அ.ந.கந்தசாமி (1924 -1968) நூற்றாண்டு நினைவு தினக்கட்டுரை! 'மதமாற்றம்' ! - அ.ந.கந்தசாமி -

- மதமாற்றம் நாடகக் காட்சி -
- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.
மதமாற்றம் முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் அறுபதுகளில் மேடையேற்றப்பட்டிருந்தாலும் அப்போது அது உரிய வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னர் 1967இல் கொழும்பில் நாடகவியலாளர் லடீஸ் வீரமணியின் இயக்கத்தில், எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில் , ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன் போன்ற பலரின் நடிப்பில் மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நான்கு தடவைகள் அடுத்தடுத்து மேடையேறிச் சாதனை நிலை நாட்டியது.
அப்போது அது பற்றி நாடகாசிரியர் அ.ந.கந்தசாமி செய்தி (2.7.1967) பத்திரிகையில் சுய விமர்சனக் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அதனையும், நாடகம் பற்றி வெளியான விமர்சனக் குறிப்புகளையும், நாடகம் நூலுருப்பெற்றபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசங்லிங்கன் எழுதிய முன்னுரையினையும் இங்கு நீங்கள் வாசிக்கலாம். - வ.ந.கி -
'மதமாற்றம்' ! - அ.ந.கந்தசாமி -
சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.



- 'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக இதனைக் கருதலாம். 1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43. அ.ந.க.வின் இக்கட்டுரை அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையிலும் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -

- இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் என்னும் அடைமொழியுடன் 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மானுட வாழ்க்கைக்கு வெற்றியைத்தரக்கூடிய நல்லதோர் உளவியல் நூலொன்றையும், வெற்றியின் இரகசியங்கள், எழுதியுள்ளார். தமிழகத்தில் பாரி நிலையத்தால் , எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் உதவியுடன் வெளியிடப்பட்ட நூல். இத்துறையில் வெளியான மிகச்சிறந்த நூல்களிலொன்று. அறுபதுகளிலேயே அ.ந.க இவ்வகையான நூலொன்றை எழுதியிருப்பது வியப்பினைத் தருகின்றது. கூடவே அவரது பரந்த வாசிப்பையும் வெளிப்படுத்துகின்றது. அவரது மறைவின்போது அவரது இறுதி மரியாதை நிகழ்வில் , அவரது தலைமாட்டில் இந்நூல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. 'வெற்றியின் இரகசியங்கள்' பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. - பதிவுகள்.காம் -
அறிஞர் அ.ந.கந்தசாமியைப்பற்றி எழுத்தாளர் அந்தனி ஜுவா அவர்கள் தினகரனில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தொடர்' எழுதினார். அதில் அவர் அ.ந.கந்தசாமியின் அரசியல்,கலை, இலக்கியப்பங்களிப்பு பற்றி விரிவாகவே விபரித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றோம். இதில் அவர் அ.ந.கந்தசாமியின் அரசியற் செயற்பாடுகளை, அவர் ஆசிரியராகவிருந்து செயற்பட்ட பத்திரிகை, சஞ்சிகைகளைப்பற்றியெல்லாம் தகவல்களைத் தந்துள்ளார். மேற்படி தொடரையே பின்னர் 'அ.ந.க ஒரு சகாப்தம்' என்னும் நூலாக எழுதினார். - பதிவுகள் -
- இது ஒரு புரட்சிகரமான கட்டுரை. பழமையில் ஊறியவர்களுக்கு பதட்டத்தைக் கொடுக்கக்கூடிய கருத்துக்கள் நிறைந்தது.. எனினும் பிரசுரிக்கிறோம் கட்டுரை தர்க்கரீதியாக எழுதப்பட்டிருப்பதால். சிலப்பதிகாரத்தின் தலைவியாகிய கண்ணகி தமிழ்ப்பெண்மையின் சிறப்புக்கு உதாரணமாக இன்று பலராலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகிறாள். சிற்சிலப பகுதிகளில் கண்ணகி சிலை வடித்து தேவதையாகவும் பூஜிக்கப்படுகிறாள். ஆனல், "அவள் பெண்மையின் உயர்வைக் காட்டவில்லை, பெண்ணடிமைத்தனத்தின் அதல பாதாளத்தை நமக்கு அறிவுறுத்துகிறாள்." என்று வாதிக்கிறார் நமது கட்டுரையாளர் பண்டிதர் திருமலைராயர். துணிகரமான அவர் கருத்துகளுக்கு அவரே தாம் பொறுப்பாளர் என்பதை வாசக நேயர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இக்கட்டுரையின் கருத்துகளுக்கு சாதகபாதகமான அபிப்பிராயங்கள் சின்னஞ்சிறு கட்டுரையாக தீட்டப்பட்டு எமக்கு அனுப்பப்பட்டால் அவை உசிதம் போல் பிரசுரமாகும். - ஆசிரியர் , சுதந்திரன்; 8.7.1951 -
கலையிலே பிரச்சாரம் இடம் பெறலாமா அல்லது கலை கலைக்காகவா - இந்தப்பிரச்னை இலக்கியத்துறைகளில் ஈடுபட்டோரிடையே காணப்படும் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. கலை என்பது வாழ்வின் கண்ணாடி, அத்துடன் வாழ்வின் வழி காட்டி என்று அதனை உன்னதமாக மதிப்பவர்கள் கலையை வழிகாட்டும் நல்லறிவுப் பிரச்சாரத்துக்காகவே உபயோகிக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால் இன்னொரு சாரார் கலையை வெறுமனே பொழுதுபோக்குப் பொருளாகக் கருதுகின்றனர். இவர்கள் வெறும் அழகு மட்டும் இருந்தால் போதும் என்று வாதமிடுகின்றனர். அறிவிப்பிரச்சாரம் தலைகாட்டும் நேரத்த்தில் 'அந்தோ அழகு குன்றியதே' என்று தலையில் கை வைத்து ஓலமிடுகின்றனர். பாரதிதாசன் முன்னைய கட்சியைச் சேர்ந்தவர். இது விஷயத்தில் அவருக்கும் அவர் குரு பாரதிக்கும் ஒருமைப்பாடுண்டு.
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியப்பீடத்தில் இருந்த காலகட்டம் சுதந்திரனைப் பொறுத்தவரையில் அதன் பொற்காலமென்றே கூறுவேன். அக்காலகட்டத்தில் அவர் எழுதிய படைப்புகளில் அ.ந.கந்தசாமி என்னும் பெயரில் எழுதிய படைப்புகள் , கவீந்திரன் என்னும் பெயரில் எழுதிய படைப்புகள் மற்றும் பண்டிதர் திருமலைராயர் ,கலையரசன் என்னும் பெயர்களில் எழுதிய படைப்புகள் கிடைத்துள்ளன. இவை அவர் எழுதிய முழுமையான படைப்புகள் என்று கூறுவதற்கில்லை. எமக்குக் கிடைத்த படைப்புகளிவை. அவர் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் 1949 தொடக்கம் 1952 வரையிலான காலகட்டத்திலிருந்ததாக அறியப்படுகின்றது. இக்காலகட்டத்தில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் மற்றும் அவரளித்த குயுக்தி பதில்கள் என்பவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமி மறைந்து இன்றுடன் ஐம்பத்தொரு வருடங்களாகிவிட்டன. இன்றும் தமிழ் இலக்கிய உலகு அவரை மறந்து விடவில்லை. அவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் , நாவல் , மொழிபெயர்ப்பு ஆகியவை இணையத்தில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதானுள்ளன. இதுவரையில் அவரது படைப்புகளில் 'மதமாற்றம்' (நாடகம்), 'வெற்றியின் இரகசியங்கள்' (உளவியல் நூல்) ஆகியவையே நூலுருப்பெற்றுள்ளன. ஏனைய படைப்புகளும் விரைவில் நூலுருப்பெறுமென எதிர்பார்ப்போம்.
தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. "நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?" என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், "பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்." ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?
பத்மாவின் தோழி தங்கமணியை நாம் ஏற்கனவே பம்பலப்பிட்டி எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரிலும், பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருக்கும் நிழல் படர்ந்த பஸ் தரிப்பிலும், பல்கலைக் கழக இரசாயன ஆய்வு கூடத்திலும் சந்தித்திருக்கிறோம். இன்று வத்தளையிலுள்ள அவள் வீட்டில் அவளைச் சந்தித்து வருவோமா? தங்கமணி வசித்த வீடு வத்தளை மெயின் வீதியில் பஸ்தரிப்புக்குச் சமீபமாக அமைந்திருந்தது. அவள் அவ்வீட்டில் தன் தாய், தந்தையருடன் வசித்து வந்தாள். அவளது ஒரே தம்பியான சிங்காரவேல் வவுனியாக் கச்சேரியில் இலிகிதனாகக் கடமையாற்றினான். அப்பா கொழும்பில் ஏதோ கம்பெனியில் வேலை. வீட்டில் அம்மாவைத் தவிர, பேச்சுத் துணைக்கு ரெஜினா இருந்தாள். ரெஜினா கொழும்பில் ஒரு வியாபாரத் தலத்தில் சுருக்கெழுத்து - தட்டெழுத்து வேலை செய்பவள். தங்கமணி வீட்டில் பணம் செலுத்தி "போர்டராக" இருந்தாள். ரெஜினாவுக்கும் தங்கமணிக்கும் நல்ல சிநேகிதம். பொழுது போகாத நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதற்கும் விடுமுறைத் தினங்களில் சினிமாவுக்குப் போய் வருவதற்கும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தார்கள்.
முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை
"ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது" என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது
1.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









