எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:
எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:
Ambikaipahan Gulaveerasingam: சிறப்பான பதிவு. சிறிது இடம் கிடைத்துவிட்டால் இப்படித்தான் பல பிதற்றல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மாமியாருடைய சீலை விலகிய கதை. சொல்லவும் முடியவில்லை, பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.
Memon Kavi: இக்காலகட்டத்தில் தேவையான பதிவு. ஜீவா மறைந்ததால் அவரது மீதான அவதூறுகளுக்கான எதிர்வினைகள் வராது என்று நினைப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. ஜீவா மறைந்தாலும் அவருடன் வாழ்ந்தவர்கள், அவரை புரிந்து கொண்டவர்கள் கணிசமானவர்கள் இயலுமானவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மறந்து விட கூடாது.
Tam Sivathasan: மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு: அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஜீவாவை விமர்சிக்கிறார் என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் கேள்விக்கான பதில்: பெப்ரவரி 14 அன்று நடந்த கருத்தரங்கில் தேவகாந்தன் குறிப்பிட்ட, 2002 இல் ஊட்டியில் நடந்த சந்திப்பில் ஜெயமோகன் கூறிய கருத்தில் இவ் விடயம் பதிவாக இருக்கிறது. ஜெ.மோ: "மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி மு.தளையசிங்கம் இப்படிச் சொன்னதாக என்.கே.மகாலிங்கம் என்னிடம் சொன்னார். அவர் தலித்தாக இருந்த போதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ, அடிபட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை. கைலாசபதி மீதான பயம்தான் காரணம்". இதில் எல்லோரும் 'அவர் சொன்னார்' கேஸ்கள் தான். மூத்த எழுத்தாளர் என்ற வகையில் இவை எல்லாவற்றையும் தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. எனக்கு மட்டும் இது எப்படித் தெரியும் என்று தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். நானும் உங்கள் காலத்தன்தான். 1992 இல் பிறந்தது அனோஜனின் குற்றமில்லை. ஜெயமோகனின் குறிப்பை அவர் வாசித்திருக்கிறார், நீங்கள் வாசிக்கவில்லை என்பதை அறிய ஒருவர் எரிகணை விஞ்ஞானியாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஜீவாவுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் குறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனக்கூற வருகிறீர்களா? அல்லது வயது குறைந்தவர் என்பதனால் அனோஜன் அவரை விமர்சிக்கக்கூடாது என்கிறீர்களா? அனோஜனின் கருத்தின்மீது உங்களுக்கு கேள்வி இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதை அவரது வயதுடனும் அனுபவத்துடனும் இணைத்து எழுதுவதில் எனக்கு உவப்பில்லை. மார்க்ஸை, ஏங்கெல்ஸை, ஃபிராய்டை, ஹெமிங்வேயைப் பற்றி விமர்சிப்பவர்கள் அவர்கள் காலத்தில் பிறந்தவர்களோ வாழ்ந்தவர்களோ அல்ல. ஒரு இலக்கிய ஆளுமையின் தனிப்பட்ட வாழ்க்கை படைப்பில் தெரியவேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அப்படியானால் ஞானி ஏன் கோவிலில் சாமி கும்பிட்டார் என்று கேட்பவர்களுக்கோ, பிரித்தானிய இலக்கிய வட்டத்தில் இருந்த ஒரே ஒரு தமிழ் ஆளுமையான அழகு சுப்பிரமணியம் ஏன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வீதிகளில் வெறியில் விழுந்துகிடந்தார் என்று கேட்பவர்களுக்கோ பதில் இல்லை. அது விவாதத்துக்குரிய விடயம். உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் அதை முன்வைத்த பாங்கில் எனக்கு உவப்பில்லை. எல்லா இலக்கியவாதிகளிலும் செங்கோடர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அதுவே நல்லதொரு உதாரணம். அனோஜன் கூறியதற்கான ஆதாரம் ஜெயமோகன் பதிவாக 'திண்ணை' யில் வெளிவந்தது. Hard copy (6/11/2002) யாக
என்னிடம் உள்ளது. வேண்டுமானால் அனுப்புகிறேன். ஜெ.மோ. எழுதியதற்காக அது உண்மையாக இருக்கவேண்டுமில்லை எனக் கேள்வி எழுப்புபவர்கள் என்.கே. மகாலிங்கத்திடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். யாருக்காகவும் வாதிடுவதற்காக
இதை நான் எழுதவில்லை. இரண்டாவது செருப்பின்மீது எனக்கு அக்கறையுமில்லை. நன்றி