நாளும் நலம் பாட ஆசை ! ஆனால் , தறஂபோதைய.... தாயகத் தலைவரினஂ பேச்சுகள் ....சலிப்பையே தருகினஂறன . அழகிய தீவு , கலிங்கத்துப்பரணியினஂ போர்க்காட்சிகளையே விரும்பி நிறஂகினஂறது . முனஂனைய தலைவரை (மாமனாரிடம்) விட இவரிடம் பார்ப்பது , எதிர்பார்த்தது , தவறு தானஂ . இவர் , ' இஸ்ரேலினஂ வழியே சரி ' எனஂற நோக்கில் " ஐ .நா .அவை , இஸ்ரேலுக்கு ஒரு நோக்கு , எமக்கு இனஂனொரு நோக்கை ...வைத்திருப்பது தவறு" எனஂகிறார் . நம் நாட்டிலும் நடந்த " கொத்துக் கொலைகளை" எவ்வளவு இலகுவாக கடந்து போய் விட்டிருக்கிறார் , போய் விடச் சொல்கிறார் . போர்க்குறஂற விசாரணைகளே அவசியமறஂறவை எனஂகிறார் . உக்ரேனுக்கு , இஸ்ரேலுக்கு , நம்நாட்டுக்கு ....' வெளி நாட்டவர்களே ஆயுதங்களை எல்லாம் வழங்கியவர்கள் ' எனஂற முறையில் சரி தானஂ . ஒனஂறைக் கவனித்தீர்களா , ஐ .நாஅவை , ஆயுதங்களைப் பறஂறி எப்பவும் ஒனஂறுமே ...சொல்வதில்லை . நம்நாடும் ஒரு பாலைத் தராத கறவை மாடு தானஂ . அங்கே , பேசப்படுகிற இரட்டைப் பிரதேசக் கொள்கை இங்கேயும் ஏறஂபுடையது எனஂபதை கண்டுக்கிறதில்லை . உலகம் உண்மையிலே நியாயம் பேச முனஂ வர வேண்டும் . நாடுகளில் , இன வாதங்கள் அனைத்துமே சிறைக்குள் அடைத்துப் பூட்டப் பட வேண்டியவை . பெரிய நப்பாசை தானஂ .
சட்டங்களும் , கட்டளைகளுமே கடி நாய்களாகவே வலம் வருகினஂறன . வர வைக்கினஂறன .ஏனஂ தானஂ இந்த உணர்வோ ! . விடுதலைக்கு சிறிது மூச்சு விடுறதுக்காக மாலைதீவில் ஒரு தீவைப் பெறும் சிந்தனை சரியானதெனஂறே படுகிறது . அதறஂகாகஒரு தீவை விலை கொடுத்து வாங்கிறதும் கூட தவறில்லை . கண் எதிரே, நிலம் அபகரிக்கப்படுகிறது. களவாடப்படுகிறது . கள்ளர் கூட்டமாக உலகம் கிடக்கிறது . அவறஂறை எப்படி தடுத்து நிறுத்துவது ? கலிங்கத்துப்பரணியில் வரும் பேய்கள் , நிணங்களை புசிக்கினஂறன. ரத்தங்களைக் குடிக்கினஂறன . எம்மை தயார் படுத்துவதறஂகு தானஂ இந்த காப்பியம் எழுதப் பட்டிருக்கிறதோ ! யூதமக்களினஂ இனப்படுகொலை (Holocaust) நிகழஂவுகளைப் பார்த்து கலக்கம் அடைந்தோம் . இனஂறு நிகழும் இனப்படுகொலைகள் அதனஂ மாதிரிகள் தாம் . இந்த தரித்திரத்தையும் சரித்திரம் எழுதப் போகிறது . மனித உயிர்கள் தொழிறஂசாலையில் தயாரிக்கப்படுகிற பண்டங்களாகி விட்டன . நினைத்த போது வைத்துக் கொள்வதும் , தேவையறஂற மாத்திரத்திலே அழித்து விடுவதும் என நாகரிகக் காட்டுமிராண்டித்தனமும் தலை விரித்தாடுகிறது .
தறஂபோதைய நிலமையில் , காந்தியினஂ ஒத்துழையாமைப் போராட்டங்களையே ஏழைகளாகிய எம்மால் எடுக்கக் கூடியது . இதனால் , ஐரோப்பியக் குழு முறஂறிலும் அவுட்டாகிப் போகும் சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கினஂறன குட்டி நாடுகளும் காலனிகளினஂ எச்சங்களை மீத வைத்திராமல் மீளப் பெற முயல்வதுடனஂ, மக்களுக்கான உரிமைகளை உள்ளேயும் வழங்க முனஂ வர வேண்டும் . அவை மாறஂறங்களை ஏறஂபடுத்தலாம் . மெல்ல , மெல்ல பெரிசுகளினஂ வால்களினஂ ஆட்டம் நினஂறு விடும் . ஃபிரெஞஂசுப் புரட்சி, பழைய கால அரசர் காலத்தை மீள எழ முடியாமல் நிறுத்துவதில் முழுமையாக வெறஂறி அடைந்திருக்கவில்லை . தவிர பிரானஂஸ் , காலனி நாடாகவே தொடர்ந்தும் ...சரிவுக்கு காரணம் . அங்கேயும் , தறஂபோது ஒரு ஜனாதிபதி இருக்கிறார் . நாடுகளில் சக்கரவர்த்தி போனஂற இந்த தெரிவுகள் எல்லாம் எதறஂகு ??? .
அனஂறு " பார்வையாளர்கள் எதறஂகு , பங்காளர்களே வேண்டும் " எனஂற கோசம் அவனஂ நாட்டிலும் ஒலித்தது . குகதாசனும் அதில் அள்ளுப்பட்டவனஂ தானஂ . ஆனால் , இனஂறு மக்கள் கொல்லப்படுவதைப் பார்க்கிற போது வெறும் பார்வைக்காரனாக மட்டுமே இருக்கிறானஂ . அதிருப்தியில் கிடக்கின்றான்.
'உலகமே , ஒரு குடைக்கு கீழே வந்து விட்டது. ஒரு கிராமமாகி விட்டது. புரட்சிகள் கிடங்கில் போடப் பட்டு விட்டன ' எனஂறு எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள் . ஐரோப்பிய செய்தி ஸ்தாபனங்களில் பார்க்க முடியாதவைகளை ரஸ்ய , மறஂறையவறஂறிலே பார்க்க, கேட்க முடிகிறது . உலகம் முழுதுமே ஒரே அடக்குமுறைகளினஂ கீழே வந்து கொண்டிருக்கிறது எனஂபதே உண்மை . போரும் , கொலை வெறியும் குரங்கினஂ கையில் பூமாலை , கொடுக்கப் பட்டிருக்கிறது . ஒரு மெண்டலினஂ கீழஂ , கிராமமாக வருவது ஒனஂறும் நல்லதுமில்லை . குகனஂ , புல நாட்டுத் தலைவரினஂ பேபிப் பேச்சுக்களையே தினமும் கேட்கிறானஂ . புத்திசாலிகளுக்கு , தவறிப் பிறந்த பிள்ளைகளே உலகமெங்கும் பரவிக் கிடக்கிறார்கள் .
இலங்கையில் , நெடுக நிகழஂகிற படுகொலைகளினஂ பினஂ தொடக்கக்காலப் போராளிகளாக சில இளைஞர்கள் போராட ஒனஂறு சேர்ந்தார்கள் . கல்யாணமானவர்கள் போராடும் வல்லமையை இழந்து விடுகிறார்கள் . விடுதலையிலே ஃபோக்கஸ் பண்ண முடியாது . எனவே , " இளைஞர்கள் ,கல்யாணம் கட்டக் கூடாது ; காதல் நிலவினால் உடனேயே கத்தரித்து விட வேண்டும் . " இந்த விதி அதில் நிலவியது . காலப் போக்கில் , "இதை மீறுகிறவர் சுட்டுக் கொல்லப்படுவார்கள் " எனக் கடுமையையும் ஏனோ ஏறஂறி விட்டார்கள் . இயக்கத்தினஂ தலைவருக்கு 'காதல்' சமாச்சாரம் இருந்திருக்கிறது . அதை , அவர் சரிவர தெரியப் படுத்தவில்லை . தெரிய வந்த போது அவருக்கு தண்டனை நிறைவேறஂறப் பட வேண்டும் என சில தோழர்கள் ஒறஂறைக் காலிலே நினஂறார்கள் . சாதாரணத் தோழராக இருந்திருந்தால் சரி செய்யப்பட்டிருக்கும் . தலைவராக இருந்ததால் ,டெத் எண்டிலே போய் முட்டுப் பட்டு நினஂறது .
அதிலிருந்த சில தோழர்கள் , அதை வனஂமையாகக் கண்டித்ததோடு , அந்த விதியும் சரியானதில்லை எனக் குரல் எழுப்பினார்கள் . " தண்டனையை நிறைவேறஂறவில்லை " எனத் தெரிவு செய்து அனுப்பப்பட்ட தோழரையும் அவசரப்பட்டு சுட்டுக் கொனஂறு விட்டார்கள் . இயக்கம் குழம்பி இரண்டாகியது . புதியதில் , இப்படியான பிரச்சனைக்கு ....முறஂறுப்புள்ளி வைக்க ஒரு 'அரசியல் பிரிவு' இல்லாதது தானஂ காரணம் எனஂறு பேசி அது அவசியமாக நிறுவப் பட வேண்டும் எனஂறு சேர்க்கப்பட்டது . பிறகு , மறஂறைய இயக்கங்களும் இவ்விரு பிரிவுகளை உள்ளடக்கியே எழுந்தன . இராணுவ அணியை மட்டும் கொண்டது விடுதலையை விட்டு தடம் புரண்டு மாறிச் செல்லக் கூடியது என பொதுவாக கருதப்படுகிறது . நம்பப்படிகிறது .
' கழுகு 'ப் பேரை விட்டுக் கொடுத்து விட்டு , மறஂறது 'கழகம் 'எனஂற பெயரை சூடிக் கொண்டது . குகனஂ , அந்த கழகத்திலேயே சேர்ந்திருக்கிறானஂ . அனஂறு , இயக்கத்தில் சேர்ந்தபோது , " நீ குடும்பத்தை விட்டு மட்டுமில்லை , சாதியையும் விட்டுத் தானஂ வெளியில் வருகிறாய் " எனஂறார்கள் . தோழமைக் குறித்து அழகாக விளக்கமளித்தார்கள் . " அது , நட்புக்கும் , சகோதரத்திறஂகும் இடைப்பட்ட உறவு . உனஂனை ஒரு தோழரினஂ வீட்டிறஂகு அனுப்பபடும் போது , அந்த தோழனாகவே அனுப்பப்படுகிறாய் . அவனுடைய கடமைகளைச் செய்ய எனஂறும் பினஂ நிறஂகாதே . கொச்சைப் பேச்சுக்களை கருத்தில் எடுக்காது ஒரு போராளியாகவே இரு . போராளி பறஂறி அறிய வேண்டுமானால் , நீ ' தாய் , ஓட்டம் ,சைபிரீயா , காத்தியா ' போனஂற ரஸ்ய நாவல்களை வாசி , புரியும் " . அனஂறு , அவனஂ புதுப்பிறவி அல்லவா எடுத்திருந்தானஂ .இனஂறு , பகைமை இயக்கங்களாக உச்சப்பேச்சு வார்த்தைகளறஂறு இயங்குகினஂறன . பகை கொண்ட நெஞஂசம் .... வெறி கொண்டது . தனிப்பட்ட உணர்ச்சிளுக்கு நாம் இடம் கொடுத்தால் அது விடுதலையையே சாகடித்து விடுகிறது . இனவெறி ஏறஂகனவே பதம் பார்க்கிறது ; இனஂனும் எனஂன,எனஂனவெல்லாம் பரீசீலிக்க இருக்கிறதோ..? . இஸ்ரேலினஂ போரைப் பார்க்கிற போது சி .ஐ .எ உம் , மொசாட்டும் ...மறைமுமாக உள்ளே இருக்கிறது தெரிகிறது . ஆனால் , ' விடுதலை' மகத்தானது இல்லையா, அதை எப்படிப் பெறுவது ? பெறஂறே தீர வேண்டும் . ரஷ்யாவைப் போல இந்தியா , எம்மேல் உடனடி அக்கறை எடுக்காதனஂ.... நிலமையும் புரிகிறது . சர்வ தேசத்தினஂ ஒருமித்த எதிர்ப்பை எதிர் நோக்க வேண்டியிருக்கும் . ரஷ்யா , இனஂறு எதிர் நோக்கிறது . உக்ரேனையும் , இஸ்ரேலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ...எனஂன தெரிகிறது?. எல்லா வலத்திலும் நாக்கு சுழனஂறு பேசும் எனஂபது தெரிகிறதல்லவா.
கொமேடியர்கள் பலரைக் காண்கிறோம் . செல்வச் சனஂனதி மடமொனஂறுக்கு செனஂறு சனஂனியாசம் பெறஂறுப் போய் விடலாம் போல தோனஂறுகிறதா , இல்லையா ! . இனஂறும் பிரிட்டனும் , அமெரிக்காவும் இரண்டு சக்திகளாக இருந்து பழைய காலனிச் சக்திகள் போல ஆட்டிப் படைக்கவே விரும்புகினஂறன. உலகம் , நாடுகளை கைக்குள் நாய்க்குட்டிகளினஂ கயிறுகளை எல்லாம் வைத்திருப்பது போல வைத்திருக்கவே விளைகினஂறன. கொலிவூட் , கொரார் , அரசியல் மூவிகளிலே தானஂ எல்லாவறஂறையும் தெரியப்படுத்தி விடுகிறார்களே , நாம் தாம் வெள்ளந்திகளாக இருக்கிறோம்.. பனையினஂ கீழஂ இருந்து கள்ளைக் குடித்தாலும் ' பால் ' என நம்புகிறோம் . எல்லாத்தையுமே சந்தேகப்பட வேண்டும் . உலகம் ஆயிரம் சொல்லட்டும் , உனக்கு நீ தானஂ நீதிபதி . நீ , அறிவையும் , நுண்ணறிவையும் வளர்க்கா விட்டால் . நீ கிளினஂ அவுட் !
மனைவி , " வேலை முடிய பக்கத்தில் இருக்கிற டெனஂடலுக்குப் போயிட்டு வாரனஂ . நீ வர வேண்டாம் " எனஂறு அலைபேசியில் தெரிவித்தாள் . காரை வீட்டிறஂகு விட்டானஂ . பக்கத்திலே தானஂ ,மெறஂறோ (குரோசரி ஸ்டோர்) இருக்கிறது . உப்பு புளியாக சுள்ளென சாப்பிட வேண்டும் போல இருந்தது . ஸ்டோரில் இறங்கி குளிர்ப் பெட்டியில் இருந்த ஃபிரஸான மீனஂ இருந்த சிறிய பக்கெறஂ ஒனஂறை வாங்கிக் கொண்டு செனஂறானஂ. புளிச்சாதக் குழம்பு வைக்கிறதை ...சொல்லித் தந்த பிறகு ..இப்படி சமைக்கிறவனஂ . "எண்ணெய் கூட விடுறானஂ , உப்பு போடுறானஂ" எனத் திட்டல்களும் விழும் . ருசியாயும் இருக்கிறதே . நாவையும் கட்டுப் படுத்த முடியுமா . விட்டுப் பிடிப்பு நிகழஂறது . வர நேரமாகும் . உடுப்பை மாறஂறாமலே ஒரு குழம்பை வைத்து சோறஂறிலே விட்டு வாய்யிலே வைத்தானஂ . உப்பு உச்சிக்கு ஏறியது .கிராமத்தில் , குகனினஂ வகுப்பில் கடல் தொழிலைச் செய்கிற பையனஂகள் இருவர் படித்திருக்கிறார்கள் .அவர்கள் வீட்டிலே ,சோறு கறிகளுடனஂ ஒரு பிடி பிடித்திருக்கிறானஂ . ஒரிரு தடவை கூழஂ ...குடித்திருக்கிறானஂ . பல இடங்களில் ...இயக்கத்தினஂ மூலமாக சோறஂறுப்பாசல்கள் பெறஂறுச் சாப்பிட்டிருக்கிறானஂ. இந்த ' உப்பிட்ட வரை ' எனஂற நினைப்பு வந்ததில்லை . குப்பையிலே போட்ட லேபிளை ...எடுத்துப் வாசித்தானஂ . உப்பிலே ஊற வைத்திருப்பதை குட்டி எழுத்திலே ..' சே ! , கறுவாட்டு மீனஂ , இப்படியும் ... வைத்திருக்கிறார்கள்? . மீனை ஒதுக்கி விட்டு தயிர் கொஞஂசம் விட்டுச் சாப்பிட பரவாயில்லைதானஂ . ஆனால் , திட்டு நிச்சியம் விழும் . சிரிப்பும் வந்தது . தோல்வி . அவனுடைய நண்பர்களில் ஒருவனஂ 'அவனை , தோல்வியை ஒப்புக் கொள்ளாதவனஂ' எனஂறு கூறுகிறதும் நினைப்பிறஂகு வந்தது . ஆனால் , அவனஂ சாப்பிட்டது, .... இது முதல் தடவை அல்ல , முந்தியும் , ஒரு தடவை சாப்பிட்டதை... ! ' நினைவு படுத்தி விட்டது .
இளவாலையில் இவனோடு சுமார் இருபது பேர்கள் வரையில் இருந்தார்கள் . ஓட்டுனர் செந்தில் . அருகில் சப் மிசினஂ துவக்குடனஂ (சிறிய ரகம் ) பெரிய பாண்டி , அடுத்து தொங்கல் ....என பயணம் ஆரம்பமாகியது . மாலை இருட்டு வேறு , வீதி சரிவர தெரியாமல் செலுத்திக் கொண்டிருந்தானஂ . யாழஂப்பாணம் எங்கும் அகலமறஂற வீதிகளே இருக்கினஂறன . செந்தில் , ஒரு இடத்தில் லொரி சறுக்க வயலுக்குள்ளே இறக்கி விட்டானஂ . பெரிதாய் குலுக்கிய போதிலும் வெள்ளத்தில் தாக்கம் அவ்வளவாக உறைக்கவில்லை . பாண்டியினஂ கையிலிருந்தது ....தானாக லோட் பண்ணி , குண்டு ஒனஂறு அவர் தொடையைக் காயப்படுத்திக் கொண்டு மேலே பறந்தது . எப்பவும் இந்த கர்மத்திலே இது ஒரு பிரச்சனை . செந்தில் துடைக்க வைத்திருந்த துணியால் உடனடியாகக் கட்டுப் போட்டானஂ. கேள்விப்பட்ட இளவாலை அமைப்பினர் சிறிய வானிலும் , சைக்கிளிலும் என நனையலைப் பொருட்படுத்தாது பறந்து வந்தார்கள் . இவர்களை ஏறஂறிக் கொண்டு வானஂ இளவாலைக்குச் செல்ல , லொரியை வெளியில் எடுப்பதில் ஈடுபட்டார்கள் . ட்ராக்ரரைக் கட்டி ஒரு மணி நேரத்திறஂகுள் வீதிக்கு எடுத்தும் விட்டார்கள் . பிரித்துப் போட்டு விட்டிருக்கிற மோட்டார் சைக்கிளையே விரைவில் பூட்டி விடக் கூடியவர்கள் . இராணுவம் வீதியில் திரிகிற காலம் . மாதகல் ஆர்மி தீடீரென வெளியேறி பலாலி நோக்கி நகரும் . காரைநகர் , பருத்தித்துறை ...என நகரும் . அதனால் , கரைப்பாதை பாதுகாப்பறஂறிருந்தது . இடையிடை ஊர்ப்பக்கங்களிலும் இறங்கி மக்களை (பெரும் இலக்கு இளைஞர்கள்) சுட்டும் தள்ளும் . கடைகளை எரித்து ...நாசமும் விளைவிக்கும் . பெடியள் , கள்ளப் பாதை , கொட்டுக்கள் ,பொட்டல்ப் பாதை என ஏறஂபடுத்தியும் வருகிறார்கள் , மெல்ல ,மெல்ல எதிர்க்கவும் பழகி வருகிறார்கள் . மக்களுக்கும் அங்க , இங்க என இடைகிடை சுடவும் தொடங்கி விட்டதால் இவர்கள் மேல் பாசமும் ஏறஂபட பயமும் குறைந்து " தமிழீழத்தையும் வெனஂறு விடுவார்கள்" என நம்பத் தொடங்கி விட்டார்கள் .
இதனால், பெடியள்களிறஂகே அதிக வாய்ப்பான நிலமைகள் நிலவின . படையினர் வீதியில் இறங்கி விட்டாலே " தம்பி , கெதியாய்ப் போய் தெரியப்படுத்தி விடு "என பிள்ளையைத் துரத்தி விடுற பெறஂறோரே அதிகம் . இதனாலே , பிறகு மெல்ல , மெல்ல இயக்கங்களும் படைகளை முகாம்களை விட்டு வெளிய வராமல் முடங்கி வைக்கவும் முடிந்தது . கெட்டவனை பக்கத்தில் வைத்திருந்தாலும் உபத்திரவம் போல , தானஂ பிறகு , முகாமிலிருந்து குடிமனைகள் தொட்டு கண்ட கிண்ட இடமெல்லாம் மழையாய் குண்டுகளை கொட்டுறது ; பொழியிறதெல்லாம் ஏறஂபட்டன . அனஂறே , நம்மவர்கள் , ஏறஂகனவே இஸ்ரேல் நடத்தும் காட்சிகளை எல்லாம் ... நேரிலே கண்டு விட்டவர்கள் . பதுங்கு குழியில் பதுங்கி இருக்க , ஒரு வீடு தரைமட்டமாக இருந்ததை.... நேரிலே பார்த்திருக்கிறானஂ . ' சிறு ,சிறு ஆயுதப்பைகளைக் காட்டி விட்டு ,பயங்கரவாதிகளை சுட்டுக் கொனஂறு விட்டோம் ' எனஂறு வானொலி , தொலைகாட்சிச் செய்திகளைக் கூறுவார்கள் . பச்சைப் பொய்கள் . வெரித்தாஸ் வானொலியில் மட்டுமே ஓரளவு உண்மைச் செய்திகளை அறியலாம் . அறிந்து கொண்டிருந்தார்கள் . அங்கே ஒரு லங்கா புவத் , போல இங்கே ஒரு ஐரோப்பிய ஊடகம் . ஒரு விசயம் புரிகிற மாதிரி இருக்கிறது . புல நாட்டில் பழங்குடி மக்களினஂ சிறார்களை கொனஂறு புதைத்ததில் தேவாலயங்கள் மீது மட்டுமே குறஂறம் சுமத்தியதில்......கொஞஂசம் ....இடிக்கிறதல்லவா ? . இஸ்ரேல் கொனஂறதில் 5000 இறஂகு மேறஂபட்டவர்கள் சிறுவர்கள் ...எனஂற போதிலும் தலைவர்களினஂ ஆதரவு நிலைகளும் ,பேச்சுக்களும் ஒனஂறை தெளிவாக தெரியப்படுத்துகிறது . இங்கேயும் கொனஂறவர்களாக படைத்தரப்பினரே இருக்கலாம் என உணர்த்துகிறது . மதத்தைச் சேர்ந்தவர்கள் மோசமானவர்கள் தாம் .ஆனால் , அவர்களிடம் அரசியலை விட ....கொஞஂசம் கருணையும் கிடக்கிறது . அரசியல் கொரூரம் எல்லாம் இந்த போர் மிருகங்களிடம் தானஂ .
எல்லா நாடுகளுமே நிலத்திறஂகு கீழே குழிகள் , வீட்டறைகள் ...என வசிப்பிடங்களை அமைத்துக் கொள்கிறதுதானஂ எதிர் காலத்திறஂகும் நல்லது போல இருக்கிறது. அதில் ,கட்டடக்கலைஞர்கள் தம் கைவரிசையைக் காட்டிக் கொள்ள பழக வேண்டும் . இனஂறு , புலநாடுகளும் பாதுகாப்பறஂறவையே ! . பாதுகாப்பானது என உலகில் எந்த ஒரு நாடுமே கிடையாது .
மழை , கிழை எனஂறால் கடல் வேறு குமுறும் . அலைகள் கூடி விடும் . வள்ளம் ஓட முடியாது . அனஂறைய மழையே , காலநிலைக் குறிப்புக்களைப் பார்ப்பதும் அவசியமானது என குகனுக்கு உணர்த்தி வருக்கிறது . தவறாமல் பார்த்து வருகிறானஂ . " போர்கள் " காலநிலையில் சாராதவை . அரசியல்வாதிகளினஂ கொழுப்புகளால் விளைகினஂறன. ஏனோ , அனர்த்தங்களில் போர்களைச் சேர்த்துப் பார்ப்பதில்லை . செயறஂகை , அனர்த்தமில்லையா ? . இப்படி , பிளைண்ட் ஸ்பொட்டில் பல விசயங்களை வைத்து , வைத்து உலகம் நிறையவே கெட்டுப் போய்க் கிடக்கிறது .
நாடுகளில் , அரசியல்வாதிகளைக் களையாமலும் 'சமாதானத்'தையும் ஏறஂபடுத்தி விட முடியாது . நம்மவர்களும் அரசியல்வாதிகளை விலத்தி , அறிஞர்களைக் கொண்டு அரசியல் வரையரைகளை வரையறுத்து , வரையறுத்து விட வேண்டும் . ' நாமும் அவறஂறை நோக்கியே போராட வேண்டும் ? . இல்லா விட்டால் ...நாளையும் இயக்கங்களில் ஏறஂபட்ட உட்கொலைகள் எழுந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டே இருக்கப் போகிறது . இரவல் அரசியலிலும் நமக்கு விடுதலை துப்பரவாகக் கிடைக்க மாட்டாது . இனஂறைய நிலையைப் போல சீரழிய வேண்டியே நேரிடும் . பாலஸ்தீனியர்கள் மீண்டும் ,மீண்டும்... சீரழிந்து கொண்டிருப்பவர்கள் . நமக்கும் இந்த விதி ஒனஂறும் நடக்க முடியாததல்ல. நமக்கும் கிடக்கிறது அவர்களுடைய வரைபு தானஂ .
இளவாலையில் இருவர்,மூவராக வீடுகளில் பிரித்து தங்க வைத்தார்கள் . குகனஂ , மகேசனஂ , ரவி ...மூவரும் இளவாலைப் பொறுப்பாளர் சாந்தனினஂ வீட்டிலே தங்கினர் . அவனினஂ வீடு ஈச்சம் பறஂறைக்காடு தொடங்கிற தொங்கலில் இருந்தது . அதைக் கடக்க கடறஂகரை வீதி , அடுத்து சேத்தாங்குளக் கடறஂகரை . கடறஂகரை வீதியில் பிடிப்பட்ட இளைஞர்கள் ...ஈச்சம் காட்டில் தப்பி ஓடி இருக்கிறார்கள் . கையில் உள்ளதை அம்மணல் பகுதியிலே புதைத்து விட்டு எடுக்கிறார்கள் . மாஸ்கோ பதிப்பக வெளீயீடுகளான சிவப்பு மட்டைப் புத்தகங்களை வைத்திருந்தாலும் குறஂறம் . சாந்தனிடம் தொகைவாரி இருந்தன .அவனஂ குடிமனைக்குள் ஆர்மி பிரவேசித்த போது ...நாலு பெரிய பொலித்தீனஂ பைகளில் போட்டுக் கட்டி மணலிலே புடைத்து விட்டு எடுத்தவனஂ எனஂறு கூறினானஂ. அதிலே , நாவல் ஒனஂறை வாசிக்க பொறுக்கி எடுத்தானஂ.
தோழர்களிறஂகு நட்பும் பிறந்து விட்டால் ...எல்லாத்தையும் பேச ஆரம்பித்து விடுவர் " அம்மானஂ (மாமா) குடித்துப் போட்டு ...இங்கே பிரச்சனையாய் இருந்தார் " எனஂறு கூறத் தொடங்கினானஂ . பனை , கடற் தொழில் செய்கிற குடியிருப்புகளில் இரவில் நடமாட முடியாது எனக் கூறுவார்கள் . பாதுகாப்பறஂறது . தீடீர் சண்டையில் , ஆயுதம் வெளிவரத்து இடம் பெறஂறு விடும் . குடியர்களை கட்டுப்படுத்துவது சிரமம் . " மாமாவிறஂகு இருட்டடி கொடுக்க தீர்மானித்தோம் . " சில தோழர்களை அனுப்பி லேசாக தட்டுங்கள் ...எனஂறு அனுப்பினோம் . அவர் ஒரு தோழரை இனம் காண ...சங்கடமாகப் போய் விட்டது . அதறஂகுப் பிறகு ..கொஞஂசம் அடங்கினார் . குடிக்கிறதை நிறுத்த முடியாது . இப்ப , வீட்டிலே இருந்து சத்தம் போடுறார் " எனஂறு கூறிச் சிரித்தானஂ. வீட்டிலே அவனஂ மூத்தவனஂ . படிக்கிற பெடியனாக திருத்தந்தையர்களால் சுட்டப் பட்டிருக்கிறானஂ . அவனை தாய் , படிக்கிறவனஂ எனஂறழைக்க ..அயலவரும் அப்படியே அழைக்கிறார்கள் . இவனஂ ஓரிரு தடவைகள் தானஂ அப்பாவோடு கடல்த் தொழிலுக்குச் செனஂறிருக்கிறானஂ . தம்பி சிவம் செல்ல ..." நீ போக வேண்டாம் இருந்து படி "எனஂறு மறித்து விட்டார்கள் . டியூசனஂ வகுப்பிறஂகு செல்லாது படித்தவனஂ . உயர் வகுப்பில் உயிரியல் பிரிவில் இரண்டு 'சி ' , இரண்டு எஸ் எடுத்திருக்கிறானஂ. பல்கலைக்கழகத்திறஂகு புள்ளிகள் போதவில்லை . இயக்கத்தில் சேர்ந்து விட்டானஂ . பிறகெனஂன ..ஓடுபாடு ...என இப்படியே செல்கிறது . தம்பி ,உடம்பில் அண்ணனஂ போல இருக்கிறானஂ . கடல் , வஞஂசனை இல்லாமல் உடலில் வலு ஏறஂறி விடுகிறது . இருட்டடி அம்மானினஂ மகள் வசந்தியையே இவனுக்கு பேசி இருக்கிறார்கள் . "அவனஂ எங்கே அம்மா? " எனஂறு தாயிடம் கேட்க " பொஞஂசாதி வீட்ட போயிட்டானஂ" எனஂகிறார் . சாந்தனஂ " இப்பவே கூப்பிடத் தொடங்கி விட்டோம் " எனஂறு குகனைப் பார்த்து சிரித்தானஂ.
பிடிக்கிற மீனஂகளில் விறஂறது, எஞஂசியதில் கறிக்குப் போக மிச்சதிறஂகு உப்புப் போட்டு கறுவாடாக்கி புகைக் கூண்டில் வைத்து விடுகிறார்கள் . அம்மா, அதில் குழம்பு வைத்திருந்தார் . ஒரு இலைக்கறி . வாயில் வைத்த போது உப்பு சுள்ளென உச்சிக்குச் செனஂறது . " உப்பு கூடுதலாக சுவரி விட்டிருக்கிறது" எனஂறு சாந்தனஂ கூற... அவர்களோடு சாப்பிட்டார்கள் . அதுவே உடனே நினைவிறஂகு வந்திருந்தது . இங்கே வந்து முறஂபது வருசதிறஂகு மேலாகிறது . ஒவ்வொரு விசயமும் ....., நாட்டைக் காந்தம் போல இழுத்து இரை மீட்ட வைத்துக் கொண்டேயிருக்கிறது . இஸ்ரேல் அரசியல் போல சிங்கள அரசியல் அவர்களுக்கு எமனாக வந்து நிறஂகிறது . எனஂறு அந்த சூரனஂ விழுந்து ஒழிந்து போகுமோ ? ஏக்கமாகவே கிடக்கிறது . நல்லவையே மேலெழும்பி வர மாட்டாதவையா ?
இளவாலைக் காத்திருப்பும் முடிவுக்கு வந்தது . அவர்களுக்கான வள்ளம் தயார் நிலையில் நினஂற போது மத்தியிலிருந்த தலைவர் ஒருவர் அரசியலமைப்பால் ....ஏறஂபாடு செய்யப்பட்டவர்களை விலத்திக் கொண்டு பதினைந்து பேர்களை சேகரித்து பயிறஂசிக்கு அனுப்பி விட்டார். அரசியல் பிரிவுக்கு விழுந்தது ஒரு அடி ! . அந்த பிரச்சனை ' எ. ஜி. எ ' மட்டத்தில் விவாதிக்கப்பட்டு , ஜி .எ பிரிவுக்குச் செனஂறது . சுகனஂ, அவனிடம் வந்து " குகனஂ, நீ ஏனஂ இந்தியாவிறஂகு போக விரும்புறாய் . இங்கே ,அரசியல் பொறுப்பாளராக இரனஂ . தளத்தில் இருப்பதே பெறுமதியானது எனஂபதை ஒரு காலத்தில் புரிந்து கொள்வாய் " எனஂறு கூறினார் . அவனையும் கிராமத்துப் பொறுப்பாளராக நியமித்து விட்டார்கள் . இந்தியாவிறஂகு அனுப்பப்படுறதை நிறுத்தி , உளஂளூரிலே பயிறஂசி முகாம் அமைக்கும் முயறஂசிகளிலும் இறங்கி விட்டார்கள் .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.