சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். சமகால தமிழ்க்கவிதைகள் இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் நிறைய எழுதியிருக்கிறார் டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன். அவையும் ஏழெட்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. 40க்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். அவையும் தொகுப்புகளாக வந்திருக்கின்றன. தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING IMPRINTS என்ற தலைப்பில் தொகுப்பாக சமீபத்தில் வெளியாகியுள்ளது. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே.
கவிதைகளை மொழிபெயர்ப்பது தனக்கு மிகவும் மனநிறைவளிப்பதாக அவர் கூறுவார். கவிஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொகுப்பில் இடம்பெற செய்ய அனுமதி கோரி கடிதம் எழுதுவதும், தொகுப்பு வெளியானதும் For the Joy of Sharing என்று அன்போடு உற்சாகமாக எழுதி கையெழுத்திட்டு தொகுப்பில் இடம்பெறும் அத்தனை கவிஞர்களுக்கும் தன் செலவில் தொகுப்புகளை வாங்கி அனுப்பிவைப்பதும் டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியனுக்கு மிகவும் மனநிறைவளிக்கும் விஷயம்.
அப்படி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு தொகுப்புக்காகத் தேடித் தேர்ந்தெடுத்து உரிய கவிஞர்களிடம் அனுமதி பெற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்படுவது பல்வேறு காரணங்களால் தாமதமாகி இன்று அந்தத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு ன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது குறித்து அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது என்னுடைய cottage industry publishing house – ANAAMIKAA ALPHABETSக்குக் கிடைத்திருக்கிறது! அதற்காக டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களுக்கும் தன் நட்பினருக்கும் தன் செலவிலேயே நூலின் பிரதியை அனுப்பிவைப்பது டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் வழக்கம். எனவே குறைந்தபட்சம் 150 பிரதிகளாவது அவர் விலை கொடுத்து வாங்கிவிடுவார் என்பதால் அச்சகத்தாருக்கு உடனடியாக பணத்தைக் கொடுத்துவிட முடியும் என்பது நிம்மதியளிக்கும் விஷயம்!
நூலை சிறப்பாக வடிவமைத்துக்கொடுத்திருக்கும் தோழர் திருவுக்கும்(தோழர் முனியரசு) என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூலின் விலை ரூ.200. பிரதிகள் புதுப்புனல் பதிப்பகத்தில் விலைக்குக் கிடைக்கும். No 117 Fathima Complex Ist Floor, Triplicane High Road, Triplicane, Chennai - 600005, Opp to Rathna Café. தொலைபேசி 98844 27997
மின் நூலாகவும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
CONTINUUM (A Harvest of Modern Poetry) என்ற தலைப்பிட்ட இந்தத் தொகுப்பில் 100 கவிஞர்களின் 120 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுள்ள கவிஞர்கள் – கவிதைகள் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளன.
விலாசம் மாறியிருக்கக் கூடிய கவிஞர்கள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்குத் தங்கள் தற்போதைய விலாசத்தை அனுப்பித் தந்து கவிஞர்களுக்கு அவர் Complimentary Copies அனுப்பிவைக்க உதவும்படி தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களிடம் வேண்டிக்கொள்கிறேன். இடம்பெறும் கவிஞர்கள் அனைவரும் தங்கள் முகவரியை அனுப்பித்தந்தால் இன்னும் உதவியாயிருக்கும். டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் மின்னஞ்சல் முகவரி : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..
இதைப் படிக்கும் எழுத்தாளர்கள் – கவிஞர்கள் தொகுப்பில் இடம்பெறும் மற்றவர்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இத்தொகுப்பை வாங்க விரும்புவோர் புதுப்புனல் பதிப்பகத்தை அணுகும்படி கேட்டுக்கொள்கிறேன். புதுப்புனல் பதிப்பக தொலைபேசி மற்றும் முகவரி: No 117 Fathima Complex Ist Floor, Triplicane High Road, Triplicane, Chennai - 600005, Opp to Rathna Cafe 9884427997 / 9962376282
தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களும் கவிதைகளும்
GATEWAY
SUBRAMANIA BHARATHI
1. Abi - The Expression
2. Adhavan Deetchanya - Employment
3. Amalan Stanley - Meditation
4. Ananda …………… -
5. Anbadhavan - Parai singed in fire
6. Anbadhavan - Crows’ days are here
7. A.S.M.Anu - My History with You
8. Arasu - Humanity
9. Athmanam - Simple Dreams
10. Azhagiyasinger - Suitcase
11. Azhagunila - A Vision
12. Bharathidasan - The World Is Yours
13. Booma Eswara moorthy - Death in the Family
14. Brammarajan - The Sea and My Daughter
15. Brinda Sarathy - Tears
16. Si.Su.Chellappa - Before Atom
17. Darisanapriyan - Garbage
18. Deepaprakasan - The Society is born
19. Devadatchan ……………
20. Erode Thamizhanban - Two Small Poems
21. Erode Thamizhanban - Why does the Night Minstrel sing?
22. Francis Kripa - My house where no one lives
23. Gnanakkoothan - The Milestone
24. Govi Lenin - Temple Renovation
25. Gowrishankar ...........................
26. Gowrishankar ..........…………
27. Ilampirai - Stones lodged in memory
28. Ilampirai - The Parting
29. Ilayabharathi ……………
30. Iyappa Madhavan - A world without doors
31. Jayakanthan - Sojourn
32. Jayakanthan - The Continuum
33. Kadarkarai - A Child’s Art
34. Kallazhagar - Outside
35. Kalyanji - Daunting
36. Kalyanji - Aaryangavu Caves
37. R.Kamarasu - In deep freeze
38. Thai.Kandasami - My Wound
39. Kanimozhi - Me
40. Kanimozhi - Aroma of the womb
41. Karikalan - The Drop
42. Kashyapan - The Leader is dead
43. Kutty Revathi - The Abode of Penance
44. Leena Manimekalai - Amma
45. Magudeswaran - Compromise
46. Mahakavi - Live I will
47. Malathi Maithri - From Avvai to Avvai
48. C.Mani - Defeats
49. Manushyaputran - In My Mendicate Hands
50. Mathivannan ……………….
51. Ira. Meenakshi - At the banquet
52. Ira. Meenakshi - O My Little Daughter!
53. Mu.Metha ………………
54. Mukund Nagarajan - She lived there
55. Mu. Murugesh - Notes
56. Naa.Muthukumar - Amma’s sooty wall
57. Nakulan - Ambience
58. Nakulan - That
59. Nanjil Nadan - Poetry
60. Nanjundan …………
61. Neela Padmanaban - Jasmine
62. Phoneix - Friendship
63. Na.Pichamurthy - Heights and Depths
64. Pramil - Pelting stones
65. Priyam - The Chair
66. Pudumaippitthan - The Great Connoisseur
67. R. Purushothaman - The Balloonman
68. Puviyarasu - The wedding game
69. Raja Chandrasekar - Human Seeds
70. Ku.Pa.Rajagopalan - The Sap
71. Rajamarthandan - It is a bird
72. Raja Sundararajan - Mother
73. N.D.Rajkumar - A Poem is Born
74. Ramesh-Prem - Life’s Journey
75. Ramesh-Prem - Life : An Epic of Words
76. Ravi - The Search
77. Ravi Subramanian ………………
78. Rishi - Indigestion
79. Rishi - Silk-cotton time
80. Salma - Distortion
81. Salma- Ennui
82. Seshaiah - Ravi ……………
83. Shah Ah - The Star’s Smile
84. Shankara Rama subramanian - Eternal Love
85. Sibichelvan - Lost Files
86. Sirpi Balasubramaniam - The Feather
87. Sirpi Balasubramaniam - Thirst
88. C.Sivasekaram - The Indifferent You
89. Srinesan - Does God alone triumph
90. N.Sriram - The Autumn
91. Srirangam Mohanarangan -Rolling Waves
92. Srishankar - Colour Bubbles
93. Ka.Naa.Subrahmanyam - The Poetry
94. Ka.Naa.Subrahmanyam - Escape
95. Suganthi Subramanian - My Face
96. Sukumaran - The Walls
97. Sukumaran - Later…..
98. Sundara Ramasami - Time to erase
99. Sundara Ramasami - My Writing
100. Tapasi - The joy of bathing
101. Tapasi - Like it or Not
102. Tamizhachi - The Great Arrival
103. Thanjavur Kavirayar - Entreaty
104. Umamaheswari - The Plant
105. Umapathi - The Movement
106. S.Vaidheeswaran -The Answer
107. S.Vaidheeswaran - The Consequence
108. Vannanilavan - The Essence
109. Ba..Venkatesan - Lost and Found
110. A.Vennila - The Poornima Night
111. A.Vennila - The light stealing its way
112. Vikramadityan - Fated
113. Vikramadityan - Freedom
114. Vizhi.Pa.Idhayaventhan - The Sparrow Nest
115. Yaazhini - Rain and You
116. Yavanika Sriram - From Temple to Trench
117. Yesurasa - Life
118. Yuma Vasuki - I seek
119. Yuvan - A drop in the tide
120. Yuvan - Crushed
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.