நவீன தமிழ்க்கவிதைவெளியில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.
பரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர். திரைப்பட இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவருடைய இலட்சியம். அதற்கான எல்லாத் தகுதிகளும் இவரிடம் உள்ளன. காலம்தான் இன்னும் கனியவில்லை. [திரைப்படத்துறையில் உள்ள இவருடைய நண்பர்கள் முயன்றால் அய்யப்ப மாதவனின் கனவை நிறைவேற்ற முடியாதா என்ன?]
இவருடைய கவிதை ஒன்று குறும்படமாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிஞர் அய்யப்பனின் தொடர்பு அலைபேசி எண்: +919952089604. இவருடைய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..
இதுவரை இவருடைய 11 கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு தோழமை பதிப்பக வெளியீடாக பிரசுரமாகியுள்ளது. நூல் வெளியீட்டுவிழா சென்னை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அதில் கவிஞர்கள் தேவேந்திரபூபதி, அசதா, தாரா கணேசன், ரவி சுப்பிரமணியன், ரிஷி(நான்), ஓவியக்கலைஞர் செல்வம், திரைப்பட இயக்குனர்கள் சீனு ராமசாமி, மிஷ்கின், ஒளிப்பதிவாளர் செழியன் இன்னும் பலர் கலந்துகொண்டனர். டாக்டர் தர்மலிங்கம், டாக்டர் மகேஸ்வரி இருவரும் பெற்றுக்கொண்டார்கள். அய்யப்ப மாதவனின் ஏற்புரை ஆத்மார்த்தமான ஒன்றாக அமைந்தது. இந்த விழா குறித்த புகைப்படங்கள் அய்யப்ப மாதவனின் முகநூலிலும் வேறு சிலர் முகநூல் களிலும் இடம்பெற்றுள்ளன. அது போலவே, விழாவில்
உரையாற்றி யவர்கள் பேசிய கருத்துகளும் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டால் நன்றா யிருக்கும். விழாவில் பேசிய ஓவியர் செல்வா அய்யப்ப மாதவனின் கவிதைகள் இடம்பெறும் ஓவியக்கண்காட்சி நடத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுவருவதாகத் தெரிவித்தார். ஒரு நவீன ஓவியம் என்ன விலைக்குப் போகிறது என்பதோடு ஒரு நவீனக் கவிஞனுக்குக் கிடைக்கும் சன்மானத்தை ஒப்பிட்டுப் பார்த்து இது எத்தனை அவலமான நிலைமை என்று வருந்தியது சிந்திக்கத்தக்கது. ஒரு கவிதை நூல் என்பதை ஒரு முறை காசுகொடுத்து வாங்கிவிட்டால் பின், வேண்டும்போதெல்லாம் அது நமக்கு நிழலாகும்; குடையாகும்; வலிநிவாரணமாகும்; வேறு வேறு வாழ்க்கைகளுக்கும், உலகங்களுக்கும் நம்மை இட்டுச் செல்லும்! அய்யப்ப மாதவனின் இந்தக் கவிதைத் தொகுப்பு அத்தகைய ஒன்று. தமிழ் ஆர்வலர்கள், கவிதை ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர் களிடம் கண்டிப்பாக இருக்கவேண்டியது. நூலுக்கு அணிந்துரை தந்துள்ள மூத்த கவிஞர்கள் ஞானக்கூத்தன், கலாப்ரியாவின் கூற்றுகள் அய்யப்ப மாதவன் என்ற, கவிதையே வாழ்வாகக்கொண்ட அன்புநிறைந்த மனிதனை, அவன் கவித்துவத்தை அருமையாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன!
கவிஞர் ஞானக்கூத்தனின் அணிந்துரையிலிருந்து சில வரிகள்:
“தமிழ்க் கவிதையில் வாசகர்கள் படிக்கவேண்டிய கவிஞர்களின் பட்டியலில் ஒரு முறை நான் திரு. அய்யப்ப மாதவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடும்போது திரு.மாதவனின் ஐம்பது கவிதைகளை நான் ஆதாரமாகக் கொண் டிருந்தேன். இப்போது இத்தொகுப்பின் முந்நூறுக்கும் மேலான கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் தெரிகிறது மாதவன் பலமான அஸ்திவாரம் கொண்டவர் என்பது.
கவிஞர் கலாப்ரியாவின் அணிந்துரையிலிருந்து சில வரிகள்:
“மூளையை காவு வாங்குகிற சமாச்சாரம் கவிதை எழுதுவது. அய்யப்ப மாதவன் இவ்வளவு படைப்புகளுக்குப் பிறகும் அசதி தோன்றாதவராக, அசதி தராத கவிஞராக இருப்பது ஒரு சிறப்பு. கவிதை என்பது நான் வாழ்ந்ததற்கான அடையாளங்கள்” என்கிறார் தோழர் அய்யப்ப மாதவன். இந்தக்கவிஞனின் அடையாளங்களை அடையாளங்கண்டு கொள்வது வாசிப்போருக்கு நிறைவைத் தரும் என்பது நிச்சயம். தோழர் அய்யப்ப மாதவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்"
புத்தனின் விரல் பற்றிய நகரம்
தோழமை வெளியீடு
பக்கங்கள் 450
விலை : ரூ 400.
தொடர்புக்கு: 9940165767 / 044 23662968
அய்யப்ப மாதவனின் ‘புத்தனின் விரல் பற்றிய நகரம் தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள்:
1.கருங்கல் பழக்கங்கள்
கருங்கல்லில் ஒளிந்திருக்கும்
கடவுளை தரிசிக்க
மணிக்கணக்கில் தவம்
மனம் பதற நிமிட நேர தரிசனம்
கைகூப்பி வணங்கினால்
கடவுளின் கூலியாள் விரட்டுகிறான்
அருள் வாங்கிப்போகிறது முகம்.
சாம்பல் பூக்கும் நெற்றியுடன்
கருங்கல் பழக்கங்கள்.
2.மிக அருகில் குழந்தைகள்
வீட்டின் அருகிலும் போகுமிடங்களிலும்
கண்களுக்குத் தட்டுப்படுகிறார்கள்
குழந்தைகள்
அப்பாவிடமும் அம்மாவிடமும்
ஏதாவது கேள்விகளைக் கேட்டுக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
அழுதுகொண்டுமிருக்கிறார்கள்
சின்னச் சின்ன உருவங்களாய்
பேசும் பொம்மைகளாய் உலவுகிறார்கள்
விளையாட்டுப் பொருட்களிடையே
விளையாடப்படுகிறார்கள்
விரிந்த விரல்களிடையே
ஓர் உன்னத உலகம்
சுழன்றுகொண்டிருக்கிறது
சின்னப்பையன்
இறக்கை முளைத்த குதிரையில்
வான் வெளியில் பறக்கிறான்
நட்சத்திரங்களைப் பொறுக்கிக்கொள்கிறான்
அவனிடம்
இறக்கைகள் இருக்கின்றன
நினைத்த கணமெல்லாம்
செல்ல முடியா
இடங்களுக்குச் சென்றுவருகின்றான்
தட்டான்களோடும் விட்டில்களோடும்
பட்டாம்பூச்சிகளிடமும்
சிநேகம் வைத்திருக்கிறான்
உரையாற்றுகிறான்
எனக்கு வயதாகிக்கொண்டிருந்தாலும்
வேறு எங்கு எங்கோ
குழந்தைகள் பிறந்துகொண்டே
இருக்கிறார்கள்
என் கண் முன்னால்
என் கைகளை விட்டு சற்று தூரத்தில்
விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
Ayyappa Madhavan (Tamil Poet – 1966): [a brief profile and a few poems rendered in English by Latha Ramakrishnan]
A tamil poet Ayyappa Madhavan is endowed with a sensitive and vulnerable mind battered and bruised by the harsh realities of life, which keeps languishing and agonizing in verses and seeks shelter in dreams and fantasies, sharing secrets with the butterflies and building castles in the air. But, all the while the poet is acutely wide-awake to the life – socio-political and economic – around him - the disparities, indifferences, prejudices, power-mongering and what not. As a poet it is but natural on his part to seek refuge in his poems and that of his fellow-poets and his poems reflect the world in all its cruelties and unpredictabilities and also in its myriad moods and shades – positive and negative.
And, he uses the language in a gripping manner, leaving many things unsaid but at the same time implying them, giving ample scope for the discerning readers to search for and read ‘the lines between lines’ and also the pauses and silences.
His native place is a village called Naattarasankottai in Tamil Nadu. He had higher educationin the faculty of Textiles. Now, he is trying his expertise in directing Documentary and Feature Films.
So far, 6 poem-collections of Ayyappa Madhavan have been published and they have established his name as a quality poet in the field of Neo-Tamil Poetry. He contributes regularly to all the Literary
Magazines of Tamil.
• A poem of Ayyappa Madhavan has been made into a short-film and he has also directed aDocumentary Film. Poet Thamizhachi Pandian has made two of his poems into a short-film. A short-story collection of Ayyappa Madhavan is recently released. And, two more poem-collections of him will be published this year.
• A soft-spoken friendly person Poet Ayyappa Madhavan waits for the birth of a new, better world where there are no wars; nor fears; where none poor and no power-mongers. And, the list is endless….
Email id: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
1.THE WINGS OF NIGHT (இரவின் இறக்கைகள்)
A butterfly
enticed by the glow of lamp
circled the house, going round and round.
It was its firm belief that
the ‘thumbai’ plants and ‘murugai’ tree
rooted in the glow of the wall.
Its single-minded penance, on the wall’s
Lime.
With time
melting and seeping
with the honey-drunk exhaustion leaving,
It moved over to the
squares of bricks.
In the spring of its fertile imagination
too many plants of different varieties there were;
flowers in fabulous shapes
deliciously sweet drinks…
With the lamp closing its eyes suddenly
darkness pervading everywhere,
It also merging with the thick blackness shrouding.
When the dawn came
the plants of al the flowers upon which it sat
have all turned into terrible vacuum.
Its imprints, turning pale,
remained lifeless; frozen.
Either the ‘wide-awake’ Morn
or the ‘deep in sleep’ Night
had stolen away
that wonderful life; that magnificent dream.
2) THE SANDALWOOD CREMATION (சந்தனத்தில் சிதை)
When he was alive he used to travel all over the world
and earned millions
Houses vehicles gold-bars-
even bridegroom for his daughter, he bought
Went on jolly tours.
Gestured ‘no’ to the have-nots
Brought
dolls for his little grand-daughter and gave them
to her
The child smiled. And he felt so happy.
As usual when he ran in his exercise machine
one day he slumped all too suddenly
The doctors who examined him said
that his heart had stopped ticking
The house cried and turned swollen
As the hours went past one by one
they had taken him who had turned rotten and bulging,
to the cremation ground
Amidst the sandalwood smell the rich man burnt to the core
They brought the stone
And he who remained, with all of his turning to nought,
inside the ash-pot
was scattered and dissolved
in the waters of Ganges
In Water’s nature he was a dissolved river.
3) DAMN IT…. (Titled ‘Che’)
If only I were to have a tail
I could have been keeping vigil and
barking as a dog…
Leaping on four legs as a stallion
and earning money in the race
I could have made merry the madcap of gambling
and so be’
Or else, being born a goat I could have grazed and grown
and sold as hot meat;
Or else, as an elephant blessing with my trunk
and getting money for the mahout;
Or as a bull, eating off the straw and pulling along the cart;
Or as a monkey performing tricks and gymnastics
and collecting coins.
Having been born a human-being, going insane-
cheating, swindling,
decaying, disintegrating-
Oh damn it _
How I wish to have a tail….
4) PEACE PERSONIFIED (சாந்தரூப கோலம்)
Holding one end in a proper grip
I manage to bring the milk-packet.
The White-Liquid
reminding my palms of the pleasant chillness
tried to divert my attention.
With the wicked mind surfacing-
placing it softly upon the wooden plank of the swing
pouring water and swirling it by way of washing
the wickedness of thin water
turning sticky in the hands-
I was about to let slip
the round bowl.
The wooden plank, with its wickedness
jerking away the hand
I managed to hold the packet that was about to fall.
While lifting it and carefully cutting one end with the scissors
and pouring it,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.