மீராபாரதியின் மிதிவண்டிப் பயணம் - ஊர்க்குருவி -
சமூக அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி தற்போது இலங்கையில் தனது மிதிவண்டிப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். பருத்தித்துறையில் ஆரம்பித்து பொத்துவில் வரையிலான் பயணமிது. இதன் நோக்கத்தை அவரது மிதிவண்டிப்பயணத்துக்கான முகநூல் இவ்விதம் கூறுகிறது:
"கதைப்பதனூடாக கற்போம் . கற்பதனூடாக கதைப்போம். கலந்துரையாடல் தலைப்புகள்: மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவித்தல், மிதிவண்டியின் நன்மைகள், பாதுகாப்பான மிதிவண்டிப் பாதை நடை பதைகளை ஊக்குவித்தல், வீதிகளில் மர நடுகையை ஊக்குவித்தல், வீடுகளில் மர நடுகையை ஊக்குவித்தல், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல் & ஊள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல். உங்கள் ஊர்களில் பின்வரும் திகதிகளில் நீங்களே உள்ளூர் புலமையாளர்கள் துறைசார் நிபுணர்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்யலாம். பின்வரும் திகதிகளில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பயணிக்கலாம். இப் பயணத்திற்கும் அதற்கான செலவுகளும் பங்குபற்றுகின்றவர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். பின்வரும் திகதிகளில் ஆர்வமுள்ளவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். பங்குபற்றுகின்ற ஒவ்வொருவரும் தாமே அனைத்து தங்குமிட, உணவு, மிதிவண்டிப் பொறுப்புகளையும் எடுக்க வேண்டும். "