நேற்று மாலை, கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதியுடன் 5 Spice உணவகத்தில் எழுத்தாளர் தேவகாந்தன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோருடன் சந்தித்தோம். எழுத்தாளர் முருகபூபதி குறிப்பாகப் போர்க்காலச்சுழலில் தன் ஊடகத்துறை அனுபவங்களைவ் எதிர்கொண்ட பிரச்சினைகளையெல்லாம் எம்முடன் பகிர்ந்துகொண்டார். கதை, கட்டுரை, நாவல் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த பத்தி எழுத்துகள் என இவரது இலக்கியக் களம் பரந்தது. இவர் சமூகச் செயற்பாட்டாளரும் கூட. கடந்த 35 வருடங்களாக இவர் இலங்கை மாணவர் கல்வி அமைப்பின் மூலம் இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதி மாணவர்களுக்கு ஆற்றும் சேவையினைப் பற்றியும் எமக்கு விளங்கப்படுத்தினார். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவரது தலைமையில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி அமைப்பு மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பது உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது.
சந்திப்பின்போது முருகபூபதி அவர்கள் தனது நூல்களான இலங்கையில் பாரதி, சினிமா பார்த்ததும் கேட்டதும், கதைத்தொகுப்பின் கதை ஆகிய நூல்களை என்க்குத் தந்தார். நானும் பதிலுக்கு எனது கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், அமெரிக்கா (திருத்திய இரண்டாம் பதிப்பு) ஆகியவற்றை அவருக்கு வழங்கினேன்.
இங்குள்ள புகைப்படம் 5 Spice உணவகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். முருகபூபதியுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் மூலம் அல்லது +61 416 625 766 என்னும் வாட்ஸ் அப் இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.