லெ.லந்தாவு, யூ.ரூமர் என்னுமிருவர் எழுதிய ,சார்பியல் த்த்துவத்தின் முக்கிய அம்சமான சார்புத்தன்மையைப்பற்றிய , மிகவும் எளிமையாகச் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும வகையில் எழுதப்பட்டுள்ள நூல் 'சார்பியல் தத்துவம் என்பது என்ன?' என்னும் இந்நூல். இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ரா.கிருஷ்னையா.
சார்பியல் தத்துவம் சிறப்புச் சார்பியல் தத்துவம், பொதுச் சார்பியல் தத்துவம், வெளி, நேரமாம் சார்பானவை, காலவெளி ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதது, புவியீர்ப்பு என்பது காலவெளியில் பொருளொன்றின் திணிவு ஏற்படுத்தும் கேத்திரகணித விளைவு போன்ற சார்பியல் தத்துவத்தின் முக்கிய அம்சங்களை இந்நூல் கவனத்தில் எடுக்காதது துரதிருஷ்ட்டமானது. அவற்றையும் உள்ளடக்கியிருந்தால் இந்நூல் இன்னும் சிறப்புடையதாகவிருந்திருக்கும்.
இருந்தாலும் மேலோட்டமாக அதே சமயம் எளிமையாகச் சார்பியல் தத்துவம் கூறும் சார்புத்தன்மையைப்பற்றி நூல் சாதாரண பொதுமக்களுக்கு விபரிக்கின்றது. வாசகர்கள் சாதாரணப் பொதுமக்கள் என்பதால் நூலாசிரியர்கள் சார்பியல் தத்துவத்தின் அடிப்படை அம்சங்களான, மேலே நான் குறிப்பிட்டவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.
நூலின் தொடக்கத்தில் வரும் பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது. அதற்குக் காரணம் இதனைக் கூறியவர்தான்.
"..ஐயப்பட்டுக்கு இடமின்றி எப்படி இயந்திரவியலானது மெதுவான, மெய்யான இயக்கங்களது 'நொடிப் படப்பிடிப்பய்' இருந்ததோ, அதே போல் புதிய பெளதிகவியல் காவிய அளவிலான பிரம்மாண்ட வேகமுடைய மெய்யான இயக்கங்களின் நொடிப் படப்பிடிப்பாய் இருக்கிறது.... பருப்பொருளின் கட்டமைப்பையும் அதன் இயக்க வடிவங்களையும் பறறிய நமது அறிவு மாறும் தன்மையதாய் இருப்பதானது புற உலகின் எதார்த்த மெய்மையைப பொய் யென எப்படி நிரூபிக்கவில்லையோ, அதே போல் விசும்பையும் காலத்தையும் பற்றிய மானுடக் கருத்தோட்டங்கள் மாரும் தன்மையானவாய் இருப்பதானது எதார்த்த மெய்மையைப் பொய்யென நிரூபித்து விடவில்லை...."
இவ்வாறு கூறியிருபபவர் நவீன ருஷ்யாவின் தந்தையான வி.இ.லெனின். ருஷ்யாவில் அக்டோபர் புரட்சியினை நடத்திய அரசியல் தலைவன் அர்சியலுடன் மட்டுமின்றி, பொருளியல், சமூகவியல், நவீன பெளதிகவியல் என்று எல்லாவற்றிலும் கவனத்தைக் குவித்த பெருந் தலைவனாக இருந்திருக்கின்றான்! அதனால்தான் அவனது உடலை இன்னும் கண்ணாடிப்பெட்டியில் பாதுகாத்துப் போற்றி வருகின்றார்கள் ருஷ்ய மக்கள்.
நூல் இணையக் காப்பகத்திலுள்ளது. இதனை வாசிக்க