உலகம் கொரோனாப் பெருந்தொற்றில் மூழ்கிக் கிடந்த காலகட்டத்தில் , 1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், கனடாவிலும், இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமையம் ஆகும். இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, ஆரம்பக் குழந்தைக் கல்வி எனப் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருவதுடன், கடந்த மூன்று வருடங்களாகப் பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை, ஏப்ரில் 22, 2023 அன்று ஓராயம் அமையம் 'செல்நெறியும் பகுப்பாய்வும்' என்னும் தலைப்பில் மெய்நிகர்க் கலந்துரையாடலொன்றினை நடத்தியிருந்தது. இதில் கடந்த மூன்று வருடங்களாக இயங்கிவரும் ஓராயம் அமையம் தன் கடந்த கால, நிகழ்கால, எதிர்காலத் திட்டங்கள் பற்றி உரையாடியது. இந்நிகழ்வில் முன்பள்ளிக் கல்வி மேம்பாடு, பாடசாலை மற்றும் வீட்டுத்தோட்டங்கள், கிராமியக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுகவாழ்வு ஆகிய நான்கு விடயங்களையொட்டிக் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் இத்துறைகளைச் சார்ந்த ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் பங்குபற்றியிருந்தார்கள்.
ஒராயம் அமைப்பு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். இணையத்தளத்துக்கும் சென்று பாருங்கள். ஒராயம் அமைப்பின் இணையத்தளம்: https://www.oraayam.org நிதிப் பங்களிக்க விரும்பினால் PayPal மூலமும் நீங்கள் பங்களிக்க முடியும். அவ்விதம் பங்களிக்க விரும்பினால் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரியைப் பாவியுங்கள். மேலுள்ள மின்னஞ்சலுக்கு e-transfer மூலமும் நீங்கள் நிதியளிக்க முடியும், மேலும் எவ்வெவ்வகைகளில் பங்களிக்க முடியும் என்பதை அறிய விரும்பும் எவரும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ''செல்நெறியும் பகுப்பாய்வும்' என்னும் தலைப்பில் நடத்திய மெய்நிகர்க் கலந்துரையாடலுக்கான யூ டியூப் காணொளிக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=Q-wFb_9CPi0