இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )

- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


1. திருகோணமலையில் இராணுவம் செய்த அதர்மக் கொலைகள்.

வாழ வேண்டிய ஐந்து இளம் உயிர்கள் 2.01.06ல் திருகோணமலையில் இலங்கை இராணுவத்தால் பலியெடுக்கப் பட்டுவிட்டன.சண்முகராசா கஜேந்திரன்,லோகிதராஜா றோஹன்,தங்கத்துரை சிவானந்தராசா,யோகராசா ஹேமச்சந்திரன்,மனோஹரன் ராஜிகர் என்ற இளம் குருத்துக்கள், எத்தனையோ கனவுகளைத்தாங்கிக் கொண்டு எதிர்காலத்தை எதிர்நோக்கியவர்கள்,இலங்கை இராணுவத்தின் அதர்மத்தால் அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களை இழந்து துயர்படும் தாய் தந்தையர்கள் , உற்றார் உறவினர், ஊரார், ஆசிரியர்கள், ஒன்றாய்ப் படித்த சினேகிதர்களுக்கு எனது மனம் கனிந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்புக்கு எனது அனுதாப வார்த்தைகள் எள்ளளவும் ஒவ்வாது.

நானும் ஒரு தாய். எங்களை மண்ணுக்குத் தியாகம் கொடுக்கவேண்டிய மகன்களை, இந்த இளம் வயதில் நாங்களே மண்ணுக்குத் தானம் செய்வதின் கொடுமையைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது. எங்கள் வயிற்றில் தாங்கி,எங்கள் வாழ்க்கையையே அவர்களுக்குத் தியாகம் செய்த தாயின் துயரை வெற்று வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது.  பால் கொடுத்து, நிலவுகாட்டி உணவு கொடுத்து, எனது மகன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தனது சமுதாயத்திற்கும் எவ்வளவோ நன்மை செய்வான் என்ற ஒவ்வொரு தாயின் கற்பனையையும் இப்படி அநியாயமான கொலைகளால் அழித்த இராணுவதையும் அந்த இராணுவத்தை தூண்டிவிடும் இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தற்போது, தமிழ் மக்களின் உயிர்கள் வெறும் ஒரு சிறு பூச்சியின் உயிரைவிட மலிவாக, அற்பமாக அழிக்கப் பாடு வருகின்றன. இதைத் தடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் எத்தனை தமிழர்கள் இலங்கையில் வாழப்போகிறார்கள்?

இலங்கைக் கடற்படைக்குக் குண்டு எறியப் போனபோது இந்த இளைஞர்கள் கடற்படையினரின் தாக்குதலால் இறந்ததது என்று ஒரு செய்தியும் , கடற்கரையில் காற்றாட நின்ற இளைஞர்களைக் கடற் படை சுட்டுத் தள்ளியதாக இன்னொரு செய்தியும் சொல்கிறது. அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதைபற்றிய அபிப்பிராய பேதங்களும் அதனாற் சிலரடையப் போகும் அரசியல் இலாபங்களையும் பேசுவதை விட, இதச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நீதிக்கு முன் நிறுத்துவது மனித உரிமைக்குப் போராடும் ஒவ்வொருத்தரின் கடமையாகும். தமிழ் இளைஞர்களின் உயிர்கள் யாருடையதும் பொதுச்சொத்தல்ல. தாய் தகப்பன் பெற்று வளர்த்த இந்தச் செல்வங்களையழிக்க யாருக்கும் உரிமை கிடையாது. தமிழ்ப்பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகளை விசாரிக்க அகில உலக மனித உரிமைச் சங்கக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் குரல் கொடுப்பதுசிலங்கையிலும் வெளியிலும் வாழும் அத்தனை தமிழரின் மிக மிக முக்கியவிடயமாகும். ஏன் இந்தக் கொலைகள் தொடர்கின்றன, இதன் பின்னணிகள் என்ன? இவையால் யாருக்கு இலாபம்?, இதைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்பதற்கான விடயங்களை இலங்கையில் வாழும் தமிழர்கள் முன்னெடுப்பது அத்தியாவசியமானவை. இலங்கைத்தமிழர் சகல உரிமைகளுடனும் வாழத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க சமயத் தலைவர்கள், பாராளுமன்றவாதிகள், பொதுமக்கள், பெண்கள் அமைப்புக்கள்,மாணவர்கள் குரல் கொடுத்தால் கட்டாயம் மாற்றங்கள் வரும். தமிழ்ப்பகுதிகளில் நடக்கும் கொலைகளையும். பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியக் கொடுமைகளையும் சிங்களப் பொதுமக்கள் மத்தியிற் சொல்லவேண்டும். இலங்கை இராணுவத்தின் அடாவடித்தனத்தனங்களை உடனடியாக நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதுவரையும் நடக்கும் கொலைகளால் இறந்தொழிந்த இளைஞர்கள் எங்கள் எதிர்காலச் செல்வங்கள். ஆசிரியர்களாக, கல்விமான்களாக, வைத்தியர்கலாள, விஞ்ஞானிகளாக வருவதற்கு அவர்கள் கனவு கண்டிருக்கலாம். உயர்ந்த படிப்புடன் ஒருகாலத்தில் இந்தச் சமூகத்திற்கு எத்தனையோ நன்மைகள் செய்திருக்கலாம். அவர்களின் கனவும் அவர்களைப் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கலும் விழலுக்கிறைத்த நீராகி விட்டது.

இந்த ஐந்து மாணவர்கள் மட்டுமல்லாது எத்தனையோ மாற்றுக்கருத்துக் கொண்டோர்கள் ஒவ்வொரு நாளும் அநியாய முறையில் மரணத்தைத் தழுவுகிறார்கள். மாணவர்களின் கொலையைக்கண்டிக்கும் அத்தனைபேரும் அநியாயமாகப் பறிக்கப்படும் அத்தனை தமிழ் உயிகளுக்காகவும் நியாயம் கேட்டுக் குரல் எழுப்ப வேண்டும். இன்னும் இந்தக் கொலைகளை தொடர வேண்டாம் என்று இந்தக் கொலைகளிற் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்கவேண்டும். கொலைகள் மூலம் எந்த விடயத்திற்கும் முடிவு வராது என்பதை மனதிற் கொள்ளவும். உலக வரலாறுகள், விடுதலைப் போராட்ட வரலாறுகள் என்பனவற்றைப் படித்தவர்கள் இதை உணர்வார்கள். இந்தத் தமிழ் இளைஞர்கள், மாற்றுக்கருதுடையோர் என்ற பெயரில் கொலை செய்யப்படுவோர்கள் அத்தனை பேரும் தனிப்பட்ட மனிதர்களல்லர். பெற்றோர், குடும்பம், பாடசாலை, சினேகிதர்கள், ஆசிரியர்கள் என்ற பரந்த உலகின் அங்கத்தவர்கள். இவர்களையிழந்த பாதிப்பு அத்தனைபேரையும் பாதிக்கும். இனியும் இப்படித் தமிழ் உயிர்கள் அழியாமற் தடுப்பது துயர் அனுபவம் கொண்டவர்களின் ஒரு புண்ணிய பணியாயிருக்கவேண்டும். ஒரு உயிரை அழிப்பதற்கு ஒரு கணம் போதும், ஆனால் ஒரு நல்ல மனிதனைப்படைக்கச் சில சகாப்தங்கள் தேவை.

பதிவுகள் - பெப்ருவரி 2006 இதழ் 74 -


2.விளிம்பு நிலை மக்களின் குரலாக லண்டனில் ஒலிக்கும் 33வது இலக்கிய சந்திப்பு!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்'' அரசியல்வாதிகளாற் பாவிக்கப் படும் அரசியற்கருத்துக்கள் ஒரு கலையுடன் (கலைஞருடன்) உள்ளிடும் துணிவற்றன. ஏனென்றால் இது வரைகாலமும் நடந்த சம்பவங்களின் சாட்சியங்களை முன்வைத்துப் பார்க்கும்போது, அரசியவாதிகளுக்கு 'உண்மை' என்ற விடயத்தில் அக்கறை கிடையாது. தங்கள் அதிகாரத்தை 'எப்படியும்' தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். உண்மைகளைத் தெரிந்து கொள்ளாத அறியாமையாக்குள் பொதுமக்களை வைத்திருப்பது அவர்களின் (ஆதிக்கவாதிகளின்) அதிகாரத்தை தக்கவைத்திருப்பதற்கு இன்றியமையாத விடயமாகும். அரசியல் வாதிகளின் பொய்களை மெய்யென நம்பிக்கொண்டு, தங்களின் வாழ்க்கையே உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என்பது தெரியாமலேயே பெரும்பாலான பொதுமக்கள் வாழ்கிறார்கள். அரசியல்வாதிகளால் அழகாகப்பின்னிய பொய்மை என்ற வலைக்குள் நாங்கள் (பொது மக்கள்), அகப்பட்டுக்கொண்டு அரசு கொடுக்கும் 'கருத்துக்கள்' என்ற ' பொய்ச்சாப்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்''  - ஹறோல்ட் பின்ரர் (2005ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப்பெற்ற இலக்கியப் படைப்பாளி).

சாதாரண மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்கவாதிகளால் சாதாரண மக்களின் சுயசிந்தனை வளர்ச்சிக்கான காரணிகள் தடுக்கப்படுகின்றன. சுயசிந்தனைப் படைப்புக்கள் தடுக்கப்படுகின்றன. சுயசிந்தனைப் படைப்பாளிகள் அடக்கப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள். சிலர் கொல்லப்படுகின்றனர். இலங்கையிற் பல தமிழ்ப் படைப்பாளிகளுக்கு என்ன நடந்தது என்று எங்கள் பலருக்குத் தெரியும்.  பல உதாரணங்கள் உலகிற் பலபாகங்களிலுமுள்ளன.

1970ம் ஆண்டின் இலக்கியப்பரிசைப் பெற்ற அலெஷ்சாண்டர் சொல்சொனிவிச் அன்று சோவியத் யூனியனின் ஆதிக்கத்திலிருந்த கொயூனிஸ்டுகளால், தங்களின் கொள்கைக்களுக்குச் சவாலாக எழுதிய குற்றத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சிணையைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிக்கொணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், இந்திய அரசின் பலவிதமான நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கவேண்டியிருப்பது இன்று நடந்து கொண்டிருக்கிறது.

அடக்கப்படுவதாலும் சிறையிலடைக்கப்படுவதாலும், கொலை செய்யப்படுவதாலும் சுதந்திர சிந்தனைகள் அழிக்கப்படுவதில்லை. ஒரு பேனை உடைக்கப்பட்டால் அந்த இடத்தை எடுக்க ஆயிரம் பேனாக்கள் உருவாகும். துப்பாக்கியின் குண்டுகளைவிடச் சத்தியம் என்ற மையால், தர்மத்தின் கருத்துக்களைக் கோர்வைகளாக்கி இலக்கியம் படைப்பவர்கள் உலகம் இருக்கும் வரைக்கும் மறக்கப்படமாட்டார்கள்.

உண்மையைச் சொன்ன குற்றத்தால் விஷம் கொடுத்துக் கொலைசெய்யப்பட சாக்ரட்டீசைச் சரித்திர வரலாற்று மூலம் தெரிந்தவர்கள் நாங்கள். உண்மையைச் சொல்வதும் அதைப் பொதுமக்கள் உணரும் விதத்தில் தெளிவாகச் சொல்வதும், விளிம்பு நிலை மக்கள்பற்றியும் அவர்களின் விடுதலை பற்றியும் எழுதுபவர்களினதும் முக்கிய கடமையாகும்.மனித உரிமைபற்றி அக்கறை கொண்ட எந்தக் கலைஞனும் தனது ஆக்கத்தை மனித மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கத் தயங்கமாட்டான்.

இன்று இலங்கையில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு மெளனமாக இருப்பது, அங்கு நடக்கும் கொடுமைகளுக்குச் சம்மதம் தெரிவிப்பதற்குச் சமமாகும். அரச பயங்கரவாதத்திற்கும் ஆயுதம்தாங்கியோரின் அதிகாரத்திலும் மனித உணர்வுகள், ஊனமாகப்பட்டிருக்கின்றன- ஊமையாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப்பகுதிகளில் அமுலில் இருக்கும் அடக்கு முறைகளாற் தமிழ் மக்கள்,பல்விளக்கவும் பசியாற உணவுண்ணவும் மட்டும் வாய்திறக்கிறார்கள். தன்னுணர்வை வெளிப்படுத்தும் கவிதைபாடுபவனின் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. இயற்கையின் அழகை ரசித்துக் கவிபைடைக்கும் மெல்லுணர்வுகள் வலிய துப்பாக்கி முனைகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தாலாட்டுப்பாடும் தமிழ்த்தாய், தான் பெற்ற மகனின் பிணம்பார்த்துக் கதறுகிறாள். மணப்பெண்ணாக வேண்டிய இளம்பெண்கள் பிணக்குவியல்களாக மாறுகிறார்கள். காதல் நினவுவரும் வயதில் கொலையுணர்வுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது . அடுத்த மனிதனில் அன்பும் ,நேசமும் வைப்பது ' தேசத் துரோகமாகத்' திரிபு படுத்தப்படுகிறது. ஒரு தனி மனிதன் இருப்பது, நிற்பது, நடப்பது, அழுவது, சிரிப்பது, போன்ற சாதாரண மனித இயல்புகள் அசாதாரணமாக்கப்பட்டிருக்கின்றன.

மனித உரிமைகளற்ற விளிம்பு நிலை மனிதர்களாக ஈழத் தமிழ்மக்கள் அலைகிறார்கள். விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் குழுவில், அகதிகளாக அலையும் மக்கள்,அடக்கப்பட்ட பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள்,சாதி, சமயத்தின் பெயரில் ஓரம்கட்டப்படுவோர், குரல் கொடுக்க வழியற்ற விதவைகள்,குடும்பத்தின் அன்பும் ஆதரவுமின்றி அவதிப்படும் வயது வந்த முதியவர்கள் என்று பல தரப்பட்டோர் அடங்குவர். விளிம்பு மனிதர்களுக்குக் குரல் கொடுக்க,ஈழத்தமிழ் இலக்கிய உலகில், ஈழத்தின் வடக்கில் இருந்த சாதிக்கொடுமையை எதிர்த்து எழுதிப் புதிய சிந்தனைப் பிரவேசத்திற்கு மூலகாரணிகளாக இருந்த டானியல் போன்றவர்களுக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும்.அவரைத் தொடர்ந்து இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் 'புதிய சிந்தனைகள்' தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

பிறந்த நாட்டிலேயே அனாதைகளாக்கப்பட்ட எங்கள் தமிழரின் குரலைப் புலம் பெயர்ந்த இடங்களில் ஒலிக்கப்பண்ணிய சிறு பத்திரிகைகள் இலக்கியச் சந்திப்பு நடக்க மூல காரணிகளாக இ¢ருந்தவர்களாகும். இலங்கைச் சிங்களப் பேரினத்தின் அடக்கு முறைக்கொடுமைகளாற் புலம் பெயர்ந்த தமிழ்ப்படைபாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் சேர்ந்து பேர்ண் நகரிற் 1988ல் தொடங்கிய இலாக்கியச் சந்திப்பு பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி தனது 33வது சந்திப்பை லண்டனில் தொடர்கிறது. இலக்கியப் படைப்பாளிகள், ஆர்வலர்கள் சேர்ந்து தொடங்கிய இலக்கியசந்திப்பு இன்று மனித உரிமைக்குரல் கொடுக்கும் ஒரு சந்திப்பாக வளர்ந்த்திருக்கிறது.

லண்டனில் நடக்கும் சந்திப்பு 'ஈழத்தமிழ்ப்படைப்புக்களும் மனித உரிமைகளும்'' பற்றிய விடயங்களை முன்னெடுக்கிறது. இலங்கை, ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், கனடா,நோர்வே இங்கிலாந்து, அமெரிக்கா என்று எட்டு நாடுகளிலிருந்து படைப்பாளிகளும் பார்வையாளர்களும் பங்கு பற்றுகிறார்கள். பலர் இதுவரையும் நடந்த இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்றவர்கள், பலருக்கு இதுவே முதற்தடவையாகவிருக்கும். இன்று இங்கு நடக்கும் சந்திப்பு சிந்தனைக்கு விருந்தாகவும் சினேகிதங்களுக்குப் பாலமாகவும் இருக்கவேண்டும். கருத்துரையாடல்கள் காத்திரமாகவிருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் முன்னெடுக்கப்படவேண்டும். விளிம்பு நிலை மக்களுக்காக நடக்கும் இந்தச்சந்திப்பில் புதிய கருத்துக்களும் கலந்துரையாடல்களும் இடம்பெறவேண்டும்.

புலம் பெயர்ந்த நாடுகளிலும் தாயகத்தில் எங்கள் மக்களின் நடக்கும், அரசியல் பொருளாதார வாழ்க்கை மாற்றங்களைப் பிரதிபலிக்கும் சந்திப்பாக இச்சந்த்திப்பு அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பை நடத்த அன்புள்ள பல இலக்கிய சினேகிதர்கள் மனத்தாலும் பணத்தாலும் உதவிசெய்தார்கள்.
ஈழத்தில் எங்கள் உறவுகள் படும் துயர்களைச் சுட்டிக்காட்டி, அந்தத் துயர்கள் தொடராதிருக்கவும், அங்கு நடக்கும் பலதரப்பட்ட அடக்கு முறைகளும் நிறுத்தப்படவேண்டும் என்றும் சில தீர்மானங்கள் இச்சந்திப்பில் முன்னெடுக்கவேண்டும். எத்தனையோ தடவைகளில் எத்தனையோவிதமான சோதனைகளைக் கண்ட இலக்கியச்சந்திப்பு இன்னும் பல்லாண்டுகள் தொடரவேண்டும், தொடர்ந்து பணிசெய்யவேண்டும்.

பதிவுகள் - அக்டோபர் 2006 இதழ் 82
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


3. மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார். பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது. மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்களால் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.

அப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.

-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும்.
-அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும்.
-தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.
- றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள்(Legal assistance) கொடுக்கப்படவில்லை.
- றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Chocking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
- கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.
- இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் ( அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை.

மூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக்குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.

அன்னிய நாடுகளில் கொடுமைசெய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். 500.000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள்.தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச்செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப்பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை. அதாவது வேலைக்குப்பொகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப்போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப்போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை.இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.

இந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது' வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப்பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப்பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது. இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப்பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது. நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது.

றிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் ( 33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும்( 04.02.1988). ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982)படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம். வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப் பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள்.

இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும். இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும். றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும். இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப்பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல.

ஒரு இளம் பெண்(பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக்குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒருமாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள். அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன்.

குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.

இறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச் செய்வோம். காலம் தாழ்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி எ இமெயில் மூலமாகவோ fபக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.

தயவு செய்து,உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.

Father of the dead child,(re Rizana Nafeek)
Mr. Naif Jiziyan Khalaf Al Otaibi
c/o, Sri Lankan Embassy,
Po Box,94360
Riyadh-11693
Soudi Arabia

Fax.00 9661 460 8846, e mail--. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும். ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.

பதிவுகள் - யூலை 2007 இதழ் 91


4. மேடையேறும் பிற்போற்குவாதங்கள்!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )மேடையேறும் நிகழ்ச்சிகள் என்பன, ஒரு சமுதாய வளர்ச்சியின் கலைப் பிரதி பலிப்புகள். அவைகள்,அங்கீகாரம் பற்ற ,தரமான கலைப்படைப்புகளாகக் கருதப் படுபவை.  மேடையேற்றபடும் நிகழ்ச்சிகளின் கருத்துக்கள் பல்லாயிரம் மக்களை நேரடியாகச் சிந்திக்கப் பண்ணுபவை.கலைகளின் அடித்தளம் தனி மனித சிந்தனை. அச்சிந்தனையை, அவன் சார்ந்திருக்கும் சமுதாயத்தின்,கல்வி வளர்ச்சி,பண்பாடு, நாகரீக வரைமுறைகள் உருவாக்குகின்றன. ஜனநாயதிற்கும்,மனித உரிமைகளுக்கும் மதிப்புக் கொடுக்கும் நாடுகளில்,எதைப் பகிரங்கமாக உறவாடலாம், விவாதிக்கலாம், மேடையேற்றலாம் என்பதற்க்குச் சட்ட ஒழுங்குகளுமுள்ளன.உதாரணமாக, இங்கிலாந்து நாட்டில்,ஒரு சமுதாயத்தினரை மற்ற சமுதாயத்தோர் தாழ்த்திப் பேசினால், பாட்டுப்பாடினால்,நாடகம் போட்டால், சமுதாய நல்லுறவுச் சட்டத்தை அவமதித்ததாகக் கைது செய்யப் படுவார்கள்.

இதே மாதிரியே,குழந்தைகளை,பெண்களை அவமதிக்கும், சிறுமைப் படுத்தும்,கேலிசெய்யும் எந்த விதமான நிகழ்ச்சிகளும்,மனித உரிமைச் சட்டப்படி மிகவும் தண்டிக்கப்பட வேண்டிய நிகழ்சிகளாகும்.வன்முறையைத்தூண்டும் விடயங்கள் ஒருநாளும் அனுமதிக்கப்படுவதில்லை. அண்மையில் ஒரு தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிக்கும் போயிருந்தபோது, அங்கு அவர்கள் ஒரு மேடை விவாத நிகழ்ச்சியாக எடுத்துக் கொண்ட,பெண்கள் சம்பந்தப் பட்ட ஒரு பட்டிமன்றத்தைப் பார்த்தபோது, இந்த நிகழ்ச்சி,சமத்துவத்தை மிக மிக மதிக்கும் லண்டனிலா இந்தப் பட்டிமன்றம் நடக்கிறது என்ற சந்தேகம் வந்தது.. புலம் பெயர்ந்த தமிழர்களிடையிலும், இலங்கையிற் பெரும்பாலான இடங்களிலும், தமிழ்க் கலைகள்,கலாச்சாரம் என்ற பெயரில் முதன்மைப் படுத்தப் படும் விடயங்கள், பெரும்பான்மையான தமிழர்களின் ஆக்கங்களையோ சிந்தனையையோ பிரதிபலிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட அரசியல் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்புகளாகவும்,அந்த அரசியல் கொள்கைகளை மேற்கு நாடுகளில் பரப்புவர்களுக்குச் சந்தோசம் கொடுப்பதற்காகவும் நடத்தப் படுகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில்,இன,மொழி,சமயவெறி பிடித்தவர்களால் முன்னெடுக்கப் படும் தீவிரமான கலாச்சாரப் பிரசாரங்கள் ஒரு சமுதாயத்தின் இளம் தலைமுறையினரை எங்கே கொண்டுசெல்லும் என்பதைக் கடந்த 7.7,05ல் லண்டனில் நடந்த குண்டு வெடிப்புகளிலிருந்து தமிழ்ச் சமுதாயம் உணரவேண்டும்.

மேற்கு நாடுகளிலுள்ள் தமிழ் ஊடகங்கள் யார் கைகளிலிருக்கிறது,என்ன விதமான பிரசாரங்களை செய்கின்றன என்பதை அறிவுள்ள தமிழ் மக்கள் புரிவார்கள்.இன்று மேடையேறும் இந்தப் " பண்டிதர்கள்","புலவர்கள்", "கலைஞர்கள்" "பிரமுகர்கள்",ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் பெருமைப்படுத்தப் படுபவர்கள்.இவர்களின் கருத்துக்கள் தமிழர்கள் உலகின் அற்புதப் பிறவிகள்,உயர்ஞானம் உள்ளவர்கள் என்றிருக்கும், வந்திருக்கும் சபையோரும் வானளாவக் கரகோசம் செய்வார்கள். பாவம் இவர்கள்.கிணத்துத் தவளைகள், வெளியில் வரத்தெரியாதவர்கள் அல்லது வெளியில் வரத் தேவையில்லை என்று நினைப்பவர்கள்.ஒருத்தொருகொருத்தர் போர்த்தும் பட்டுச்சால்வைகளால் பிறந்ததின் பலனைப் பெறுபவர்கள். மேடையேற்றும் விடயங்களைப்பற்றிக் கவலை கிடையாது,மேடையேறிவிடவேண்டும் என்ற துடிப்புத்தான் அதிகமிருக்கிறது.

இசை,இயல், நாடகம், எங்கள் சமுதாயத்தின் இன்றியமையாத கலையம்சங்கள்.கிராமங்களாயிருந்தாலென்ன, நகரங்களாயிருந்தாலென்ன எந்த நாட்டிலும் எல்லா விதமான மக்களாலும் ஏதோ ஒரு விதத்தில் கலைநிகழ்ச்சிகள் எப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். பட்டிமன்றம் என்பது என்கள் கலைப் படைப்புகளிலொன்று. கூத்து,கும்மி,காவடி,சதுராட்டம்,கதாப்பிரசங்கம்,வில்லுப்பாட்டு,போன்ற கிராமியக் கலைகளில் பட்டிமன்றமும் மிக இன்றியமையாத அம்சம். எங்கள் கலைகள் கோயில்களுடனும்,சமய நிகழ்ச்சிகளுடன் ஒன்றிவளர்ந்தவை. கோயில்கள் என்பன,சமயக் கொள்கைகளை வளர்க்கவும்,சமுதாயத்திற்கு நல்வழிகளை சொல்லவும்,புராண, இதிகாசக் கதைகளின் கருத்துகளை மக்களிடம் பரப்பவும், பொழுது போக்குவதற்கும் நடத்தும் நிகழ்சிகளில் இந்தப் பட்டி மன்றங்களும் ஒன்று. இதை நடத்துபவர்கள்,பண்டிதர்கள், புலவர்கள், தர்க்கம் செய்வதில் பெயர்பெற்றவர்கள்,இலக்கியவாதிகள் என்று பலதரப்படுவர்.  நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கும் மக்களை மகிழ்விக்க,இந்தப்பட்டிமன்றத்தைச் சுவாரசியமாக நடத்துவது இதை நடத்துவோரின் திறமைகளிலொன்றென மதிக்கப் பட்டது. அதிகம் படிப்பறிவில்லாத பாமர மக்களுக்குத் தங்களின் இலக்கிய,இதிகாச,புராணங்களைத் தெரிந்த புலமையை, நகைசுவைத் திறமையை, வாக்குவன்மையைக் காட்ட இந்தப்பட்டி மன்றங்கள் உதவின. பொழூது போக்குக்கு இப்படியான நிகழ்ச்சிகளைத்தவிர  வேறொன்றையும் தெரியாத பாமர  சமுதாயமும் பட்டிமன்றங்களை ரசித்தன.
சில நேரங்களில்,இவர்கள் தங்கள்நிகழ்ச்சிகளைச் சுவாரசியமாக்க இரட்டைக் கருத்துக்கள்,சிலேடை வசனங்கள் என்பனவற்றைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்வார்கள். இப்படியான ஒரு நிகழ்ச்சிதான் லண்டனில் அண்மையில் நடந்த பட்டிமன்றமும்.

புலம் பெயர்ந்த தமிழரின் இலவச ரிக்கன்றில் அடிக்கடிப் பல"படித்தவர்கள்" மேற்கு நடுகளுக்கு வருகிறார்கள்.  தாயகங்களிலிருந்து வரும் சில "படித்தவர்களின்" பேச்சைப் பார்த்தால் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர் ஏதோவொரு இருண்ட உலகத்தில் வாழ்வதாகவும், அவர்களுக்குத் தாங்கள் ஆபத் பாந்தவர்களாக தாங்கள் வருவதாகவும் தெரிகிறது. முக்கியமாக,புலம் பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் நிலை பற்றி அண்மையில் வந்திருந்த பட்டி மன்றப் பிரமுகர் சொல்லிய கருத்துக்களும் அவரின் "அரிய" பொன் மொழிகளுக்கு ஒத்தூதிய பிரமுகர்கள், விசிலடிச்சான் குஞ்சுகளைப்பர்க்கும் போது இவ்வளவு பிற்போற்குவாதிகள் எங்கள் சமுதாயத்தில் இருக்கிறார்களா என்ற ஆச்சரியம் வந்தது. வந்திருத்த பெரியாரும் அவரை வரவேற்றழைத்திருந்த பிமுகர்களும், தமிழ்ப் பெண்களின் கற்பு  பற்றி மிகவும் ஆவேசத்துடன் சொற்பொழிவாற்றினார்கள். திருவள்ளுவர் சொன்ன" தெய்வம் தொழாழ்,கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்ற குறளை முன்னெடுத்தார்கள்.

இன்று, சூழல் மாற்றங்களால்,உலகில் வெப்பநிலை கூடிக் கொண்டுவருகிறது. இயற்கையின் சாதாரணங்கள் அசாதாரணமாகி மழையும்,வெள்ளமும்,சூறாவளியும் புயலும் மக்களைத் துயர் பட வைக்கின்றன்றன. எத்தனைத் "தமிழ்க் கற்பவதிகளும்" இயற்கையை மாற்ற முடியாது என்பது இந்தப் பண்டிதர்களாற் புரிந்து கொள்ள முடியாத விடயமா? வந்திருந்த பெரியவர் "உங்கள் கலாச்சாரத்தை, இந்த நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்" என்று பொன்மொழி புரிந்தார்.
ஆங்கிலேயரில் இவருக்குள்ள பரிதாபம் சிரிப்பையுண்டாக்குகிறது.எங்கள் கலாச்சாரத்தில் எதைச் சொல்லிக் கொடுப்பது?  எங்கள் சமுதாயதில் கூடிகொண்டு போகும் வன்முறை பற்றியா?. உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் இன்று பிரித்தானிய-ஜனநாயகமுறைகள், சட்டதிட்டங்கள்தான் நடைமுறயிலிருக்கின்றன. எத்தனை அபிப்பிராய பேதமிருந்தாலும் எதிரிக்கு மரியாதை கொடுப்பது பிரிட்டிஷ் அரசியலமைப்பு. தனக்குப் பிடிக்காத எவரையும் கொலை செய்துவிட்டு நியாயப் படுத்துவது இங்கே நினைத்துப் பார்க்க முடியாத விடயம்.  பிரித்தானியர்களுக்குக் கத்தரிக்காய்க் குழம்பு எப்படிச் செய்யலாம் என்றுதான் சொல்லிக் கொடுக்கலாம் அது தவிர, அவர்களுக்கு நாங்கள்- இலங்கைத் தமிழர்கள் ஏதும் சொல்லிக் கொடுக்கலாம் என்பது சிரிப்புக் குரிய விடயம். ஆங்கிலேயருக்குக்இந்துக் கலாச்சாரம் பற்றித்தெரிந்து கொள்ள விருப்பினால்,அல்லது,யோகாசனமோ, ஆயுள்வேதம் பற்றியோ தெரிந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இந்தியாவுக்குப் போவார்கள்.

இலங்கைதமிழர்களுக்கென்று தனி பட்ட கலை வரலாறு கிடையாது. பரத நாட்டியமும், சினிமாம் படப் பாட்டுகளும் இந்தியாவுக்குச் சொந்தம்.மற்றக் கலைப் படைப்புக்களான. நாடகம், கூத்துகளுக்கும் ஏதொ ஒரு விதத்தில் தென்னிந்தியத் தொடர்பிருக்கும். புலம் பெயர்ந்த மக்களுக்குத் தாங்கள் குடியேறும் நாடுகளிலிருந்து எத்தனையோ விடயங்களைப் படித்துக் கொள்ளலாம், புரிந்து கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அரசாங்க அறிக்கையொன்று, அதிகரித்துக் கொண்டு போகும் ஆசிய நாட்டுப் பெண்களின் மனநலப்பிரச்சினைகள் தவிர்க்கப்படவேண்டிய அவசியம் பற்றி எழுதியிருந்தது. மனநோய்ப் பிரச்சினைகளுகாளாகும் ஆங்கிலப் பெண்களின் விகிதாச்சாரம்  இரண்டு புள்ளிகளாயிருக்கும்போது ஆசிய நாட்டுப் பெண்களையெடுத்துக் கொண்டால் ஆறு புள்ளிகளாயிருக்கின்றன. இலங்கைதமிழ்ப் பெண்களும் இந்த ஆசியப் பெண்கள் வரிசையிற்தான் அடங்குவார்கள்.

புலம் பெயர்ந்த எந்தச் சமுதாயமும் முகம் கொடுக்கும் பல பிரச்சினைகள் எங்கள் சமுதாயதிற்குமுள்ளன. முக்கியமாக, பெண்களையெடுத்துகொண்டால்,புலம் பெயர்ந்த நாடுகளின் மொழி, கலை,கலாச்சாரங்கள்,சுவாத்தியம்,பொருளாதார நிலை,குழந்தைகள் வளர்க்கும் பிரச்சினைகள், அகதி நிலைபற்றிய நிம்மதியின்மை என்று எத்தனையோ விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றன. போதாக் குறைக்கு இந்தப் பிரமுகர்களும் வந்து அவ்வையாரையும், திருவள்ளுவரையும் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்.

மனித சரித்திரம் காணாத,விஞ்ஞான,சமுதய,அரசியல்,பொருளாதார மாற்றங்கள் கலந்த ஐம்பது வருடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எங்கள் முன்னோர் எழுதியவைகளில் பல இன்றிய கால கட்டத்தில் ஒதுக்கப் படவேண்டியவை.முக்கியமாகப் பெண்ணடிமைத்தனத்தை முன்னெடுக்கும் எந்தக் கருத்துக்களும் அடியோடு அழிக்கப்படவேண்டியவை. ஓரு சிறந்த குடும்பம், அந்தக் குடும்பம் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மிக மிக இன்றியமையாதது. அந்தக் குடும்பத்தில் கணவணும் மனைவியும் ஒருத்தொருக்கொருத்தர் அன்புடனும்,மதிப்புடனும் நடந்து கொள்வது அத்தியாவசியமானமான விடயமாகும். நிற,இன,சமய மொழி என்ற பேதமற்றி எல்லோரும் சமம் என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்ட, கல்வி, வாழ்க்கை முறையுள்ள ஆங்கில நாட்டில் பிறந்த பெண்குழந்தைக்கு " கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன்" என்று இந்த இறக்குமதி "அறிஞர்கள்" வந்து புலம்பிவிட்டுப் போவது, இங்கு பிறந்து வளரும் பெண்குழந்தையின் ஆரோக்கியமான மன வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிப்பதாகும். எங்கள் பெண்கள்,படிப்பில்,கலையில் முன் நிற்கிறார்கள். புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்,தங்கள் குடியேறியுள்ள நாடுகளின் கலை கலாச்சாரங்களுடன்,முழுமையாக ஈடுபட இன்னும் சில தலை முறைகளெடுக்கும். அதுவரைக்கும் இந்த இறக்குமதி "அறிஞர்கர்கள்"வந்து அர்த்தமற்ற விடயங்களைப் பிரசங்கம் என்ற பெயரில் புலம்புவது தேவையற்ற விடயமாகும்.

பதிவுகள் - ஆகஸ்ட் 2005 இதழ் 68 -


5. ''சிரியானா''! ''குட் நைட் அன்ட் குட் லக்''! அரசியற் களமாகும் அமெரிக்க ஹாலிவுட் சினிமா உலகு!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )ஆயுத பலத்தாலும் பண வலிமையாலும் உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவின் யதார்த்தமான முகத்தை வெளியார் காணக் கொடுத்துவைக்க உதவுவது அங்கு நடக்கும் கொலைகளும் அல்லது மத்தியதரைக்கடற் பகுதியில், முக்கியமாக முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கர் நடத்தும் ஆக்கிரமிப்புக்களும்தான். ஆனால், இந்த ஆயிரக்கணக்கான மனித உரிமைவாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள்,சினிமாத் தயாரிப்பாளர்கள் என்போர் அமெரிக்காவின் ஆதிக்க விரிசலுக்கும் அமெரிக்கா வைத்திருக்கும் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் எதிராகத் தங்களால் முடியுமானவரை பாடு படுகிறார்கள் என்பதற்கு,ஸிரிவன் ஹாகன் என்பவரால் எழுதி ,நெறிப்படுத்தப்பட்டு நடிகர் ஜோர்ஜ் குலீனியாற் தயாரிக்கப் பட்ட 'சிரியானா' என்ற  அரசியல் த்ரில்லர் படம் சாட்சியாகவிருக்கிறது.

ஹாலிவுட்டின் ஆதிக்கம் அமெரிக்க மக்களை மிகவும் கவர்ந்த விடயம் என்பதற்கு ரொனால்ட் றேகன் அமெரிக்காவின் பிரசிடென்ராக வந்தது ஒரு உதாரணம். நடிகராகவிருந்த ரொனால்ட் றேகன் கவர்னராகவிருந்த கலிபோர்னியாவில் இப்போது ஆர்னல்ட் ஸ்வார்ட்ஸ்னெகர் என்பவர் கலிபொனியா நகரின் கவர்னராகவிருக்கிறார். இவர் ஒரு காலத்தில் அமெரிக்காவின் பிரசிடெண்டாக வருவாரா இல்லையா என்று பலர் ஊடகம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

40ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பல தரப்பட்ட அமெரிக்க வீரர்களைப்பற்றிய படங்கள் வெளியிடப்பட்டன. அவைகளிற் பெரும்பாலானவை அமெரிக்காவின் ஆதி மக்ககளாகிய சிவப்பிந்தியர்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து போன வெள்ளையர்கள் எப்படிக் கொலை செய்தழித்தார்கள் என்பதைப் பற்றிய படங்களாகும்.  அதன் பின் சார்லி சப்லின் அமெரிக்க முதலாளித்துவதைக் கிண்டல் செய்து பல படங்கள் அமெரிக்காவிலிருந்து எடுது நாடு கடத்தப்பட்டார்.
அமரிக்கர்கள் சிவப்பிந்திய மக்களைக் கொன்றொழித்த சரித்திரதைப் பின்னணியாகக் கொண்டு 70, ஆண்டின் முற்பகுதியில் வெளிவந்த ' சோல்ட்ஜெர் புளு' என்ற படம்தான் முதன் முறையாக அமெரிக்க ஆதிக்குடிகளின் வரலாற்றின் உண்மையான தகவலைத் தந்த படமாகும்.

அதைத் தொடர்ந்து  அரசியற் படங்கள் ஹாலிவுட்டிலிருந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. மார்லன் பிராண்டோ போன்ற நடிகர்களும் நடிகைகளும் பலதரப் பட்ட மனித உரிமை விடயங்களில் தலையிட்டார்கள். 70ம் ஆண்டின் நடுப்பகுதியில் வியட்நாம் நாட்டில் அமெரிக்கரின் கொடுமைகளை எதிர்த்து ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஜேன் fபொண்டா மிகவும் காரசாரமான பிரசாரங்களைச் செய்ததால் ' கொம்யூனிஸ்டுகளைக் காதலிக்கும் சிவப்புக்கன்னி' என்ற கிண்டலான பட்டத்தை அமெரிக்க முதலாளித்துவ வாதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதன் பின் காந்தி, போன்ற ஹாலிவுட் படங்கள் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டன. கடந்த சில வருடங்களாக மைக்கல் மூர் போன்ற ஜேர்ணலிஸ்ட்ஸ்- படத்தயாரிப்பாளர்கள் அமெரிக்கா தனது பணா ஆசையால் அராபிய நாடுகளில் போர்தொடுப்பதை எதிர்த்துப் படம் எடுக்கிறார்கள். ஈ£ராக் போருகெதிராகப் பெரும்பாலும் டாக்குயுமென்ரறிப் படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 2005ல் வந்த 'ஜார்ஹெட்' என்ற படம் இராக் போரைபற்றியவர்களின் வாழ்க்கையைப் பிண்ணணியாக்கிய கதையுடன் வந்தது வந்தது.

அதே கால கட்டத்தில் வந்த 'மியுனிக்' என்ற படம்,1972ம் ஆண்டு மியுனிக் ஒலிபிக் விளையாட்டுப்போட்டிக்குப் போன இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தினியத் தீவீரவாதிகள் கொலைசெய்ததைப் பற்றி  வந்தது. '' கொன்ஸ்டண்ட் கார்டினர்'' என்ற படம் , அகில உல மட்டத்தில் மருந்துக் கொம்பனிகள், அரசியல் வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து எப்படியான கேடுகெட்ட மருந்துக்களை மக்களுக்குக் கொடுத்து இலாபம் பெறுகிறார்கள் என்பது பற்றியெடுக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, e-bay என்ற இணையத்தளத்தை உண்டாக்கியவர்களில் ஒருத்தரான ஜெவ் ஸ்கொல் என்பவரின் பண உதவியுடன் நடிகர் ஜோர்ஜ் குலீனியால் முன்னெடுக்கப்பட்ட இரு அரசியற் சினிமா படங்கள் வந்திருக்கின்றன.

அண்மையில்  ஜோர்ஜ் குலீனியின் இரு படங்களும் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் அடுத்த பக்கத்தைப் படம் பிடித்துக்காட்டுகின்றன. '' குட் நைட் அண்ட் குட்ட் லக்'' அமெரிக்கவின் அரசியல் பற்றிப் பேசியது. இபோது வெளிவந்திருக்கும் ''சிரியானா'' அராபியா நாடுகளில் மேற்கத்திய எண்ணெய் முதலாளிகள் எப்படி உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கிறார்கள் அந்தப்பண உலகம், லஞ்சம் என்ற பெயரில் மிகவும் சீர்கேட்டால் பாழ்படுத்தப்பட்டிருக்கிறது, அந்த உலகில் எப்படி அரசியல்வாதிகள், பணத்தரகர்கள், அரச பரம்பரை என்பன முதலாளிகளின் வலையில் விழுகிறார்கள், அதனால் எண்ணெய்த் தொழிற்சாலைகளில் வாழும் முஸ்லிம் தொழிலாளிகள் என்ன கஷ்டங்கள் படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள்.

'சிரியானா' என்பது ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு அரசியற் படம் என்பதை நம்பமுடியாமல் யார்த்தமான கதையோட்டத்தில், மத்தியதரைக்கடற் பகுதிகளில் அமெரிக்கர் எப்படி முஸ்லிம் மக்களை வருத்தித் தங்கள் பணத்தேவையை நிறைவு செய்கிறார்கள் என்பதைச் சொல்லி மிகவும் திறமையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் வருவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் நடிகர் குலீனியார் தயாரிக்கப்பாடு வெளிவந்த ' குட் நைட் அண்ட் கு¢ட் லக்' என்ற படத்தைப் பார்த்தவர்கள் நடிகர் குலீனி மனித உரிமைகளைப்பிரதிபடுத்தும் ' சிரியானா' படத்தையும் தயாரித்தார் என்பதில் ஆச்சரியப்படமாட்டார்கள்.

'குட் நைட் அண்ட் குட்லக்' !
இப்படம் 1950ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் 1956-1959), அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, இரஷ்யிய ஒற்றர்களால் சிதறடிக்கப்படப்போகிறது என்ற பய பிரமையை அமரிக்க மக்களிடம் உண்டாக்கிய செனெட்டர் ஜோ மக்கார்த்தியையும் அவரின் ஒடுக்குமுறையான போக்குகளை எதிர்த்த சி.பி.எஸ் ( டெலிவிஷன் ஸ்டேசன்) ஜேர்னலிஸ்ட் டேவிட் ஸ்ராதிரன் என்பவரியும் பற்றிய படமாகும்.  பதவியுள்ளவர்கள் தங்களின் ஆதிக்கத்தை வலிமைப்படுத்தவும் , தொடரவும் பல பொய்களைச்சொல்லி  எப்படி மக்களைத் திசை திருப்புகிறார்கள், அப்படியான வேலைகளுக்கு எப்படி 'தேசியம்' என்ற பரிணாமத்தை ஒரு ஆயுதமாகப் பாவிக்கிறார்கள் என்பதை ஜோ மக்கார்த்தி- டேவிட் ஸ்ராதிரன் என்ற இருவரின் தத்துவங்களால் விளங்கப் படுத்துகிறார் இந்தப்படத்தை நெறிப்படுத்திய நடிகர் ஜோர்ஜ் குலீனி.

இப்படம் அமெரிக்க அரசியலை விமர்சனம் செய்யும் படம் இப்படியான படங்களை அமெரிக்காவில் எடுப்பதற்கு உரிமையுருக்கிறது,மனித உரிமைகள் தடை செய்யப்படவில்லை என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது.

லண்டனில் இப்படம் வெளியிடப்பட்டபோது ' புத்திஜீவிகள்' கலைஞர்கள், சினிமா விமர்சகர்கள், மனித உரிமைவாதிகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் சினிமாத் தியேட்டர்களை முற்றுகையிட்டார்கள்.

2005ம் ஆண்டில் பலதரப்பட்ட விருதுகளை  இப்படம் பெற்றிருக்கிறது. ஆனாலும் இவ்வருட ஒஸ்கார் விருதில் உலகில் சிறந்த நடிகருக்கான விருதை இதில் முக்கிய பாத்திரத்தில் அதாவது ஜோ மக்கார்த்தி என்ற சர்வாதிகரமான மனப்போக்குள்ள அமெரிக்க செனேட்டரை எதிர்த்த ஜேர்னலிஸ்டாக நடித்த டேவிட் ஸ்ராதிரனுக்குக் கிடைக்காதது மிகவும் துக்கமே..

அத்துடன் சிறந்த டைரக்டருக்குகான பரிசை அமெரிக்காவிலுள்ள சுதந்திர பட அமைப்பாளர் அமைப்பு, நடிகரும் டைரக்டருமான ஜோர்ஜ் குலீனிக்குக் கொடுத்திருக்கிறது. அத்துடன் உலகின் பல பாகங்களிலும் நடந்த பல திரைப்பட விழாக்களில் எத்தனையோ விருதுகளைப் பல பரிமாணங்களில் வெற்றிபெற்றுக்கிறது. அப்படி என்ன விசித்திரமான திறமை இந்தப்படத்திற்கு இருக்கிறது என்பதை ஆழ்ந்து பார்த்தால், தற்போது அமெரிக்கா எடுத்திருக்கும் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்க புத்திஜீவிகளும் மனித உரிமை வாதிகளும் எடுக்கும் போராட்டத்தை இந்தப் படத்தின் மூலம்   அமெரிக்காவின் ஒரு பழைய சரித்திர வரலாற்றைக் காட்டி அரசியல் வாதிகள் மக்களைத் திசை திருப்பும்போது அவர்களுக்கு உண்மைகளைச் சொல்வது ஒரு ஜேர்னலிஸ்டின் கடமை என்கிறார்கள்.

இரஷ்யாவில் நடந்த புரட்சியால் உலகில் பல பாகங்களும் பல அரசியல் மாற்றங்கள் நடந்தன. 1949ல் உலகில் பெரிய நாடுகளில் ஒன்றுமட்டுமல்லாமல் உலகில் பெரிய சனத்தொகையைக் கொண்ட சீனாவும் கம்யூனிசத்தைத் தழுவியது. அமரிக்கா, சீனாநாட்டின் ஒரு சிற்பகுதியான தைவானைச் 'சீனா'நாட்டகப்பிரகடனப்படுத்தி அங்கே தங்கள் படைகளைக் குவித்தார்கள். வியட்நாம்,தென் கொரியாவிலும் படைகளை குவித்தார்கள். பிரிட்டிசார் மலேசியா சிங்கப்பூர் பகுதிகளில் கம்யூனிஸ்டுகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆயிரக்கணக்கான சீனா மக்களை கொன்று குவித்தார்கள்.

அமெரிக்காவை அண்டியுள்ள தென்னாபிரிக்க நாடுகள் மிகவும் வறுமையில் வாடின. இந்நாடுகளும் அமெரிக்காவைத் தூக்கிப்பிடிக்கும் அல்லாது அமெரிக்காவின் தயவில் வாழும் சர்வாதிகாரிகளைத் தலைவர்களாககொண்டிருந்தன. இத்தலைவர்கள் தங்களின் சுகபோக வாழ்க்கைக்கு மிகவும் தாங்க முடியாத வரிகளைப்போட்டு மக்களை மிகவும் கொடுமைக்குள்ளாக்கினார்கள். கேள்வி கேட்பவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள் சிறைகளிற் தள்ளப்பட்டார்கள்.தென்னாபிரிக்காவில் பல புரட்சிவாதிகளும் (சேகுவாரா) சீர்திருத்தவாதிகளும் முபோற்கு வாதிகளும் அமெரிக்காவின் பொருளாதாரப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கப் பொதுவுடமைக்கருத்துக்களை மக்களிடம் பரப்பினார்கள். அமெரிக்காவுக்கு அருகிலுள்ளதும் அமெரிக்கப் பணக்காரரின் கேளிக்கை இடமாகவுமிருந்த கியுபாவிலும் புரட்சி வெடித்தது.

இவையெல்லாவற்றையும் பயத்துடன் அவதானித்த அமெரிக்க ஆழும் வர்க்கம் அமெரிக்காவில் எந்த விதமான சீர்திருத்தக் கொள்கைகளும் பரப்பப் படாமற் பார்த்துக் கொண்டார்கள் கம்யூனிசத்தை விஷமென வெறுக்கும் அமெரிக்கா முற்போக்குவாதிகளையும் எழுத்தளர்கள், ஜேர்ண்லிஸ்ட், கலைஞர்கள் என்போரையும் கண்கானிக்கும் வேலையை சி. ஐ. ஏ மூலம் தொடங்கினார்கள். இதனால் பலர் சிறையிற் தள்ளப்பட்டார்கள். அமெரிக்கப்படையிலுள்ளவர்களும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப் பட்டார்கள். இவர்கள் வழக்குகள் நீதிஸ்தலங்கள்க்கு வந்ததும் இவர்களைத் தேசத் துரோகிகளாக்கிக் கேள்விகளாற் துளைத்தார்கள். ஒருசிலர் இந்தக் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலையும் செய்து கொண்டார்கள்.

இப்படியான அரசியல் கொடுமைகளை எதிர்த்துப் பல ஜேர்னலிஸ்டுகள் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இவர்களில் மிகவும் துணிவானவரும் நேர்மையானவுமானவர் எட்வேர்ட் மரோவ் என்ற ஜேர்ணலிஸ்டாகும். இவர் சி.பி.எஸ் என்ற டி,வி.ஸ்ராசனில் இரவு நேரங்களில் சமூக அரசியல் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்தவர். இவரின் நிகழ்ச்சிகளை மக்கள் மிகவும் விரும்பிக் கேட்பார்கள்.

' நாங்கள் ஒருநாளும் பயத்துடன் எங்கள் பாதையில் அடியெடுத்து வைக்கக் கூடாது'

' நாங்கள் பயமுள்ளவர்களின் வழித் தோன்றலில் வந்தவர்கள்ளல்லர்'

'எங்களுடன் வாழ்பவர்கள் யாரும் அநியாயமாகக் கொலை செய்யப்படுவதையோ, சிறைப்பிடிக்கப் படுவதையோ மெளனமாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது'
என்றெல்லாம் தனது நிகழ்ச்சிகளில் அடிக்கடி சொல்லி வந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் 'குட் நைட் குட்ட் லக்' என்று கடைசியாகச் சொல்லிக் கொண்டு தனது நேயர்களிடம் விடை பெறுவார். அவரின் நிகழ்ச்சியின் அந்தக் கடைசி வார்த்தைகளைப் படத்தின்  பெயராக  வைத்திருக்கிறார்கள்.

எட்வேர்ட் மரோவினுடைய ஆணித்தரமான பேச்சுக்களால் அமெரிக்க மக்கள் விழிப்படைந்தார்கள். செனேட்டர் ஜோ மக்கார்த்தியிடம் மக்கள் கேள்விகேட்கத் தொடங்கினார்கள். ஜோ மக்கார்த்தியாற் சிறை பிடிக்கப்பட்ட பலர் தங்களின் சிறை வாழ்க்கைக்கு எதிராகஅப்பீல் பண்ணத்தொடங்கினர்.  மக்கார்த்தியால் தனது டி.வி. ஸ்ராசனுக்கு செனேட்டர் ஜோ மக்கார்த்தி பிரச்சினை தரக் கூடும் என்று பயந்த ஸ்ரேசன் நிர்வாகி, நிகழ்ச்சித் தயாரிப்பாளரான டேவிட் மரோவைப் பதவியிலிருந்து அகற்றுவதாகப் பயமுறுத்தினார்.

தனது வேலை போகப் போகிறது என்பதையும் பொருட் படுத்தாமல் ' ஜேர்ணலிஸ்ட் உண்மைகளை உரத்துச் சொல்லத் தயங்கக்கூடாது' என்று தன் பிடியில் உறுதியாயிருந்தார் எட்வேர்ட் மரொவ். இவர் செய்த மகத்தான பிரச்சார நிகழ்ச்சியால் செனேட்டர் ஜோ மக்கார்த்தி தனது செனேட்டர் பதவியிழந்தார்.
எட்வேர்ட் மரோவும் அதே காலகட்டத்தில் தனது டெலிவிசன் நிகழ்ச்சித்தயாரிப்பாளர் வேலையிலிருந்து விலகினார்.

இப்படம் சொல்லும் பாடம், 'அரசியற் தலைவர்கள் தங்கள் பதவி வெறியால் மக்களை வருத்தும்போது அவர்களை விழிப்படையும் வேலை ஜேர்ணலிஸ்டுகள் செய்வது மிகவும் முக்கியமான சமுதாயக்கடமையாகும்' என்பதாகும். இப்படம் பல சினமா விருதுகளைப்பெற்றதால் மட்டும் சிறந்த படம் என்று முடிவு கட்டத்தேவையில்லை. ஏனென்றால் இப்படத்தில் சினிமாக்கலைக்குரிய அத்தனை சிறப்பு அடையாளங்களையும் கடந்து ஒரு நேர்மையான ஜேர்னலிஸ்டின் அடக்க முடியாத சுதந்திர சிந்தனையை அப்படியே யதார்த்தமாகக் காட்டி உலகம் பரந்து வாழும் இலட்சக்கணக்கான ஜேர்னலிஸ்டுகளுக்கு எடுத்துக்காட்டாகவிருப்பதால் சினிமா வரலாற்றில் ஒரு தனித் தன்மையைப் பெறுகிறது.

இந்தப்படத்தைப் பற்றிப் பேசும்போது யதார்த்தம் பற்றிய தெளிவு சினிமாவின் மூலம் எப்படிக்காட்டப்படுகிறது என்பதை ஆழமாக ஆராயலாம்.

ஒஸ்கார் விருதில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற ' க்றாஷ்' என்ற படத்தையும் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லவேண்டும். சினிமாத்துறையின் தலை நகரான லொஸ் ஆஞ்சலஸ் பகுதிலுள்ள பலதரப்பட்ட இன,மொழி, மதம், நிற வித்தியாசமுள்ள மக்களைப்பற்றிய படமது. வெள்ளையினவாதம் பற்றித் தெளிவாக எடுத்துக்காட்டும் படம். எப்படித்தான் இனவாதம், பொருளாதார தலைக்கனமிருந்தாலும் அடி மட்டத்தில் மக்கள் யாவரும் ஒரேமாதிரியே இன்ப துன்பங்கள், தோல்வி துயர். இழப்பு, வெற்றி எனப் பலவகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்பதை அழகாகக் காட்டிய படமிது. இந்தப்படம் வந்த கால கட்டத்தில் ( ஜுலை 2005) இப்படம் சொல்லும் மனித உரிமைக் கருத்துக்களுக்காகத் தமிழர்கள் அத்தனைபேரும் இப்படத்தைப்பார்க்க வேண்டுமென்று கேட்டிருந்தேன்.

அமெரிக்கர்களில் பெரும்பாலோர் இனவாதிகளல்லர் என்பதற்கு இந்தப்படம் ' ஒஸ்கார்' விருது பெற்ற சாட்சியமே போதும்.மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் பரிமாணம் மக்கள் ஒருத்தருடன் ஒருத்தர் எப்படி உறவு வைத்திருகிறார்கள், எப்படி அவர்கள் மற்றவர்களின் கருத்தை மதிக்கிறார்கள் என்பதிலிருந்து அனுமானிக்கப்படுகிறது. பலதரப்பட்ட இனங்களுக்கிடையே ,இந்த மனித இனத்தைக் கவுரவிக்கும் மனித நேயம் அத்திவாரமாகவிருந்து, முரண்பாடுகளிலிருந்தும் அந்த முரண்பாட்டின் அழிவுகளிலுமிருந்து மனித நேயம் மக்களைக் காப்பாற்றுகிறது என்பதை' க்றாஷ்' சினிமாப்படம் வலியுறுத்துகிறது. அதே நேரம் 'ஒஸ்கார்; விருதுக்குச் சமர்ப்பிக்கப் பட்ட' கொன்ஸ்ரண்ட் கார்டினர்' என்ற படமும். அகில உலகத்தில் மருந்துக் கொம்பனிகள் எப்படியான மோசடிகள் செய்கின்றன, அதனால் எத்தனை அப்பாவி ஏழைகள் இறக்கிறார்கள், அதைத் தட்டிக் கேட்போருக்கு என்ன நிலை வரும் என்று யதார்த்தமாகக் காட்டுகிறது.

இவைகளோடு ஒஸ்கார் விருதுகளுக்குச்  சமர்ப்பிக்கப்பட்டதும்  நடிகர் ஜோர்ஜ் குலீனியின் நெறியமைப்பில் எடுக்கப்பட்டதும்,குலீனிக்குச் சிறந்த உப நடிகர் என்ற ஒஸ்கார் விருதைக்கொடுத்ததுமான ''சிரியானா' என்ற படம் சிறந்த திரைப்படக் கதை என்ற விருதையும்  பெற்றிருக்கிறது. 'சிரியானா' படத்தின் கதை இன்று உலகில் நடக்கும் அமெரிக்க- முஸ்லிம் முரண்பாடுகளின் அடிப்படையை மையமாக வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படம் , மத்தியதரைக்கடற் பகுதியை யார் ஆதிக்கத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.

இப்படத்தின் கதை பன்முகக் கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டிருக்கிறது. - உலகில் எதைப்பற்றியும் கவைலைப்படாத அமெரிக்க முதலாளி வர்க்கம், அமெரிக்கரைச்சார்ந்து நின்றுகொண்டு அராபிய செல்வங்களை அமெரிக்கவுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் அராபிய அரசபரம்பரை, மத்தியதரைக்கடல் நாடுகளில்கூலிகளாக வேலைசெய்யும் இந்திய, பாகிஸ்தானிய , எஜிப்தியா ஏழை முஸ்லிம்கள், தனது நாட்டின் செல்வத்தைத் தன்நாட்டு மக்களுக்காகச் செலவளிக்கத்துடிக்கும் முற்போகுள்ள அராபிய இளவரசன், தன் குழந்தை ஒரு ஆபத்தில் இறந்ததையும் பொருட்படுத்தாது பணம் பணம் என்றலையும் அமெரிக்கத் தரகன்,  சி.ஐ.ஏ ஏஜெண்டாக வேலைசெய்ய வந்து அமெரிக்கர் முஸ்லிம்களுக்குச் செய்யும் கொடுமைகளைக்கண்டு மனம் மாறும் ஒரு அமெரிக்க ஒற்றன், அமெரிக்க ஆதிக்கத்தையே தாங்கள் கொடுக்கும் லஞ்சத்துக்குள் வைத்திருக்கும் அமெரிக்க எண்ணெய் கொம்பனி முதலாளிகள் என்று எத்தனையோ தனிப்பட்ட சிறு சிறு கதைகள் சேர்ந்த ஒரு விறு விறுப்பான துப்பறியும் கதைமாதிரி 'சிரியானா' படம் எடுக்கப் பாட்டிருக்கிறது.

இந்தப்படம் லண்டனில் வெளியிடமுதல் டெலிவிசனில் நடந்த இண்டர்வியு ஒன்றில் பேசும்போது, ''பெரும்பாலான அமெரிகர்களுக்கு அமெரிக்காவில் நடப்பதைத்தவிர உலகில் மற்றப்பகுதிகளில் என்ன நடகிறது என்றுகூடத் தெரியாது, பிரசிடெண்ட்டும் அரசியல்வாதிகளும் சொல்வது உண்மை என்று நம்பும் அமெரிக்க மக்கள் நிறைய இருக்கிறார்கள். அதி பயங்கர விளைவுகளைத்தரும் ஆயுதங்களைச் சதாம் ஹ¤சேன் வைத்திருப்பதாகவும், அதைக்கொண்டு அமெரிக்காவுக்கு ஆபத்து விளைவிக்கப் போவதாகவும் மக்களுக்குச் சொல்லி ஈராக் நாட்டுக்குள் போருக்குப் போயிருக்கிறார்கள். இப்போது எப்படி வெளிவருவது என்றுதெரியாமல் விழிக்கிறார்கள். ஈராக் யுத்தம் ஆரம்பித்ததே ஈராக் நாட்டின் எண்ணையைக் கொள்ளையடிக்கத்தான் என்று நேரடியாகச் சொல்லாமல், மக்களைப்பயப் படுத்தும் விதத்தில் பிரசாரங்களைச் செய்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார் ஜோர்ஜ் குலீனி.

''இப்படியான படங்கள் எடுப்பதற்குக் காரணம், நீங்கள் ஒரு அரசியல் வாதியாக வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறதே , அது உண்மையா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு, '' நான் அரசியல்வாதியல்ல, அரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக மக்களுக்குச் சொல்லும் பொய்களை உடைத்துக் காட்டுகிறேன், சமுதாயத்தில் மக்களாற் தெரியப்பட்டவர்களாக வாழும் கலைஞர்கள், புத்திஜீவிகள், ஜேர்னலிஸ்டுகள்தான் இந்தமாதிரியான வேலைகளைச்செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார். அத்துடன் அவர் மேலும் குறிப்பிடும்போது '' தற்போதைய சூழ்நிலையில் தங்களின் சுய இலாபத்திற்கு யாரையும் அழிக்கவென்று பலர் துணிந்து விட்டார்கள். அதிலும் , முஸ்லிம் மக்களை எப்படி இந்த அமெரிக்கர்க ஆதிக்கம் எடைபோடுகிறது என்றும் நாங்கள் , அதாவது மனித உரிமைவாதிகள் அவதானிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

ஜோர்ஜ் குலீனி விரும்பாவிட்டாலும், அமெரிக்க மக்கள் குலீனி மாதிரி ஒருத்தர் பிரசிடெண்டாக வரவேண்டும் என நினைப்பது குலீனியின் மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்க நினைக்கிறார்கள்  என்று கருத்தாகும்.

'சிரியானா' படத்தில் முஸ்லிம் ஏழைகளின் சம்பாசணைகளின் மூலம் அவர்களின் உண்மையான மனநிலையைக்காட்ட நினைக்கிறார் குலீனி.  அமெரிக்கர் திரவியம் சேர்க்க அராபிய நாட்டின் வளத்தையும் ஏழை முஸ்லிம்களின் உழைப்பையும் தாரைவார்க்கிறோம் என்ற சாயல்களில் வார்த்தைகள் வடிக்கப்பட்டிருந்தன.

இந்த உலகம் முதலாளிகள் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கும் லஞ்சத்தால் உண்மைகளைத்திரிவு படுத்தி ஏழைமக்களை உலகம் பூராவும் மிகவும் கீழ் மட்டத்தில் வைத்திருக்கிறது. அதனால் அந்த ஏழைகளின் மட்டத்திலிருந்து புரசிகள் வெடிப்பது எதிர்பார்க்கவேண்டிய விடயம் என்கிறார் குலீனி.

உலகில் எந்தப்பகுதியிலும் பெரிய முதலாளிகள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பதினால் எத்தனையோ குற்றங்களிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

''சிரியானா'' படத்தில் வரும் எண்ணெய் முதலாளிகளின் வார்த்தைகள் மூலம் '' நாங்கள் கொடுக்கும் லஞ்சம் என்களைப் பாதுக்கக்கிறது, நாங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களைச் சந்தோசமாகவும் கவலையற்றும் வாழ உதவி செய்கிறது'' என்று சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

1920ம் ஆண்டு பிரித்தானியர்களால் உண்டாக்கப்பட்டு அமரிக்கர்களால் பாதுக்காக்கப் படும் சவுதி அராபிய இராஜ குடும்பம் எவ்வளவு தூரம் , அந்நாட்டு ஏழை மக்களின் நலத்தில் அக்கறைப்படாமல் வாழ்கிறார்கள் என்பதை ஒரு பைனான்சியல் அட்வைசரின் வார்த்தைகளில் வெடிக்கிறார் குலீனி. வேறு வழியற்ற ஏழை முஸ்லிம்கள் தற்கொலைப்படைதாரிகளாக மாறும் சூழ் நிலையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக்காட்டுகிறார் டைரக்டர் குலீனி.

உலக அரசியல் அரங்கில் தங்களின் சுயநலத்தைப்பாது காத்துக் கொள்ளச் சிலர் தங்கள் குழந்தைகளையே பலிகொடுப்பார்கள் என்பதை, தனது நாட்டைத்திருத்த வேண்டுமென்ற அவா கொண்ட, முற்போற்குக் கருத்துக்கள் கொண்ட அராபிய இளவரசனை அமெரிக்கரின் உதவியுடன் கொலை செய்யவும்றராபிய அரச வர்க்கம் தயங்கவில்லை என்று இந்தப்படம் காட்டப்படுகிறது.

இப்படம் தெஹிரான் நாட்டில் ஒரு அமெரிக்க சி. ஐ ஏ ஏஜெண்ட் போகும்போது ஆரம்பிக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் படமாரமிக்கிறது. லெபனான் அரசியல் சூழ் நிலைக்குள் அகப்பட்டுக்கொண்ட அமெரிக்க சி.ஐ. ஏ எஜெண்ட், படும் அவஸ்தைகள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், அமெரிக்க ஆதிக்கம் மிகவும் கறை படிந்த எண்ணெய் முதலாளிகளுடன் வைத்திருக்கும் தொடர்பு, தன் சவூதி நாட்டை முற்போக்காக நினைக்கும் இளவரசனை அமெரிக்க உதவியுடன் அராபிய அரசு கொலைசெய்யப் போகிறது என்று தெரிந்ததும் அந்த இளவரசனைக் காப்பாற்றத் தன்னுயிரையே கொடுப்பது போன்ற கட்டங்களில் அமெரிக்க சி.ஐ. ஏ மிகத் திறமையாக நடித்திருக்கிறார் குலீனி.

ஏழை முஸ்லிம்களின் கடும் உழைப்பில் பெறப்படும் முஸ்லிம் நாடுகளின் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்காவுக்குப் புறப்படும்போது தீவிரவாதிகளாக மாறிய ஏழைமுஸ்லிம்கள் தற்கொலைப் படையாக அழித்து முடிக்கிறார்கள். உலகம் முழுதும் முஸ்லிம் தீவிரவாதிகளைத் தேடித் தேடியழிக்கும் அமெரிக்காவிலிருந்து கொண்டு, முஸ்லிம்கள் அப்படி ஏன் மாறுகிறார்கள் என்பதை விளக்கி இப்படியான ஒரு சினிமாப்படம் எடுக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் இன்னும் பேச்சு, எழுத்து, சினிமாப்பட சுதந்திரம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் பல தரப்பட்டவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு கோணத்திலிருந்து அவர்களின் வாழ்க்கையக் காட்டுவதிலிருந்து, கடைசியில் அவர்களின் வாழ்க்கை எப்படி ஒருதருடன் ஒருத்தராக இணைந்திருக்கிறது என்பதை ஒரு சோகமான கவிதைமாதிரித் தருகிறார் குலீனி.

அமெரிக்க ஆதிக்கம் ஏன் முஸ்லிம் மக்களில் இவ்வளவு கோபம் வைத்திருக்கிறார்கள் அல்லது பெரும்பாலான முஸ்லிம் மக்கள் ஏன் இவ்வளவு தூரம் அமெரிக்கரை வெறுக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இந்தப்படத்தைப் பார்ப்பது மிகவும் முக்கியம்.  

காதற் பாடல்களும், குத்தாட்டங்களும் பார்த்து ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு உலக அரசியலில் ஒரு துளியையாவது தெரியப்படுத்த முனையும் இப்படம் பிடிக்குமோ தெரியாது. இந்தப்படத்தில் அப்படியொரு மூன்றாம்தர ஆடல்பாடல்கள் கிடையாது. யதார்த்த அரசியல் குழறுபடிகளின் ஒருமுகம் தெளிவாகத் தெரிகிறது, அதைப்புரிந்து கொள்ள விரும்புவோருக்கு' சிரியானா' ஒரு நல்ல  சரியான சினிமா விருந்து.

e-bayயை உண்டாக்கிய முதலாளிகளில் ஒருத்தரான ஜெவ் ஸ்கொல் தனது செல்வத்தை ஏன் இப்படியான படங்களில் முடக்குகிறார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் ''. இந்த உலகம் நல்லதொரு போக்கில் வளரவேண்டும். அப்படியான மாற்றங்களுக்கு உதவி செய்வதில் சந்தோசப்படுகிறேன்'' என்று சொன்னார்.

அவரின் சொற்களைக் கேட்கும் போதும்  ''சிரியானா'' படத்தைப் பார்த்த போதும் இலங்கையில் நடக்கும்கொடுமைகளுக்கு எதிராக உலக அரங்கில் சினிமா மூலம் குரல் எழுப்ப யாருமில்லையா என்ற கேள்வி மனதில் ஊராய்ந்தது.

''சிரியானா'' மாதிரிப் சினிமாப் படங்கள் எடுக்க உதவும் கனடிய ஜெவ் ஸ்கொல் மாதிரியான நல்ல பணக்காரர்களும் ஹாலிவுட் நடிகர் குலீனி மாதிரிப் புத்துஜீவிகளும் இலங்கையில்பிருக்கவேண்டும் என்று ஆசை பிறக்கிறது.

பதிவுகள் - மே 2006 இதழ் 77


6. ''Children of Men''- (ஆண்களின் குழந்தைகள்) ஒரு பட விமர்சனம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )ஹொலிவூட்டிலிருந்து செப்டம்பர் மாதம்( Sep 2006) வெளிவந்த படங்களுள், சிந்தனையாளர் பலரால் மிகவும் பேசப்படும் படம் ''சில்ட்றன் ஒfவ் மென்'' என்ற படமாகும். அல்போன்ஸோ குயுறோன் (Alfonso Cuaron) என்ற மெக்சிக்கன் டைரக்டரால் நெறிப்படுத்தப்பட்ட இந்தப் படம். ஆங்கில நாவலாசிரியை P.D.ஜேம்ஸ் என்பவரின் நாவல், 'சில்ட்றன் ஒவ் மென்' என்ற பெயரில் படமாக வந்திருக்கிறது. செப்டம்பரில் வெளியான படத்திற்கு, படம் வெளிவந்த சொற்ப நாட்களுக்குள்,வெனிஸ் திரைப்படவிழாவில் (Venice Film Festival), கோல்டன் ஒஸ்ஸெல்லா (Golden Ossela),லாலேர்னா மஜ்¢க்கல் பரிசு(Lalerna magical prize), என்ற வரிசையில் இதுவரை இரண்டு பரிசுகள் கிடைந்திருக்கின்றன. அத்துடன் கோல்டன் லையன் (Golden Lion) பரிசுக்கும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப்படம் இன்னும் பல பரிசுகளை மேலதிகமாக வென்றெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தைப்பற்றிய சிந்தனையைச் சுண்டியெடுக்கும் ஆழமான கருவுடன் படைக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். அடிதடி சண்டைகள், மானுடவிருத்தி பற்றிய விஞ்ஞானரீதியான அணுகுமுறைகள் என்று பலகோணங்களில் பார்வையைச்செலுத்துகிறது.

இன்றையகாலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தீவிரவாதம், எதிர்காலத்தைப்பற்றி சிந்தனையற்ற மக்களின் வாழ்க்கைமுறை, பொருளாதாரச் சூழ்நிலைகளாற் சின்னாபின்னப்படும் எதிர்காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தப்படத்தின் நிகழ்வுகள் 2027ம் ஆண்டில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. உலகில் நடந்து கொண்டுவரும் பலதரப்பட்ட மாற்றங்களால் பெண்களின் வயிற்றில் குழைந்தகளே தரிக்காமல், உலகமே மலட்டுத்தனமாகப் போவது எதிர்காலத்தில் நடக்கும் என்பது இப்படத்தின் மையக்கருத்தாகும். சமூகச்சீர¨ழிவு வரும்போது, அச்சமூகத்தில்வாழும் பெண்களின் நிலையும், ஆண்களின் வன்முறைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளும் பெண்கள் எப்படித் தங்கள் பாதுகாப்பை முன்னெடுக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்பது கதையின் பின்னணியாக மேலோட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் கதைச்சுருக்கம்: படத்தின் ஆரம்பம்,'' இன்று, உலகின் வாழும் மக்களில் மிகவும் இளைய வயதுடையவரான டியாக்கொ றிக்காடோ மரணமான செய்தி கேட்டு அகில உலகுமே துயரில் ஆழ்த்திருக்கிறது. இறந்து விட்ட டியாக்கோவுக்கு வயது, பதினெட்டு வருடம், நான்கு மாதங்கள், இருபது நாட்கள், பதினாறு மணித்தியாலங்கள், எட்டு நிமிடங்களாகும்'' என்ற டெலிவிசன் செய்தியுடன் தொடங்குகிறது.

Children Of Men
பதினெட்டு வருடங்கள், அதாவது 2009ம் ஆண்டிலிருந்து இந்த பிரபஞ்சத்தில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. ஏன் பிறக்கவில்லை என்பதற்கு, பல ஆண்டுகளுக்கு முன் பரவிய வைரஸ் தொற்று நோயாற் பல குழந்தைகள் இறந்ததாகவும் அதைத்தொடர்ந்து, பெண்களால் கருத்தரிக்க முடியாமற்போய்விட்டது என்பதைத்தவிர இந்தப்படம், அரசியற் பொருளாதார,வாழ்க்கைமுறைfஅளின் பாதிப்பு பற்றிய பெரிய விளக்கங்களைக் கொடுக்கவில்லை. உலகின் கடைசி இளம் தலைமுறை டியாக்கோ என்ற வாலிபரை உலகம் இழந்த இந்த செய்தியை, தனது வேலைக்குப் போகும் வழியில்,கடைகளில் காட்டப்படும் டெலிவிசன் மூலம் கேட்டபடி, அரச உத்தியோகத்தனான தியோடர் Fபாரன் என்பவர், கடையில் ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு தனது ஒவ்வீசுக்குள் நுழைகிறார். வழியெங்கும் மக்கள் றிக்காடோ இறந்தசெய்தியால் அழுது கொண்டிருக்கிறார்கள்.

ஏனோதானோ என்று தனது வேலையை வேண்டாவெறுப்பாகச் செய்யும் தியோ, ''இன்று றிக்காடோ இறந்ததால் எனக்கும் மிகவும் சோகமாகவிருக்கிறது. நான் இங்கிருந்து செய்யும் வேலையை வீட்டுக்குப்போயிருந்து செய்யப்போகிறேன்'' என்று தனது மனேஜரிடம் சொல்லிவிட்டு வெளியேறுகிறான். உலகில் என்ன நடந்தாலும் உண்மையாக கவலைப்படாத தியோ வேலையில் பொய்சொல்லிவிட்டு வெளியேறும்போது, ஒருசிலரால் வழிமறித்துக் கடத்தப்படுகிறான்.

கடத்தப்பட்ட தியோ fபாரனின் கட்டிய கண்கட்டுகளைத்திறந்தபோது தனது பழைய காதலி ஜூலியன் ரெயிலர் என்பவளின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறான். அவள் சமூகப்புரட்சி செய்யும் கூட்டத்தில் ஒருத்தி என்பதும் தெரிகிறது. அவனுக்கு ஒன்றும் புரியாமல், ''ஏன் என்னைக் கடத்திக் கொண்டு வந்தீர்கள்'' என்று கோபமாகக் கேட்கிறான்.'' எங்களுக்கு ஒரு உதவிதேவை, அதைச்செய்வதற்கு நீதான் சரியானவன் என்று நினைக்கிறோம், நீ உயிரோடு இருக்க விரும்பினால் எங்களுக்கு உதவி செய்'' என்று தியோவின் பழைய காதலி ஜூலியன் சொல்கிறாள்.

'' நான் ஏன் உதவிசெய்யவேண்டும்''?

'' நாங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முக்கிய கடமை உன் உதவியில்லாமல் நடக்காது என்று நினைக்கிறோம்''

'' நான் அந்த உதவியைச்செய்வேன் என்று நீ ஏன் நினைக்கிறாய்?''

''நீ உயிர்வாழ ஆசைப்படுபவன் என்று எனக்குத்தெரியும், அத்துடன் நான் உன்னை நம்புகிறேன்''

' நீ எதிர்பார்க்கும் உதவியை நான் செய்வேன் என்பதை என்ன ஆதாரத்துடன் நீ நினைக்கிறாய்?''

'' நாங்கள் செய்யவேண்டியவேலைக்கு அரசாங்க அத்தாட்சிப்பத்திரம் தேவைப்படுகிறது, அந்தப்பத்திரத்தை அரச பதவியிலிருக்கும் உனது சொந்தக்காரனிடமிருந்து நீ எங்களுக்கு எடுத்துத் தரவேண்டும்''

'' நீங்கள் முன்னெடுத்திருப்பது என்ன வேலை?''

'' இவ்விடமிருந்து ஒரு அகதிப் பெண்னைக் கடத்திக்கொண்டுபோய்ப் பாதுகாப்பான இடத்தில் விடவேண்டும், தெருக்கள் முழுதும் அராஜகம் தலைதூக்கி அமைதியற்ற பயங்கரநிலை தோன்றியிருக்கிறது''
''அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?''

'' இங்கிருந்து தப்ப அரசாங்க அனுமதியுள்ள பத்திரம்தேவை, முதல்வேலையாக உனது சொந்தக்காரனைச் சந்தித்துப் பத்திரம் பெறவேண்டும்''

இந்தச் சம்பாஷணையைத்தொடர்ந்து, தியோ, அரச பதவியிலிருக்கும் தனது சொந்தக்காரனைப் பார்த்து உதவி கேட்கிறான். இங்கிலாந்தில், சமூகநிலை மிகவும் குழம்பிப் போயிருக்கிறது. உலகெங்கும் பல பிரச்சினகல் நடப்பதால் உலகின் பலபாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிலாந்தைநோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தெருக்கள் முழுதும் அகதிகளாலும், வன்முறைக்காரர்கள், திருடர்கள், ஏழைகள்,வீடற்றோர் என்போரால் நிறைந்திருக்கிறது. சமூக நிர்வாகம் சீர்குலைந்து எல்லாஇடங்களிலும் அனர்த்தம் தலைவிரித்தாடுகிறது.அரசபடைகள் ஆயுதங்களுடன் அனர்த்தங்களை அடக்கிக் கொண்டிருக்கிறார்கள்

தனது சொந்தக்காரனிடம் போன தியோ, தனக்குத் தெரிந்த ஒருபெண் இங்கிலாந்தின் தென்மூலையிலிருக்கும் பெக்சில் என்ற இடத்திற்குப்போக அரசாங்கமனுமதி தேவைப்படுகிறது என்று கேட்க'' சமூக நிலை சீர்கெட்டிருக்கும் இந்தநிலையில், யாரையும் இங்கிருந்து வெளியேற அரசாங்கம் அனுமதிக்காது அதுவும் முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்ணுக்கு நான் அனுமதிப்பத்திரம் தரமுடியாது, நீ எனக்குச் சொந்தக்காரன் என்ற முறையிற் எனக்குத் தொல்லை கொடுப்பதால், நீயும் அந்தப்பெண்னுடன் சேர்ந்து போவதானால் மட்டுமே நான் உனக்கு அனுமதிப்பத்திரம் தருவேன்''

தன்னைக்கடத்தியவர்களுக்குத் தன் சொந்தக்காரனிடமிருந்து அனுமதிப்பத்திரத்தை வாங்கிக்கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள நினைத்த தியோ, இப்போது தன்னையறியாத ஒரு புதுசூழ்நிலைக்குள் தள்ளப்பட்டதை உணர்கிறான். அனுமதிப்பத்திரத்துடன் வந்தவன், தனது பழைய காதலியுடனும் அவளின் சினேகிதியான மிரியானுடமும் அவளாற் குறிப்பிடப்பட்ட இளம் (கறுத்தநிறப்) பெண் கீய் என்பவளுடனும் காரிற் பிரயாணம் செய்யும்போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஜூலியான் இறந்து விட, மிரியானும் தியோவும் கீயுடன் தப்புகிறார்கள்.

ஒருகாட்டுக்குள் தனியாகவாழும் தியோவின் சினேகிதனான முதிய மனிதன் மைக்கல் கேன் வீட்டில் அடைக்கலம் புகுந்த தியோவுக்கு, கீய் என்ற கறுத்த இன இளம்பெண் தாய்மையடைந்த்திருப்பது தெரிகிறது. பதினெட்டு வருடங்களுக்குப்பின் இந்த உலகத்தில் பிறக்கப்போகும் முதற் குழந்தை பிறக்கத் தான் உதவி செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட குழப்ப சூழ் நிலையில் கீயுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான். ஆரம்பத்தில் அவனைக்கடத்திக் கொண்டுபோனவர்கள், பலவருடங்களுக்குப்பின் இந்த உலகத்தில் தரிக்கப்போகும் அற்புதக்குழந்தையைத் தங்கள் சொத்தாக்க,கீயையும் தியோவையும் துரத்துகிறார்கள். தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஜூலியனாவையும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவநேரத்தில் கொலை செய்தவர்களும் அவர்களே என்பதை மிரியாம் சொல்கிறாள். அவன் அதையிட்டுச் சோகம் கொள்வதைப்பார்த்து நீயேன் மனவருத்தப்படுகிறாய் என்று கேட்கிறார்கள்.

தீயோவும் ஜூலியானவும் ஒருகாலத்தில் காதலர்களாக இருந்தவர்கள்.தீயோவுக்கும் ஜூலியானாவுக்கும் ஒரு குழந்தைபிறந்ததும் அந்தக்குழந்தையும் வைரஸ் தொற்றுநோய் பரவிய காலத்தில் இறந்துவிட்டது. கடந்த இருபது வருடங்களாக அவனுக்கும் ஜூலியானுக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை. இப்போது ஜூலியான், பதினெட்டு வருடங்களுக்குப்பின் பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் தாய்க்கு உதவி செய்யமுனைந்ததால் இறந்து விட்டாள்.

தியோFபாரன், எப்படியும் கீய் என்ற பெண்ணுக்கு உதவிசெய்யவேண்டும் என்று முடிவு கட்டுகிறான். இவர்களைத் தேடிவரும் கூட்டத்தினர் தியோவின் வயோதிப நண்பரையும் கொலை செய்கிறார்கள். சமூகம் சீர்கெட்டபின் முதியோர் , பெண்கள் என்றுபாராமல் யாரும் கொலை செய்யப்படுவார்கள் என்பது காட்டப்படுகிறது. எத்தனையோ இடர்களைத்தாங்கிக் கடைசியில் தன் உயிரையும் தியாகம் செய்து தியோ அந்தப்பெண்னையும் அவளுக்குப்பிறந்த குழந்தையையும் வெளியுலகுக்குப் பயந்து கடலில் ஒரு படகில் வாழும்,'' மனிதப்பாது காப்புக் குழுவிடம்'' ஒப்படைக்கிறான்.

தற்போது வெளிவந்திருக்கும் படங்களில், இந்தப்படம் ஏன் சிறந்தது என்று பேசப்படுகிறது என்றால் , இந்த உலகம் போகும் போக்கில், எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சினைகளை காணப்போகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்தப்படம். தங்கள் பேராசையால் உலகை மாசுபடுத்தும் உலகில் இனி மானுடமே அழியப்போகிறது என்ற உண்மையை இப்படம் மூலம் வெளிப்படுத்துகிறார் டைரக்டர் அல்போன்ஸோ. 2027ம் ஆண்டில், உலகின் இள வயதுப் பேர்வளியின் வயது பதினெட்டு என்றால் 2009ம் ஆண்டுக்குப்பின், உலகில் குழந்தைகள் பிறக்கமாட்டாது என்று இந்தப்படம் சொல்கிறது. இன்று உலகில் நடக்கும் அணு ஆயுதப்போட்டி மட்டும்தான் குழந்தைகள் பிறக்காததற்குக் காரணமாக இருக்கபோகிறதா அல்லது மக்களின் வாழ்க்கை முறையும் உலகின் மலட்டுத்தனதுக்குக் காரணமாகப் போகிறதா என்று பல கேள்விகள் பிறக்கின்றன.

09.09.06ல் வடகொரியா தனது இரண்டாவது அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை செய்திருக்கிறது. ஈரான் நாடும் கூடிய விரைவில் தனது அணுகுண்டு உற்பத்தியைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் உட்படப்பல நாடுகள் அணு குண்டுகள் வைத்திருக்கின்றன. அமெரிக்கா 130 நாடுகளில் 8000 அணுகுண்டுத் தளங்களை வைத்திருக்கிருக்கிறது.

மத்தியகிழக்கில் தொடரும் போர்ச்சூழ்நிலையில், சண்டையில் ஈடுபட்டிருக்கும் ஒருத்தர் அணுகுண்டின் உதவியை நாடினால் உலகில் பலகோடி மக்கள் ஒரு சில நிமிடங்களில் பொசுங்கிப்போவார்களென்பது தெரியப்பட்வேண்டிய விடயம். பேராசை பிடித்த ஒருசில மனிதர்களின் வாழ்க்கைமுறை இயற்கையைக் கேலிசெய்வதுபோல் தொடர்கிறது. வசதிக்கு மட்டுமல்லாது செல்வச் செருக்கைக்காட்ட ஒன்றுக்கு மேல் பலகார்களை வைத்திருப்பதும் அதனால் உலகு மாசு படுவதற்கு ஏதுவாக இருப்பதுபற்றியும் பலர் அக்கறைப்படுவதில்லை. ஆண்கள் மலடாவற்கு அவர்களின் வாழ்க்கை முறைகள் ஏதுக்களாயிருக்கின்றன. அதிகப்படியான மது, கொழுப்பு, உடற்பயிற்சியற்ற உடம்பு, என்பன குறிப்பிடப்படவேண்டிய சில விடயங்களாகும்.

பெண்களைப் பொறுத்தவரையில், மேற்கு நாடுகளில் அதிக காதலர்களை வைத்திருக்கும் பெண்கள்,அந்தப்பழக்கத்தால் வரும் பாலியல் நோய்காரணமாகத் தங்கள் கர்ப்ப விருத்திக்குத் தடைசெய்யும் கிருமிகளின் ஆளுமைக்கு ஆளாகிறார்கள். இங்கிலாந்தில் பத்துவீதமானபெண்கள் பாலியல் நோய்க்கிருமிகளால் மலட்டுத்தன்மையடைகிறார்கள். மேற்கு நாடுகளில் உடலை அழகாக வைத்திருப்பற்காகச் சாப்பாட்டைத் தவிர்க்கிறார்கள், இதுவும் ஒருவிதத்தில் குழந்தை உண்டாக்குவதற்குத் தடையாகவிருக்கும். ஏழைகளும், பணக்காரர்களும் ஆண்பெண் என்றபேதமின்றி போதைப் பொருட்களைப் பாவித்துத் தங்கள் சுகாதாரத்தைகெடுத்துக்கொள்கிறார்கள். குழந்தைபெறும் வயதில் இந்த ' டையற்றிங்' விடயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வறுமையானநாடுகளில் வாழும் பெண்கள், தேவையான சத்துப்பொருட்கள் உடம்பில் இல்லாத்தால் குழந்தைகல் தரிப்பது கஷ்டமாகலாம். அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் அயிட்ஸ் நோய் மிகத்தீவிரமாகப்பரவி வருகிறது. பல நாடுகளிற் தீவிரவாதம் நெருப்புபோல், பலவீனமான இளைஞர்கள் மனதில் பற்றியெரியப்பண்ணப்படுகிறது.

இந்தப்படத்தில் , உலகம் எப்படித்தான் தாறுமாறாகப் போனாலும் மனிதநேயம் வாழும் என்ற நம்பிக்கை மையப்பொருளாகச் சொல்லப்படுகிறது. அது மிகவும் அசட்டையான மனிதனான தியோவின் உருவிலோ அல்லது கறுத்தப்பெண்ணான கீய்க்கு உதவி செய்யும் மிரியம் என்ற வெள்ளைக்கார மாதுவின் உருவிலோ தொடரலாம்.

''சில்ட்றன் ஒவ் மென்'' - ஆண்களின் குழந்தைகள் என்ற பெயரை ஏன் இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி பிறக்கலாம்.
கீய் என்ற கறுத்தப்பெண்ணுக்கு, தான் தாயாகப் போவது தெரிய வரவே சிலகாலம் பிடிக்கிறது. ஒன்று, அவள் வளரும் காலத்தில் அவள் எந்தக் கற்பவதியையும் காணவில்லை. யாருக்கும் குழந்தை பிறந்ததாகக் கேள்விப்படவுமில்லை. அவளுக்குப் பல ஆண் சினேகிதர்கள் இருந்தபடியால்,அவளின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தகப்பன் யாரென்று தெரியாது.பலரின் குழந்தையாயிருக்கலாம் என்று கிண்டலுடன் சொல்கிறாள். நீண்ட காலத்தின்பின் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததும் அவளைச்சுற்றியிருக்கும் ஆண்வர்க்கம் அவளின் குழந்தையை வைத்து இலாபம் தேட முயற்சிக்கிறது. அவளைக் கடத்துவதிலிருந்து அந்தக்குழந்தையை எங்கு கொண்டுபோவது, யாரிடம் கொடுப்பது என்பதெல்லாம் ஆண்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தப்படம் வழக்கம்போல்' ஒரு வெள்ளை மனிதனாற்தான்'' மனிதம் காப்பாற்றப்படும் என்பதைத், தியோ என்ற வெள்ளை மனிதன் கீய் என்ற கறுபுப்பெண்ணைக்காப்பாற்றுவதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. பழங்கால நம்பிக்கையின்படி, உலகம் மிகவும் மோசமான நிலையில் சின்னாபட்டு அழியும்போதும் எங்கேயோ ஒரு 'கறுத்த இன உயிர்' வாழ்ந்து கொண்டிருக்கும் என்று சொல்லப்படுவதை இன்னொருதரம் இறுக்கமாக்ச் சொல்வதுபோலிருக்கிறது.

இப்படத்தின் வெற்றிக்குக்காரணம் ஆழமான கருத்தைக்கொண்ட கதைமட்டும் காரணமல்ல. யதார்த்தமான விதத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான காட்சிகள் லண்டனின் முக்கியமான இடங்களான் ட்ரவால்கர் சதுக்கம், பற்றசி பவர் ஸ்டேசன் போன்ற இடங்களிற் படமாக்கப்படிருக்கிறது. செல்வச்செளிப்பும், கம்பீரமுமான இவ்விடங்கள், இன்னும் இருபது வருடங்களில், தொடரப்போகும் சமூகசீரழிவால் அடையாளம் தெரியாத விதத்தில் இருளும், உடைவுகளுடனும் மாறுவதைத் தத்ரூபமாக்ச் சித்தரிக்கும் விதத்தில் கமெரா வேலை செய்திருக்கிறது. சூழ்நிலையை யதார்த்தமாக்க ஒலியும் ஒளியும் மிகத்திறமான விதத்தில் இப்படத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்துக்குள் அளவுக்குமீறி உள்நுழையும் அகதிகள் எப்படி அடக்கப்படுவார்கள், அடைத்துவைக்கப்படுவார்கள் என்பதைக்காட்டும் காட்சிகள் எதிர்காலத்தைப்பற்றிய பயத்தை மனதில் தோற்றவைக்கிறது.

தாய்மையடைந்த இளம் பெண் கீயுடன், ஒரு உடைந்த கட்டிடத்திற்குள், அகப்பட்டுக்கொள்ளும் தியோ அவளுக்குப்பிரசவ வலிவந்ததும், துப்பாக்கிகுண்டுகள் பாய்ந்து விழுந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரசவம் பார்க்கும் காட்சி படம்பார்க்கும் அத்தனைபேரின் மனத்தையும் நெகிழச்செய்யும். அதேமாதிரி, அவர்களைத் துரத்தி வருபவர்கள் கீயின் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு, பதினெட்டு வருடங்களின் பின் ஒரு குழந்தையின் வரவு கண்டு,ஆண்டவின் அற்புதம் நடந்துவிட்டதாக முழங்காலில் நின்று வணக்கம் செய்வதும் மனமுருகும் காட்சிகளாகும்.
இன்றைய உலக சந்ததியின் தாய் எனப்படுபவள் பத்து மில்லியன் வருடங்களுக்குமுன் ஆபிரிக்காக் கண்டத்தில் பிறந்த கறுத்தப் பெண் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இனி வரும் மானுட விருத்திக்கும் ஒரு கற்றுப்பு இனப்பெண் மூலகாரணியாயிருக்கலாம் என்பதை இப்படம் மறைமுகமாகச் சொல்கிறது.

இப்படத்தின் கதாபாத்திரமாக நடிக்கும் கிலைவ் ஓவின் ஆங்கிலப்படங்கள்பார்க்கும் பலருக்குப் பரிச்சயமானவராகும். கடந்தவருடம் வெளிவந்து வெற்றிவாகை போட்டு, ஒஸ்கார் விருதில் இவருக்குச்சிறந்த துணை நடிகர் என்ற விருதை வாங்கிக் கொடுத்தபடமான 'குலோசர்'(Closer) என்ற படத்தில், ஹொலிவூட்டின் 'பெரிய' நடிகையான ஜூலியா ரொபேர்ட்டின் கணவராக நடித்து, கோடிக்கணக்கான கன்னிகளைத் தன் நடிப்பால் கவர்ந்திருப்பவர். அத்துடன் கடந்தவருடம் வெளிவந்த மிகவும் 'அக்ஸன்' படமான ' சின் சிட்டியில் (Sin city) நடித்தபின், இனிவரப்போகும் ஜேம்ஸ் பொண்ட் படத்திற்குக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கபடவிருந்த ஆங்கில நடிகர்களில் ஒருத்தர். அதேபோல் ஆங்கிலப்படங்கள் பார்ப்பவர்களுக்கு. ஹாலிவூட் நடிகையான ஜூலியானா மூர் பற்றிச் சொல்லத்தேவையில்லை. பிரபலமான குணசித்திரநடிகையாகப் பேர்பெற்றவர்.

சில்ட்றென் ஒவ் மென் படத்தில் கிட்டத்தட்ட எல்லக்காட்சியிலும் வரும் நடிகை, கிலாயா ஹோப் அஷிமி என்ற இளம் கறுத்த நடிகை கடந்த வருடம் வெளிவந்த, றுவாண்டா படுகொலைகளப்(1996) பிரதிபலித்த 'டோக்ஸ்' (Dogs eat dogs) படத்தின் நடித்து உலகப்புகழும் பல பரிசுகளும் பெற்றவர். இந்த இளம் நடிகை இப்போது, நான் எனது முதுகலைப்படிப்பைத் தொடர்ந்த லண்டன் சர்வகலாசாலையின் (SOAS-School of African andOriental Studies ) மாணவியாகப்போவது பற்றிப் பற்றிப் பெருமையடைந்தேன். தனது நடிப்புத் திறமையைப்பற்ற்ப் பெருமையடித்துக்கொள்ளாமல்,'' நடிப்பு தனது பகுதிநேர வேலை'' என்று தாழ்மையுடன் சொன்னது இவரின் சிறந்த மனப்பான்மையை எடுத்துக்காட்டியது.

இப்படத்தின் தத்துவத்தைத் தங்கள் நடிப்பில் மூலம் வெளிப்படுத்தியவர்களில், பழம்பெரும் ஆங்கில நடிகர் மைக்கல் கேன், (Micheal Cain),பாம் பெறிஸ் (Pam Ferris) சிவெடெல் எஜியோஜி (Chiwetel Ejiofor) என்போர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. பெண்கள் பலவிதத்திலும் ஆண்களின் சொத்தாக நடத்தப்படுவது இப்படத்திலும் அப்பட்டமாகத் தெரிகிறது, ஆனாலும் ஆண், பெண், நிறம், வர்க்கம் என்றபேதம் பாராது மானுட வளர்ச்சிக்கு உதவிசெய்ய ஒருகூட்டம் (தியோ போன்ற) இருக்கும் என்ற நம்பிக்கையையும் இப்படம் சொல்கிறது.

பதிவுகள் - நவம்பர் 2006  இதழ் 83


7. இரு ஹொலிவூட் படங்களின் சிறு விமர்சனங்கள்!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )சில வருடங்களுக்கு முன் கிறிஸ்த சமயவாதிகளால் மிகவும் எதிர்க்கப்பட்ட ' டாவின்சி கோட்'' என்ற படத்தின் கதநாயகனக நடித்த டொம் ஹாங் என்ற சிறந்த நடிகர் இந்தப்படத்தின் முக்கிய பாத்திரமான சார்ல்ஸ் வில்சன் என்ற அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில காங்கிரஸ் பிரதிநிதியாக நடிக்கிறார்கடந்த ஆண்டின் கடைசிப்பகுதியிற் தயார்செய்யப்பட்டு தற்போது சினிமா அரங்குகளில் வெற்றிநடைபோடும் அமெரிக்க ஹொலிவூட் படங்களில் charles wilson's war, Kite runner என்ற இரு படங்களும் பல விதங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக வெளி வந்திருக்கின்றன. ஒஸ்கார் விழாவுக்குச் சில மாதங்களுக்கு முன் சில திறமையான, பிரச்சினைக்குரிய படங்கள் வெளிவருவதுண்டு. கடந்த சில வருடங்களாக அப்படியான சில படங்கள் வந்து சில பரிசுகளைத்தட்டிக்கொண்டு போயின.இப்போது வந்திருக்கும் இப்படங்களும் பல நிறுவனங்களின் தெரிவுகளில் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வருடம் வந்திருக்கும் இரண்டு முக்கியமான படங்களான ''சார்ல்ஸ் வில்சனின் போர்'', ''பட்டம் ஓட்டுபவன்'' என்ற இரு படங்களும் சிறந்த இரு நாவல்களிலுருந்து திரைப்படங்களாக வந்திருக்கின்றன.

1. ''Charles Wilson's War''
சில வருடங்களுக்கு முன் கிறிஸ்த சமயவாதிகளால் மிகவும் எதிர்க்கப்பட்ட ' டாவின்சி கோட்'' என்ற படத்தின் கதநாயகனக நடித்த டொம் ஹாங் என்ற சிறந்த நடிகர் இந்தப்படத்தின் முக்கிய பாத்திரமான சார்ல்ஸ் வில்சன் என்ற அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில காங்கிரஸ் பிரதிநிதியாக நடிக்கிறார். சார்ல்ஸ் வ்¢ல்சன் என்ற ஒரு காங்கிரஸ் பிரதி நிதி, உலக சநித்திரத்தின் ஒரு முக்கியபகுதியை மாற்றிய பெருமைக்குரியவராகப் படைத்து இந்தப் வந்திருக்கின்றது. ஒரு பெரிய மாபெரும் சர்வதேச அரசியல் மாற்றத்தை உண்டாக்கிய அமெரிக்க வல்லமை என்ற அக்கினி பிறக்க, அமெரிக்காவின் சிறு அரசியல் கருவாய்ச் சார்ல்ஸ் வில்சன் இருந்திருக்கிறார் என்று இப்படம் சொல்கிறது.

கதைச்சுருக்கம்:
1980ம் ஆண்டின் ஆரம்பகாலகட்டத்தில், இரஷ்யா தனது படையை 130.000 துருப்புக்களை ஆபுகானிஸ்தானுக்கு அனுப்புகிறது. அப்படையெடுப்பில் ஆயிரக்கணக்கான ஆபுகானிஸ்தானிய மக்கள் இறக்கிறார்கள். ஆபுகானிஸ்தானின் ஐந்திலொரு பகுதி மக்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகர்ப்பகுதிகளில் அகதிகளாக ஓடிப்போய்த் துன்பப்படுகிறார்கள். இரஷ்யியப்படைகளை எதிர்க்க ஆபுகானிஸ்தானின் முஜாஹடீன் என்ற போர்க்குழுவினர் போராடுகிறார்கள். அவர்களிடம் இரஷ்யாவின் அதி நவீன ஆயுதங்களை எதிர்க்கும் வல்லமையுள்ள ஆயுதங்கள் எதுவும் கிடையாது. aமெரிக்க சி.ஐ.ஏ ஸ்தாபனம் இரஷ்யப்படைகள், வளர்ச்சியற்ற ஆபுகானிஸ்தான் நாட்டில் அதிகாரபலமாக முன்னேறுவதைப்பற்றிப்பெருதும் அக்கறை எடுக்கவில்லை.மதுவும் மங்கைகளும் என்று உல்லாச வாழ்க்கை நடத்திப் பல பிரச்சினைகளில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கும் சார்ல்ஸ் வில்சன் என்ற டெக்ஸாஸ் மாநில காங்கிரஸ் பிரதி நிதி ஆபுகானிஸ்தானில் இரஷ்யா முன்னேறிக்கொண்டுவருவதையும் மக்கள் படும் துன்பத்தையும் அமெரிக்கா ஏன் சட்டை செய்யவில்லை என்று கேள்விகேட்கிறார். அமெரிக்காவின் உளவுத்தாபனமான C.I.A. (Central Intellegence Agency), பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஆபுகாஸ்தானின் நிலைபற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று சி. ஐ. ஏ அதிகாரிகலிலொருத்தனான கஷ் அவ்ரொகோடா(பிலிப் செய்மொர்) என்பவன் குமுறுகிறான். அதே நேரம் ஹ¥ஸ்டன் மாநில காங்கிரஸ் பிரதி நிதியும் , சார்ல்ஸ் வில்சனின் சிலவேளைக்காதலியுமான அமெரிக்காவின் ஆறாவது கோடிஸ்வரியிமான ஜோஆனா ஹெர்ரிங் (ஜூலியட் ரொபேர்ட்), இரஷ்யாவைத் தோற்கடிக்க பாகிஸ்தானின் உதவி எடுக்கவேண்டும் என்று சொல்கிறாள்.'இன்று ஆபுகானிஸ்தானுக்குள் கால் வைத்திருக்கும் இரஷ்யா நாளைக்கு மற்றைய அண்டை நாடுகளான ஈராக், இரான்,மத்தியதரைக் கடல் நாடுகளுக்குள்ளும் அதிகாரம் செலுத்தும். அந்தத் திட்டத்தை அடியிலேயே கிள்ளியெறிந்து இரஷ்யாவைத்தோற்கடிக்கவேண்டிய முக்கியம்' என்று அழுத்திக்கூறுகிறாள்.அந்தக்கால கட்டத்தில் இந்தியாவில் இந்திரா காந்தி இரஷ்யாவுடன் நல்லுறவை வைத்திருந்தார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஷியா உல் ஹாக் அமெரிகாவின் உதவியுடன் மிகப்பெரிய ஆயுதச்சேர்வுகளைச்செய்து கொண்டிருந்தார்.

சார்ள்ஸ் வில்சன், கஸ் அவ்ரொகொடா,ஜோஆனா என்ற மூவரும் சேர்ந்து, இரஷ்யாவுக்கு எதிரான ஆபுகானிஸ்தான் முஜாஹடீன் போருக்கு உதவி செய்ய அமெரிக்கா ஒதுக்கிய ஐந்து மில்லியன் டாலர்களை ஒரு பில்லியனாக உயர்த்தி நவீன ஆயுதங்களை, இஸ்ரேலின் உதவியுடன் பாகிஸ்தான் வழியாக ஆபுகானிஸ்தானின் முஜாஹடீன் போராளிகளுக்கு அனுப்பி இரஷ்யாவைத் தோற்கடிக்கப்பண்ணுகிறார்கள்.

விமர்சனமும் கருத்தும்:
அன்று அமெரிக்காவின் உதவியுடன் ஆபுகானிஸ்தான் முஜாஹடீன் போராளிகளால் உண்டான இரஷ்யாவின் இந்தத் தோல்விதான் இன்று உலகில் நடக்கும் பலமாற்றங்களுக்கு அத்திவாரம் என்றால் அது மிகையாகாது. ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும்போது ஆபுகானிஸ்தானில் முஜாஹடீனின் போராளிகளின் திறமையும், அமெரிக்காவுடன் சேர்ந்திருந்த பின்லாடனின் வரலாறும் ஒட்டு மொத்தமாக மறைக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவூட் படங்களில் அரசியல் திணிப்புக்கள், சமூகக் கருத்துக்கள், இனவாதக் கொடுமைகள் என்பன திறமையாகக் கையாளப்படுவதுண்டு. இந்தப்படம் ஒட்டு மொத்தமாக இரஷ்யாவை மிகவும் ஒரு முட்டாளாகவும் பலவீனமானதான, அரசியற்திறமையற்ற நாடாகக் காட்டுவதற்கு எடுத்த படம்போற் தெரிகிறது.

அன்று இரஷ்யா ஆபுகானிஸ்தானில் செய்த கொடுமைகளைக்கு ஒரு சில வருடங்களுக்கு முன் வியட்நாமிலும், நிக்கராக்குவாவிலும் இன்று, ஈராக் நாட்டில் அமெரிக்கப்படைகள் செய்கின்றன.

80 ஆண்டுகளின் முற்பகுதிகளில் இரஷ்யா ஆபுகானிஸ்தானில் எதிர்நோக்கிய தோல்வியும் அதைத்தொடர்ந்து, மேற்கு வல்லரசுகளால் ( பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரட் தச்சர், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகன்) முன்னெடுத்த இராஜதந்திரங்களாலும் இரஷ்யாவின் வல்லமை உலக நாடுகளில் குறைகிறது. இரஷ்யா பிளவு படுகிறது. ஜேர்மனி இணை படுகிறது. இரஷ்யாவின் சினேகித நாடுகளாயிருந்த பல நாடுகள் குழம்புகின்றன. இந்தியா போன்ற பெரியாநாடுகள் அமெரிக்கா சார்பெடுக்கிறது. மத்திய தரைப்பகுதி நாடுகள் அமெரிக்காவின் புதிய காலனித்துவத்துக்குள் அகப்பட்டுக்கொள்கிறன்றன.

இன்று பல நாடுகள் பொருளாதார ரீதியாக மேற்கு வல்லரசுகளைச் சவாலுக்கு அழைக்கின்றன. வளர்ந்து வரும், சீனா, இந்தியா, பிரேசில், நைஜீரியா என்பன ஏதோ ஒருவகையில் அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றன. உதாரணம் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையிலான அணுபரிசோதனை ஒப்பந்தங்கள் என்பன ஒரு சிறு உதாரணம். அமெரிக்காவின் வல்லமையைச் சாதாரண மக்களால் அங்கிகரிக்கவும் அனுமதிக்கவும் , அமெரிக்காவின் மாபெரும் சக்தியான பணவலிமை, நவீன போர்க்கருவிகள் பற்றிய விளக்கங்கள் சர்வஜன மயப்படுத்தப்படவும் இந்தப்படம் பயன் படுத்தப்பட்டிருக்கிறதுபோற் தெரிகிறது. ''சார்ல்ஸ் வில்சனின் போர்'' என்ற ஹாலிவூட், வர்த்தக சினிமா அமெரிக்காவின் 'மேதகு'' ஸ்தானத்தை மிகவும் திறமையாகச் வலு செய்திருக்கிறது.

உண்மையான நடைமுறையில், இன்று அமெரிக்காவின் பொருளாதாரம் தேக்க நிலை அடைந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தை முன்னெடுக்க அரேபியாநாடுகளின் எண்ணெய் தேவை. தனது தேவையில் மூன்று விகுதத்தை மட்டுமே அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் அமெரிக்காவுக்கு எண்ணெய் கொடுக்கும் நாடுகளான அரேபியா, நையீரியா, பிரேசில் போன்ற நாடுகளின் தயவு தேவை. அவர்களுக்கும் இரஷ்யாவுக்குமிடையில் எந்தவித ஆழமான உறவும் வரக்கூடாது என்பது அமெரிக்காவின் வெளிவகாரக் கொள்கைகளில் ஒன்றாகும். இன்று ஆபிரிக்கா நாடுகளில் சீனா காலூன்றத்தொடங்கிவிட்டது. கென்யா, தான்சானியா போன்ற நாடுகளில் இந்தியா வர்த்தகம் கோலோச்சுகிறது. நையீரியா தனது தேவைகளான மருந்து உற்பத்தி போன்றவற்கு மேற்கு நாடுகளை நம்பாமல் தனது உற்பத்தியைத்தனது சினேகித நாடுகளின் தயவுடன் தொடங்கிவிட்டது. இரஷ்யாவுடனுடனிருந்து கிழக்கு ஐரோபிய நாடுகள் பிரிக்கப்பட்டாலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான 'காஸ்' இரஷ்யாவின் தயவிற் தங்கியிருக்கிறது.

பொருளாதரீதியில் உலக நாடுகளை அடிமைப்படித்தி வைக்க முடியாத அமெரிக்கா தனது நவீன ஆயுத உற்பத்தி.வர்த்தகம் மூலம் தனது வல்லமையை நிலை நிறுத்த முயல்கிறது. சார்ல்ஸ் வில்சனின் போர் என்ற படம் ' அமெரிக்காவின் போர்' என்று பெயெர் வைத்திருக்க வேண்டியபடம். எந்தவிதமான நவீனா ஆயுதங்களாலும் மக்கள் சக்தியை வெல்ல முடியாது என்பதற்கு வியட்நாம் போர் சாட்சியாய் இருந்ததை தலைக்கனம் பிடித்த அமெரிக்கா மறந்து விட்டது. இன்று ஆபுகானிஸ்தானில் நடக்கும் போரில் பங்கு பெற மாட்டோம் என்று அண்டை நாடான கனடாவுக்கு ஓடும் அமெரிக்க இளைஞர்பற்றி ஏன் அமெரிக்கா படம் எடுக்கக்கூடாது என்ற கேள்வி இந்தப்படத்தைப்பார்க்கும்போது மனதில் உதித்தது. ஆபுகானிஸ்தானில் நடக்கும் போருக்கு அமெரிக்க இளைஞர்களைச்சேர்ப்பதற்கு இந்தப்படம் பிரசார சாதனமா என்ற சந்தேகமும் இப்படம் பார்ப்போருக்கு வரலாம்.

அமெரிக்காவின் தயவின்றி எதுவும் வெற்றி பெறாது என்ற பிரசாரத்திற்கு இப்படம் சாட்சியாக இருக்கிறது. ஆபுகானிஸ்தான் மக்களின் போர்த்திறமை மட்டப்படுத்தப்பட்டு பாகிஸ்தானின் ஜனாதிபதிய்யாயிருந்த ஷியா உல்- ஹாக், அப்போது பிரதமராக இருந்த பூட்டோவைக்கொலை செய்தார் என்று கிண்டலான வகையில் இப்படத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகம் கிடையாது, அமெரிக்கரின் உள்நுளைவாற்தான் ஜனநாயகம் உயிர்வாழும் என்பதை அமெரிக்கப்படம் எடுத்துக்காட்ட முனைகிறது. நாலா பக்கத்திலும் மலைகளால் சூழப்பட்டிருக்கும் ஆபுகானிஸ்தானை, வெளியிலிருந்து வரும் யாராலும் வெற்றி கொள்ள முடியா நாடு என்பதை அமெரிக்கர் மறந்து விடுகிறார்கள்.

வழக்கம்போல் மிகவும் எடுப்பாகத் திரைப்படமாக்கப்பட்டிருக்கும் ஜோர்க் க்ரைல்(george Crile) என்பவரின் நாவலுக்கு மைக் நிக்கல்ஸ்ஸின் டைரக்சன் மெருகு கொடுத்திருக்கிறது. சார்ல்ஸ் வில்சனாக நடித்த பழம்பெரும் நடிகர் டொம் ஹாங்கின் நடிப்பு வழக்கம்போல் மிக அபாரம். சி. ஐ. ஏ ஏஜெண்ட் கஸ் அவ்ரோகோடாவாக நடித்த பிலிப் சேய்மோரின் நடிப்பு யதார்தமாகவே படிந்திருக்கிறது.

அரசியல்வாதிக்கு மதுப்போத்தலை லஞ்சம் கொடுத்தபோது, ஒட்டுக்கேட்கும் இரகசியக் கருவிகளையும் போத்தலுடன் சேர்த்துக்கொடுத்து மிகப்பெரிய காங்கிரஸ் பிரதிநிதியை முட்டாளாக்கிய கட்டம் ரசிக்கக்கூடியது மட்டுமல்ல வியக்கத்தக்கதுமாகும். படம்வெளிவந்து பல நாடுகளிலும் ஓடி முடியமுதலே, இப்படம் பல விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. 'பிரிட்டிஷ் பாவ்டா', 'அமெரிக்க கோல்டென் க்லோப்', 'சிக்காக்கோ பிலிம் செண்டர் அஸ்ஸோஸியேசன்', 'ப்ரோட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அஸ்ஸோஸியேசன் அவார்ட்ஸ்' என்று பல விருதுகளைப் பல திறமைகளுக்காகத் ( நடிப்பு-supporting actor -Philip Seymour, திரைக்கதையமைப்பு Screen play -Aron Sorkin, டைரக்சன்-Director Mike Nicholes, திறம்படம்) தட்டிக்கொண்டு போயிருக்கிறது. பணம் படைத்தவர்கள் எது சொன்னாலும் அது இறைவன் மொழிக்குச் சரி, என்பது அமெரிக்காவின் வல்லமையைப் பிரசாரம் செய்யும் இப்படத்தைப் பார்க்கும்போது புரிந்தது.

உதாரணம், எங்களூரில் ஒரு போடியார் இருந்தார். பெண்களும் போத்தலும் அவரின் இரு கண்கள். அவரை எதிர்த்துப்பேசுவார் யாரும் கிடையாது. அவர் இட்டதைச்செய்ய எத்தனையோபேர் கைகட்டி வாய் புதைத்துக் காத்திருந்தார்கள். காலக்கிரமத்தில். ஊரைத் திருத்தவேண்டும் என்று ஒரு இளைஞன் அவருடன் தேர்தலில் போட்டிபோட்டான். போடியாரின் பணம், ஊரின் கோயில் தொடக்கம் குடிசைவரை பேசியது, ஆடியது, அழகாகப்பாடியது, அதிகாரம் போடியாருக்குக் கிடைத்தது. சீர்திருத்தம் கேட்ட இளைஞன் ஊரில் தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்டான். காலக்கிரமத்தில் அவனும் போடியார் வழியை நாடினான்.........மிகுதி எங்கள் எல்லோராலும் ஊகிக்கக்கூடியதே.

2.''.Kite Runner''--''பட்டம் ஓட்டுபவன்''.

பொருளாதார மட்டத்தின் இரு திசைகளில் வாழ்ந்து பட்டம் விடும் குழந்தை விளையாட்டின் மூலம் ஒன்றாகச் சேர்ந்து, அந்தச்சேர்ப்பு சினேகிதமாக உருவெடுத்து, காலக்கிரமத்தில் ஆபுகானிஸ்தானில் நடந்த அரசியற் கொடுமைகளால் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோன இரு சிறு ஆபுகனிஸ்தான் சிறுவர்களை மையப்படுத்திய கதையைக்கொண்டதுபொருளாதார மட்டத்தின் இரு திசைகளில் வாழ்ந்து பட்டம் விடும் குழந்தை விளையாட்டின் மூலம் ஒன்றாகச் சேர்ந்து, அந்தச்சேர்ப்பு சினேகிதமாக உருவெடுத்து, காலக்கிரமத்தில் ஆபுகானிஸ்தானில் நடந்த அரசியற் கொடுமைகளால் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோன இரு சிறு ஆபுகனிஸ்தான் சிறுவர்களை மையப்படுத்திய கதையைக்கொண்டது இப்படம். பட்டம் விடுவது என்பது வானத்தில் தங்களின் படைப்புக்களை வளைத்தும் நெளித்தும் , உயர்த்தியும் தாழ்த்தியும் விடுவதது மட்டுமல்ல. பட்டம் விடுவது என்பது ஒரு மனிதனின் சுதந்திரத்தின் எடுத்துக்காட்டு. ஆக்கத்தின் அலங்கரிப்பு, திறமையின் வெளிப்பாடு, சுதந்திரத்தின் ஒட்டு மொத்தக்குறியீடு என்பதை இப்படம் மிக மிக அழகாக எடுத்துக்காட்டுகிறது.

காலிட் ஹ¤சேன் என்ற ஆபுகானிஸ்தான் எழுத்தாளரின் சிறந்த நாவல் மார்ச் பொfஸ்டர் (Marc Foster) என்பவரின் திரைக்கதை அமைப்புடன் வெளிவந்திருக்கிறது. ஆத்மாவைச் சுண்டியெடுத்துக் கண்ணீர் வரவழைக்கும் கதையைப்பின்னிக் காவியம் படைத்திருக்கிறார் பொfஸ்டர்.
இவர் திரைக்கதை எழுதிய ஒஸ்கார்(2001) விருது பெற்ற 'மொன்ஸ்டர் பால்' என்ற படத்தைப்பார்த்தவர்களுக்கு இவரின் கலைப்படைப்புக்களைப் பற்றிச்சொல்லத் தேவையில்லை. அமெரிக்காவின் இனவாதத்தை நவீன யதார்த்தப்படுத்தி Monster ball'' என்ற காவியம் படைத்தவர் பொFஸ்டர்.

கைட் ரன்னெர்- கதைச்சுருக்கம்:

1980ல் ஆபுகானிஸ்தானை நோக்கிய 130.000 இரஷ்ய துருப்புக்களின் படையெடுப்புக்கு முன் பளிங்கற்ற காபுல் நகரின் நீலவானில் உயரப்பறக்கும் பட்டங்களுடன் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அமீர் என்ற பணக்கர வீட்டுப்பையனுக்கும் அவனது வீட்டில் நீண்ட காலம் வேலைக்கரனாகவிருப்பவனின் மகனான, 'ஷியா' சிறுபான்மையினத்தவனான ஹசானுக்கும் உள்ள உறவும் நட்பும், நெருக்கமும், பரிவும், பிரிவும், தேடலும், போராட்டமும், குமுறலும், சேரலும் ,மாற்றமும்தான் இந்தப்படக்கதை.

அமீரின் (பணக்காரப்பையன்) பட்டம் விடுவதில் ஆர்வமுள்ளவன் அவனின் தகப்பன் மேல் மட்டத்தைச் சேர்ந்தவன்.மதுவும் மங்கையும் விடயத்தில் தாராள மனப்பான்மையுள்ளவன். அவனின் வீட்டின் நீண்டகால வேலைக்காரனின் மகன் ஹசான் பட்டம் விடுவதில் கெட்டிக்காரன். காபுலில் நடந்த குழந்தைகளின் பட்டம் விடும் போட்டியில் ஹசானின் உதவியுடன் அமீர் வெற்றிபெறுகிறான். இதைப்பொறுக்க முடியாத பாஸ்டுன் என்ற பெரிய இனத்தைச்சேர்ந்த அஷீப் என்பவனும் அவனின் கூட்டாளிகளும் ஹசானை இடைமறித்து அடித்து உதைத்துப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி விடுகிறார்கள். இதை மறைந்திருந்து பார்த்த அமீர் தன்னால் ஹசானுக்கு உதவ முடியவில்லை என்ற குற்ற உணர்வுகுள்ளாகிறான்.

அமீருக்காக வேலைக்காரப்பையனான ஹசான் எதுவும் செய்வான் எதையும் தாங்கிக்கொள்வான் என்று அமீருக்குப்புரிகிறது. ஆனாலும் அஷீப் போன்ற கொடுமைக்காரக்கூட்டத்திலிருந்து ஹசானைத் தன்னாற் காப்பாற்ற முடியாது என்று புரிகிறது. அமீரின் தவிப்பு,எப்படியும் ஹசானைத் தன்னிடமிருந்து விடுதலை செய்யவேண்டும் என்று முடிவு கட்டுகிறது. ஹசானைத் திருடன் என்று குற்றம் சாட்டுகிறான் அமீர்.

நீண்ட காலம் வேலை செய்தும் தங்களுக்குத் திருட்டுப்பட்டம் கிடைத்ததால் ஹசானின் தகப்பன் ஹசானுடன் வெளியேறுகிறான். ஹசானைத் தன் மகன்மாதிரிப் பாசமாக நேசித்த அமீரின் தகப்பன் பாபா, வேலைக்காரனை வீட்டை விட்டுப்போகவேண்டாம் என்று கெஞ்சுகிறார். ஹசான் தகப்பனுடன் அமீரை விட்டுப்பிரிகிறான்.

இரஷ்யப்படை காபுலுக்குள் நுழைகிறது. பணக்காரர்கள் நாட்டை விட்டோடுகிறார்கள். அமீரின் தகப்பன் கொம்யூனிச எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு வாதியாயிருப்பதால்அமீரும் தகப்பனும் பாகிஸ்தானுக்குப்போய் அங்கிருந்து அமெரிக்கா வந்து சேர்கிறார்கள்.
இரஷ்யர் வரமுதல் ஆபுகானிஸ்தானின்படை அதிபதியாயிருந்து, தற்போது அமெரிக்காவில் அகதியாயிருக்கும் ஆபுகானிஸ்தான் முதியவரின் மகளுக்கும் இளைஞனான அமீருக்கும் காதல் வருகிறது. கல்யாணம் நடக்கிறது. அமீரின் தகப்பன் மரணமடைகிறார்.
ஆபுகானிஸ்தானில் தலிபான்கள் கோலோச்சுகிறார்கள். 2000ம் ஆண்டு, அமீரின் சித்தப்பாவிடமிருந்து டெலிபோன் செய்தி வருகிறது. தான் இறக்கமுதல் அமீர் கட்டாயம் காபுலுக்கு வரவேண்டுமென்று கெஞ்சுகிறார்.

சித்தப்பனைப்பார்க்கச் சென்ற அமீர், ஆபுகானிஸ்தானின் தலைநகரான காபுலில் மிகவும் கொடுமையான தலிபான் ஆட்சியை நேரிற் காண்கிறான் அமீர். இஸ்லாமியக் கலாச்சாரத்தைப்பின் பற்றாத குற்றம் சாட்டிப் பெண்கள் பகிரங்கமாகக் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள். பெண்கள் கல்வி மறுக்கப்படுகிறது. பெண்கள் வீடுகளில் சி¨றிவைக்கப்படுகிறார்கள்நகர் ஒரு நரக உலகமாகக் காட்சியழிக்கிறது. தாடிவைக்காதவர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். ஒருகாலத்தில் ஹசானைப்பாலியற் கொடுமை செய்து வருத்திய அஷீப் தற்போது காபுலின் தலிபான் தலைவனாக இருக்கிறான்.
ஹசான் பற்றிய விபரத்தைத் தனது சித்தப்பாவிடம் அமீர் கேட்கிறான். பல காலத்தின் பின் மீண்டும் அமீரின் வீட்டு வேலைக்காரனாக வந்த ஹசானையும் அவனின் மனைவியையும் பாஸ்டுன் இனத்தைச்சேர்ந்த அஷீப்பின் தலிபான் கூட்டம் சித்திரவதை கொலை செய்து விட்டதாகவும் ஹசானின் ஒரே மகனை அஷீப் பிடித்துக்கொண்டு போய்விட்டதாகவும் சித்தப்பா சொல்கிறார். ஒரு காலத்தில் ஹசான் வீட்டை விட்டுப்போகத் தான் தான் காரணம் என்றழுகிறான் அமீர்.

' ஆனால் அதை விட முக்கிய காரணம் ... ஹசான் உனது தம்பி.. உங்கள் வீட்டு வேலைக்கரிக்கும் உனது தகப்பனுக்கும் பிறந்தவன் ஹசான், அதுதான் உனது தகப்பன் ஹசானைத் தனது குழந்தைபோல் நடத்தினார்' என்று சொல்கிறார் சித்தப்பா.

''ஏன் ஹசானை எனது தகப்பன் தனது மகனாக ஏற்றுக்கொள்லவில்லை''? என்று கேட்கிறான் அமீர்.

'' ஹசானின் தாய் சிறுபான்மையினமான 'ஷியா' முஸ்லிம் , உனது தகப்பன் மேல்சாதி.. அதனால் பகிரங்கமாக ஹசானையும் அவனது தாயையும் உனது தகப்பனால் ஏற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது'' என்று சொல்கிறார் அமீரின் சித்தப்பா.

தங்கள் குடும்பம் ஹசானின் குடும்பத்துக்குச் செய்த கொடுமை கேட்டு வருந்துகிறான் அமீர். உடனையாகத் தனது தம்பியின் மகனைத்தேடிக் காபுல் எங்கும் அலைகிறான் அமீர். தலிபான் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஹசானின் மகனைக்காப்பாற்ற எவ்வளவு பணமும் தலிபானுகுத்தரத் தயாரகவிருக்கிறான் அமீர். இஸ்லாமிய ஒழுக்க முறைகளையும் கலாச்சாரக்கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் தலிபானான அஷீப் ஹசானின் மகனையும் பாலியற் தேவைக்குப்பயன் படுத்திவைத்திருப்பது தெரிகிறது. ஆத்திரத்தில் அஷீப்பைத் தாக்க முயன்ற அமீர் ஹசானின் மகனின் உதவியுடன் தப்பி வருகிறான்.

அமெரிக்காவுக்கு ஹசானின் மகனைக் கொண்டுவந்த குழந்தையில்லாத எனக்கு நீதான் குழந்தை என்று பாசத்துடன் வளர்க்கிறான். படைத் தலைவனாக இருந்த அமீரின் மாமனார் ஹசானின் இனம் பற்றித் (ஷியா முஸ்லிம்)தாழ்வாகப் பேசியதைக்கேட்ட அமீர் ''இவன் எனது வாரிசு. அதற்கு மேல் நீங்கள் ஒன்றும் பேசத்தேவையில்லை''என்று திட்டவட்டமாகச்சொல்கிறான்.

சிறுவயதிலேயே தனக்கு நடந்த கொடுமைகளால் தன்னுடன் ஒட்டாமல் இருக்கும் ஹசானின் மகனுக்கு ''உனது தகப்பனும் நானும் விளையாடிய பட்டம் விட்டுக்காட்டுகிறேன்'' என்று கலிபோர்னியத் திடலில் பட்டம் விட்டி விளையாடிகிறான் அமீர். மாபுகாஸ்தானின் காபுல் நகர வீடுகளுக்கு மேலால் பட்டம் விடும் விளையாட்டுடன் ஆரம்பித்த படம் கலிபோர்னியாவின் மேட்டுத்திடலில் நிர்மலமான நீலவானில் பல்நிற வர்ணத்துடன் பட்டம் பறப்பதுடன் முடிகிறது.

கருத்தும் விமர்சனமும்.
ஒரு எழுத்தாளனின் சொந்த அனுபவத்தின் பிரதிபலிப்பு என்ற கதையானதால் காட்சிகளும் கதையோட்டமும் பல தடவைகள் கண்ணிர் விடவைக்கிறது. கம்யூனிச அடக்கு முறை, தலிபானின் இஸ்லாமிய வரையீடுகளுக்குள் வாழ்க்கையை இழந்துபோன மனிதர்கள் பற்றிய படம் இது. நடிகர்கள், ஸொரயாவக நடித்த அட்டோசா லியொனி அமீராக நடித்த ஷெக்கிரா ஏபிராஹிம் ஹசானாக நடித்த றஹிம் கான் அப்பாவாக நடித்த ஹொமயூன் ஏர்ஷாடி என்போரின் தரூபமான நடிப்பு நெஞ்சை விட்டகலாதவை. ஒரு பேரினவாதம் சிறுபான்மையினரை வருத்த மததையும் கலாச்சாரத்தையும் எப்படிப்பயன் படுத்துவார்கள் என்பது இப்படத்தின் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இரஷ்யினரின் படையெடுப்பை எதிர்த்துப்போராடிய ஆபுகானிஸ்தானிய மக்கள் இன்று மதவாதிகாள் கொடுமையாக நடத்தப்படுவது காட்டப்பட்டிருக்கிறது. தலைவர்கள் என்று அதிகாரத்தை எடுத்துக்கொள்பவர்கள் எப்படி மததையும் கலாச்சாரத்தையும் தங்கள் நலனுக்குப் பயன் படுத்துவார்கள் என்பதை அஷீப் என்ற பாத்திரம் பிரதி பலிக்கிறது. இஸ்லாத்தின்ஸரிய மத போதனைகள் ஆபுகானிஸ்தானின் சிறுபான்மையின ஷியா மக்களைக் காப்பாற்றவில்லை.

இப்படம் எங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் கதையை ஒட்டி இருக்கிறது. நியாயம் கேட்கப்போன அமீர், மதவெறி பிடித்த தலிபான்களால் தாக்கப்படுகிறான். இன்று இலங்கையில் சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை அதிகாரத்தால் மனிதத்தன்மையற்று நடத்தப்படுகிறார்கள். புத்த மதபோதனைகள் புனிதமற்ற கொலைகளுக்கு உதவுகின்றன. காணாமற்போன மகனைத்தேடிப்போன தமிழ்த்தாய்ச் சிங்கள காவற்படையால் பல்முறை வன்முறைக்கும் ஆளாகிறாள். யார்வருவார் காப்பாற்ற?


8. த டச்சஸ்’- The Duchess (சீமாட்டி)

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )த டச்சஸ்’- the Duchess (சீமாட்டி) ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே ’ குடும்ப அடக்கு’ முறையை எதிர்த்த பழையகாலப் பிரபுத்துவ (மறைந்து விட்ட இளவரசி டையானாவின் பழைய தலைமுறை) பெண்ணைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு சினிமா. 18ம் நூற்றாண்டின் சரித்திரத்தில் இடம் பெற்ற, இளவரசி டையானாவின் மூத்த தலை முறைப் பாட்டியின் கதை ‘த டச்சஸ்’(சீமாட்டி)) என்ற பெயரில் படமாக்கப் பட்டுத் திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் திரையிடப்பட்ட இப்படம் பல தரப்பட்ட விவாதங்களை முன்னெடுக்கப் படுகின்றன.

‘த டச்சஸ் ஒவ் டெவன்சையார்’ என்ற பிரபலமான புத்தகம் திரைப்; படமாக்கப் பட்டிருக்கிறது. பெண்ணியக் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டீருக்கிறனவா என்ற கேள்வி நெருடுகிறது. பெண்களை முன்னிலைப்படுத்தும் படம் எடுக்கும் பிரித்தானிய் படத் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் நடுநிலமையிலிருந்த சரித்திரத்தைப் பார்ப்பது புரிகிறது.

‘அதர் போலின் கேர்ல்ஸ்’ என்ற பெயரில் இரு மாதங்களுக்கு முன் வந்த படம், மாவரசர் எட்டாவது ஹென்றியின் இரண்டாவது மனைவியும, ஹென்றியால் தயை வெட்டப்பட்ட ஆன் பொலின்) அவரது சகோதரி மேரியையும் பற்றியது. ஆரச குடும்பங்கள் தங்கள் கிரிடங்களையும், அதிகாரங்களையும் தக்க வைத்துக் கொள்ள என்எனன் செய்வார்கள் , அந்த சூதுவிளையாட்டில் பெண்கள் எப்படிப் பாவிக்கப் படுகிறார்கள் என்பதை யதார்த்தமாகக் காட்டிய படம் அது.

கடந்த சில வருடங்களாகப் பிரித்தானிய அரச குடும்பங்களைப்பற்றிய சினிமாப்படங்கள், முக்கியமாக,பிரித்தானிய அரசியலில் பெரும் மாற்றங்களையுண்டாக்கிய பெண்களைப்பற்றிய படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

த டச்சஸ்’- the Duchess (சீமாட்டி)

பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கான விதையை விதைத்தவர் என்று கூறப்படும் முதலாவது எலிசபெத் மகாராணியாரைப்பற்றி எத்தனையோ படங்கள் வந்து விட்டன. அண்மையில் வந்த இரு படங்கள் சேகர் கபூர் அவர்களால் ( இந்தியாவின் தலித் மக்களின் வாழ்க்கையோடு சமபந்தப்பட்ட பூலாந்தேவி பற்றி ‘த பண்டிட் குயின’; என்ற பெயரிற் படம் எடுத்தவர்) படங்கள் எடுக்கப்பட்டன. இந்தப் படத்தில்’ கன்னிப் பேரரசி’ என்று கருதப்பட்ட முதலாவது எலிசபெத் மகாராணியாரின் ‘அந்தரங்க’ விடயங்கள் தவிர்க்கப்பட்டு, இங்கிலாந்தை ஒரு உலக வல்லரசாக வலம்வர எலிசபெத் எடத்த திட்டங்கள்,தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன. இந்தப் படங்கள், ஆங்கிலம் பேசும் நாடுகளில் வாழும் வெள்ளையின மக்களுக்கு பிரி;த்தானியப் பேரரசின் பழைய மேம்பாடுகள்,பாரம்பரியம், புதிய முறையில் சொல்லப் படுகின்றனவா என்று பல புத்திஜீவிகள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், குறிப்பிட்ட கால கட்டங்களில் சில பெண்கள் சில மாற்றங்களைச் செய்யத் துணிந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லப் பல பெண்கள் ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள். அவர்களின் எழுத்துக்கள் புதிய கண்ணோட்டத்தையுண்டாக்கும் படங்கள் படைக்கக் காரணிகளாகின்றன.

இப்படத்தைத் தயாரித்தவர் வேண்டுமென்றே, மறைந்து போன இளவரசி டையானாவின் வாழ்க்கையைப் புதிய வடிவில் படமாகத் தயாரித்திருக்கிறாரா என்ற கேள்வியைப் பலர் கேட்கிறார்கள். இளவரசியின் தலைமுறைப் பிரபுத்துவக் கொள்ளுப் பாட்டியின் கொள்ளுப் பாட்டியான ஜோர்ஜியானா(1754-1806) என்பவரின் வாழ்க்கைச்சரித்திரம்;, கிட்டத்தட்ட டையானாவின் வாழ்க்கைச்சரித்திரம் மாதிரியானதாகும். யாரோ ஒருத்தர் வாழ்க்கைபோல் இன்னொருத்தர் வாழ்க்கையும் இருப்பது தவிர்கக மடியாது. அதிலும், எத்தனையோ தலைமுறைக்குப்பின் நடந்த டையானாவின் கதைக்கும் என்றே நடந்த ஜோர்ஜியானாவின் கதைக்கும் ஏதோ ஒரு வித்தில் தொடர்பு இருந்தால் அதைப் பரம்பரைத் தொடர்பு என்று பார்க்காமல் சந்தாப்;ப வசத்தால் ஒரே மாதிரியாக அமைந்து விட்ட வாழ்க்கைகள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பன்னிரண்டு வயதுக்கு மூத்தவரான இளவரசர் சார்ல்ஸை அரச குடும்ப நெருக்கடியால் இளவரசி டையானா இளவயதில் திருமணம் செய்ய நேரிட்டதுபோல், மிகவும் இளவயதில்,ஆண் வாரிசுக்காகப் பெண்தேடும் நிலப்பிரபுத்துவரை மணம்(1774) செய்கிறாள்; பேரழகியான ஜோர்ஜியானா.

டையானாவைச் செய்யமுதல்,இளவரசர் சார்ள்ஸ}க்குப் பல தொடர்புகள் இருந்ததுபோல் ஜோர்ஜியானாவைச் செய்த அந்தப் பிரபுக்குஏற்கனவே பல பெண்களின் தொடர்புண்டு. ஜோர்ஜியானா திருமணம் செய்து வீட்டுக்கு வந்துவுடனேயே, பிரபுவின் இறந்துபோன வைப்பாட்டியின் குழந்தையைப் பரிபாலிக்கும் கடமை ஜேர்ஜியானாவுக்குக் கொடுக்கப்படுகிறது. அதைத் தட்டிக்கேட்ட ஜோர்ஜியானபவுக்கு’ இந்த வீட்டில் நிறைய இடமுள்ளது, அந்தக் குழந்தை வளருவதால் உனக்கு ஒன்றும் கெட்டுவிடாது’ என்று அவள் கணவா ;அதட்டி விடுகிறார்.

ஜோர்ஜியானாவுக்கு ஆண்குழந்தை பிறக்காமல் பெண்குழந்தைகளே பிறக்கின்றன. அதனால் ஜோர்ஜியாவின் கணவர் அதிருப்தியாகவிருக்கிறார். ‘காதலற்ற’ திருமணத்தில் சலிப்படைகிறாள் ஜோர்ஜயானா. சீமாட்டிகளின் பொழுதுபோக்கான சீட்டாடுதல், நடன விழாக்களுக்குப்போதல் என்று ஜோர்ஜியானா அலைகிறாள்;. பிரபுக்கள் வட்டத்தில் மிகவும் பேரழியாகவும், அழகான உடுப்புக்களுக்கும் அலங்காரங்களுக்கும் பெயர் பெற்ற ஜோர்ஜியானாவைப் பார்ப்பதற்கென்றே,பத்திரிகையாளர்களும்,பிரபுத்துவ மட்டக் கூட்டங்களும் அலைமோதுகின்றன.

பிரபுத்தவ வட்டத்திலுள்ள சார்ல்ஸ் கிரேய் என்பர் ஜோர்ஜியானாவை, அவளது திருமணத்துக்கு முன்பேயே விரும்புகிறார்.ஆனால் ஜோர்ஜியானா ‘டெவன்சயர் பிரபுவைச்’ செய்ய நிச்சயம் செய்யப்பட்டதால்; அவர் தனது காதலை வெளிப்படுத்தவில்லை.
அதே கால காட்டத்தில், கணவனால் துன்பப் படுத்தப் படும் எலிசபெத் என்ற சீமாட்டியின் தொடர்பு ஜோர்ஜியானாவுக்குக் கிடைக்கிறது;. கணவனுடன் பிரச்சினை பட்ட எலிசபெத் என்ற பெண், மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தாயானவள் இருக்க இடமற்றுக் கஷ்டப்பட்டபோது, அவளைத் தன வீட்டில் வைத்திருக்கக் கணவரிடம் அனமதி பெறுகிறாhள். ஜோர்ஜியானாவும், எலிசபெத்தும் ஒரேவீட்டில் மிகவும் சினேகிதமாகவிருக்கிறார்கள்.

எலிபெத்துக்கு,ஜோர்ஜியானாவின் உப்புச்சப்பற்ற வாழ்க்கை புரிகிறது. ஜோர்ஜியானாவில் ஒரு கண் வைத்திருக்கும் இளம் பிரபு சார்ல்சுசடன் ஜோர்ஜியானா தொடர்பு வைத்துக்கொள்ள எலிசபெத் உதவுகிறாள்.

பிரபுக்களின் ;ஆதிக்கத்துக்குள் வந்த பெண்கள் பிரபுக்களின்’பாவிப்புப் பொருட்கள்’ என்பதைப் பிரபு நிலைநாட்டுகிறார். ஜோர்ஜியானாவால் வீட்டுக்குள் நுழைந்த எலிசபெத், ஜோர்ஜியானாவின் வைப்பாட்டியாகிறாள். அதை எதிர்த்த ஜோர்ஜியானா அவளது கணவரால் பாலியல் கொடுமைக்காளாகிறாள். ஆண் குழந்தை பிறக்கிறது.

ஜேர்ர்ஜியானாவின் கணவரான டெவன்சயர் பிரபு, எலிசபெத்தை அவர்கள் வீட்டிலேயே வைப்பாட்டியாக வைத்திருக்கிறார்.ஜோர்ஜியானா தனது காதலன் சார்ல்ஸ் கிரேயைச் சந்திப்பது பிரபுக்கள் வட்டத்தில் வதந்தியாகப் பரவுகிறது. அந்த உறவை உடனடியாக கைவிடச்சொல்லி ஆணையிடுகிறார் பிரபு. சார்ல்சைப் பார்கவும் பழகவும் தனக்கு உரிமை தரவேண்டும அல்லது தான் பிரபுவை விவாகரத்து செய்வேன் என்று வாதாடுகிறாள் ஜோர்ஜியானா. பிரபு மறுக்கிறார். அப்படியான உறவுகள் சார்ல்சுடன் தொடர்ந்தால்,ஜோர்ஜியானா வீட்டை விட்டுத் துரத்தப் படுவாள் என்றும், அவளின் குழந்தைகளைப் பார்க்க அவளுக்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காது என்றும் கட்டளையிடுகிறார்.அத்துடன், இளைஞனான சார்ல்ஸ் கிரேயின் எதிர்காலம் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப் படும்,சார்ல்சின் பாராளுமனறக்கனவு தவுடு பொடியாகும் என்றும் மிரட்டுகிறார்.

ஜோர்ஜியானா தனது காதலன் சார்ல்சின் குழந்தை தன் வயிற்றில வளர்வதாகச் சொல்கிறாள். குழந்தையை அழிக்கச் சொலகிறார் பிரபு ஜோர்ஜியானா மறுக்கிறாள. ஜோர்hஜியானா குழந்தை பிரசவத்துக்குப் பிரான்சுக்கு அனுப்பப் படுகிறாள. எலிசபெத்தும் துணைபோகிறாள்.;
ஜோர்ஜியானாவுக்குக் குழந்தை பிறக்கிறது; சார்ல்சின் தகப்பன் வந்து குழந்தையைப் பெற்றுக் கொள்கிறாh. அக்குழந்தை,சார்ல்சின் சகோதரியின் குழந்தை எலிசா ;(1791-1859) என்ற பெயரில் வளர்கிறது.

சுர்ல்ஸ் கிரேய், தனது உறவுச் சீமாட்டி ஒருத்தரைத் திருமணம் செய்கிறார். ஜோர்ஜியானாதனது 52வது வயதில் மரணமடைகிறாள். சுhர்ல்ஸ் கிரேய் இங்கிலாந்தின் பிரதமராகிறார். 1833ல் இங்கிலாந்து பிரபுக்களின் கையிலிருந்த அடிமை வியாபாரம் சார்ல்ஸ் கிரேயால் ஒழிக்கப் படுகிறது;.

இப்படம், இங்கிலாந்தின் ஏகாதிபத்தியம் உச்ச கட்டத்திலிருக்கும்போது நடந்த கதை. இக்கதையில், பெண்கள் தங்கள்கணவனின் சொத்தாகவே மதிக்கப்படுகிறாள், பெருவிரலுக்கு அளவான தடியால்த் தனது மனைவியை அடிக்கக் கணவருக்கு உரிமையுண்டு, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் உரிமையை நிர்ணயிப்பவர் கணவரே என்றிருந்த பல பரம்பரைச் சட்டங்களை மீறுகிறாள் ஜோர்ஜியானா.; இப்படத்தில் தனது குழந்தைக்குதுத் தான்தான் பால் கொடுப்பேன் என்று திட்டவட்டமாகச் சொல்கிறாள் ஜோர்ஜியானா. வசதியுள்ள கணவன் எத்தனை வைப்பாட்டியையும் வைத்திருக்கலாம் என்ற நிலைப்பாடு அன்றைக்குப் பிரித்தானியாவின் வழக்கத்தில் இருந்ததபோல் இன்று பல நாடுகளிலும் வழக்கில் உண்டு. குடும்ப கவுரவும் என்று பேர்வைக்குள் இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இதற்கு எதிராகப்போர் தொடுத்துத் தோல்வியடைகிறாள் ஜோர்ஜியானா.

குடும்ப வாழ்க்கைக்கப்பால் அரசியலில் ஈடுபடுவது குறிப்பிடப்படுகிறது. சார்ல்ஸின் பாராளுமன்றத் தேர்தல்காலத்தில் (1784)சார்ல்ஸ}க்காக ஜோர்ஜியானா பிரசாரம் செய்தது குறிப்பிடப்படுகிறது;. உலக நாடுகளையும் பல்லின மக்களையும் அடிமைகளாக வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் அமெரிக்காவை இழந்த காலத்தில் இந்தக்காதல் கதை உருவாகியிருக்கிது. அத்துடன் அதே கால கட்டத்தில் பிரான்சிய புரட்சியும் நடந்திருக்கிறது வரலாற்றின்படி, ஜோர்ஜியானா, பிரான்சிய அரசி மாரியா அன்ரோனட்டுடன் தொடர்பு வைத்திருநத்தும், அவளின் காதலர் சார்ள்ஸ் கிரேய் பிரான்சிய புரட்சியில் சம்பந்தப்பட்டதும் தெரிகிறது. இவர்கள் பிரபுக்கள் வட்டத்தைச் சோந்தவர்கள் என்ற படியால் பிரானஸ்; அரச குடும்பத்தினரின் நனமயைக் கருத்தில் வைத்திருப்பார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், பாராளுமன்றத்துக்க வந்ததும் சார்ள் கிரேய் (அன்றைய கால கட்டத்தில் லிபரல் கட்சியாக மாற்றமடைந்த கட்சியொன்றில் இருந்தவர்) பிரித்தானிய பொருளாதாரத்தின் அடிப்படையாயிருந்த ‘ அடிமைத்’ தனத்தை ஒழிக்கிறார்.; பிரான்சிய புரட்சி, அமெரிக்கச் சுதந்திரப் போர் என்பன, அன்றைய கால கட்டத்தில வாழ்ந்த சாதாரண மக்களின் சுதந்திர சிந்தனையை மாற்றியதுபோல், கணவனால் துன்புறுத்தப் பட்ட சீமாட்டி எலிசபெத்துக்குரல் கொடுக்கவும், அரசியல் பிரசாரம் செய்யவும், தனக்குப் பிடித்தவாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஜோர்ஜியானா போராடியதற்கும் எந்த வித்தில் உதவியிருக்கும் என்பது கேள்விக்குறியாகவிருக்கிறது.

கடந்த சில தாசாப்தங்களாகப் பிரித்தானிய சமூகவாழ்க்கை மாறினாலும் அரச குடும்ப வாழ்க்கை மாறாமலிருந்தது. இறுக்கமான’ மேல்மட்ட அரச குடும்பத்தில்’ இருந்து வராமல், தகப்பனிடமிருந்து விவாகரத்து செய்த தாயை அடிக்கடி காணாத துயருடன் வாழ்ந்த டையானா இளவரசர் சார்ள்ஸைத் திருமயணம் செய்ததும் பிரித்தானிய அரச குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்தன.

ஜோர்ஜியானா மாதிரி , அன்புக்கு ஏங்கிய டையானாவைப் பொது மக்கள் வரவேற்றனா. பிpரித்தானிய அரச குடும்பத்தில் பல மாற்றங்கள் நடக்க மறைந்துவிட்ட இளவரசி டையானாவின் போக்குகள் உறுதுணையாயிருந்தன. அரச குடும்ப அங்கத்தவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற வரைமுறையைத் தூக்கியெறிந்தவர் டையானா. பொதுமக்களுடன் சாதாரண உறவுகளைத் தொடர்ந்தவர். மிதிகண்ணிவெடிகளுக்கெதிரான போராட்டத்தை உலகமயப்படுத்தியவர். அதனால், ஆயுத உற்பத்தியாளாகளின் ஆத்திரத்தை வாங்கிக் கட்டியவர். இங்கிலாந்து அரச குடுமப் வரைமுறைகளைத்தாண்டி இஸ்லாமியரைக்காதலித்தவர்.

இப்படம் பிரித்தானிய அரச பரம்பரையின் ஆண்கள், அதாவது, ஆதிக்கமுள்ளவர்கள் எப்படித் தங்களைச் சார்ந்தவர்களைப் பாவிப்பார்கள் என்பதை யதார்த்தமாகப் படம் பிடித்திருத்திருக்கிறது. பெண்கள் தங்கள் ‘சுயமையை’ நிலைநாட்டப் போராடும்போது, அவர்களுக்கெதிரான ஆயதங்களாக என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்படும் என்று சொல்லப் படுகிறது;. இன்று, பொருளாதார ரீதியில், ஓரளவு சமத்துவத்தை அனுபவிக்கும் பெண்கள் ‘குடும்பம்’ என்று வரும்போதும், சமுதாயத்தில், தாங்கள் சரியானது என்று நினைப்பதைச் செயற் படுத்த முயலும்போதும் ஆதிக்கமுள்ள ஆண்களால் அன்று கொடுமையாக நடத்தப் பட்ட’ ஜோர்ஜியானா’வாகத்தான் நடத்தப் படுகிறார்கள். ஜோர்ஜியானா,அன்று (1784), தான் சரியென நினைத்த அரசியல் கருத்தை (லிபரல் கருத்துக்கள்) ஆதரித்துப் பிரசாரம் செய்ய வந்தபோது, பிற்போக்குப் பத்திரிகைகள் கண்டபாட்டுக்கு எழுதின.

பொருளாதார ரீதியில் உழைக்கவும், மேற்படிப்புகளில் திறமைகளைக்காட்டவும் வசதியுள்ள வாழ்க்கையமைப்பை இன்று பெண்கள் அனுபவிக்கிறார்கள். இவை உண்மையான’ விடுதலையா’என்று கேட்டால் பதில் ‘இல்லை’ என்றுதான் வரும். ஏனென்றால் ‘ சுதந்திரம்’ என்ற பெயரில் மற்றவர்களின் சுதந்திரத்தை, கவுரவத்தை, சமுதாய நலனை நாசம் பண்ணும் வக்கிரம் ஆண்களால் இன்னும் வளர்கிறது;. தங்கள் ஆயதங்களாகச் சிலர் பத்திரிகைகளைப் பாவிக்கிறார்கள். இளவரசி டையானாவின் வாழ்க்கையில் பத்திரிகைகள் என்ன செய்தார்கள் என்பதும் தெரியும். டையானாவின் வாழ்க்கை முடீவுக்கும் அவர்கள் காரணிகளாக இருந்தார்கள்.

ஜோர்ஜியானாவின் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதிய அமன்தா பேர்மன், அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த ‘சுதந்திரமற்ற’ மேல்மட்ட பெண்களையும், தங்களின் ‘ சுயமையை’ நிலைநாட்டப் போராடிய பெண்களையும் பார்வையாளர்கள் முன் நிறுத்துகிறார். இப்படியான அடக்கு முறையை வைத்திருந்த பிரித்தானிய பரம்பரை மாறிவிட்டது. ஜோர்ஜியானா வாழ்ந்த கால கட்டத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. பணக்காரரின் சொத்துக்களாகத்தான் நடத்தப் பட்டார்கள்.

ஆனால், அன்று ஜோர்ஜியானா, குடும்ப அமைப்பில் பெண்களுக்குச் சமத்துவம் கேட்டு முன்னெடுத்த போராட்டம் பல தலை முறைகளுக்குப்பின் பல தரப்பட்ட போராட்டங்களுக்குப்பின வெற்றி கண்டிருக்கிறது. ஆன்றைய கால கட்டத்தில் ஆதிக்கத்திலிருந்த ஆண்களுக்காக வாக்குக் கேட்டுப் பிரசாரம் செய்கிறார் ஜோர்ஜியானா. இங்கிலாந்தில் பெண்களின் வாக்குரிமைப் போராட்டம் அதன்பின் இருநூறு வருடங்களுக்குப்பின்தான் ஆரம்பமாகியது. பிரபுக்கள் வாழ்க்கையின் ஒருபகுதி மட்டுமே இப்படத்தில் பிரதிபலிக்கப் படுகிறது. ஆடிமை வியாபாரம், ஆதிக்க பரவலாக்கல் அதில் அழிந்த கோடிக்கணக்கான கறுப்பு இன மக்கள் பற்றி எதுவும் கிடையாது. அக்கால கட்டத்தில் இங்கிலாந்தில் மிகவும் பெரிய பணக்காரர்களாக- டியுக் ஒவ் டெவன்யசர் மாதிரியாக இருந்தவர்கள் நிலப் பிரபுக்களே. பிரித்தானிய பிரபுக்கள் குடும்ப வாழ்க்கையமைப்பு, அன்றைய பெண்களின் அலங்காரங்கள், ஒரு சில அழகிய பிரிட்டிஸ் மாளிகைகள் என்பனவற்றைப்; பார்க்க விரும்புவர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாகவிருக்கும்.

பதிவுகள் - அக்டோபர்  2008 இதழ் 106
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here