- ஜூலை 6, 2012 - நண்பர்களே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கணையாழி அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியமை இலக்கிய உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயமாகும். இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் புதி வடிவம் எடுத்துள்ளது கணையாழி. இம்மாத இதழை இணையத்தில் வாங்கி வாசிக்கும் வகையில் இணையப் பதிப்பை கணையாழி ஆசிரியர் குழு இன்று முதல் தொடங்கியுள்ளது. இணைய இதழின் சந்தா விபரங்கள்:
மாத இதழ் சந்தா - $2.50
6 மாத இதழ்களின் சந்தா - $12.50
1 வருட இதழ்களின் சந்தா - $20.00
2 வருட இதழ்களின் சந்தா - $38.00
5 வருட இதழ்களின் சந்தா - $90.00
இணைய இதழை http://kanaiyazhi.emagaz.in என்ற பக்கத்திலிருந்து வாசிக்கலாம்!! இணையத்தில் வலம் வரும் கணையாழிக்கு உங்கள் ஆதரவு மேலும் வளம் சேர்க்கும். இச்செய்தியை உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் ஏனையை மடலாடற் குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். கணையாழி இணைய இதழாகவும் வெளிவரும் இச்சமயத்தில் திண்ணை இணைய இதழில் வே.சபாநாயகம் எழுதி அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையையும் பகிர்ந்து கொள்வது பொறுத்தமாக இருக்கும் என்பதால் இங்கே இக்கட்டுரையை வழங்குகின்றேன். வாசித்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளலாம்.