சிறுகதை: கொங்கிறீட் கலவரத்தில் மண்ணின் குழப்பம்! - டீன் கபூர் -
* ஓவியம் - AI
இந்த மண்ணின் வாசம், காற்றின் சிறகுகள், புல்லின் நுனி போன்றவை எல்லாம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருந்தன. ஆனால், காலத்தின் கடுமையான மாற்றங்கள் அதனைத் தாண்டி சென்று விட்டன.
முந்தைய நாட்களில் ஆத்து மேடு, ஆழமான நீர் வட்டைகள், நிழல்வாகை, நிழல் தரும் ஆலமரங்கள் என்று அந்த ஊர் ஒவ்வொரு துளியிலும் இயற்கையின் முத்திரையிட்டிருந்தது. அந்தக் கதைகள், அந்த மரங்களின் கீழ் சுமந்த கனவுகள். அனைத்தும் இப்போது எவருக்கும் தெரியாது. மண், காற்று, மரம், இலை - இதுவே அங்கு ஒரு காலத்தில் இயற்கையில் சொல்லானது. ஆனால், இப்போது கொங்கிறீட் காட்டின் கொடூரமான கட்டிடங்கள், உயரமான மாடிகள், வெறுமையின் அடையாளமாக நிற்கின்றன.
காலத்தின் வழியில் நிலைத்த இயற்கை இப்போது மாற்றத்திற்குள் சிக்கித் திக்குமுக்காடுகிறது. ஒவ்வொரு இரவிலும், அந்த நகரத்தின் மின்னல் விளக்குகளுக்குள் சிக்கி, பழைய கதைமாந்தர்கள், மெல்ல ஒடிந்து, மறைந்து செல்கின்றனர். ஒரு மரத்தின் நிழல் நினைவாகவே உள்ளது. அதன் கீழ் சில மண்மேடுகள் மட்டுமே இருந்து. அவற்றில் புதைந்து கிடப்பது மண்ணின் அழகு.
இந்த நகரில் பிறக்கும் குழந்தைகள் நிலத்தின் மண்ணில் விளையாடாமல், கொங்கிறீட்டின் மைதானத்தில் மட்டும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பழைய கதைகளின் சொற்கள் அவர்களிடம் எளிதில் கற்பிக்க முடியாது.
ஆனால், ஒருவர் மட்டும் அந்த நகரத்தின் நடுவே தனது வீட்டுக் கதவைத் திறக்க அங்கு அவன் மண் மணம் அடிக்கிறது. அவன் எழுத்துகளின் மூலம். அந்த மண்ணின் அழகை மீண்டும் எழுந்து வரும் வகையில் எழுதுகின்றான்.
இந்த ஊரின் மானிடக் கூட்டங்களில் மறைந்த இயற்கையின் குரலை காப்பாற்ற, அவனது குரல் - அவனது எழுத்துக்கள் மட்டுமே மீதமிருக்கின்றன. காலம் மாறிவிட்டது. ஆனால் இந்த சிறுகதையின் மூலமாக, அந்த நினைவுகள் மறையாமல் விடும் என நினைக்கிறான்.