டே இருந்தனர். ஆயினும் தோணியிலிருந்து நதியில் குதித்து நல்லதாக ஒரு நீச்சல் போட்டபிறகு அவர்களின் போதை தெளிந்து உற்சாகமாகி விட்டார்கள். காலை உணவிற்குப் பிறகு தோணியின் ஒரு மூலையில் அமர்ந்த ராஜா அவரின் கால் பூட்சுகளை கழற்றினார். கால் சாராயின் கால் பகுதிகளை முட்டிவரை உயர்த்தி விட்டுக்கொண்டு கால்களை நீரில் தொங்க விட்டு வசதியாக அமர்ந்தார்.
மிகவும் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் எங்களைப் படுத்தி எடுத்தார்கள். நாங்கள் ஏன் தோணியிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறோம், ஏன் பகல் முழுதும் பயணம் செல்லாமல் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று தொணப்பினார்கள். இடையில் அவர்களுக்கு ஜிம்மின் மீது சந்தேகம் எழுந்தது. அவன் தப்பித்து ஓடிப்போகும் நீக்ரோவா என்று வினவினார்கள். நான் கூறினேன் "சரியாகப் போச்சு! தப்பித்து ஓடும் நீக்ரோ தெற்குப் பகுதிக்கா ஓடுவான்?" இல்லை. அங்கே அவன் போகமாட்டான் என்றார்கள். எப்படியாவது சில விஷயங்களை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்பதால் நான் இவ்வாறு கூற ஆரம்பித்தேன்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









