அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களை தமிழ்மக்கள் உட்பட அனைத்து மக்களும் வலுப்படுத்த வேண்டும்!
- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -
உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும் தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும் எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும் வலுப்படுத்த முடியும்.
கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தல் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். வாக்காளர்கள், சனநாயக விரோத, ஊழல் நிறைந்த, சகிப்புத்தன்மையற்ற மற்றும் அப்போது நிலவிய வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மிகப் பெரியளவில் நிராகரித்தார்கள். அந்தத் தேர்தல் முடிவு, எந்த ஐயத்துக்கும் அப்பால் நாட்டில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. முற்போக்கான பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கான இடைவெளியை விரிவாக்கியது. அதன் மூலம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் சிறுபான்மை சமூகங்கள் ஓரளவாவது அச்சமின்றி வாழ வழி செய்தது. இந்த மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதோடு உலக நாடுகளால் வரவேற்கப்பட்டன. எனவே இந்த வலுக்குறைந்த தொடக்கங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது இலங்கையில் வாழும் எல்லாக் குடிமக்களது பொறுப்பான கடமையாகும். இந்த மாற்றங்கள் தலைகீழாகப் போவதற்கு துளியளவு வாய்ப்புக் கூட கொடுக்கக் கூடாது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சிகளாகத்திகழும் காணொளிகளை, புகைப்படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தந்தவர்கள் சிறிலங்காப்படையிலிருந்த சிங்களவர்கள்தாம். அதுபோல் 1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தும் குறியீடாக விளங்குவது பொரளையில் காடையர்கள் முன் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் புகைப்படம். ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் இரத்தவெறி பிடித்த காடையர்கள் முன் , நிர்வாணமாகக்கூனிக்குறுகி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை எடுத்தியம்பும் ஒரு குறியீடு. அந்தப் புகைப்படத்தினை எடுத்தவரும் ஒரு சிங்களவரே சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.



‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்பது கனடிய தமிழர்களுக்காகத்தான் சொல்லப்பட்டதோ தெரியவில்லை. இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவாதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது. கனடியத் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் மறைவு இதைத்தான் இன்று எங்களுக்குச் சொல்லி நிற்கின்றது. நண்பர் பொன்னம்பலம் குகதாசன் பழகுவதற்கு இனிமையானவர். பூநகரான் என்ற பெயரில் ரி.வி.ஐ யின் செய்திக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பல தடவை அவரது பங்களிப்பைப் பார்த்திருக்கின்றேன். சி.எம். ஆர் வானொலியிலும் இவர் குரலைக் கேட்டிருக்கின்றேன். உதயன் பத்திரிகையில் இவரது கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்திருக்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் அவரது ‘வாலிவதை’ என்ற நூல் சமீபத்தில் கனடா கந்தசுவாமி கோயிலில் வெளியிடப்பட்டது. கலாநிதி எஸ். சிவநாயகமூர்த்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பச்சையப்பன் கல்லூரி முன்னால் முதல்வர் பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் அவர்களும் விசேட அதிதியாக வந்திருந்து உரையாற்றினார். கனடா தமிழ் எழுதத்hளர் இணையத்தின் சார்பில் உபதலைவர் என்ற வகையில் நானும் உரையாற்றியிருந்தேன். அவருடன் உரையாட அப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவே அவருடனான கடைசி உரையாடலாகவும் இருந்துவிட்டது.
சர்வதேச அரங்கில் சிறீலங்கா அரசானது, மற்றைய அரசுகளோடு செய்யும் ஒப்பந்தங்களால் தமிழ்மொழி பேசும் மக்களின் தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களால் சிறீலங்கா அரசு தன்னைச்சட்டபூர்வமாக கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, மனித உரிமை பற்றிய உலகப்பிரகடனத்தை கட்டுப்படுத்த முடியாது என்று வலியுறுத்தி கூறியுள்ள வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தினர்,
பிரித்தானிய தமிழர் பேரவையினால் தமிழ் மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 29) இடம்பெற்றது. இச் சந்திப்பில் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 40க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Bassetlaw Nottinghamshire . பகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.John Mann Labour MP . இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தல் பற்றி ஆங்கிலத்திலோர் வார்த்தைப்பிரயோகமுள்ளது. அது "Lesser of Two Evils". சர்வதேச அரசியலில் , உளநாட்டு அரசியலில் நாடுகள் இக்கொள்கையினைப் பயன்படுத்துவதொன்றும் அதிசயமானதொன்றல்ல. உலகம் கம்யூனிசம், முதலாளித்துவமென்று இரு கூடாரங்களாகப் பிளவுண்டிருந்த காலகட்டத்தில் ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கும் மேற்கு நாடுகள் தாராளமாகவே சர்வாதிகாரிகளை, மன்னர்களை ஆதரித்தன தாம் ஆதரித்த நாடுகளில் அவர்கள் குறிப்பிடும் ஜனநாயகம் குழிதோண்டிப்புதைக்கப்பட்டிருந்தன என்பதை அறிந்திருந்த நிலையிலும் அவை ஆதரித்தன. . சீனாவும், ருஷ்யாவும் மார்க்சியத்தை நம்புமிரு நாடுகள். ஆனால் எழுபதுகளில் சீனாவோ தத்துவார்த்தரீதியில் எதிரான அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. கலாச்சாரப்புரட்சியாலும், சோவியத்துடனான பிளவினாலும் தனது நலன்களுக்காக அது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. இதற்காக அவர்கள் மேற்படி இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசுக் கொள்கையினையே கடைப்பிடித்தார்கள். இதுபோல்தான் அமெரிக்கா தன் நலன்களுக்காக, தத்துவார்த்தரீதியில் தனக்கு முரணாகத்திகழ்ந்த நாடுகளுடனெல்லாம் நட்பினைப் பாராட்டி வந்தது. உள்நாட்டு அரசியலைப்பொறுத்தவரையிலும் இதுதான் நிலை. தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான தெரிவின்போதும் வாக்களிக்கப்போகும் மக்கள் இந்த Lesser of Two Evils என்னும் சிந்தனையின் அடிப்படையிலேயே வேட்பாளரைத்தெரிவு செய்வதொன்றும் புதியதல்ல. ஆயுதப்போராட்ட காலத்திலும் அமைப்புகள் இக்கொள்கையின் அடிப்படையில் இயங்கியதற்கு உதாரணமாக இந்திய அமைதிப்படையினருக்கெதிரான போரில் விடுதலைப்புலிகள் பிரேமதாச அரசுடன் இணைந்து செயற்பட்டதையும், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்டதையும் குறிப்பிடலாம். இந்தியாவா இலங்கையா என்ற நிலையில் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு பிரேமதாச அரசானது ஆபத்து குறைந்த பிசாசாகத் தென்பட்டது. அதுபோல் பிரேமதாசா அரசுக்கு இந்தியாவை விட விடுதலைப்புலிகள் அபாயம் குறைந்ததொன்றாகத் தென்பட்டது.. இந்த நிலைதான் இன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலிலும் ஏற்பட்டுள்ளது.
பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான் எவ்வாறு அறிவேன், ஜோதிடம் பார்த்தா அறிவது? எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள ஷோலே, கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா? உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை? இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.

“Thank you Shelly, Governor General Johnston and Sharon Johnston, distinguished guests, ladies and gentlemen, boys and girls, Happy Canada Day! One hundred and fifty years ago, the Fathers of Confederation, our ancestors, met in Charlottetown, and Quebec. In 1864, our Fathers of Confederation dreamed a magnificent dream, a dream of a united Canada that would take its place among the countries of the world; prosperous, strong and free. 147 years later, this is their dream, Canada, a confident partner, a courageous warrior, a compassionate neighbour. Canada, the best country in the world!


மே 13, 2014 , ம 18, சிங்கள இராணுவம் தமிழ்மக்களை ஆண், பெண், குழந்தைகள் எனப் பாராது குண்டுகள் போட்டுக் கொன்றொழித்த நாள். இந்த ஆண்டு 5 ஆவது நினைவேந்தல் ஆண்டாகும். சிங்கள இராணுவம், பாதுகாப்பு இடத்தில் ஓடிப் பதிங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இடத்தைக் குறிவைத்து வானில் இருந்து குண்டுகளும் தரையில் இருந்து செல்தாக்குதல்களையும் மழை போல் பொழிந்து தமிழ்மக்களைச் சங்காரம் செய்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளைக் கூட கொடிய சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. மருத்துவமனைகள் இராணுவ தாக்குதலுக்குரிய இலக்குத்தான் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கொக்கரித்தான். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அய்நா அதிகாரிகள் வன்னிக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும் தப்பினோம் பிழைத்தோம் என கொழும்புக்கு ஓடித் தப்பினார்கள். உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன. காதுகளைப் பொத்திக் கொண்டன. தமிழ்மக்களின் அழுகுரலைப் பார்க்கவும் கேட்கவும் இந்த நாடுகள் மறுத்தன.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









