சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனத்தினர் எழுத்தாளர் மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருந்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை' நூலின் நான்கு பிரதிகளைத் தபால் மூலம் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முடிந்தவரையில் கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன். சிறப்பானதொரு கவிதைத்தொகுதியினைத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ள சாகித்திய அகாதெமியினருக்கும், தொகுத்த எழுத்தாளர்
மாலனுக்கும், தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் .
தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:
1. கோகுலக் கண்ணன் - அகராதியில் விழுந்த குழந்தை, ஒளியில் குழந்தை
3. வேதம் புதிது கண்ணன் - வீடுபேறு, மணம்
4. கவிநயா - கைப்பைக் கனவுகள்
1. ஆழியாள் - உப்பு, குமாரத்தி
1. நா.சபேசன் - நான் காத்திருக்கிறேன்
3. நவஜோதி ஜோகரட்னம் - சதா மெளனம், வயது வந்தாலென்ன
1. நுஃமான் - பிணமலைப் பிரசங்கம், துப்பாக்கி பற்றிய கனவு
2. அனார் - இரண்டு பெண்கள்
4. தீபச்செல்வன் - ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்
5. எம்.ரிஷான் ஷெரீப் - ஆட்டுக்குட்டிகளின் தேவதை
ஐக்கிய அரபு அமீரகம் - அபுதாபி
1. செல்வராஜன் ஜெகதீசன் - சில
2. முபாரக் முகமது - காதற் கடிதம்
ஐக்கிய அரபு அமீரகம் - கத்தார்
ஐக்கிய அரபு அமீரகம் - துபை
1. அய்யனார் - சிலிர்ப்பு, முப்பத்தைந்து டிகிரி விடியல்
2. அன்பாதவன் - மாற்றம், அமைப்பு
3. நாகப்பன் - ஆரஞ்சு மிட்டாய்
4. ஜெஸிலா பானு - குறையேதுமில்லை, விடியல்
ஐக்கிய அரபு அமீரகம் - ஷார்ஜா
1. சென்ஷி - இலையுதிர் காட்டு மரங்கள்
1. சேரன் - மழைக் காலமும் கூலிப்பெண்களும், மழைநாள்
2. கீதா சுகுமாரன் - உரையாடல்
3. வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் காலம்
1.அபுல் கலாம் ஆஸாத் - இரண்டும்
2. ரசிகவ் ஞானியார் - அப்பா இல்லாத ரம்சான்
1. க.து.மு.இக்பால் - தண்ணீர்
2. லதா - மேய்ப்பன், மண்டோதரியை எரித்த தீயின் சொச்சம்
3. சித்துராஜ் பொன்ராஜ் - விண்மீன் நகரம்
4. மாதங்கி - விடாத மழை என்றேன்
6. சுபா செந்தில்குமார் - கறுப்பு வெள்ளை
8. சுஜா செல்லப்பன் - துக்கம் புகுந்த வீடு
9. இராம. வயிரவன் -யாரகினும் மனிதன்
10. ஹரிணி - நேரம் எழுதும் சிறுகதைகள்
11. பாரதி மூர்த்தியப்பன் - பாண்டி மகள்
12. அழகுநிலா - எழுத்தாளனோடு சந்திப்பு
2. மணிகண்டன் -காத்திருக்கும் கோப்பைகள்
1. சித்ரா சிவகுமார் - புரண்டு படுத்த அன்னை
1. ராஜகவி ராகில் -சைக்கிள் என் சகோதரன்
1. இளவாலை விஜயேந்திரன் -சொல்லப்படாத ஒரு செய்தி
1. தேவ அபிரா - இரவு வானம்
1. நாகரத்தினம் கிருஷ்ணா - மழையின் கால்கள், மீண்டும் மீளும் அந்தத் தெரு
1. கோ.புண்ணியவான் - யாருமற்றவர்களின் மறைவு
2. ந. பச்சை பாலன் - வீடு திரும்புதல்
4. குழலி - இனியவளின் குறிப்பு
5.. கே.பாலமுருகன் - கடைசிப் பேரூந்து
1. கோ.வேணுகோபாலன் - நான் பிறந்த பொன்னாடு - மியான்மர்
2. இரா. உலகநாதன் - கிழிகின்ற காகிதம் போல்
3. சாந்தி இராசேந்திரன் - என் கவிதை
1. காருண்யன் கொன்ஃபூஸியஸ் - வாழாத காலங்கள்
2. மாலினி - என்னை மொழிபெயர்த்தல்
**************************************
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள எனது கவிதை கீழே:
கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவொளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ, நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
வெளியும், கதியும், ஈர்ப்பும்
ஒரு திசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?
இரவி, இச் சுடர் இவையெல்லாம்
முயன்று கொண்டேயிருப்பேன்.
முயன்று கொண்டேயிருப்பேன்.
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்