பண்டைத் தமிழரின் வாழ்வியலானது பண்பாட்டுக் கூறுகள் மிகுந்ததாகும். தமிழர் உயர்ந்த ஒழுக்கங்களைத் தம் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய மேலான வாழ்வியலுக்குச் சான்றாக அமைவன சங்க இலக்கியங்களாகும். அவை மனித வாழ்வியலை அகம் புறம் என இருதிறத்ததாய்ப் பகுத்துக் காட்டுகின்றன. பண்டைத் தமிழரின் அகவாழ்வையும் அதன் சிறப்பியல்புகளையும் எடுத்துக்கூறும் நூலாகக் குறுந்தொகை அமைகிறது. குறுந்தொகையில் அமைந்துள்ள தமிழர் வாழ்வியல் பற்றிய கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகை
சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்றாக அமைவது குறுந்தொகையாகும். இந்நூல் குறுகிய அடிகளில் ஆழமான கருத்துகளைக் கூறும் நூலாக அமைகிறது. இக்குறுந்தொகை நானூறு பாடல்களைக் கொண்டதாதலின் குறுந்தொகை நானூறு எனவும் வழங்கப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். தொகை நூற்களுள் குறுந்தொகைக்கெனத் தனித்த இடமுண்டு. இதனை “நல்ல குறுந்தொகை” என்ற பழம்பாடல் பதத்தால் அறியலாம். தொகை நூற்களுள் சான்றோரால் மிகுதியும் எடுத்தாளப்பட்ட பெறுமை குறுந்தொகைக்கு உண்டு. இது மனித வாழ்வின் பல நுட்பமான கூறுகளை இனிமையுற எடுத்துக்காட்டியுள்ளது.
இல்லறத்தில் புரிதல்
தமிழர் சுட்டும் அகம் புறம் ஆகிய இருநிலைகளுள் மனத்தை அடிப்படையாகக் கொண்ட அகமே புறத்திற்கும் அடிப்படை என்பதை “அகத்தை யொத்தே புறம் (வாழ்வு) அமைகின்றது”1 எனும் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் கருத்தால் உணரலாம். அகமானது இல்லற வாழ்வியலைக் கூறுவது. தமிழர் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருப்பது இல்லறமாகும். துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. திருக்குறள் இல்லறம் துறவறம் ஆகிய இரு வாழ்வியல் நெறிகளுள் இல்லறத்தை முதன்மைப்படுத்தியுள்ளது. இதனை “திருக்குறள், வாழ்வியலை வகையுற விளக்கப் போந்து, இல்லறத்திற்கே முதன்மை கொடுக்கின்றது”2 எனும் சி. இலக்குவனார் கூற்றால் அறியலாம். இல்லறத்தைப் பேணுகின்ற கணவனும் மனைவியும் ஒத்த அன்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மனைக்கு அழகென அமைவது தலைவனும் தலைவியும் தம்முள்கொண்ட புரிதலாகும். இப்புரிதலைக் குறித்து குறுந்தொகையில் ஓரம்போகியார் கூறும் பொழுது,
“காஞ்சியூரன் கொடுமை
கரந்தன ளாகலி னாணிய வருமே” 3
எனப் பாடுகின்றார். இப்பாடலில் தலைவன் தலைவியினிடத்து ஊடல் கொண்டு தலைவியைக் கடிந்துரைக்கின்றான். புறத்தே சென்ற தலைவன் மீண்டும் இல்லத்திற்குத் திரும்பும்போது தாம் காலையில் கொண்ட ஊடலின் காரணமாகத் தலைவி வருத்தம் கொண்டிருப்பாள். தன்னிடத்து உரையாடமாட்டாள் என்று நினைத்தவாறு இல்லத்திற்குள் புகுகின்றான். அச்சமயம் தலைவியானவள் காலையில் நிகழ்ந்த ஊடலைச் சிறிதும் நினையாதவள் போல் இயல்பாய் நடந்து கொள்கிறாள். இச் செயலைக் கண்ட தலைவன் தான் செய்த தவறை நினைந்து நாணுகிறான். இவ்விடத்து இல்லறத்தார் பேணுகின்ற உயர்நெறியாகிய அன்பும் புரிதலும் எடுத்துரைக்கப்படுகிறது.
*படத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்கு இரு தடவைகள் அதன்மேல் அழுத்தவும்.
எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் முதலாவது விருதுகள் வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
பகுதி-iசென்ற இதழில், தொடப்பட்ட, மூன்று விடயங்கள்:
1. ஒன்று, பக்மூத், எவ்வாறு ஓர் 150,000 உக்ரைனிய போர் வீரர்களுக்கு, ஓர் மரண பொறியாக செயற்பட்டது. (பக்மூத் வீழ்ச்சியின் போது 50,000 வீரர்கள் கொல்லப்பட்டும், மற்றும் 85,000 பேர் காயமுற்றதாகவும் ஒரு பதிவு கூறுகின்றது).
2. இத்தோல்வியை தொடர்ந்து எவ்வாறு ஸெலன்ஸ்கி G-7 மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு ஓர் 375 மில்லியன் டாலர் பணமுடிச்சும், F-16 விமானங்களின் வழங்குகைக்கும் உறுதி செய்யப்பட்டார் என்பது குறித்தும்.
3. இப்பணமுடிப்பு பரிசளிப்புகள், “பக்மூத் வீழ்ந்து விட்டது - இருந்தும் அது இப்போது, எம் இதயத்தில் ஆழ வாழ்ந்திருக்கின்றது” என்ற அவரது ஆரம்ப அறிவிப்பை எப்படி அவர் அவசர, அவசரமாக மாற்றி – “இல்லை பக்மூத்தை இப்போதே சுற்றி வளைத்துள்ளோம் - இனி மீட்டெடுப்பதே எமது பிராயசித்தம் என புரண்டு பேச வைத்ததையும் பார்த்திருந்தோம்.
இச்சூழலில் F-16 விமானங்கள், போர்களத்தின் சாரம்சத்தை மாற்றக்கூடியதே என்றும், F-16 விமானங்களின் சிக்கல் நிறைந்த தொழிநுட்ப நடைமுறைமையானது, அமெரிக்காவின் ஓய்வு பெற்ற விமானிகள் அல்லது அந்நாட்டின் ஒப்பந்த அடிப்படையிலான விமானிகளை, F-16 விமானங்களை ஓட்ட வைக்கும் என்றும், இது ரஷியாவை அமெரிக்காவுடன் அல்லது நேட்டோவுடனான நேரடி மோதல்களுக்கு இழுத்துவிடும் என்றும் ஆயஉபசழபயச கூறியிருந்தார்.
தந்தையர்தினக் கவிதை!
ஈன்றெடுத்தாள் அம்மா எனைச் சுமந்தார் அப்பா
சான்றோனாய் என்னை சபை வைத்தார் அப்பா
நான் தடுக்கும் வேளை தாங்கிடுவார் நாளும்
வானளவு உயர வாழ் வளித்தார் அப்பா
ஊனுருக எனக்குப் பால் கொடுத்தாள் அம்மா
உயரோங்கி நிற்க உழைப் பீந்தார் அப்பா
தனக் கெனவே எதுவும் சேர்க்காத அப்பா
எனக் கெனவே தேடி குவித்திட்டார் வாழ்வில்
விருப் பென்று எதையும் வெளியிடார் அப்பா
பொறுப் புடனே யாவும் ஆற்றிடுவார் அப்பா
என் உயர்வு ஒன்றே தனக்கான தென்பார்
கண் மணியாய் கருத்தில் இருத்தினார் அப்பா
தோழேற்றி என்னைச் சுகங் காண்பார் அப்பா
தோழனாய் இப்போ ஆகி விட்டார் எனக்கு
வாழ்வினிலே எனக்கு வரம் ஆனார் அப்பா
வணங்கு கின்ற தெய்வமாய் தெரிகிறார் அப்பா
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச்சிறந்த நர்த்தகி. அவரது நடனத்திறமையின் காரணமாகத்தான் அவர் நடித்த திரைப்படங்களில் அவர் நடித்திருக்கும் பாடற் காட்சிகளெல்லாம் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அப்பாடற் காட்சிகளிலெல்லாம் அவரது நடனத்திறமையின் கூறுகள் சிலவற்றைத்தான் காண முடியும்.
ஜெயலலிதாவின் நடனத்திறமையினை முழுதாக வெளிப்படுத்தும் வகையில் வெளியான திரைப்படங்கள் வெகு சிலதாம். அவற்றிலொன்று ஆதி பராசக்தி. அப்படத்தில் வரும் இப்பாடற் காட்சியினைப் பாருங்கள் அவரது நடனத்திறமையினை புரிந்துகொள்வீர்கள்.
அறுபதுகளில் அவர் தயாரித்து மேடையேற்றிய நாட்டிய நாடகமான 'காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் மிகவும் புகழ்பெற்றது. கல்கியில் அது பற்றியொரு விமர்சனம் வெளிவந்ததாக நினைவு. நீண்ட நாட்களாக அதனை யு டியூப்பில் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. யாரிடமாவதிருந்தால் பகிர்ந்துகொள்ளூங்கள்.
அந்தக் குழந்தைகள் தப்பியது , தொடர்ந்து 40 நாட்கள் நச்சரவங்கள், கொல்மிருகங்கள் மலிந்த காட்டில் உயிர் பிழைத்தது நாம் நேரில் காணும் அற்புதம். குழந்தைகளின் துணிவு, விடாமுயற்சி, நம்பிக்கை இவையெல்லாம் வியக்கத்தக்கவை. அவர்கள் எதிர்கால வாழ்க்கை வளம், நலம் மிகுந்து சிறக்கட்டும்
ஜூன் 14 சேகுவேரா பிறந்ததினம். இலங்கையில் ஜேவிபியினரின் முதற்புரட்சி நடைபெற்றபோது அவர்களைச் சேகுவாராக்கள் என்றுதான் மக்கள் அழைத்தனர். அப்பொழுதுதான் முதன் முதலாக இப்பெயரை அறிந்துகொண்டேன். அப்பொழுதுகூட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) என்னும் சேகுவேரா (Che Guevara) பற்றி எதுவுமே அறிந்திருக்கவேயில்லை.
பல ஆண்டுகளின் பின்னரே மார்க்சியம் பற்றி அறிந்தபோது, கியூபா பற்றி அறிந்தபோது சேகுவேரா பற்றியும் அறிந்துகொண்டேன். மருத்துவர், எழுத்தாளர், மானுட விடுதலைப்போராளி எனப் பன்முக ஆளுமைமிக்கவர் சேகுவேரா. மானுட விடுதலைப்போராளியான இவர் அப்போராட்டத்திலேயே தன்னுயிரை இழந்தார்.
ஒர் உலகப் புகழ் பெற்ற மனிதனின் வாழ்க்கை வரலாற்றை மிகத் தெளிவாகவும் புனைவுக்குரிய பாங்குடனும் நகர்த்தும் பாங்கு சிறப்பாக அமைந்துள்ளது. “பல்லாயிரக் கணக்கான பல இலட்சக் கணக்கான மக்களைக் கொன்றொழித்து அவர்களது சொத்து, சுகம் அனைத்தையும் அழித்து தனியொருவனின் அகம்பாவத்தை ஆணவத்தை வெற்றியென்று கொண்டாடியவர்களை வீரர்கள் என்று வரலாற்றில் வரைந்து வைத்தவர்கள் சாதித்தது என்ன? வெறும் ஜாலமாக முடிந்து ஒரு பிடி மண்ணிலும் கலவாமல் மறைந்து போனது அலெக்சாண்டரின் ஆணவம்” கணிசமான நாடகப் பிரதிகள் போர் குறித்தவையாக அமைந்திருப்பதனால் இக்கூற்று பொருந்துவதாகவே அமைந்துள்ளது.
3.5 பிரதிகளின் மொழி
ஒரு பிரதி நாடகமாக நடிக்கப்படும்போதுதான் முழுமையடைகிறது என்று கூறுவார்கள். நடிகனும் அவனின் மொழியும் பாவனைகளும் அரங்கில் காட்சியாக விரிகின்றபோது அது பார்வையாரிடம் விரைவாகச் சென்று சேர்கின்றது. அவர்களை நாடகத்துடன் ஒன்றிணைய வைக்கிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது பிரதியின் மொழியாகும். நாடகம் ஒன்றுக்கான கூட்டுழைப்பை இவ்வாறுதான் மொழி வேண்டி நிற்கிறது.
“நாடகம் என்பது நிச்சயமாக இலக்கியத்தின் கிளைப்பகுதி அல்ல என்பதைத்தான் உலக நாடகவியலாளர்கள் செயற்படுத்திக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு கதையையோ நாடகத்தையோ எழுத்தில் படிக்கும்போது அந்த எழுத்து மொழியை முதலில் புரிந்து கொள்கிறோம். அப்படி புரிந்து கொள்ளத் தொடங்கும் போதிலிருந்துதான் அதை நம் அனுபவ அளவில் நின்று காட்சிப்படுத்த ஆரம்பிக்கின்றோம். நாடக அரங்கில் இந்த செயல்முறை தலைகீழாக மாறிச் செயல்படுகிறது. அத்தகைய நாடகம் என்பதை நிகழ்வாக நாம் பார்ப்பதென்பது நாடகத்தின் மொழிமூலம் சாத்தியப்படுகிறது” (15)
ஏழுமலைப்பிள்ளையின் மேற்குறித்த நாடகப்பிரதிகளின் ஊடாக அவர் மொழியைக் கையாண்டுள்ள வகையினை நோக்குவோம்.
--அட்டையைத் தெளிவாகப் பார்ப்பதற்கு அதனை ஒரு தடவை அழுத்தவும். -
எனது மூன்று நூல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (கவிதைகள்) பதிவுகள்.காம் வெளியீடாகவும், வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ஜீவநதி பதிப்பக வெளியீடாகவும் , நவீன விக்கிரமாதித்தன் (நாவல்) ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகவுள்ளன. ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலின் அட்டைப்படத்தையே இங்கு காண்கின்றீர்கள்.
(1)2022 ஆவணியில் வடலி வெளியீடாக வந்த யதார்த்தனின் ‘நகுலாத்தை’ நாவல், தன் மதிப்பீட்டை அண்ணளவாய்ச் செய்வதற்கான வெளிகளையே கொண்டுள்ளது. அதில் ஐதீகம், நாட்டார் பாடல், வாய்மொழி இலக்கியங்களின் பயன்பாடுபற்றியதும், அப் படைப்பாக்கத்திற்கு நிறையவே தேவைப்பட்டிருக்கக் கூடிய தேடல்கள், கள ஆய்வுகள்பற்றியதுமான படைப்பாளியின் எந்த விபரங்களும் இல்லை. வடவிலங்கையின் நிலவியல் படம் மட்டும் தரப்பட்டுள்ளது.
கதையிலிடம்பெறும் ஐதீகங்கள் குறித்து, அவை ஐதீகங்களா புனைவுகளா என்பதுபற்றிய படைப்பாளியின் வாக்குமூலம், இதுபோன்ற ஓர் இலக்கியப் பிரதிக்கும் முக்கியமானது. அல்லாமல், நாவல் கட்டமைப்பு தவிர்ந்த காத்திரமான விமர்சனம் சாத்தியப்படாது. இத்தகைய தட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்படும் விமர்சனம், ஏகதேசமாய் தன் வழியில் முன்செல்லவோ, தடைகளால் பின்னிழுக்கப்படவோதான் செய்யும்.
நாவல் சார்ந்த குறையாகவன்றி இதை பதிப்பு சார்ந்த குறையாகக் காணவேண்டும்.
(2)
மொழி வழியில் ‘நகுலாத்தை’ ஒரு பிரதியாய் நன்கு கட்டமைந்திருக்கிறதென்பதில் ஐயமில்லை. அது பாவித்த மொழி அந்த மண்ணுக்கானது. பல இலங்கைத் தமிழ் நாவல்களில் பயின்றிருக்காத உரையாடல் வளம் ‘நகுலாத்தை’யிலுண்டு.
பிரதேசவாரியாய் முக்கியம் பெற்றிருக்கும் சொற்கள் சில எவ்வாறு தம் வெகுவான பொருத்தம் கருதி தமிழுக்கே உரியனவாகவும், தமிழாய்வுக்கு உதவுபவையாகவம் ஆகினவோ, அதுபோல இலங்கையின் வடபிரதேச, குறிப்பாக வன்னிப் பிரதேச, பேச்சுவழக்கிலுள்ள மொழி வளம் அவைசார்ந்து பயனளிக்கக்கூடியது. அவ்வாறான பல சொற்களை பிரதியில் அடையாளப்படுத்த முடியும். ‘உருத்து’ (தூளாக்குதல்) என்ற சொல்லை உதாரணத்துக்கு இங்கே குறிப்பிடலாம்.
இனிய நண்பர், நாடகநெறியாளர்; கலைஞர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-6-2023 சனிக்கிழமை அன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை நம்பமுடியாமல் இப்பொழுதும் இருக்கின்றது. பழகுவதற்கு மிகவும் அன்பான, பாசமான ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்ற கவலைதான் இப்போது எங்களிடம் மிஞ்சி நிற்கின்றது.
கலை உலகிற்கு நன்கு அறிமுகமான, இலங்கையில் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்திநாதன், மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். சிறந்த நடிகராக, சிறந்த நெறியாளராக அவர்தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். கனடாவில் உள்ள மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து மிகவும் திறமையாகச் செயற்பட்டவர். அதிபர் பொ. கனகசபாபதி அவர்களிடம் இருந்து ‘குறிப்பிட்ட சரியான நேரத்திற்கு’ நிகழ்வைத் தொடங்க வேண்டும் என்பதைத் தான் கற்றுக் கொண்டதாகவும், அதையே கடைசிவரை கடைப்பிடித்ததாகவும் அவர் ஒரு முறை குறிப்பிட்டது நினைவில் நிற்கின்றது.
தமிழ் இலக்கியத் தோட்டம் (அறக்கட்டளைப் பதிவு இலக்கம்: 86107 1371 RR0001)
தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது 2022 நிகழ்வுக் காணொளி - https://www.youtube.com/watch?v=3ulGohjdauo&t=2s
தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது 2022 நிகழ்வுப் புகைப்படத் தொகுப்பு - https://tamilliterarygarden.com/gallery
தமிழ் இலக்கியத் தோட்டம் - https://tamilliterarygarden.com
உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும், அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர். கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன் மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.
"நன்றாகத்தானே இருந்தார் ! அவருக்கு என்ன நடந்தது..?" என நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, கொழும்பிலிருந்து நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் தொடர்புகொண்டு, எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவிருந்த எமது அருமை நண்பர் ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின் அன்புத்துணைவியார் கமலி அக்கா கனடாவில் மறைந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னார்.
அடுத்தடுத்து துயரமான செய்திகளே வந்துகொண்டிருந்தன.
கனடாவில் நான் முற்கூட்டியே தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலையும் சிறிது மாற்ற நேர்ந்தது. மெல்பனிலிருந்து புறப்படும்போது கமலி அக்காவையும் பார்க்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தேன். அதற்காக நாளும் குறித்தேன். ஆனால், அவரை அதே முகப்பொலிவுடன் மரணக்கோலத்தில்தான் பார்க்க முடிந்தது. என்னுடன் வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய நண்பர் தவநேசனையும் எங்கள் நீர்கொழும்பூர் நண்பர் ராஜாவையும் அழைத்துக்கொண்டு கமலி அக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன். அங்கே அவரின் இரண்டு புதல்விகளும் என்னைக் கண்டு பேராச்சரியம் அடைந்தனர்.
இன்று மாலை 3600 KIngston Road இல் அமைந்துள்ள ஸ்கார்பரோ கிராமச் சமூக நிலையத்தில் தேடகம், காலம் மற்றும் பதிவுகள்.காம் ஒன்றிணைந்து நடத்திய எழுத்தாளர்கள் முருகபூபதி மற்றும் சாம்ராஜுடனான இலக்கியச் சந்திப்பு அமைதியாக ஆனால் காத்திரமானதாக நடந்து முடிந்தது. நிகழ்வினை எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையேற்றுச் சிறப்பாக நெறிப்படுத்தினார்.
ஆரம்பத்தில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுத்தாளர் முருகபூபதி பற்றி நல்லதோர் அறிமுகத்தைச் செய்தார். ஆரம்பத்தில் மல்லிகையில் முருகபூபதியின் முதலாவது சிறுகதை வெளியானதையும், தொடர்ந்து வெளியான இரண்டாவது கதை தான் நடத்திய 'பூரணி'சஞ்சிகையில் வெளியானதையும் நினைவு கூர்ந்தார். முருகபூபதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கொழும்புக் கிளையில் முக்கிய பங்கு வகித்ததைக் குறிப்பிட்ட என்.கே.மகாலிங்கம் அவர்கள் ஆனால் முருகபூபதியின் கதைகளில் ஏனைய முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளில் உள்ளதைப்போன்ற பிரச்சாரத்தொனி இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டினார். கூடவே முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் ( 1976 இலும் ) முதல் நாவல் பறவைகள் ( 2003 இலும்) சாகித்திய விருது பெற்றதையும் நினைவு கூர்ந்தார். இவ்விதம் ஆரம்பத்தில் புனைவிலக்கியத்தில் கால் பதித்த முருகபூபதி பின்னர் ஊடகத்துறைக்குள் மூழ்கி அபுனைவிலக்கியத்தில் மூழ்கி விட்டார் என்னும் கருத்துப்படத் தன் உரையினையைத் தொடர்ந்தார்.
3.3.1 தமிழர் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரதிகள்சங்கிலியன் என்ற நாடக எழுத்துரு மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. ஈழத் தமிழ் மன்னன் பற்றிய நாடகம். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் சங்கிலியன் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் இதனை எழுதியுள்ளார். ஏற்கனவே தமிழ்ச்சூழலில் இது தொடர்பான பல நாடக நூல்கள் வந்திருக்கின்றன. மாதகல் புலவர் சூசைப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாட்டுக் கூத்து’, பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாடகம்’, காரை ந. சுந்தரம்பிள்ளையின் ‘சங்கிலியம்’, வித்துவான் கந்தையாவின் ‘சங்கிலியன் நாடகம்’, மு. அருட்பிரகாசத்தின் ‘மாவீரன் சங்கிலியன' ஆகியன எழுதப்பட்டுள்ளன. ஈழத்து அரசியல் வரலாற்றிலும் சங்கிலியன் அரசனுக்கு முக்கியத்துவம் உண்டு.
ஏழுமலைப்பிள்ளை இதனை நான்கு காட்சிகளைக் கொண்ட ஒர் எழுத்துருவாகத் தந்துள்ளார். காக்கைவன்னியன் சங்கிலியின் தளபதியை வஞ்சமாகக் கொலை செய்துவிட்டு பறங்கியருடன் சேர்ந்து சங்கிலியனைக் காட்டிக்கொடுப்பதே இந்நாடகம் ஆகும்.
யாழ்ப்பாண இராட்சியத்தின்மீது வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கும்போது சங்கிலியன் போருக்கான ஆயத்தங்களைச் செய்கிறான். வீரமாணிக்கதேவர் என்ற தளபதியை வீரநாயகனுடன் சேர்ந்து சதி செய்து காக்கை வன்னியன் கொல்கிறான். வீரமாணிக்க தேவன் இறந்ததறிந்து சங்கிலியன் துயரப்பட்டிருந்தபோது பறங்கியர் சங்கிலியனை அரண்மனையில் முற்றுகையிடுகின்றனர். இக்காட்சிகளின் ஊடாக சங்கிலியன் நாடகத்தை நகர்த்தியுள்ளார் ஏழுமலைப் பிள்ளை.
- எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்த செய்தியினை இணையத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன். அவரது மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கிக்கிடக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். கலைவாதி கலீல் பன்முகத்திறமை மிக்க இலக்கியவாதி. இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மன்னாரிலிருந்துத் திடமாகக் கால்பதித்தவர். என் பால்ய பருவத்திலிருந்தே இவரது பெயரை ஏதாவதொரு சஞ்சிகை, அல்லது பத்திரிகையில் அவதானித்தே வந்துள்ளேன் திக்குவல்லை, கமால், சாரணாகையூம், கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார், எம்.ஏ.நுஃமான், பாலமுனை பாறுக், அன்பு ஜவகர்ஷா அடிக்கடி பல்வேறு அச்சூடகங்களில் தென்படும் பெயர்கள். எழுத்தாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர் கலைவாதி கலீல் பற்றி நல்லதோர் அறிமுகக் கட்டுரையினை அவரது பவளவிழாவின்போது எழுதியிருக்கின்றார். 17.10.2018 அன்று 'நியூஸ் பிளஸ்' இணையத்தளத்தில் வெளியான அக்கட்டுரையினைப் 'பதிவுகள்' இங்கு அஞ்சலிக் கட்டுரையாக மீள்பிரசுரம் செய்கின்றது. அத்துடன் எண்ணிம நூலகமான 'நூலகம்'தளத்திலுள்ள அவரது சிறுகதைத்தொகுப்பான 'ஒரு வெள்ளி ரூபாய்'க்கான இணைப்பினையும் பகிர்ந்துகொள்கின்றது. இணைப்பு - https://noolaham.net/project/06/544/544.pdf -
பவளவிழாவில் கலைவாதி - எம்.எஸ்.எம்.ஸாகிர் -
தமிழ் பிழைகள் எங்கு ஏற்பட்டாலும் அதனை தட்டிக்கேட்பவர். குற்றங்களுக்கு குரல் கொடுப்பவர். பாராட்டப்பட வேண்டியவர்களை ஏணி கொடுத்து உயர்த்தி விடுபவர். எதிரியாக இருந்தாலும் தோள் கொடுத்து தூக்கிவிடுபவர். எள்ளளவும் கோபம் எடுக்காதவர்.இப்படி அவரைப் பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம். இவர் யாரென்று யோசிக்கிறீர்களா?அவர்தான் நவமணிப் பத்திரிகையில் ஜலதரங்கம் மற்றும் இலக்கியச் சோலை என்பவற்றை தயாரித்து தொகுத்தளிக்கும் பல்கலைவேந்தன் கலைவாதி கலீல். மதாறுமுகைதீன் மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மது கலீல் எனும் கலைவாதி கலீல் 1943 ஒக்டோபர் 13 ஆம் திகதி புதன்கிழமை மன்னாரில் பிறந்தார்.
நேற்று மாலை, கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதியுடன் 5 Spice உணவகத்தில் எழுத்தாளர் தேவகாந்தன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோருடன் சந்தித்தோம். எழுத்தாளர் முருகபூபதி குறிப்பாகப் போர்க்காலச்சுழலில் தன் ஊடகத்துறை அனுபவங்களைவ் எதிர்கொண்ட பிரச்சினைகளையெல்லாம் எம்முடன் பகிர்ந்துகொண்டார். கதை, கட்டுரை, நாவல் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த பத்தி எழுத்துகள் என இவரது இலக்கியக் களம் பரந்தது. இவர் சமூகச் செயற்பாட்டாளரும் கூட. கடந்த 35 வருடங்களாக இவர் இலங்கை மாணவர் கல்வி அமைப்பின் மூலம் இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதி மாணவர்களுக்கு ஆற்றும் சேவையினைப் பற்றியும் எமக்கு விளங்கப்படுத்தினார். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவரது தலைமையில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி அமைப்பு மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பது உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது.
நான் கனடாவில் வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது குறைவு. இணையத்திலேயே என் முக்கியமான தேடல்கள், எழுத்துப்பணி இருப்பதால் எனக்கு இவற்றில் நிகழ்வுகளைக் கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் பதின்மப் பருவத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் நிகழ்ச்சிகளைப் பல திறமை மிகு ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்களூடாகக் கேட்டு மகிழ்ந்த எனக்கு அவர்களைப்போன்ற பன்மிகு துறைகளில் ஆளுமை மிக்க, புலமை மிக்கவர்களை இங்கு என்னால் எளிதாக இனங்காண முடியவில்லை என்பதும் ஒரு காரணம். இருந்தாலும் இரவு வேளைகளில் 9 மணிக்குப் பிறகு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் கனடிய பல்லினக் கலாச்சார வானொலியான CMR 101.3 வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதுண்டு. தொடர்ச்சியாக அல்ல. இதனால் செந்தில்நாதன், பாலா, தர்சினி உதயராஜா போன்றவர்களின் குரல்கள் எனக்கு அறிமுகமாகின.
இவர்களில் தர்சினி உதயராஜாவின் குரல் நேயர்களை மிகவும் கவர்ந்து விட்டதை அறிய முடிந்தது. பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் நிகழ்ச்சியை கேட்டு விட்டு மீண்டும் பல வருடங்களின் பின் கேட்டபோது அன்றிருந்த பல வாசகர்கள் மீண்டும் அவரது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ராஜவர்மன், அப்பன் என்று சில பெயர்கள் நினைவில் நிற்கும் வகையில் மீண்டும் மீண்டும் வானலையில் ஒலித்தன.இவர்களைப் போன்ற பல நேயர்கள் இவர் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காகக் காத்திருந்து பங்கு பற்றினார்கள் என்பதையும் அவர்களது கூற்றுக்களிலிருந்து அறிய முடிந்தது. இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் நேயர்களை அன்பொழுக அழைத்துச் செல்லும் அவரது குரல் என்பதை உணர முடிந்தது. நேயர்கள் இவரைச் சகோதரியாக, சிநேகிதியாக, ஆசிரியையாக , சிறந்ததோர் ஊடகவியலாளராக, வானொலி அறிவிப்பாளராகப் பார்த்தார்கள் என்பதையும் உணர முடிந்தது.
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்னும் தொகுப்புகளுக்காகப் பெற 'டொரோண்டோ' வந்திருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி.
இவரது எழுத்துகள் எழுபதுகளில், எண்பதுகளில் தமிழக வெகுடன இதழ்களை ஆக்கிரமித்திருந்தன. இவரது எழுத்து நடை அதுவரை எழுதி வந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்து நடையிலிருந்து சிறிது வேறுபட்டது. ஆண், பெண்ணுக்கிடையிலான உறவினை, அன்பினை, அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் எழுத்து. 'இந்தும்மா' போன்ற அன்பொழுக இவரது நாயகர்கள் தம் இதயங்க கவர்ந்த காதலிகள், மனைவிகளை அதிகம் அழைப்பதை இவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அதன் பாதிப்பை இந்துமதி போன்ற எழுத்தாளர்களிடம் காணலாம். அதிகமாகத் தமிங்கிலிஸ் பிரயோகங்களை இவரது எழுத்தில் காணலாம்.
இவரது நாவல்கள் பல தமிழ்த்திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. இவரது நாவல்களை அதிகம் வாசிக்காவிட்டாலும் கேள்விப்பட்டிருக்கின்றேன். 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை , நண்டு போன்ற இவரது கதைகளின் திரைப்பட வடிவங்களைப் பார்த்திருக்கின்றேன்.
என் பால்யப் பருவத்தில் விகடனில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான சிறு நாவல் 'எதற்காக?'
அந்நாவல் தொடராக வெளியானபோது வாசித்துள்ளேன். என் பால்ய காலத்து அழியாத கோலங்களில் அந்நாவலும் ஒன்று. அதன் கரு வாசிப்பவர் மனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். அது என்னை ஏன் பாதித்தது என்று எண்ணிப்பார்க்கின்றேன். இந்த மானுட இருப்பு பற்றிய தேடல் எனக்கு எப்போதுமுண்டு. ஏன் எதற்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்னும் வகையில் படைக்கப்பட்டுள்ளன? எதற்காக எதிர்பாராத விளைவுகள் உயிர்களின் இருப்பில் ஏற்படுகின்றன? இவரது 'எதற்காக' என்னும் நாவலும் இப்பிரச்சினையை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளதால்தான் முதல் வாசிப்பிலிருந்து இன்று வரை நினைவில் நிற்கிறது. காதல் மிகுந்த , ஒருவர் மீது ஒருவர் அன்பைக் கொட்டி வாழ்ந்து வரும் தம்பதிக்குக் குழந்தை பிறக்கின்றது. இன்பத்தில் வளம் , நலத்துடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாள் அந்தப்பெண் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கையில் மின் ஒழுக்கினால் தீண்டப்பட்டு கருகி இறந்து விடுகின்றாள். எதற்காக இப்படி நடக்கின்றது என்று கேட்கும் நாவலாசிரியை கடவுளிடமும் அதே கேள்வியைக் கேட்கின்றார் 'எதற்காக?' வாசிக்கும் ஓவ்வொருவரும் கேட்கும் கேள்வி 'எதற்காக?'
3.2 இலக்கிய நாடகங்கள் : கதையும் கதைப்பண்புகளும்
சங்க இலக்கியம் முதலானவற்றையும் அவ்விலக்கியங்களில் வருகின்ற கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படுகின்ற நாடகங்களை இலக்கிய நாடகங்கள் என்று அழைக்கலாம். நடுகல் பேசும், வாய்மை காத்த மன்னன், வீரகாவியம், வீராதி வீரன் இந்திரஜித், சதுரங்க வேட்டை, இராமவீரம், சத்தியவேள்வி (பீஷ்மரின் தியாகம்), வள்ளுவர் பொதுமை, இளங்கோவின் இலட்சியம், நாவுக்கரசரின் ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றை இந்த அடிப்படையில் நோக்கலாம். இவற்றில் இதிகாசக் கதைமரபுகளுடன் தொடர்புபட்ட இராமாயணம், மகாபாரதம் முதலான கதைகள் உள்ளனவெனினும் அவை ஆய்வு வசதிக்காக இலக்கியப் பிரதிகள் என்ற வகைப்பாட்டிலேயே நோக்கப்பட்டுள்ளன.
3.2.1 இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள்
நடுகல் பேசும், வீராதிவீரன் இந்திரஜித், இராம வீரம் ஆகிய மூன்றையும் இராமாயணக் கதைகளின் அடிப்படையில் நோக்குவோம். நடுகல் பேசும் என்பது மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. இராமனுடன் போரிட்டு மாண்ட இராவணனின் வீரம் இந்நாடகத்தில் சொல்லப்படுகிறது.
கடலுக்குச் சென்ற மீனவர்கள் தங்கள் வலையில் அகப்பட்ட பெரியதொரு இரும்புப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்கள். அப்பெட்டியில் ஏட்டுச் சுவடி அகப்படுகின்றது. அதை ஒரு பண்டிதரிடம் எடுத்துச் சென்று அதில் இருப்பது என்னவென அறிந்து கொள்கிறார்கள்.
தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு முறை அழுத்தவும்.
தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு முறை அழுத்தவும்.
Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அப்படி ஒரு உலகத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் டைனஸோ பற்றிக் கனடாவில் நடந்ததொரு காட்சிக்குச் சென்று பார்த்ததை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க விரும்பினால் கனடா, மிஸசாகாவில் இப்பொழுது நடைபெறும் கண்காட்சிச் சாலைக்குச் சென்றால் அங்கு பார்க்க முடியும். ((At Square One in Mississauga, located at 199 Rathburn Rd. W. Canada.) நவீன தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த டைனஸோக்களை அவை எப்படி இருந்திருக்கும் என்று ஓரளவு கற்பனையில் கணித்து ரோபோக்கள் வடிவில் உருவாக்கியிருக்கிறார்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கும் இப்படி ஒரு காட்சியைப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஏற்கனவே லண்டன், பாரிஸ், மட்ரிட், அமெரிக்காவில் டென்வர், ரெக்ஸாஸ், கொலராடோ, டலஸ் போன்ற இடங்களில் பல பார்வையாளர்கனைக் கவர்ந்த கண்காட்சியாக இது இருக்கின்றது.