சமர்ப்பணம்: கவிஞர் ஜெயதேவனுக்கு) பேசப்படாதவர்களைப் பேசுவோம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -

ஜெயதேவன் என்னும் பெயரில் கவிதை உலகில் இயங்கி வந்த இவரின் இயற்பெயர் மகாதேவன் . முதுகலை தமிழ் பட்டமும் ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி விட்டுப் பணி நிறைவு பெற்றவர். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பண்ணைக்காடு கவிஞரின் சொந்த ஊர் ஆகும். இவரது இலக்கிய செயல்பாடு என்பது சமூக ஊடகத்தில் தொடர்ந்து எழுதி வந்தது ஆகும். அத்தோடு பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர்.,
இவர் சொந்தமாக "ஓடம் "என்ற மாத இதழை ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார். இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலர் அதில் பங்களிப்பு செய்துள்ளனர். அத்தோடு "ஆனந்த விகடன்* வார இதழின் ஆசிரியர் துறையில் சில காலம் பணியாற்றியுள்ளார். அதேபோல சாவி இதழிலும் சில காலம் நிருபராக பணியாற்றி உள்ளார்
இவர் 10 கவிதை நூல்கள் எழுதி உள்ளார் .அவற்றில் குறிப்பிடத்தக்கன விடியலை நோக்கி, இன்றைய செய்திகள், சுய தரிசனம், ஐந்தாவது யுகம் , கண்ணாடி நகரம், முச்சூலம், அம்மாவின் கோலம் ,ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல மற்றும் யூகலிப்டஸ் கவிதைகள் என பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது* சுய தரிசனம் *கவிதை தொகுப்பு 1997 கான தமிழ்நாடுகலை இலக்கிய பெரு மன்றம் தமிழக அளவில் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவருடைய **அம்மாவின் கோலம்* கவிதை தொகுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் அவர்கள் நடத்தி வருகிற எழுத்து அறக்கட்டளை விருதினை பெற்றது .அத்தோடு எழுத்து அறக்கட்டளை நிறுவனமே அந்த நூலை வெளியிட்டது.
துவக்கத்தில் மரபுக் கவிதை எழுதிக் கொண்டு இருந்தவர் படிப்படியாக வளர்ந்து புதுக்கவிதை நூல்களை வெளியிட்டார். 2006க்கு மேல் படிப்படியாக நவீன கவிதைக்கு மாறி நவீன கவிதையில் குறிப்பிடத்தக்க கவிஞராக விளங்கி வந்தவர்.
வாழ்வை தத்துவ நோக்கில் கவனிக்கும் கவிதைகள் இவருடைய பெரும்பாலான கவிதைகள். அத்தோடு சமூகம் சார்ந்த விஷயங்களையும் தன்னுடைய பாடுபொருளாக கவிதைகளில் வைத்துள்ளவர்... குறிப்பாக பெரும்பாலான இவருடைய கவிதைகள் சமகால அரசியலை பேசுவன..உலக மயமாக்களின் நல்விளைவு மற்றும் தீ விளைவுகளை பேசக்கூடியவை. இதற்கு உதாரணமாக இவரது கண்ணாடி நகரம் கவிதை தொகுப்பை குறிப்பிடலாம். மரபின் மூச்சை உள்வாங்கி நவீனத்துவத்தோடு வெளியிடுவது இவரது கவிதை பார்வை ஆகும்.



ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அதன் மூலம் மட்டுமே இன்னொரு துறையில் எளிதாகப் பெயர்பெற்றுவிடுவது வழக்கமாக நடக்கும் ஒன்று. திரைப்படத்துறையினர் இலக்கியவுலகிலும் அரசியல்வெளியிலும் தனியிடம் பிடித்துவிடுவதை இதற்கு உதாரணங்காட்டலாம். அன்றும் இன்றும் இலக்கியவுலகைச் சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையில் பெயர் பெற்றிருப்பதும், பெற முயற்சிப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது.




ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதுபோல், இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி. ஒரு மசாலாப் படத்திற்குரிய எல்லா இலட்சணங்களும் இதற்கு உண்டு என்று அப்பட்ட உண்மைத்தனத்தோடு இந்த நிகழ்ச்சி பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறியிருந்தால், பின், இதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமிருக்காது.
(*கவிஞர் மொழிபெயர்ப்பாளர், சிறுபத்திரிகையாளரான ஸ்ரீபதி பத்மநாபா சமீபத்தில் காலமானார். அவருடைய குடும்பத்திற்கு உதவும்படி கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மற்றும் பல எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து முன்வைக்கும் வேண்டுகோள் கீழே தரப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபாவின் இலக்கியப் பங்களிப்புக்கு நாம் செய்யும் பதில் மரியாதையாக அவருடைய குடும்பத்திற்கு முடிந்த நிதியுதவி செய்ய முன்வருவோம் – லதா ராமகிருஷ்ணன்)
சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். சமகால தமிழ்க்கவிதைகள் இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் நிறைய எழுதியிருக்கிறார் டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன். அவையும் ஏழெட்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. 40க்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். அவையும் தொகுப்புகளாக வந்திருக்கின்றன. தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING IMPRINTS என்ற தலைப்பில் தொகுப்பாக சமீபத்தில் வெளியாகியுள்ளது. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே.

பொள்ளாச்சியில் பல வருடங்களாக நடந்துவந்திருப்பதாகத் தற்போது அம்பலமாகியிருக்கும் பாலியல் வன்முறைச் செய்தி அளிக்கும் அதிர்ச்சியும், ஆதங்க மும் சொல்லுக்கப்பாலானவை. நாளும் நாளிதழ்களில் 4 வயதுப் பெண்குழந்தை முதல் பல்வேறு வயதுகளிலான பெண்கள் இவ்வாறு வன்முறைக்கு ஆளாகும் செய்திகளைப் படிக்கவேண்டியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு கடலூர் பக்கத்தில் கல்லூரிகளுக்குப் புதிதாகச் சேரும் மாணவிகளை அந்தக் கல்லூரிகளின் சீனியர் மாணவிகளைக் கொண்டே சினிமா, ஹோட்டல் என்று சுதந்திர வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதாய் பொறியில் சிக்கவைத்து, சிகரெட், போதைமருந்து போன்ற பழக்கங்களுக்கு உட்படுத்தி, பின், விபச்சாரத்தில் தள்ளிவிடும் நாசகார கும்பலொன்று பற்றிய செய்தி வந்தது. ஆனால், இத்தகைய செய்தி வெளிவந்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்று இத்தகைய செய்திகளை மறுப்பதும், முடக்குவதுமே பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்களின் அணுகுமுறை யாக இருந்தது; இருந்துவருகிறது. கல்லூரிகளில் இத்தகைய சமூகச் சீர்கேடுகளிருந்து மாணாக்கர்களைப் பாதுகாக்க ஏதேனும் விழிப்புணர்வூட்டல் சார் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா தெரியவில்லை. படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்று எல்லோரும் பாதிப்புக்காளாகும் இத்தகைய அக்கிரமங்களை அனைத்து ஒலி-ஒளி ஊடகங்களும் தங்கள் அரசியல் பிறவேறு சார்புகளுக்கு அப்பால் தோலுரித்துக்காட்டுவது அவசியம். அதேசமயம், ஒவ்வொரு சேனலும் தங்கள் செய்தி சேனலில் பெண்விடுதலையைப் போற்றிக் கொண்டே தங்கள் எண்டர்டெயின்மெண்ட் சேனலில் மிக மிகப் பிற்போக்கான பெண் பிம்பங்களை சீரியல்களிலும், விளம்பரங்களிலும் முன்வைத்துக்கொண்டேயிருப்பது தடுக்கப்படவேண்டும்.
இன்று உலக மகளிர் தினம். ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையும், அனைத்துத் தரப்பினருமே சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையுமே சமூகப்பிரக்ஞை மிக்க மனிதர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கமுடியும். அதேசமயம், எப்போதுமே சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவே தம்மை முன்னிறுத்திக்கொள்வார்கள். Playing the victim card. அதைச் செய்யும் ஆண்களும் உண்டு. அது எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளையும், அவர்கள் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தும் மக்கள் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் குறைவு என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை.


இது கவிஞர் தமிழ் உதயாவின் கவிதை:
(*10.2.2019 தேதியிட்ட சமீபத்திய திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









