அண்மையில் பொலனறுவைக்குச் சென்றிருந்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அங்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த (2019) 'பண்டைத் தொழில்நுட்ப அருங்காட்சியக'த்துக்குச் (Ancient Technology Museum) சென்றிருக்கின்றார். அங்கு சேகரிக்கப்பட்டிருந்த , சோழர்களின் காலத்தில் , பொலனறுவை இலங்கையின் இராஜதானியாக விளங்கிய சமயத்தில் கட்டப்பட்ட வானவன் மாதேவி ஈஸ்வரமென்றழைக்கப்படும் சைவ ஆலயத்தின் மாதிரி, மற்றும் அந்த ஆலயத்திலிருந்த நடராஜர், பார்வதி, அப்பர் , பிள்ளையார் சிலைகள் ஆகியவற்றைப் படமெடுத்து அனுப்பியிருந்தார்.அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
- இரண்டாம் சிவாலயமென அழைக்கப்படும் பொலனறுவை வானவன் மாதேவி ஈஸ்வரம் ஆலயத்திலிருந்த நடராஜர் சிற்பம். தற்போது பொலனறுவையிலுள்ள 'பண்டைத்தொழில் நுட்ப அருங்காட்சியக'த்திலுள்ளது. -
இந்த வானவன் மாதேவி ஈஸ்வரம் ஆலயம் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் , அவனது அன்னை வானவன் மாதேவி நினைவாகக் கட்டப்பட்டதாக அறிகின்றேன். இவர்தான் பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவையுடன் கூட வரும் வானதி. இராசராச சோழனின் மனைவி.
- இரண்டாம் சிவாலயமென அழைக்கப்படும் பொலனறுவை வானவன் மாதேவி ஈஸ்வரம் ஆலயத்திலிருந்த பார்வதி சிற்பம். தற்போது பொலனறுவையிலுள்ள 'பண்டைத்தொழில் நுட்ப அருங்காட்சியக'த்திலுள்ளது. -
சோழர் காலத்தில் பத்து சிவன் கோயில்கள், ஐந்து விஷ்ணு கோயில்கள், காளி கோயிலொன்று எனப் பல ஆலயங்கள் பொலனறுவையில் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் வானவன் மாதேவி ஈஸ்வரம் (இரண்டாவது சிவாலயம் என்றழைக்கப்படுகின்றது) மட்டுமே இன்றுவரை முழுமையாகப் பேணப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது. ஏனையவற்றின் அழிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன.
- இரண்டாம் சிவாலயமென அழைக்கப்படும் பொலனறுவை வானவன் மாதேவி ஈஸ்வரம் ஆலயத்திலிருந்த அப்பர் (நாவுக்கரசர்) சிற்பம். தற்போது பொலனறுவையிலுள்ள 'பண்டைத்தொழில் நுட்ப அருங்காட்சியக'த்திலுள்ளது. -
புகைப்படங்களை அனுப்பி வைத்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அவர்களுக்கு நன்றி.
- இரண்டாம் சிவாலயமென அழைக்கப்படும் பொலனறுவை வானவன் மாதேவி ஈஸ்வரம் ஆலயத்தின் மாதிரி. தற்போது பொலனறுவையிலுள்ள 'பண்டைத்தொழில் நுட்ப அருங்காட்சியக'த்திலுள்ளது. -
பொலனறுவை 'பண்டைத் தொழில்நுட்ப அருங்காட்சியகம்' - https://ancienttechnologymuseum.gov.lk/gallery.php
- புகைப்படங்களை அனுப்பி வைத்த எழுத்தாளர் காத்யானா அமரசிங்க. -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.