மாயாறு : நெடுங்கவிதைகள் சுப்ரபாரதிமணியன்! - கவிஞர் மதுராந்தகன் -

- 11/10/24 திருப்பூர் நற்பவி வாசகர் வட்டம் நடத்திய நூல்கள் அறிமுகக் கூட்டத்தில் கவிஞர் மதுராந்தகன் படித்த கட்டுரை -
நெடுங்கவிதைகள் கூறிய இலக்கணத்தை உடைத்து புதிய இலக்கணத்தை அமைத்துவிட்டார் சுப்ரபாரதிமணியன். நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா . ஒரே பொருள் குறித்த குறுஞ்கவிதைகளாகக் கூட இருக்கலாமே என்கிறார் ..
இதில் ஆதிவாசிக் கவிதைகள் என்று பெயரிட்டவர் ஆதிவாசி ஆகவே மாறிவிட்டார். ஆதிவாசிகள் குரலில் அவர்களின் பிரச்சினையைப் பற்றிப்பேசுகிறார். 92 கவிதைகளில் 92 பிரச்சனைகளின் உருவங்களைச் சொல்கிறார். இயற்கையோடு இணைந்து ஆனந்தமாக வாழும் ஆதிவாசிகளை அழிப்பதற்காகவே சிலர் சந்தன மரங்களை வெட்டுவதும் மிருகங்களை வேட்டையாடுவது ஆதிவாசிகளை அச்சம் அடைய வைக்கின்றன .சிங்கம் புலி பூனை எனும் விலங்குகளில் கார்ப்பரேட்டுகள் எந்த இனம் என்பதில் இவருடைய உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துகிறார் .யானை மிதித்து செத்தாலும் எங்களுக்கு சந்தோஷம் என்பது ஆதிவாசிகளின் ஒட்டுமொத்த உணர்வுகளும் வெள்ளையர்களும் , கொள்ளையர்களும் வேட்டையாடிவிட்டு மிருகங்களை மட்டுமல்ல பொம்மக்கா மாதிரி பெண்களைச் சீரழித்தது எத்தனை எத்தனையோ பேரை .கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்கமும் போலீஸ் முதலான பாதுகாப்பு உள்ளதால் அவர்கள் மரங்களை வெட்டி வளங்களை அழித்து கட்டிடம் கட்டவும் புதிய தொழில் தொடங்கவும் ஆதரவு கிடைத்தது .ஆகவே ஆதிவாசிகள் அவர்களை எதிர்க்கும் சக்தி அற்றவர்களாக வாழ்கிறார்கள் .


இலண்டனின் இலக்கிய மேடைகளில் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் ஆற்றொழுக்கான நடையோடும் பேசவல்லவராக வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் அவரது ஆழ்ந்த வாசிப்பையும் பரந்த தேடலையும் கொண்ட நூலாகும். ‘ஆற்றல் மிகுந்த மூளையின் தூண்டுதலாலும் வேகமான வாசிப்பாலும்தான் இவரது பேச்சுகள் இத்துணை நுட்பமாக அமைகின்றனவோ?‘ என்று எனக்கு வியப்புண்டு.



அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அ.எப்தா நிஷான் A.bdhan Nishan எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இல்பொருள் உவமை அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் இல்பொருள் உவமை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.


இப்படியான வாதங்கள், இலங்கை அரசியலில் இன்றும் தொடர்வதாய் உள்ளன. ரணில் விக்ரமசிங்க முதல் பல்வேறு தரப்பினரும், இவ்வாதங்களை மிகுந்த விருப்புடனேயே அவ்வப்போது முன்வைத்துள்ளார்கள். இதில் உண்மை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காணப்படும் மாற்றங்கள், வெறும் மேலோட்டமானவையே, அன்றி உள்ளடக்கத்தில் அதே அரசியல்தான் இன்னமும் ஓடுகின்றது என்ற வாதமும் இது போலவே தொடர்வதாக உள்ளது. ஆனால், மக்களின் விருப்பு என்பது எப்பொழுதும் போல ஆபத்தான ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது. எனவே, அதனை ஜே.வி.பி. ஏற்றாக வேண்டிய நிர்பந்தமும் அதற்கு உண்டு. இவ்விருப்பை மாற்றியமைக்க முயலும் செயற்பாடுகள் இருக்கலாம் என்றாலும், அவை யதார்த்த நிலைமைகளை மீறும்போது, பொருந்திவராமல், தமது அழிவுக்கான அஸ்திவாரங்களை இட்டுவிடுகின்றன. (இங்கே யதார்த்தம் என்பது, உள்நாட்டு-வெளிநாட்டுச் சக்திகளையும் உள்ளடக்கவே செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை).




தொன்மையான தமிழர் பண்பாடும் கிராமிய பேச்சுவழக்கும் எங்கட வாழ்வியல்ல வழக்கொழிந்து செல்கிற அல்லது திட்டமிட்டு அழிக்கப்படுகிற இந்தக் காலத்தில , அந்தக் காலத்து அருமை பெருமைகளை , சம்பிரதாயங்களை அதற்கான காரணங்களை எதிர்கால தலைமுறையினரும் அறிஞ்சு கொள்ளுற விதமாக 'சீத்துவக்கேடு துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை' என்று ஆவணமாக்கி , அப்புவின்ரை ஆச்சியின்ரை வாய்மொழியாக்கி , எங்களுக்கெல்லாம் வள்ளிசாகக் கதை சொல்ல வந்திருக்கிறார் ஒரு காரைநகர் இளந்தாரி.
கனவுகள்
எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் கட்டுரைகள் பலவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதை அவ்வப்போது கண்டிருக்கின்றேன். சுட்டிக்காட்டியுமிருக்கின்றேன். தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப எழுதும் கட்டுரைகளைக் கூட மாற்றி எழுதுவதுமுண்டு.உதாரணத்துக்கு நல்லூர் இராஜதானி, யாழ்ப்பாணத்துச் சாமி பற்றிய அவரது கட்டுரைகளில் இவற்றைக் காணலாம். அவை பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிட்டுமிருக்கின்றேன். 
தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் அவென்யூவில் உள்ள பிறைமா நடனப்பள்ளி மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் ஆரம்,’ ‘வதனம்’ ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டிருக்கின்றது.


அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ‘ (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரத்தின் ‘ பிரதிகள் பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது.
