நடிகை செளகார் ஜானகிக்கு வயது எண்பது!

பழம்பெரும் நடிகையான செளகார் ஜானகிக்கு 12.12.2011 அன்று வயது எண்பது. சிறந்ததொரு குணசித்திர நடிகையாக விளங்கிய செளகார் ஜானகி அமைதியாகச் சாதனைகள் பலவற்றைப் புரிந்துவிட்டிருக்கின்றார். தற்போது பெங்களூரில் வசித்துவரும் செளகார் ஜானகி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 385 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பது பிரமிப்பைத் தருகின்றது. இது தவிர 300 தடவைகள் மேடையேறியுமிருக்கின்றார். சிறுவயதிலிருந்தே செளகார் ஜானகி அவர்கள் கலையுலகில் நுழைந்து விட்டார். தனது 11 வயதில் தெலுங்கு வானொலிக் கலைஞராக விளங்கிய 'செளகார் ஜானகி' மூன்று மாதக் கைக்குழந்தையுடன் விளங்கிய தாயாகத் திரையுலகில் காலடியெடுத்து வைத்துச் சாதனைகள் படைத்தார். நாகிரெட்டியாரின் விஜயா கம்பைன்ஸ்ஸாரினால் தயாரிக்கப்பட்ட செளகார் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் 'செளகார் ஜானகி' என்று அழைக்கப்படத் தொடங்கினார். அப்படத்தில் அவர் என்.டி.ராமராவுடன் நடித்திருப்பார். அவரது முதல் படமான 'செளகார்' படத்திற்காக அவர் பெற்ற வருமானம் ரூபா 2500 மட்டுமே.

பிரபல இந்திப்பட நடிகர் தேவ் ஆனந்த் தமது 88 ஆவது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார். இந்தி படவுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல பரிமாணங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆளுமையை தேவ் ஆனந்த் செலுத்தியிருந்தார். அவரது திரைப்பட வாழ்க்கை 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் பல தசாப்தங்களுக்கு இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட நடிகர்-இயக்குநராக தேவ் ஆனந்த் திகழ்ந்தார். 1949 ஆம் ஆண்டு நவ்கேதன் எனும் தனது சொந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் 35 க்கும் மேலான படங்களை அவர் தயாரித்திருந்தார். இந்தி பட உலகில் இன்று பிரபலமாக இருக்கும் பலர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் திரைப்பட ஆய்வாளரும் எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரன். தேவ் ஆனந்த் அவர்களின் நடிப்பின் இலக்கணம், இந்தி சினிமா கதாநயகனுக்கே உரித்தான கவர்ச்சி மற்றும் இளமைத் துடிப்புடன் கூடிய நடிப்புதான் என்றும் கூறுகிறார் தியோடர் பாஸ்கரன்.
முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன். ‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார். சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள். முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.
27 பிப்ரவரி 2002 எஸ்-6-கோச் சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா சம்பவம்-59 இந்துக்கள் எரிக்கப்பட்டது. யாரும் மறக்க முடியாத, இந்திய அரசியலையே திசைதிருப்பிய நிகழ்ச்சி இது. குஜராத்தின் சங்கப்பரிவாரப் பட்டாளங்கள் இச்சம்பவத்தைச் சாக்கு வைத்து தங்களது பா.ஜ.க. நரேந்திர மோதி அரசு எந்திரத்தின் உதவியைக் கொண்டு முகமதியர்கள் மீதான தங்கள் துவேஷத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். 2500 பேர் படுகொலை நூற்றுக்கணக்கில் பெண்கள் மீது வன்புணர்ச்சி, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக விரட்டப்பட்ட கொடுமை என இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், திட்டமிட்ட சதியின் மூலம் நிகழ்த்தப்பட்டது இது. மறு விசாரணைக்குப் பின் புதிய தீர்ப்பு பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. மூன்றரை மணிநேரம் ஓடக்கூடிய ஃபைனல் சொலூஷன் படம் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
துறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசின் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்றுப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர். 'மதம் ஒரு நஞ்சு' ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சண்யமாகச் சொல்லப்படுகிறது. 'மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்.' அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள். முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட்படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.

எதுக்கு சுத்தி வளைத்து? நேரடியாவே தெய்வத்திருமகன் படத்துக்கு வருகிறேன். அருமையான படம். பார்க்க நெகிழ்ச்சியா இருக்கிறது. விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார். ஆத்மார்த்தமான இசை. திரைக்கதை, வசனத்தில் நெகிழ்ச்சியும், நகைச்சுவையும் இழையோடுகிறது. பார்ப்பவர்கள் பல இடங்களில் அழுகிறார்கள். எல்லாம் சரி. ஆனால் படம் கொண்டாடப்பட வேண்டிய படமல்ல! நல்ல சினிமா அல்ல. தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாக்கும் படம். பொறுங்கள். திட்டாதீர்கள். முழுதாக முடித்துக்கொள்கிறேன்.

உலக அளவில் சில தினங்கள் கவனத்தைப் பெறுகின்றன. உதாரணமாக நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், அன்னையர் தினம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சில விழிப்புணர்வு தினங்களும் கவனிப்பாரின்றி நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் மாற்றுத் திறநாளிகள் தினம் (Dec 4), குழந்தைத் தொழிலாளர்கள் தினம் (Jun 12), உலக எயிட்ஸ் தினம் (Dec 1) என்று பல முக்கியமான தினங்களைச் சொல்லலாம். "ஜூன் 23 - சர்வதேச விதவைகள் தினம்" என்று ஐநா அறிவித்துள்ளது. கைம்பெண்களின் உணர்வுகள் நசுக்கப்படும் சமுதாயம் நம்முடையது. கணவனை இழந்த பெண் தனக்குத் தெரிந்த ஆணுடன் பொது இடத்தில் பேச நேர்ந்தால் அவள் மீது சமூகத்தின் சந்தேகப் பார்வை விழுகிறது. சாதாரணமாகப் பேசினாலும் கள்ளத் தொடர்பாகத் தான் பார்க்கிறது.
[புதுடெல்லி, மே.20, 2011] டெல்லி: 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார். அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார். 58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார். இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.
சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.
நடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத் துறைக்குப் பேரிழப்பாகும் என்பதைத் திரைப்பட ரசிகர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். திரைப்படத் துறையில் எனக்கு உள்ள ஈடுபாடுகாரணமாக இக்கட்டுரையை வரையவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
“நமது உலகம் கதைகளால் நிறைந்துள்ளது” என்று சொன்னார் எம்.டி வாசுதேவன் நாயர். அந்த கதைகள் எவ்வளவு முக்கியமானவை, சுவாரஸ்யமானவை, கவனிக்கத்தக்கவை? எவை கதையாகின்றன? எம்.டியின் எழுத்து கலையில் இதற்கு விடை உள்ளது. எம்.டியை வாசிக்கையில் கதைக் கலை வாழ்வின் எளிமையை அதன் வசீகரத்தை உணர்த்துவதற்கான முயற்சியோ என்று வியக்கிறோம். குறிப்பாக, அவரது “மூடுபனி” எனும் குறுநாவலை படிக்கையில். வாழ்வு எத்தனை சாதாரணமானது என்பதை அதை மிக நுணுக்கமாக அணுகி சிந்திக்கும் கதைகள் உணர்த்துகின்றன. மிக மிக சாதாரணமான கவனிக்கவே அவசியமற்ற ஒன்றான வாழ்வின் வசீகரத்தன்மையை உணர்த்துவதில் கதையாளர்கள் பரவலாக மாறுபடுகிறார்கள். ஆய்வகத்தில் மரபணுக்களுக்கு நிறமூட்டி மாறுபடுத்தி ஆய்வது போல் இது நிகழ்கிறது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









