மாணவர்கள் மத்தியிலும் மரவள்ளி விதைபின் தேவையை விதைக்கிறோம். இன்றைய தினம் கிளிநொச்சி மலையாளபுர கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு எமது வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பின் ஊடாக மரவள்ளி தடிகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த செயல்பாட்டை நடைமுறைப்படுத்திய சமூக செயல்பாட்டாளர் சகோதரர் துளிர் தீபன் அவர்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறிய சிறிய முயற்சிகளை விழிப்புணர்வாக விதைத்து வருகிறோம் நீங்களும் உங்களுக்குத் தோன்றும் வழிமுறையில் விதைத்து வாருங்கள்.
மரத்தின் தேவை அறியாத மனிதர்கள் மரங்களை அழிக்கிறார்கள்.
இந்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு கருத்தை என்னுடைய நண்பரும் சகோதரரும் ஆகிய நிரஞ்சன் அவர்கள் பதிவு செய்திருந்தார் பதிவைப் பார்த்ததும் வேதனையாக இருந்தது. சமாதான காலகட்டத்தில் சமகால அரசியல் பணிக்காக மானிப்பாய் தொடக்கம் காரைநகர் வரை பயணிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது அப்பொழுதுதான் இந்த சகோதரரும் எனக்கு அறிமுகம். அன்று அவர் மாணவராக இருந்தார் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில்.கடந்த வருடம் தாய்மண் சென்றபொழுது கூட வீதியில் சந்தித்துக்கொண்டோம் இருவரும்.
சமகால அரசியலை மக்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு அப்பால். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடு இரவு பகல் பாராது பனைமரம் தொடக்கம் பாதுகாக்க வேண்டிய அழிந்து போகும் மரங்களை பாதுகாக்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.முடிந்தவரை சட்டவிரோத முறையில் அழிக்கப்படும் மரங்களை பாதுகாக்கும் முயற்சியை செய்தேன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினேன்.இன்றும் தாய்மண்ணில் பசுமையைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம் பலர் ஒன்றிணைந்து.
என் முகநூலில் இருக்கும் அன்பான இயற்கை நண்பர்களே எங்களுக்கு அழகான பசுமையான வாழ்வைத் தரும் மரங்களை அதை நேசிக்கத் தெரியாத மனிதர்கள் அழிக்கும் பொழுது வெறுமனே கடந்து செல்லாதீர்கள் நாளைய எங்களுடைய சந்ததிக்கு அவை மிக அவசியமானது.உங்கள் கண்களுக்குத் தென்படும் பொழுது தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள் அல்லது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.ஒரு மரத்தை நடுவது மிக இலகுவானது ஆனால் 30,40, 50 வருடங்கள் வளர்ச்சி அடைந்து மக்களுக்கு பசுமையை தந்த ஒரு மரத்தை உருவாக்குவது என்பது மிக மிக கடினமான ஒன்று. நாங்கள் இன்னும் சில காலங்களில் மரணித்து விடுவோம் ஆனால் மரங்கள் எங்களுடைய வாழ்வையும் கடந்து பலருக்கு பயன்படும் இதுதான் பசுமை.
எங்களுடைய அடுத்தகட்ட செயல்பாடு கிளிநொச்சி மண்ணிலிருந்து மாவட்டங்கள் கடந்து செல்லும் பேருந்துகளில் மரவள்ளி தடியை பொதி செய்து அனுப்புவதற்கான முயற்சியை மேற்கொள்கிறோம்.முதல் கட்டமாக நுவரெலியா மற்றும் தலைமன்னாரை நோக்கி.முடிந்தவரை விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம்.
நன்றி: தரன் சிறி முகநூற் பக்கம் https://www.facebook.com/tharan.sri.9279