'பதிவுகள்' வாசகர்களுடன் மகிழ்ச்சியான தகவலொன்றினைப் பகிர்ந்துகொள்கின்றேன். விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரியும் வே.மணிகண்டன் அவர்கள் அவரது மாணவிகள் எனது படைப்புகளை மையமாக வைத்து 'வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள்' என்னும் தலைப்பிலும், 'பதிவுகள்' இதழ் கவிதைகளை மையமாக வைத்து ''இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள்' என்னும் தலைப்பிலும் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ள விபரத்தை அறியத்தந்திருந்தார். அவருக்கு இதற்காக நன்றி. அவர் இது பற்றி அனுப்பிய மின்னஞ்சல் ஒரு பதிவுக்காகக் கீழே பிரசுரமாகின்றது.
-- ஐயா... வணக்கம், நான் வே.மணிகண்டன் , புதுச்சேரி) தமிழ் நாட்டில், விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணிபுரிகின்றேன். எனது மேற்பார்வையில் வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள், இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள் ஆகிய ஆய்வேடுகள் எனது மாணவிகளால் உருவாக்கப்பட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்(2016- 2017) சமர்பிக்கப்பட்டு இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். தங்களுடைய ஒத்துழைப்பிற்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள் என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வேட்டில் 'பதிவுகள்' இதழ் கவிதைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை தக்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆய்வுக்குள்ளாகிய படைப்புகள் உள்ளடக்கியுள்ள விபரங்களும் ஒரு பதிவுக்காகக் கீழே தரப்படுகின்றன.
1. வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள்
நெறியாளர் : முனைவர் வே.மணிகண்டன்
ஆய்வாளர் பெயர் : க. அங்கம்மா
இயல்பகுப்பு
இயல் ஒன்று : புலம்பெயர்ந்தோர் இலக்கியம்-ஓர் அறிமுகம்
இயல் இரண்டு : வ.ந. கிரிதரனின் படைப்புலகம்
இயல் மூன்று : வ.ந.கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கிய பதிவுகள்
இயல் நான்கு : வ.ந.கிரிதரனின் நாவல்களில் தாயக நினைவுகள்
இயல் ஐந்து : வ.ந.கிரிதரனின் நாவல்களில் அயலகப்பதிவுகள்
2. இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள்
நெறியாளர் : முனைவர் வே.மணிகண்டன்
ஆய்வாளர் பெயர் : ப. குமுதா
இயல் பகுப்பு
இயல் ஒன்று : இணையம், இணையத்தமிழ் – ஓர் அறிமுகம்
இயல் இரண்டு : இணையத்தமிழ் இதழ்கள்
இயல் மூன்று : இணையத்தமிழ் இதழ்களின் படைப்பாக்க முயற்சிகள்
இயல் நான்கு : இணையத்தமிழ் இதழ்களின் கவிதை இலக்கிய போக்குகள்
இயல் ஐந்து : இணையத்தமிழ் இதழ்களில் கவிதை திறனாய்வுகள்
தங்கள் உண்மையுள்ள,
வே.மணிகண்டன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.