1. கவிதை எழுத ஆசை.
எதோ ஆர்வக் கோளாறு .
கவிதை இவளுக்கு வருமா?
வரும், நிச்சயம்
வரும்.
2. நட்பு -
மலருமோர்
அரிய நட்பு
எப்பொழுதும்
தூய்மையாக
மிளிரும்.
3. இனிக்கும் அதிகாலைகள்
மார்கழி விடிகாலை! ,
பிள்ளையார் கோவில்
பஜனைக்குழு!
அதிகாலையில் குளிரக் குளிர
தலையில் தண்ணீர் ஊற்றிக்
குளித்து , அவசரமாய்க்'
கோயிலுக்கு ஓடுவது
இன்னும் இனிக்கிறது.
திருவெம்பாவை நோன்புக்காய்த்
திருப்பள்ளியெழுச்சி
பாடியதெல்லாம்
பசுமையாக நினைவுகளில்
படம் விரிக்கின்றன.
இனிக்கும் அதிகாலைகள்
அவை.
இதயத்தின் ஆழத்தே
இன்னும் பசுமையாய்
இருக்கின்றன.
4. கவிதை: காக்கைச்சிறகினிலே நந்தலாலா!
காலையில் கீச்சுக் கீச்சென்று
ஒரே சத்தம்.
ஓ! என் அன்புக்
குருவிகளின் அழைப்பு.
ஒரு பிடி அரிசியைப் போடுகையில்
ஏதோ
ஓர் உவகை.
மதியம் சமைக்கும் போதொரு காக்கை
பின் கதவிலமர்ந்து,
சற்றே தலையைச்சாய்த்து,
உள்ளே எட்டி காக்கா எனும் போது
உணவளிக்கையில் பொங்கும் நெகிழ்ச்சி
காக்கை!
காக்கை சிறகினிலே நந்தலாலா என்று
பாடி பாரதியின் சிகரத்தை எட்டிப்
பார்க்கையில்
கண்கள் கண்ணீரைப்
பொழிகின்றன.
5. நான்!
ஆடினேன் பாடினேன்
ஆனந்தக்கூத்தாடினேன்.............
செடி கொடியிடம்
சென்று சொந்தம்
கொண்டாடினேன்.....
எல்லாம் தானே இயங்கின.
என்னையே விழுங்கினேன் .
என்னையே தேடினேன்.
எங்கே நான்?