1. வ.ந.கிரிதரன் பாடல்: கணந்தோறும் பிறப்போம்!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=FaV3GGJcg60
ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.
கணப்பொழுதின் சிறுதுளிக்குள் நுண்ணுயிர் இருப்பு.
காலம் அதற்கு முழுவட்டம் அறிவோம்.
அதற்குள் கூடிப்பெருகி வாழ்ந்து உதிரும்.
அதனை உணர்ந்தால் வாழ்வு புரியும்.
ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.
இருப்பும் இங்கு சார்பே உணர்வோம்.
இங்குஎம் இருப்பும் இதுபோல் துளியே,
இதற்குள் கூடிப்பெருகி கும்மாளம் அடிப்போம்.
இதைநாம் புரிந்துவிடின் இன்பமே நிலைக்கும்.
ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.
காலத்தூடு விரையும் இருப்பில் கணந்தோறும்
கலங்கள் பிறக்கும். நாமும் பிறப்போம்.
கணந்தோறும் பிறக்கும் இருப்பை அறிவோம்.
களிப்பில் பொழுதை நிறைத்துத் தொடர்வோம்.
ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.
2. வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்டுக் களித்திட - https://www.youtube.com/watch?v=x0Pr7gweEis
கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.
ஒழுங்குள்ள வாழ்வில் இன்பம் உண்டு.
ஒழுங்குதனை என்வாழ்வில் ஒழுகிட அருள்வாய்.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.
கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.
இருப்பறிந்து இருப்பை நகர்த்தும் போக்குதனை
இவனுக்கு அருளிடு. அதுபோதும்.அதுபோதும்.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.
கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.
உயிர்நேயம் மிக்கவனாய் உலகில் வாழ்ந்திடும்
பக்குவம் வளர்த்திடு. பரிணாமம் வழங்கிடு.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.
கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.
3. வ.ந.கிரிதரன் பாடல்: பூவுலகின் குழந்தைகள் நாம்!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=SB904K6L6ck
பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.
பிரிவினைகள் அற்ற வாழ்வே இன்பம்.
எரியும் உலகை இல்லாது ஒழிப்போம்.
புரிந்து கொண்டே பய ணம் தொடர்வோம்.
தெரிந்து கொள்வோம் பிறப்பின் பயனை.
பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.
வாயுக் குமிழியென வெளியில் விரையும்
ஓயுதல் அற்ற இயக்கத்தில் பூமி.
இருப்பதை உணர்ந்தால் மோதல் இல்லை.
விருப்புடன் வாழ்வை அணுகுவோம் உண்மை.
பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.
அன்பு மலரால் நிறைந்த பூங்கா
என்றே உலகை மாற்றி வைப்போம்.
தின்று இன்புற்று இருப்பதுடன் வாழ்க்கை
நின்று விடுவதில்லை என்பதைப் புரிவோம்.
பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.
இனம், மதம், மொழிப் பிரிவுகள்
சனத்தின் மத்தியில் தேவையே இல்லை.
அனைவரும் ஓரினம் என்னும் உண்மையை
நினைவில் வைத்தே இருப்பைத் தொடர்வோம்.
பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.
4. வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிப் பயணம்.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=0tB2T6Qroco
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
காலவெளிப் பயணம் அர்த்தமென்ன?
கட்டவிழ்ந்து சிறகடிக்கும் சிந்தனை.
ஓலமிடும் நெஞ்சோ விடைதேடும்.
ஞாலத்தின் இருப்பு அலைமோதும்.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
சிந்திக்கச் சிந்திக்க இன்பமே.
சிந்திக்கச் சிந்திக்க உற்சாகமே.
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவே.
சிந்திப்பில் உள்ளது வாழ்க்கை.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
இருப்பு போதாது தேடலுக்கு.
முற்றுப் பெறாத தேடல்
மேலும் தொடரும் வினாத்தேடி.
மானுட வாழ்வின் அர்த்தம்நாடி.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
சிந்திக்கும் இருப்புக்கு எனது நன்றி.
வந்து பிறந்தது தற்செயல் என்றாலும்
சிந்திக்க முடிந்தது பெரும் பாக்கியமே.
சிந்திப்பேன் இருப்பு இருக்கும் வரையில்.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.