அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ( 27-08-2022 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு சமூக நிலையத்தில் ( Vermont South Learning Centre - 1 Karobran Drive, Vermont South VIC 3133.) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.
இலங்கையில் முன்னர் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டின் கீழிருக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த தேவைகளுக்காக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் கடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் குறிப்புகளையும் ஆண்டறிக்கையையும் நிதியத்தின் செயலாளர் திருமதி விதுஷினி அருளானந்தம் சமர்ப்பிப்பார். நிதிச்செயலாளர் செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி நிதியறிக்கையை சமர்ப்பிப்பார். துணை நிதிச்செயலாளர் திரு. விமல் அரவிந்தன், நிதிய உறுப்பினர் திரு. ரவி – ரவீந்திரன் ஆகியோர், நிதியத்தின் ஊடாக பயனடையும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவு மற்றும் அவை சார்ந்த நிருவாக நடைமுறைகள் குறித்த விளக்கங்களை உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பர்.
முன்னுரை
தமிழின் தொன்மையினையும் சிறப்பினையும் உலகறியச் செய்பவை சங்க இலக்கியங்கள். அவ் இலக்கியத்தைப் படிக்கும் போது ஏற்படும் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படையாக காட்டுவது மெய்ப்பாடாகும். அம் மெய்ப்பாட்டு உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்திருப்பது தொல்காப்பியம். இலக்கியத்தில் தோன்றும் மெய்ப்பாட்டு உணர்வுகளை எண்வகையாகப் பகுத்து, அவை முப்பத்திரண்டு நிலைக்களன்கள் வழித் தோன்றும் என்றும், அத்துடன் பல உணர்ச்சிகளையும், தலைவன் தலைவியின் களவு, கற்பு வாழ்க்கையின் வழித் தோன்றும் மெய்ப்பாட்டு உணர்வினையும் வகுத்துள்ளார். இங்கு சங்க அகஇலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றின் மருதத்திணையில் வெளிப்படும் இளிவரல் மெய்ப்பாட்டை இக்கட்டுரை ஆராய்கிறது.
தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு
தொல்காப்பியர் தம் நூலில் எட்டு வகையான மெய்ப்பாடுகளைச் சுட்டுகிறார்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப. (தொல்.பொருள்.மெய்.நூ.251)
அவ்வகையில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன தொல்காப்பியர் குறிக்கும் எட்டுவகை மெய்ப்பாடுகள் ஆகும்.
இளிவரல் மெய்ப்பாடு
மூன்றாவதாக இடம்பெறும் இளிவரல் என்னும் மெய்ப்பாடானது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கு பொருண்மைகளை நிலைக்களன்களாகக் கொண்டு பிறக்கும்.
வெகுசனச் சஞ்சிகைகளில் முக்கிய தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நல்ல நாவல்கள் பல வெளியாகியுள்ளன. உதாரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்௳:
1. ஜெயகாந்தன் - ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், நடிகை நாடகம் பார்க்கிறாள் மற்றும் குறுநாவல்களான 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'யாருக்காக அழுதான்', உன்னைப் போல் ஒருவன், அக்கினிப் பிரவேசம் ( இவையெல்லாம் ஆனந்த விகடனில் வெளியானவை)
2. ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள்< ரிஷி மூலம், ஜெயகாந்தனின் பல சிறந்த சிறுகதைகள் (தினமணிக்கதி)
3. தி.ஜானகிராமனின் அ'ன்பே ஆரமுதே', விந்தனின் 'பாலும் பாவையும்', கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' - இவையெல்லாம் கல்கியில் தொடராக வெளியானவை.
இவ்விதம் கூறிக்கொண்டே செல்லலாம்.இவ்விதம் வெளியான தொடர்நாவல்களில் ஒன்றான தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' பற்றி முன்பு எழுதிய குறிப்பை , கிடைத்த ஓவியங்கள் சிலவற்றுடன் மீண்டும் பகிர்ந்துகொள்கின்றேன். கல்கியில் தொடராக வெளியான 'அன்பே ஆரமுதே' நாவலுக்கு ஓவியர் விஜயா வரைந்த ஓவியங்கள் இவை.
தி.ஜானகிராமனின் 'அன்பே! ஆரமுதே!'
தமிழில் எனக்குப் பிடித்த முக்கியமான நாவலாசிரியர் தி.ஜானகிராமன். இவரது 'செம்பருத்தி', 'மோகமுள்', 'மலர் மஞ்சம்', மற்றும் 'அன்பே ஆரமுதே' ஆகிய நாவல்கள் இவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை. 'அன்பே ஆரமுதே' நாவலை என் பதின்ம வயதுகளில் வாசித்திருக்கின்றேன். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவலை அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நிலையில், ஓவியங்களுடன் வாசித்திருக்கின்றேன். அன்று இந்த நாவலை வாசித்ததற்கும், இன்று வாசிப்பதற்குமிடையில் நாவலை அனுபவிப்பதில், புரிந்து கொள்வதில் நிறையவே வித்தியாசங்களுள்ளன. ஏனென்றால் இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் இளம் வயதினரல்லர். முதுமையை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வயதினர். இவ்வயதினரின் உளவியலை பதின்ம வயதுகளில் புரிந்து கொள்வது வேறு. பாத்திரங்களின் வயதில் புரிந்து கொள்வதென்பது வேறு.
- அன்புடன் சகோதரருக்கு. வணக்கம்! எனது தந்தை எஸ். அகஸ்தியரின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) ‘பொறி’ என்ற (1975தாமரை) பிரசுரம் கண்ட அவரது சிறுகதையை அனுப்பி வைக்கின்றேன். நன்றி . - நவஜோதி -
தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.
இவர்கள் தங்கள் படுப்பு வலைகளைக் கட்டுமரங்களில் சென்று பரவைக் கடலில்தான் விரிப்பார்கள்.
இனிமேல் படுப்பு வலைகளை நம்பிக் கட்டுமரங்களில் சென்று ‘சிறுதொழில்’ செய்ய முடியாதாகையால். ‘எத்தனை காலமாக வாய்வயிற்றைக் கட்டிப் பஞ்சம் பட்டினியோடு சீவிக்கிறது’ என்று தொழிலாளர்கள் வெகு நாட்களாகவே நச்சரிக்கத் தொடங்கியபோதும், அவர்களுக்கு இதிலிருந்து மீளவும் சரியான மார்க்கம் தெரியவில்லை.
ஒரே முழிசாட்டம்தான்.
தாங்களும் தம்பிமுத்துச் சம்மாட்டியைப்போல் இயந்திரப்படகு வாங்கிப் ‘பெருந்தொழிலி’ல் இறங்கவேணுமென்று தொழிலாளர்கள் ஒருநாள் கூடித் திட்டம் போட்டும், அந்தத் திட்டம் இன்றுவரை வெறும் வாய்ப் பேச்சில்தான் கிடக்கிறது.
தங்களின் இந்தக் கையாலாகாத் தனத்தையும் அவர்கள் உணர்ந்துதானிருந்தனர். ஆனால், ‘திட்டமிடுவதன்படி ஏன் இயங்க முடிவதில்லை?’ என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமமாகவேயிருந்தது.
தற்போதைக்கு ஊர்கூடி ஒரு இயந்திரப் படகென்றாலும் வாங்கித் தங்கள் துறைமுகத்துக்குக் கொண்டு வந்துவிட்டால் தம்பிமுத்துச் சம்மாட்டியின் கொள்ளையையும், தனியாதிக்கத்தையும் ஒழித்துக்கட்டி அவனைச் ‘சமன்படுத்தி’ வைத்துவிடுவதோடு, பின் எந்த அலைகடலையும் எதிர்கொண்டு சமாளித்து ஆழ்கடல் சென்று தாங்கள் தொழில் புரியலாம் என்பது அவர்கள் எண்ணம்.
முன்னுரை
வாழ்வியல் நெறி என்பது செம்மையான வாழ்க்கை முறை எனலாம். இல்வாழ்வானுக்குரிய பண்பாக வள்ளவர் அன்பு, அறம் ஆகியவற்றைக் கூறுகிறார். நற்பண்பு கொண்ட இச்சான்றோர் பண்பாக அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகியவற்றை வள்ளுவர் காட்டுகிறார். பெண்களுக்குரிய வாழ்வியல் பண்பாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, விருந்தோம்பல், கணவனைத் தெய்வமாகக் கொண்டொழுகுதல் முதலிய பண்புகளைக் காட்டுவர். இத்தகு வாழ்வியல் நெறிகளைக் கருவிலே திருவுடைய கம்பர் தமது காப்பியமான கம்பராமாயணத்தில் இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறே போல் உயர்த்தி காட்டுகின்றார். இதனை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்வி - பெண்மை சிறக்க செய்வது
இல்லறம் இனிமை பெற, இல்லாள் அறிவும், பண்பும் பெற கல்வியே அடிப்படை ஆகும். கல்வி பெற்ற பெண்டிரே இல்லறப் பண்பை உணர்ந்த இனிது நடத்தி செல்ல முடியும். வறுமையால் வாடி வந்தவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவினர். விருந்தினர் அருந்தி மகிழ உணவை அளித்தனர். கோலச நாட்டு குடும்பங்கள் இவ்வாறு குறைவின்றி வாழ்ந்தன என்று கோசல நாட்டைப் பற்றி கூறும் போது கம்பர் கூறுகிறார். இதனை,
பெரும் தடங்கண் பிறை நுதலார்க்கெலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும் அன்றி விளைவன யாவையே (36)
என்கிறார்.
வண்ண மொழி பேசும் வாடாமலர்கள்
சிங்காரப் பாட்டிசைக்கும் சுந்தர மழலைகள்
சிரித்தே மகிழ்ந்திட சின்னச்சின்னப் பாடல்கள்
சித்திரமாய்ப் புனைந் தெடுத்த அழகுதமிழ்க்
கவிஞனே உன் பணிக்கு எம்வணக்கம்..!
துள்ளி வரும் புள்ளி மானை
தோகை விரிக்கும் கோல மயிலை
இன்னிசை பாடும் இளங் குயிலை
எழிலாய் மிதந்திடும் உதய நிலவை
மெல்லத் தழுவிடும் இளந் தென்றலை
பாடும் கவிஞர் கூட்டத்தின் நடுவே
பாடிடத் தேடினாய் குழந்தை மனங்களை..
ஞானக்கவியே.. உன் பணிக்கு எம்வணக்கம்..!
சிறுவர் இலக்கியச் சாதனையாளர் த. துரைசிங்கம்..! நடமாடும் கலைக் களஞ்சியமாக விளங்கிய தமிழறிஞர்..!! இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) காலமாகி ஒரு வருடமாகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (23 – 08 – 2021) அவர் கொழும்பில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர். சிறந்த எழுத்தாளர். கவிஞர். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
இளம் வயதிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர். 1954 -ம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை அகில இலங்கை ரீதியாக நடத்திய ஆறுமுகநாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றமையைத் தொடர்ந்து எழுத்துத் துறையில் ஈடுபடத் தொடங்கினார். கல்வித்துறை, எழுத்துத்துறை மட்டுமன்றி புங்குடுதீவின் வளர்ச்சிக்கும் சேவையாற்றியுள்ளார். புங்குடுதீவு அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
ஈழத்துப் பல்வேறு பத்திரிகைகளுக்கும், தமிழகத்தின் 'மணிமொழி' இதழுக்கும் நிருபராகச் செயற்பட்டவர். தமிழ்நாடு அருள்நெறி மன்றத்தின் மாத சஞ்சிகையான'மணிமொழி' 1956 மார்கழி இதழில் இவர் குறித்துக் கட்டுரை பிரசுரித்துப் பாராட்டியுள்ளது. அருள்நெறி இயக்கத்தில் தொண்டாற்றியவர். திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளாரின் அபிமானத்தைப் பெற்றவர். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற காலத்தில் (1957 – 1958) கலாசாலை வெளியீடான 'கலா விருட்சம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமாணிச் சிறப்புப் பட்டத்தையும், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாச் சிறப்புச் சித்தியையும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராக, அதிபராக, கோட்டக்கல்விப் பணிப்பாளராக, மாவட்டக் கல்விப் பணிப்பாளராக 38 ஆண்டு காலம் கல்விப் புலத்தில் பணியாற்றியுள்ளார். யுத்தப் பிரதேசமாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விப் பணிப்பாளராக (1995 – 1997) இவரது பணிகள் குறிப்பிடத்தக்கன.
கலைத்துறையிலும் ஆர்வங்கொண்ட இவர், 1953 -ம் ஆண்டில் புங்குடுதீவில் 'பாரதி கழகம்' என்ற அமைப்பினை நிறுவி பாரதி விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சிகளில் அன்றைய காலகட்டத்தில் பிரபல பேச்சாளர்களாக விளங்கிய தோழர் வி. பொன்னம்பலம், அ. அமிர்தலிங்கம் நாவேந்தன், தேவன் - யாழ்ப்பாணம் ஆகியோருட்படப் பலர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.
- பேராசிரியர் அன்றூ பாஸ்க் (Prof. Andrew Pask). -
செப்டம்பர் 7, 1936ம் ஆண்டு; ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த ஹோபார்ட் பேமொறிஸ் மிருகக்காட்சிச்சாலை அன்றும் என்று போல் விடிந்தது. ஆனால் அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி .தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகு ஒரு உயரினத்தை நிரந்தரமாக இழந்தது நின்றது!
2000 ஆண்டுகளுக்கு முன்பே இவை ஆஸ்திரேலியாவின் ஏனய மாநிலங்களில் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. தஸ்மேனிய தீவில் மட்டுமே உயிர் வாழ்ந்த கடைசி மிருகமும் உயிர்நீத்தது!
தஸ்மேனியன் புலி என இவற்றிற்கு இங்கு குடியேறிய ஆங்கிலேயர் பெயரிட்டாலும் இவை பைம்மாவினம் (marsupials) எனும் பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும். இவற்றுக்கு தைலசின்கள் (Thylacines) என்ற விஞ்ஞானப் பெயரும் உண்டு.
இவை ஆஸ்திரலேசியா, மற்றும் அமெரிக்காக்களிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்களின் இளம் குட்டிகள் இவற்றின் வயிற்றுப்பகுதியில் உள்ள பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள் கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தஸ்மேனிய டெவில் ஆகியவை ஆகும். மேலே உள்ள உயிரினங்களில் இருந்து நமது நாயகன் சிறிது வேறுபடுகிறார். ஆம், ஆண் தஸ்மேனிய புலிக்கும் பெண் புலியைப் போல் வயிற்றில் பை இருக்கும். இதனால் தம் வாரிசுகளை பேணுவதில் இருவருக்கும் சமபங்குண்டு என எண்ணவேண்டாம். ஆணுறுப்புபை குளிரான காலநிலைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் சக மிருகங்களுடன் சமர்செய்யும்போது ஒரு பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு.
9
“நல்ல கலை ‘ இயற்கையின் பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கே’ வாசகனை கொண்டு சேர்த்துவிடும் என்று போதிப்பார் அவர். (பக்கம்:100:நவீனத்துவத்தின் முகங்கள்) மேலும் கூறுவார்: “நல்ல படைப்பு நாம் அறியாத பல நூறு ஆழ்மன சக்திகள் திரண்டு உருவான வடிவம்” என. (அதே) அதாவது, அவரது பார்வையில் ஒரு புறம் படைப்பாளி. மறுபுறம் வாசகன். அதாவது, வாசகனை, “பிரபஞ்ச பேரியக்க வாசலுக்கு” இட்டுச் செல்லும் படைப்புகள் உண்டு. இவற்றை உருவாக்குவது படைப்பாளியின் “ஆழ்மனசக்தி”. மேலும், இப்படி ‘பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கு’ இட்டுச் செல்லும் ஆற்றலை உருவாக்கும், ‘ஆழ்மனசக்திகளின்’ குணாம்சம் குறித்தும் ஜெயமோகன் விளக்கம் கூறத் தவறவில்லை.
“ஒரு எறும்புப் புற்று என்பது பல்லாயிரம் எறும்புகளின் தூல வடிவம். அவ்எறும்புகளின் ஊடாக, கோடானு கோடி வருடங்களாக இயற்கை உருவாக்கிய அமைப்பு அது. இலக்கியப் படைப்பும் அப்படித்தான்.” (அதே)
அதாவது, மேற்படி கூற்றின் பிரகாரம் பார்ப்போமானால், எறும்பு புற்று கட்டுவதும், குரங்கு மாம்பழம் சாப்பிடுவதும், புதுமைபித்தன் கபாடபுரம் எழுதுவதும் - கோடானு கோடி வருடங்களின் சமாச்சாரங்கள் - அதாவது ஆழ்மன விளையாட்டுகள் என்றாகிறது. வெறும், எறும்புகளுக்கே, கோடானு கோடி வருடங்கள் என்றால், கபாடபுரம் எழுதிய, புதுமைபித்தனின் ஆழ்மனம் கூட,அதாவது அதை விட,கோடானு கோடி வருடங்களில் இருந்தே, அதாவது குரங்கு மனிதனாய் ஆன காலத்தில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும். அதனாலோ என்னவோ,‘நம்மவர்களுக்கு, குரங்குகளில் முதல் குரங்கும் தமிழ் குரங்குதான் என்று கூறினாலே பிடிக்கும்’ என்று போகிற போக்கில் புதுமைபித்தன் குரங்குகளை இழுத்துக் கூறுவதும் இந்தக் குரங்கு சார்ந்த ‘ஆழ்மன’ விளையாட்டுகளின் கீற்றோ என்பதுவும் புரியவில்லை.
மொத்தத்தில், நாவலில் வரும் மரீனா – கிளிம் சார்ந்த ஆவி இறங்கல்களை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது எமது இலக்கியத்தில் வலுவாக முன்னெடுக்கப்படும் மரபுகள் - தொன்மங்கள் - ஆழ்மன சக்திகள் - நனவிலி மனம் - நனவிலி மொழி - இவற்றை எடுத்துக் கொண்டாலும் சரி - இவை ஆளாளுக்கு ஆங்காங்கே சற்று வித்தியாசப்பட்டிருந்தாலும் அடிப்படையில் ஒன்றாகவே ஒலிக்கின்றது – அதிலும் 1916 இலிருந்து யுங்கின் மூலமாக, தெளிவாக.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.
உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமசமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது. தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம். இக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமிர்தலிங்கமும், ஜி. ஜி. பொன்னம்பலமும் தங்கள் தங்கள் கோட்டைகளிலேயே தோற்றனர். அவர்கள் அவ்வாறு தோற்றதன் பின்னணியில் இலங்கை அரசியலில் பெரிய திருப்புமுனையும் தோன்றியது. அந்த முனை தொடர்ந்தும் சங்கிலிப்பின்னலாக பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. அந்த வரலாற்றை ஏற்கனவே வெளிவந்துள்ள அரசியல் ஆய்வேடுகளில் பார்க்கலாம்.
தொல்பழங்காலந்தொட்டு தமிழ்நிலத்தில் சிறந்த பண்பாட்டு நெறிகள் வளர்ந்தோங்கியுள்ளன. தூய தமிழ் மரபுகள், வாழ்க்கை நெறிகள் காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. ‘பண்புடையார்ப் பட்டுண்டுண்டு உலகம்’ என்பது திருக்குறள் விதித்த விதியாகும். உலகின் மூத்த நாகரிகங்களில் முதன்மையானது தமிழ் நாகரிகமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பண்பாடு
இலக்கணச் செறிவும் இலக்கியச் செம்மையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி இத்தமிழ்மொழிப் பேசும் தமிழரின் பண்பாடு மிகவும் பழமை வாய்ந்தது, பண்பாடு உடையது. பண்பாடு உள்ளவர்களாலேதான் இப்பாரதம் வாழ்ந்து வருகிறதென பண்பாட்டின் பெருமைதனை,
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன் (திருக்குறள்: 996)
என வள்ளுவம் பேசுகிறது.
தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரின் இயல்புணர்ந்து அதற்கியையப் பழகுதலே பண்பாடு எனப்படும். மனிதனை விலங்கினின்று வேறுபடுத்துவதும் நல்ல பண்பாடுதான். இப்பண்பாடு காலத்திற்குக் காலம்; நாட்டுக்கு நாடு; இனத்திற்கு இனம் வேறுபடும். கரடு முரடான நிலப்பகுதியை வேளாண்மைக்கு ஏற்ப, நிலமாக மாற்றுவது பயன்படுத்துதல் எனப்படும். இதைப் போன்று மனித உள்ளத்தையும் தீய எண்ணங்களில் இருந்து விலக்கி உயர்ந்த எண்ணங்களுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மனதைப் பயன்படுத்துதல் பண்பாடு என்பர். இதனையே கலித்தொகை,
பண்பெனப் படுவது பாடறிந்து தொழுகுதல் (கலி, பா.133:8) என்கிறது.
இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. 14-08-2022 அன்று கம்பத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் பாரதன் தலைமையில் எழுத்தாளர் ஜீவபாரதி பரிசினை வழங்க எழுத்தாளர் குரு அரவிந்தன் சார்பாக பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் பரிசினைப் பெற்றுக்கொண்டார்.
பீல் பகுதியில் உள்ள சொப்கா குடும்ப மன்ற ஒன்று கூடல் சென்ற ஞாயிற்றுக் கிழமை 07-08-2022 மிசசாகா கொம்யூனிட்டி சென்ரர் பூங்காவில் இடம் பெற்றது. புலம் பெயர்ந்து வந்த இங்குள்ள இளம் தலைமுறையினரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு இயங்கிவரும் இந்த சொப்கா மன்றம், ஒன்று கூடலின் போது மிசசாகா உணவு வங்கிக்காகவும் உணவுப் பொருட்களைச் சேகரித்தது குறிப்பிடத் தக்கது. அங்கத்தவர்கள் மனமுவர்ந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேகரித்தனர். உணவு வங்கிக்கு உணவு சேகரித்துக் கொடுக்கும் இந்த வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்தும் சொப்கா மன்றத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காலம்: ஆகஸ்ட் 20, 2022 மாலை 5மணி- 9 மணி.
இடம்: 3600 Kingston Road, Scarborough Community Centre
ஆரம்ப காலத்திலிருந்து வெளியாகும் தமிழ் இணைய இதழ்களான திண்ணை , பதிவுகளின் ஆரோக்கியமான இலக்கியப் பங்களிப்பு பற்றி நான் நிச்சயம் பெருமைப்படுகின்றேன். திருப்திப்படுகின்றேன். பதிவுகள் இணைய இதழைத் தொடங்கியபோது முக்கியமான நோக்கங்களாக இருந்தவை: என் படைப்புகளை இணைய மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் இணையத்தில் தமிழ் எழுத்துகளை எழுதுவதற்குத் தூண்டுகோலாகவிருக்க வேண்டும். இவ்விதமான எண்ணங்களோடு பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்தேன். அப்போது வலைப்பதிவுகள் ஏதுமில்லை. இவ்விதமானதொரு சூழலில் முரசு அஞ்சல் எழுத்துரு எனக்குப் பெரிதும் கை கொடுத்தது. ஏனென்றால் எனக்குத் தமிழ்த் தட்டச்சு செய்வதில் பெரிதும் ஆற்றலில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது அதனுடன் ஒப்பிடும்போது இலகுவாகவிருந்தது. இவ்விதம் பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்து படைப்புகளைத் தமிழில் பிரசுரித்தபோது அது இணையத்தில் தமிழ் வாசகர்களைக் கவர ஆரம்பித்தது. பலர் தம் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவ்விதம் படைப்புகளை அனுப்புபவர்களுக்கு நான் கூறியது: பதிவுகளுக்கு படைப்புகள் அனுப்புபவர்கள் படைப்புகளை பதிவுகளுக்கு உரிய எழுத்துரு பாவித்துத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டுமென்பதுதான். இதற்கு முக்கிய காரணங்கள்: ஒன்று மீண்டும் தட்டச்சு செய்யும் சிரமம் இல்லை. அடுத்தது தமிழில் தட்டச்சு செய்வதன் மூலம் எழுத்தாளர்களை இணையத்தமிழுக்கு அறிமுகப்படுத்துவது. இவ்விதம் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் படைப்புகளையே பதிவுகள் ஏற்றுக்கொண்டு பிரசுரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
- ஓவியம் : கிறிஸ்டி நல்லரெத்தினம் ( மெல்பன் ) -
குணவர்தனா, தபாலில் வந்த கடிதத்தை படித்துவிட்டு, வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். கொவிட் பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். மனைவி நிலாந்தி பாடசாலைக்குச் சென்ற மகனை அழைத்துவரச்சென்று திரும்பும்போது, வீட்டு தபால் பெட்டியிலிருந்து எடுத்து வந்த கடிதத்தை அறையை தட்டி தந்துவிட்டு, மகனை குளியலறைக்கு கூட்டிச்சென்றாள்.
“ குணே… உங்கட உபாலியிடமிருந்து கடிதம். திரும்பவும் பணம் கேட்டு எழுதியிருக்கலாம் “ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொல்லியவாறுதான் அகன்றாள் நிலாந்தி.
குணவர்தனாவின் நெருங்கிய நண்பன்தான் உபாலி. அம்பாந்தோட்டையில் ஒரே கிராமத்தில், பிறந்த வளர்ந்து படித்தவர்கள். வீட்டுக்கஷ்டத்தால், கிராமத்து விகாரையிலிருந்த தர்மரத்ன சாதுவின் தூண்டுதலால் தேசத்தை விடுதலை இயக்கத்திடமிருந்து காக்க இராணுவத்தில் சேர்ந்து, இறுதிப்போரில் வலது காலை இழந்து முடமாகத் திரும்பியவன்.
குணவர்தனாவின் குடும்பப் பின்னணி செழிப்பாக இருந்தமையால் படித்து பட்டதாரியாக முடிந்தது, அவுஸ்திரேலியாவில் தொழில்வாய்ப்பும் பெற்று வரக்கூடியதாக இருந்தது.
- எழுத்தாளர் சீர்காழி தாஜ் -
எழுத்தாளர் அமரர் சீர்காழி தாஜ் அவர்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தமிழக எழுத்தாளர்களிலொருவர். அவரது படைப்புகள் பல பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. 'தமிழ்ப்பூக்கள்' என்னும் பெயரில் வலைப்பதிவினை நடத்தி வந்தவர். அவ்வலைப்பதிவு தற்போதும் இயங்குகின்றது.
எழுத்தாளர் தாஜ், கலை,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் 'நடு' கோமகன், நுணாவிலூர் கா.விசயரத்தினம் (பதிவுகளில் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆக்கங்கள் பல எழுதியவர்) போன்றவர்களின் மறைவுகள் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் நடந்தவை. அதனால் அவர்களின் மறைவுச் செய்திகள் வெளியானபோது அவற்றை உள்வாங்குவது சிரமமாகவிருந்தது.
எழுத்தாளர் தாஜுடனான தொடர்பு ஏற்பட்டது பற்றிச் சிறிது கூறவேண்டும். முதலில் அவர் என் படைப்புகளின் வாசகராகவே எனக்கு அறிமுகமானார். தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா' (சிறுகதைத்தொகுதி), நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல்) ஆகியவற்றைத் தமிழக நூல் நிலையங்களிலிருந்து பெற்று வாசித்து எனக்கு அவை பற்றி நீண்ட கடிதங்களை எழுதினார். அக்கடிதங்களை இன்னும் பாதுகாப்பாக என் கைவசம் வைத்துள்ளேன்.
இவ்விதம் எனக்கு அறிமுகமான தாஜ் அவர்கள் வைக்கம் முகம்மது பசீரின் ' எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலை நான் தேடிக்கொண்டிருந்தபோது 'டொரோண்டோ'விலுள்ள அவரது நண்பர் ஒருவரினூடு அனுப்பி வைத்தார். அதனை இன்னும் அவர் நினைவாக வைத்துள்ளேன்.
முன்னுரை
பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களுள் இன்று குறை நூலாய்க் கிடைத்துள்ளவற்றுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். புறத்திரட்டு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட நூற்றெட்டுப் பாடலோடு பழைய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இருபத்திரண்டு பாடல்களும் சேர்ந்து தற்பொழுது வழக்கில் இருப்பது நூற்று முப்பது பாடல்களாகும். மூன்று, தொள்ளாயிரம் ஆகிய இரு சொற்களும் சேர்ந்து முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இந்நூற்பாடல்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் வரலாற்றையும் சுட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் கனலாலும், புனலாலும், காற்றாலும், காழ்ப்பாலும் அழிந்தன போக எஞ்சிய நூற்று முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.
இவற்றுள் ஒவ்வொரு பகுதியும் நாடு, நகர் பகைப்புலம் அழித்தல், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், வென்றி, புகழ், கைக்கிளை எனப் பல்வேறு குறிப்புகளைக் கொண்டுள்ளது. முத்தொள்ளாயிரம் மூவேந்தரின் வீரச் சிறப்பினையும், குதிரை, யானைப் படைகளின் தன்மையையும் இனிதே எடுத்துரைக்கின்றது. மூவேந்தரிடமும், யானைப் படைகள் சிறந்து விளங்கியது. அவ்யானைகள் பகைவரின் உயிரைக் குடிக்கும் கூற்றுவனைப் போல் விளங்கின. தம் நாட்டின் வெற்றிக்கு யானைப்படை முக்கியம் என்பதை உணர்ந்த மூவேந்தர்களும் யானைகளை நன்கு பராமரித்தனர். அவ்வாறு அவர்கள் பராமரித்த யானைகளின் மறம் (வீரம்) பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வுச் சுருக்கம்
முடிவுடைய மூவேந்தர்களும் யானைப் படையை வைத்திருந்தனர். அப்படையில் உள்ள யானைகள் ஒவ்வொன்றும் போர்க்குணம் கொண்டவை. பகைவரைக் கண்டவுடன் கடிது சென்று அழிக்கும் திறன் கொண்டவை. பகைவரைக் கொன்று குவிக்கும் களக் காட்சியையும், யானையின் வீரத்தையும் முத்தொள்ளாயிரப் பாடல்கள் எடுத்துரைக் கின்றன. மேலும்,
யானைமறம்
சேரனின் யானைமறம்
சோழனின் யானைமறம்
பாண்டியனின் யானைமறம்
என்னும் தலைப்பில் முடிவுடை மூவேந்தர்களின் யானை படையின் இயல்பினைக் கூறுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.