நதிப் பயணத்தில் அடுத்த நகரமானது ஜெர்மனி -ஆஸ்திரியா எல்லையில் உள்ள சிறிய நகரம் பாஸ்சு (Passau). அங்கு நிறுத்தப்பட்டால் புனித ஸ்ரிபன் தேவாலயத்தையும் அத்துடன் வேறு சிறிய ஆற்றின் கழிமுகம் உள்ள நகரம். ஆனால், அங்கிருந்து இரு மணி நேரப் பஸ் பயணத்தில் ஆஸ்திரியாவின் சல்ஸ்பேர்க் நகரம் உள்ளது. அங்கு போக விசேடமாகப் பணம் கொடுக்க வேண்டும் .

ஏன் அங்கு போகவேண்டும் ?

அந்த நகரத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

என்னைப் பொறுத்தவரை சல்ஸ்பேர்க் முக்கியமாக இருந்தது. நான் சிறு வயதில் பார்த்த ‘சவுண்ட் ஒவ் மியூசிக்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் இந்த நகரிலே எடுக்கப்பட்டது . அந்தப் படத்தை நகலெடுத்த படமாகச் சொல்லப்பட்ட தமிழ்ப் படமாகிய ‘சாந்தி நிலயமே’ நான் 1969 இல் பார்த்த படம். உண்மையில் சாந்தி நிலையம், ஜேன் இயர் (Jane Eyre by Charlotte Bronte) என்ற பிரித்தானிய நாவலையும் ‘சவுண்ட் ஒவ் மியூசிக்’ என்ற அந்தப் படத்தை ஆஸ்திரிய கதையையும் இணைத்த நகல் எனக்கேள்விப்பட்டேன். மேலும் எனது நண்பன் ஒருவன் சாந்தி நிலையத்தில் நடித்த சிறுமி பிற்கால நடிகை மஞ்சுளா மீது ஏற்பட்ட பிரியத்தால் ஒன்பது தடவை பார்த்தான் என்பது, நாங்கள் இந்து கல்லூரி விடுதியில் இருக்கும்போது ஒரு வித சாதனையாகப் பார்க்கப்பட்டது. அவனும் அக்காலத்தில் சாதனையாளனாக எங்களுக்குத் தெரிந்தான்.

அதன் பின்பாகவே அது சவுண்ட் ஒவ் மியூசிக் இலங்கைக்கு வந்த பிற்காலத்தில் என் மனைவி சியாமளா பாடசாலையில் படித்த காலத்தில் அந்த படத்திற்கு யாழ்ப்பாணத்தில், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியினர் பாடசாலையால் கொண்டு சென்றார்கள் என்று சொன்னபோது சல்ஸ்பேர்க் செல்ல அதுவே முக்கிய காரணமாகியது .

சவுண்ட் ஒவ் மியூசிக் ஆங்கிலப்படத்தின் கதாநாயகி ஜுலி அன்ரூ மலையுச்சியில் நின்று பாடுவது என் மனத்தில் மட்டுமல்ல பலரது மனங்களில் பசுமையான காட்சியாக படிந்திருந்தது. இறுதிக் காட்சியில் , ஹிட்லரின் நாஜி படையினரிடமிருந்து முழுக் குடும்பமும் ஒரு சவக்காலையில் ஒழித்திருந்து, அதன்பின் அங்கிருந்து வாகனத்தில் கதாநாயகனும்( Mr. Christopher Plummer as Captain Georg Von Trapp) கதாநாயகியும் ஏழு பிள்ளைகளுடன் மலையில் ஏறி தப்பிச் செல்வதாகப் படம் முடிகிறது.

ஒரு திரைப்படத்திற்கு சிறந்த தொடக்கக் காட்சியும் இறுதி சிளைமாக்ஸ் காட்சியும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. இந்த திரைப்படத்தின் பெரும்பகுதி சல்ஸ்பேர்க் நகரிலே எடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்தப் படத்தின் ரசிகர்கள் உள்ளதால் எல்லா இடத்திலுமிருந்து வருவார்கள். படத்தின் காட்சிகள் எடுத்த இடம் தற்போதும் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த காட்சிகளை எடுத்த இடங்களெல்லாம் பார்ப்பதற்கு விசேடமான சவுண்ட் ஒவ் மியூசிக் ரூர் உள்ளது. சில இடங்கள் நகரத்தின் மத்தியிலும் மற்றைய இடங்கள் தூரத்தில் உள்ளன.

எங்களைப் பொறுத்தவரை பஸ் பிரயாணத்தை விட்டால் மிகுதியானது சில மணி நேரங்களே. அங்கு இறங்கியபோது நகரத்தை ஊடறுத்தபடி (Salzach River) நதி ஓடுகிறது . அந்த நதியின் மேலுள்ள பாலத்தை நாங்கள் நடந்து கடந்தபோது பாலத்தின் இருபக்கமும் இடைவெளிவிடாது பல விதமான வர்ணத்தில் பூட்டுகள் தொங்கின. ஐரோப்பா எங்கும் இளம் காதலரிடையே இந்த பழக்கமுண்டு. தங்களது காதலின் சின்னமாகப் பூட்டைவாங்கிப் பூட்டிவிட்டு அதனது திறப்பை நதியில் எறிந்து விடுவார்கள். சில இடங்களின் பூட்டுகளின் ( காதலின் ) பாரத்தைத் தாங்காது அந்த நகர நிர்வாகம் பூட்டுகளை அகற்றியதையும் அறிந்தேன்.

ஆரம்பத்தில் நாங்கள் சென்ற இடம்: கதாநாயகி ஜுலி அன்ரூ வேலையில் சேர்ந்த முதல் நாளோ பிள்ளைகளோடு சேர்ந்து பாட்டுப் பாடிய பூந்தோட்டம் அது அமைந்துள்ள மிரபெல் மாளிகை ஒரு காலத்தில் கத்தோலிக்க பிஷப்பின் மாளிகையைச் சேர்ந்தது. மாளிகையின் பின்பகுதியில் அழகிய பூந்தோட்டம் உள்ளது. நாங்கள் போகும்போது தோட்டத்தை மீளமைத்தபடியிருந்தார்கள்.

ஜெர்மன் அரசே, ஒரு காலத்தில் புனித ரோமன் பேரரசாக இருந்ததால் கத்தோலிக்க பிஷப்மார் சகல அதிகாரத்தையும் கொண்டவர்கள், அவர்களுக்கு இளவரசர் என்ற பட்டமும் உள்ளது. பணத்திற்கு எந்த கஸ்டமும் இருக்காது . இன்னமும் ஜெர்மனியில் நீங்கள் கத்தோலிக்கராக இருந்தால் கத்தோலிக்க திருச்சபைக்கு வரி கட்ட வேண்டும் அதாவது நாங்கள் அவுஸ்திரேலியாவில் மெடிக் கெயர் (Medicare Tax) வரி என எங்கள் வைத்திய செலவுக்குக் கட்டுவதுபோல் அங்கு மேலதிக வரி உள்ளது. இதனால் வரியிலிருந்து தப்ப பலர் மதநம்பிக்கை அற்றவர்கள் அல்லது புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பார்கள் .

இது எப்படி இருக்கு?

                      - மெரபெல் பூந்தோட்டமும் மாளியகையும் -

மெரபெல் பூந்தோட்டத்தின் (Mirabel garden) எதிரே வந்தபோது சங்கீத மேதை மொசார்ட் அவர்களின் வீடு இருந்தது. வெளிப்பக்கத்திலிருந்தே பார்க்க முடிந்தது. தற்பொழுது அவரது வாழ்க்கையின் பகுதிகள் அங்கு கண்காட்சியாக (Audio and vedio) உள்ளது அவரை பற்றிய பல விடயங்கள் நினைவிலாடின. அவரது வீடு பெரிதாக இருந்தபோதிலும் இறுதிக்காலத்தில் பணமற்று இருந்தார் என்பதுடன் பதினைந்து வருடங்களாகக் காது கேட்காத போதும் இசைமேதையாக இருந்தார் என்ற செய்தியுடன் முப்பத்தைந்து வருடங்களே அவரது ஆயுட்காலங்கள் என்ற செய்தியும் முன்பே அறிந்திருந்தேன்.                                          

                   -மொசார்ட் வாழ்ந்த அபார்ட்மென்ட்  கண்காட்சியாக -

சல்ஸ்பேர்க்கில் சிறுவயதில் வசித்தாலும் இறுதியில் மொசார்ட் இறந்தது வீயன்னா நகரிலாகும் . இதை விட இன்னுமொரு சுவாரசியமான செய்தியாக இருந்தது: சிறுவனாக இருந்த பீதோவான் மொசார்ட்டிடம் இசை படிக்க சென்றாலும் இருவரும் சந்திக்க முன்பு மொசார்ட் மரணமடைந்தார். மொசார்ட் ஆரம்பத்தில் செல்வந்தராகப் பல பெண்கள் தொடர்பில் வாழ்ந்தவர். கடைசி மூன்று வருடங்கள் வீயன்னாவில் வாழ்ந்து இறந்தார். அவரது இறப்புக்கான காரணமும் அவரது புதைகுழியும் இன்னமும் மர்மமாக உள்ளது.

                                                  - மொசார்ட் சிலை -

மொசார்ட் பிறந்து வாழ்ந்த இடம் என்பதால் அவரது பெயரின் பல வியாபாரங்கள் நடக்கின்றன. உலகம் முழுவதுமிருந்து பலர் வந்து கொண்டிருந்தார்கள் . அவருக்கு நகரின் மையத்தில் சிலை உள்ளது. அதன் கீழ் நாங்கள் சென்றபோது ஒரு தெருப்பாடகன் அவரது சங்கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தான்.

சல்ஸ்பேர்க்ல் பல கோட்டைகளும் தேவாலயங்களும் இருந்தன . ஒரு விதத்தில் பழைய காலத்தை எமக்குக் கற்பனையில் பார்க்கக் கூடியதாக இருந்து. சவுண்ட் ஒவ் மியூசிக்கில், இரவு நேரத்தில் ஹிட்லரின் நாஜி படையினரிடமிருந்து முழுக் குடும்பமும் ஒரு சவக்காலையில் ஒழித்திருந்து என்றேனே! அந்த மிகப்பழமையான , பயங்கரமான , ஆனால், அழகான சவக்காலை அதைவிடப் பிரேதங்களைச் சேகரித்து வைக்கும் கற்றக்கோம் (Catacomb) பார்க்க முடிந்தது. சவக்காலை பல வருடங்களின் புராதன வரலாற்றை உள்ளடக்கியிருந்தபோதிலும் அதே நேரத்தில் வெளிப்பகுதியில் தன்னை புதுப்பித்த படியிருந்தது.

                                    - சல்ஸ்பேர்க் தேவாலயம் -

சல்ஸ்பேர்க் நகரத்தின் மத்தியில் பிரமாண்டமான மாபிள் கற்களால் பரோக் முறையில் கட்டப்பட்ட வெள்ளை நிறமான தேவாலயம் உள்ளது. பார்க்கும்போது பல இரகசியங்களையும் போர்களையும் கடந்து நிற்பதாகத் தெரிந்தது. 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டாலும் தற்போதைய கட்டிடம் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஐரோப்பிய நாடுகளில் நடந்த பல சண்டைகளில் ஏராளம் தேவாலயங்கள் உடைந்தன.

வீயன்னாவில் 30 வருடங்கள் போர் நடந்ததாக கேள்விப்பட்டேன். இந்த தேவாலயத்தின் ஒரு சங்கீத மேதை மொசாட் ஞானஸ்ஞானம் பெற்றதும், சிறுவனாக வயலின் வாசித்ததும் பின்பு அவரது ஆரம்ப சங்கீதங்கள் தயாரான இடம்: மொத்தத்தில் ஒரு சங்கீத மேதையை உருவாக்கிய கருவறையாகும். இந்த தேவாலயத்தில் முன்பாக நான்கு உருவங்கள் உள்ளன. கீற்ஸ்துவின் சீடரான பீட்டர் (Apostles Peter) சொர்கத்தின் சாவியுடன் கிறிஸ்துவ மத்தின் முக்கிய பரப்பாளரான போல் (St. Paul) வாளுடனும் அத்துடன் சல்ஸ்பேர்க்குரிய இருவர் புனிதர் ரோபட் மற்றும் புனித வேர்ஜில் சிலைகளாக உள்ளார்கள். இதில் சென்ட் ரோபட் கிறிஸ்துவ மதத்தை இப்பகுதியில் பரப்பியவர்.

சென்ட் வேர்ஜில் அயர்லாண்டில் பிறந்தது சல்பேர்க் நகரில் பிஷப்பாக இருந்தபோதிலும் இவர் ஒரு வானசாஸ்திர விஞ்ஞானி. உலகம் உருண்டை என்றும் பூமியின் மறுபக்கத்தில் மக்கள் இருப்பதாக 8ஆம் நூற்றண்டில் கூறியவர் இவரது பெயரில் தஸ்மேனியாவில் கல்லூரி உள்ளது நியூசிலாந்தில் தேவாலயம் உள்ளது .

தேவாலயத்தின் முன்பாக மேரி மாதா ஒரு கிரீடம் அணிந்திருக்கும் ஒரு சிலை உள்ளது. இந்த சிலையின் பின்பாக தேவாலயத்தின் கட்டித்தின் முகப்பில் இரு தேவதைகள் அசைவதான தோற்றமளிக்கும் சிலைகள் உண்டு. நான ஒரு கோணத்தில் நின்று பார்க்கும்போதோ அல்லது படம் பிடிக்கும்போதோ அந்த இரு தேவதைகளும் மேரி மாதாவின் தலையில் கிரீடத்தை அணிவிப்பது போன்ற தோற்றத்தைத் தரும் . இப்படியான காட்சிகளை பரோக் அமைப்பிலுள்ள தேவாலயங்களில் பார்க்கலாம்.

சல்ஸ்பேர்க்கிற்கு வரும் பயணிகள் சவுண்ட் ஓவ் மியுசிக்காகவும் மொசாட்டுக்காகவும் வருகிறார்கள் என எங்களுக்குள் சொல்லிவிட்டு சல்சா (Salzach River) கரையில் அரை மணி நேரம் நடந்தோம் . அப்பொழுது ஒரு காட்சி நினைவுக்கு வந்தது: இந்த ஆற்றில் ஏழு குழந்தைகளும் ஜுலியாவும் சிறிய படகில் வரும்போது, படகு கவிழ்ந்து சகலரும் நீரில் மூழ்கும் காட்சி சவுண்ட் ஓவ் மியுசிக் திரைப்படத்தில் வருகிறது. ஆனால், அந்த இடம் மேலும் பஸ்சில் போக வேண்டும் என்பதால் சிறிது நேரத்தில் எங்களுக்காகக் காத்திருந்த பஸ்சில் ஏறினோம்.

அறுபது வருடத்தின்முன்பாக வந்த இந்த திரைப்படத்தின் தாக்கத்தால் இன்னமும் என் வயதுக்காரர்கள் மட்டுமல்ல, இளம் வயதானவர்களையும் சல்ஸ்பேர்க் நகரம் தொடர்ந்து வரவழைக்கிறது. இப்படி வரும் உல்லாச பிரயாணிகள் வருகை தற்போது நகரத்தின்  பொருளாதாரத்திற்கும் ஊன்று கோலாக உள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்