ஒரு அழைப்பிதழ் கிடைத்தது.பார்த்ததும் நினைவுகள் அலைக்கழிந்தன. மறக்க நினைத்த சம்பவங்கள் தணலாகக் கிடந்து சுடர் வீச முனைந்தது. மூன்று தசாப்தங்களில் கழிந்துவிட்டனவா? நினைக்க ஆச்சரியமாக இல்லை.. வேதனையாகதான் உள்ளது. இனத்துவேசம் கொழுந்துவிட்டெரிய ஒரு தேசம் தனது மக்களில் ஒரு பகுதியினரை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாளில் ஆங்காரமாக இறங்கியது. அதன் வடுக்களைச் சுமந்து திரியும் மக்கள் அதன் வேதனையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. யுத்தம் வந்தது. அதுவும் முடிந்தது. ஆயினும் வடுக்களின் வேதனையை ஆற்றும் வழி தெரியாது இந்தத் தேசம் இன்னமும் கையறு நிலையிலிருக்கிறது. இங்கு ஒவ்வாரு இனத்திற்கும் தலைவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்தத் தேசத்தை ஒவ்வொருவரும் தமது தேசம் என உணரவைக்கக் கூடிய ஒரு தேசியத் தலைவரைத் தேடி இந்தத் தேசம் வடிக்கும் கண்ணீர் வடிக்கிறது.
இனத்தைச் சுட்டெரிக்க முயன்ற அந்தக் கரிய நாளை நினைவு கூரும் முகமாக ஒரு கருத்துரை எதிர்வரும் ஞாயிறு 15.07.2012ல் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. கொழும்பு வெள்ளவத்தையில், 58 தர்மராம வீதியிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலைய மண்டபத்தில் நடைபெறும்.
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினர் நிகழ்வை ஒழுங்கு செய்யும் இக் கருத்துரைக்கு தலைமை தாங்குபவர் திரு.க.சிவபுத்திரன் ஆவார்.
கருத்துரை வழங்க இருப்பவர் திரு.H.G.புஞ்சிஹோவா ஆவார். இவர் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது. வடுக்களை மறந்து, எல்லோரும் இந்நாட்டு மக்களே என்று உணரவைக்கும் ஒரு புதிய யுகத்தை நோக்கி இந்தத் தேசம் நகருமா? அதற்கான காலம் எப்பொழுது கனியும்?
ஆர்வமுடையோர் கலந்து கொள்ளுமாறு விழாவை ஒழுங்கு செய்யும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினர்அழைக்கின்றனர்.
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.