அமெரிக்கா - ஞானம் இலம்பேர்ட் -

- ஸ்நேகா (தமிழ்நாடு) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடான வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (1996) சிறுகதைத்தொகுப்பு பற்றி 'டொரோண்டோ, கனடாவில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் , தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்ணூறுகளில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு 'அமெரிக்கா' பற்றி உரையாற்றிய நாடகவியலாளரும் , கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஞானம் இலம்பேட்டின் உரையின் முக்கிய பகுதிகள் இவை. -
சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு. அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும். இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும் படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது. அவர் சொல்கிறார்:
"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உண்ர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமாக உருவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது"
இங்குள்ள ஏழு சிறுகதைகளிலும் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு, அந்த உறவு காரணமாக ஏற்பட்ட பிணக்குகள், அப்பிணக்குகள் காரணமாக ஏற்பட்ட சில அபிப்பிராயங்கள், அல்லது கருத்துகள் பற்றிய நண்பர் கிரிதரன் அவர்களின் கோட்பாடே மேலோங்கி நிற்கிறது.











இம்முறை எழுத்தாளர் க. சட்டநாதனுக்கு இலங்கை அரசின் சாகித்தியரத்னா விருது கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமது நீண்ட கால இலக்கிய நண்பர் க. சட்டநாதனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றோம். குறிப்பிட்ட விருது வழங்கும் விழா இம்மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கிறது. வட இலங்கையில் வேலணையில் பிறந்திருக்கும் சட்டநாதன் அந்தத் தீவுப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கமான உறவை பேணி வளர்த்தவர். இவரை நண்பராகப் பெறுபவர்கள் எளிதில் இவரை மறந்துவிடமாட்டார்கள். இவரை இழக்கத் தயாராகமாட்டார்கள்!

எவாலின் ரீட் ஓர் அமெரிக்க கம்யூனிஸ்ட் மற்றும் பெண்ணியவாதி. 1940 ஜனவரி மாதத்தில் எவாலின் ரீட் நாடு கடத்தப்பட்ட ருஷ்யப்புரட்சியாளர் லியான் ட்ராட்ஸ்கி, அவருடைய மனைவி நடாலியா செடோவா இருவரையும் சந்திக்க மெக்சிக்கோவுக்குச் சென்றார். லியானின் இல்லத்தில் ரீட் அமெரிக்க ட்ராட்ஸ்கியின் தலைவரும் சோஷலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜேம்ஸ்.பி.கேனன் அவர்களைச் சந்தித்தார். அவ்வாண்டே ரீட் சோஷலிசத் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். அதன் பின் அவர் இறக்கும் வரை அக்கட்சியில் முன்னணித் தொண்டராகப் பணியாற்றினார். 1960-70 களில் பெண்விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட ரீட் பெண் கருக்கலைப்பு இயக்கக் கூட்டணியில் உறுப்பினராக இருந்தார். இக்காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐயர்லாந்து, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய இடங்களில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தார் . சொற்பொழிவாற்றினார். ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ், அலெக்சாண்டிரா கோலண்டை ஆகியோரின் பெண், குடும்பம் சார்ந்த ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சியப்பெண்ணியம், பெண்ணொடுக்குமுறை, பெண் விடுதலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல புத்தகங்களை எழுதினார்.
பாரதியின் பாட்டாலே பலபேரும் விழித்தனரே.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 10 ஆம் திகதி, சிட்னியில் நடத்திய 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் , படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால இலக்கியச்சேவையை பாராட்டி வழங்கப்பட்ட சாதனையாளர் விருது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பாராட்டுரை. இவ்வுரையை சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் தற்போதைய துணை நிதிச்செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நிகழ்த்தினார். சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியனின் தலைமையில் நடந்த எழுத்தாளர் விழாவின் முதல் அமர்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் கம்பர்லாந்து மாநகர மேயர் லிஸா லேக் அவர்கள் தாமரைச்செல்விக்கான விருதினை வழங்கினார்.
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11. என்னை மிகவும் பாதித்த இலக்கிய ஆளுமைகளின் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். குறுகிய அவரது வாழ்வு மானுட உலகுக்கு ஒளி தந்ததொரு மின்னலாக அமைந்து விட்டது. என்னை அவரது சிந்தனைத் தெளிவு மிகவும் கவர்ந்தது. அவரிடம் காணப்படும் முரண்பாடுகள் கூட அவரது தேடலின் விளைவுகளே. 
இம்முறை லண்டன் போக ஆயத்தமானபோது, சந்திக்கவேண்டுமென நான் விரும்பியவர்களில் கெளரி பரா முக்கியமான ஒருவராக இருந்தா. 2019இல் லண்டனில் நிகழ்ந்த ‘உதிர்தலில்லை இனி’ என்ற எனது நூல் அறிமுகத்தின்போது கெளரியை ஒரு தடவை சந்தித்திருந்தாலும்கூட, அவவுடன் உரையாடியிருக்கவில்லை. அந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான், நிறைந்த அர்த்தங்களுடனும் வித்தியாசமான பார்வையிலும் அவ செய்யும் பக்கச்சார்பற்ற நூல் விமர்சனங்களைக் கேட்கக் கிடைத்திருந்தது. அதனால் கவரப்பட்டிருந்த எனக்கு, 'ஒன்றே வேறே' என்ற என் சிறுகதைத் தொகுதி பற்றிய அவவின் கருத்தை அறிய வேண்டுமென்ற அவா ஏற்பட்டிருந்தது.
குடும்பம் என்பது உறவுகள் கூடி வாழும் இல்லம். அத்தகைய உறவுகளில் தாய்ப்பாசத்திற்கு அடுத்த நிலை உறவாக மதிப்பிடக்கூடிய உறவு மகளாகும். இத்தகைய பெருமைக்குரிய மகள் நிலை உறவு குறித்துப் பெருந்தன்மை குடும்பக்கதைகள் சிறுகதைத்தொகுப்பில் எழுத்தாளர் செளந்தரராசன் படைத்துள்ள தன்மையினை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.




அவுஸ்திரேலியா - மெல்பேர்னிலிருந்து எமது மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், நீர்கொழும்பை பூர்வீகமாகக் கொண்ட, திரு முருகபூபதி இங்கிலாந்து வருகையின் போது , ஏறத்தாழ நாற்பது வருடங்களின் பின் ஒரு குடும்ப உறவினராக என்னைச் சந்தித்துக் கொண்டது மனதை நெகிழ வைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் மிக இனிமையான மனிதர். பல இலக்கிய விருதுகளை வென்றதற்கான கர்வம் எதுவும் இல்லாதவர். நான் உரிமையுடன் சிறு வயதில் பார்த்துப் பழகியவர். 
ஒவ்வொரு மாலைப்பொழுதும்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









