நோர்வேப் பயணத்தொடர் (2): சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே! - ஶ்ரீரஞ்சனி -

- நள்ளிரவிலும் சூரியன் துயிலாத நாடு எனப் பெயர்பெற்ற நோர்வே -
நோர்வே பற்றிய எதிர்பார்ப்புக்களை மனதில் சுமந்தபடி, அந்த நாடு தொடர்பான எங்களின் தனிப்பட்ட சரித்திரத்தை மீளவும் மீட்டிக்கொண்டு டென்மார்க் ஊடான எங்களின் நோர்வே பயணத்தை சங்கியும் நானும் ஆரம்பித்தோம்.
ரொறன்ரோவிலிருந்து புறப்பட்ட விமானம் குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே Copenhagen விமானநிலையத்தைச் சென்றடைந்தது. Stavangerக்கான எங்களின் விமானத்துக்கு ஐந்து மணி நேரக் காத்திருப்பு இருந்தமையால், ஏற்கனவே திட்டமிருந்தபடி, Copenhagen நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு அந்தக் காலை நேரத்தைப் (அது ரொறன்ரோவின் நடு இரவாக இருந்தபோதும்) பயன்படுத்தினோம். விமானநிலையத்திலிருந்து நகருக்குச் ரெயினில் செல்ல 20 நிமிடங்களே தேவையாகவிருந்தன.
நகரைச் சுற்றி நடந்தபோது, மேடும் பள்ளமுமாக இருந்த சமச்சீரற்ற நிலத்தில் மிகவும் இயல்பாக நிரைநிரையாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம்செய்தோரே எங்களின் கவனத்தை முதலில் ஈர்த்தனர். அதைப் பார்த்தபோது மிகுந்த வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அங்கிருந்த கட்டடங்களும் பல்வேறு வண்ணங்களில் கண்களுக்கு விருந்தாயிருந்தன என்றால் சடைத்திருந்த பெருமரங்களும் அவற்றில் கீழ் நிறைந்திருந்த நிழலும் மனதுக்கும் உடலுக்கும் மிகுந்த இதத்தைத் தந்தன. இப்படியாக இயற்கையையும் செயற்கையையும் ரசித்தபடி அங்கிருந்த உயர்ந்த மரங்களின் நிழலிருந்த வாங்குகளில் அமர்ந்து, அருகிலிருந்த bakery இல் வாங்கிய danish pastryகளைச் சாப்பிட்டோம். ரொறன்ரோவில் விற்கப்படும் danish pastryஐவிட, அது அதிக ருசியாக இருக்கிறதென்றா சங்கி. எனக்கோ கறுவாத் தூள் வாசத்துடன் இருந்த அந்தப் pastry அமிர்தமாக இருந்தது.


கண்ணதாசன் கவிதைக்கு கற்கண்டே தோற்றுவிடும்.
கடந்த கால நிகழ்வுகளின் பதிவு வரலாறாகும். எட்டுத்தொகை நூலான அகநானூற்றின் வழி அக்கால மக்களின் வரலாற்றினையும் சமுதாய வாழ்வியலையும் நாகரிகப் பண்பினையும் அறிய முடிகிறது. மேலும் மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. மூவேந்தர்கள் பற்றிக் காணலாகும் செய்தியினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக போருக்குள்ளே வாழ்ந்தவர்கள். அந்த வாழ்க்கைப்பாடுகளை ஈழத்துப் புனைகதைகள் விரிவாகப் பதிவு செய்துள்ளன. ஒருபுறத்தில் போரால் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிதைவுகளும் மறுபுறத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இருபுறத்தார் மீதான விமர்சனங்களும் ஈழ - புகலிடப் படைப்புக்களில் அதிகம் பதிவாகியுள்ளன. பொதுவாகவே மக்களின் பக்கமிருந்து பொது எதிரியை விளித்து எழுதப்பட்ட புனைகதைகளும் அதிகமதிகம் வெளிவந்தன. விலகல்கள் எனும்போது தமிழ்ப் போராட்டக் குழுக்களின் அரசியல் முரண்பாடுகள், அமைப்புக்களின் தன்னிச்சையான அதிகாரப்போக்கை எதிர்த்து எழுதப்பெற்ற படைப்புக்கள் 80களின் இறுதியில் இருந்து அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளன. புகலிடச் சூழலும் இதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியது. இன்னொரு புறத்தில் போராட்டத்தின் தேவை சார்ந்தும் அதன் அமைப்பு சார்ந்தும் உள்ளிருந்து எழுதப்பெற்ற படைப்புக்களும் வெளிவந்தன. அருளரின் லங்காராணி (1978), தா. பாலகணேசனின் விடிவுக்கு முந்திய மரணங்கள் (1986), மலரவனின் போருலா (1993) முதலான புனைவுகளை உதாரணமாகக் கூறலாம். 

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 -2023 ) ஏற்பாடு செய்திருந்த மாணவர் ஒன்றுகூடல் மற்றும் தகவல் அமர்வு – நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. அரியமுத்துவின் தலைமையில் நானுஓயா நாவலர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 
அறிவியல் சார்ந்து உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, டைட்டானிக் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவி இப்பொழுதும் அப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைப் பழிவாங்குவதாக சிலர் நம்புவதையும், அப்படியான சிந்தனைகள் தவறானவை என்பதை எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதற்குக் காரணம் சென்ற வாரம் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக சென்ற ஐவர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் சென்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியதால் மரணமடைந்து விட்டார்கள்.
இலங்கையை விட்டு எங்கெல்லாம் ஓட முடியுமோ, அங்கெல்லாம் ஓடும்படி உள்நாட்டுப் போர் எங்களில் பலரைத் துரத்தியது. அதன் விளைவு, நாங்களும் எங்களின் அயலார், உற்றார், உறவினர்களும் இந்தப் பூமிப் பந்தின் பல்வேறு தேசங்களிலும் சிதறிப் போனோம்.











‘கோடானு கோடி உயிரினங்களில் ஒன்றாகவும், அரைகுறை ஆடைகளுடனும், பறட்டைத் தலையுடனும், காய்கனிகளைப் பொறுக்கிக் கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடித் திரிந்து கொண்டும் இருந்த மனித இனம், படிப்படியாக மாறி, இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்ற ஓர் மனித இனமாக உருவானது இப்படித்தான்’ என்பதுதான் சேப்பியன்ஸ். நம் இனத்தின் கதையை அழகாகவும், சுவாரசியமாகவும்ச் விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் நம்மை மலைக்க வைக்கின்றார் முனைவர் யுவால் நோவா ஹராரி. இதனைத் தமிழில் மொழிபெயர்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
நண்பர்களே! நாம் பலருடன் பழகுகின்றோம். சிலரை நம் நண்பர்களாகக் கொள்கின்றோம். பல வழிகளிலும் உண்மை நட்புடன், எம் நண்பர்களின் இடுக்கண் காலங்களில் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்கின்றோம். சில காலங்களின் பின் , எம்மிடமிருந்து பல பயனுள்ள உதவிகளை உரிய காலத்தில் பெற்றுப் பயனடைந்த சிலர், தம் இன்னல்கள் தீர்ந்து சுகமாக வாழும் காலத்தில், தாம் இன்னல் பட்டிருந்த காலத்தில் தமக்குதவிய நண்பர்களின் உதவியின் உயர்வை , அதனால் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்து விடுவார்கள்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









