விருதுகளும் , தமிழ் எழுத்தாளர்களும்! - வ.ந.கிரிதரன் -
தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக விருதுகளுக்கு அடிமையானவர்களாகத்தான் நடந்துகொள்கின்றார்கள். கன்னட எழுத்தாளரான எம்.எம். கல்பூர்கி அவரது சமய மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துகளுக்காகப் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூடத் தனது விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இலங்கையில் நீண்ட காலம் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போர்ச்சூழலில் கூட ஒருவர் கூட தாம் பெற்ற சாகித்திய விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை. எழுத்தாளர் நெல்லை க.பேரனின் குடும்பமே இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டது. அப்பொழுதும் யாரும் பெற்ற விருதினைத் திருப்பிக் கொடுக்க எண்ணவில்லை. புதியதை வாங்குவதை நிறுத்தவுமில்லை. 'மாமனிதர்' சொக்கன் கூடத் தான் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவைத் தொடர்ந்த ஆண்டுகளில் கூட வழக்கம்போல் விருதினை வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள். தேசிய விடுதலைப்போருக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு, இலங்கை அதிபரிடமிருந்து விருதுகளை தொடர்ந்தும் வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள்.
பணமுடிப்புடன் கூடிய விருதுகள் அவற்றைப் பெறும் எழுத்தாளர்களுக்கு பொருளியல்ரீதியில் உதவும் தன்மை மிக்கவை. விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளைப் பொறுத்தவரையில் அவை பின்வரும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.