சமூக அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி தற்போது இலங்கையில் தனது மிதிவண்டிப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். பருத்தித்துறையில் ஆரம்பித்து பொத்துவில் வரையிலான் பயணமிது. இதன் நோக்கத்தை அவரது மிதிவண்டிப்பயணத்துக்கான முகநூல் இவ்விதம் கூறுகிறது:
"கதைப்பதனூடாக கற்போம் . கற்பதனூடாக கதைப்போம். கலந்துரையாடல் தலைப்புகள்: மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவித்தல், மிதிவண்டியின் நன்மைகள், பாதுகாப்பான மிதிவண்டிப் பாதை நடை பதைகளை ஊக்குவித்தல், வீதிகளில் மர நடுகையை ஊக்குவித்தல், வீடுகளில் மர நடுகையை ஊக்குவித்தல், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல் & ஊள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல். உங்கள் ஊர்களில் பின்வரும் திகதிகளில் நீங்களே உள்ளூர் புலமையாளர்கள் துறைசார் நிபுணர்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்யலாம். பின்வரும் திகதிகளில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பயணிக்கலாம். இப் பயணத்திற்கும் அதற்கான செலவுகளும் பங்குபற்றுகின்றவர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். பின்வரும் திகதிகளில் ஆர்வமுள்ளவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். பங்குபற்றுகின்ற ஒவ்வொருவரும் தாமே அனைத்து தங்குமிட, உணவு, மிதிவண்டிப் பொறுப்புகளையும் எடுக்க வேண்டும். "
- மீராபாரதி -
இவரின் பயணத்தில் இணைந்துகொள்ள விருப்பமுள்ளர்கள் இவரது மிதிவண்டிப் ப்யணத்துக்கான முகநூல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். அதற்கான இணைய இணைப்பு - https://www.facebook.com/profile.php?id=61572517802290
பருத்துறையில் இருந்து ....
– 5ம் திகதி யாழ் நோக்கிப் பயணம் ஆரம்பம்
யாழ் பிரதேசம்....
- பெப்பிரவரி 5ம் திகதி யாழில் தங்குதல்
– 6ம் திகதி யாழ் கலந்துரையாடல்கள்
– 7ம் திகதி மன்னார் பிரதேசத்தை நோக்கி பயணித்தல்
மன்னார் பிரதேசம்...
– 7ம் திகதி மன்னாரில் தங்குதல்
– 8ம் திகதி கலந்துரையாடல்கள்
– 9ம் திகதி வவுனியா நோக்கி பயணித்தல்
வவுனியா பிரதேசம்
– பெப்பிரவரி 9ம் திகதி வவுனியாவில் தங்குதல்
– பெப்பிரவரி 10ம் திகதி வவுனியாவில் கலந்துரையாடல்
– 11ம் திகதி கிளிநொச்சி நோக்கி பயணித்தல்
கிளிநொச்சி பிரதேசம்
– பெப்பிரவரி 11ம் திகதி கிளிநொச்சியில் தங்குதல்
- பெப்பிரவரி 12ம் திகதி கிளிநொச்சியில் கலந்துரையாடல்
- பெப்பிரவரி 13ம் திகதி முல்லைத்தீவு நோக்கி பயணித்தல்
முல்லைத்தீவு பிரதேசம்
- பெப்பிரவரி 13ம் திகதி முல்லைத்தீவில் தங்குதல்
- பெப்பிரவரி 14ம் திகதி முல்லைத்தீவில் ;கலந்துரையாடல்
- பெப்பிரவரி 15ம் திகதி திருகோணமலை நோக்கிப் பயணித்தல்
திருகோணமலை பிரதேசம்
- பெப்பிரவரி 15ம் திகதி திருகோணமலையில் தங்குதல்
- பெப்பிரவரி 16ம் திகதி திருகோணமலையில் கலந்துரையாடல்
- பெப்பிரவரி 17ம் திகதி வெருகல் வாகரை நோக்கிப் பயணித்தல்
-பெப்பிரவரி 17ம் திகதி வெருகல் /வாகரை தங்குதல்
- பெப்பிரவரி 18ம் திகதி வெருகல் வாகரை கலந்துரையாடல்
-பெப்பிரவரி 19ம் திகதி மட்டக்களப்பு நோக்கி பயணித்தல்
மட்டக்களப்பு பிரதேசம்..
-பெப்பிரவரி 19ம் திகதி மட்டக்களப்பில் தங்குதல்
-பெப்பிரவரி 20ம் திகதி மட்டக்களப்பு கலந்துரையாடல்
- பெப்பிரவரி 21ம் திகதி அம்பாறை பிரதேசம் நோக்கிப் பயணித்தல்
- பெப்பிரவரி 21ம் திகதி அம்பாறை பிரதேசம் தங்குதல்
பெப்பிரவரி 22ம் திகதி அம்பாறை பிரதேசம் கலந்துரையாடல்
- பெப்பிரவரி 23ம் திகதி பொத்துவில் நோக்கிப் பயணித்தல்.
- பெப்பிரவரி 23ம் திகதி பொத்துவில் தங்குதல்
- பெப்பிரவரி 24ம் திகதி பொத்துவில் கலந்துரையாடல்
- பெப்பிரவரி 25ம் திகதி பொத்துவில் பயணத்தை நிறைவு செய்தல்.
இன்று நெல்லியடியில் மிதிவண்டிப் பயணத்தை ஆரம்பித்து வதிரி ஊடாக பருத்தித்துறை சென்று கடற்கரை வழியாக வல்வெட்டித்துறை ஊடாக இடைக்காடு வழியாக வலலாய் வீதிக்கு சென்று அங்கிருந்து மயிலிட்டு கடந்து ஒரு குறுக்கு வீதியால் ஏழாலைக்கு வந்தேன். வடகோவையர் வீட்டிக்கு வந்து தேசிக்காய் தண்ணீர் குடித்துவிட்டு அவருடன் உரையாட முடியாமல் களைத்திருந்த நான் இரண்டு மணித்தியாலங்கள் படுக்கப் போவதாகக் கூறி படுத்துவிட்டேன். இரண்டு மணித்தியாலங்களின் பின்பு எழும்பி வடகோவையார் அவர்களின் பல் வேறு அனுபங்களையும் சுய சார்பு பொருளாதாரம் தொடர்பான பல்வேறு தகவல்களைக் கேட்டு பின்பு அவரின் துணைவியார் சமைத்த புட்டும் கறியும் கலந்து உண்டு மீண்டும் என் பயணத்தை ஆரம்பித்தேன்.
வழியில் உரும்பிராயில் சோதிலிங்கம் அவர்களை சந்தித்த பின் கொக்குவிலில் ;இருக்கும் யாழ் பல்கலைக்கழக நண்பன் ஈசன் வீட்டில் இரவு உணவை உண்ட பின்பு இப்பொழுது நிலாந்தன் வீட்டில் இளைப்பாறுகின்றேன். இப்பொழுது நித்திரைக்கு தயார்..
மன்னார் பிரதேசத்திற்க்கு செல்லும் பொழுதும் ;காலையில் மூன்று நான்கு மணித்தியாலங்கள் பயணித்து ஒரு இடத்தில் தரித்து இளைப்பாறி பின்பு மாலையில் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் பயணிக்கலாம் என நினைக்கின்றேன். தங்குமிடங்களைத் தேட வேண்டும்.