காலம்- 17 ஆகஸ்ட் 19 .
சனி -மாலை 3 மணி
இடம்- Trinity Centre
Eastham -London
ரகுமான் ஜான்
தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டம் அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பில் அரசியல் தலையீடு செய்ய வேண்டும் என்பதில் தெளிவுடன் செயற்பட்டவர். விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாகத் தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர். உயிர்ப்பு, வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தொடர்ச்சியாக அர்சியல் உரையாடல்களை முன்னெடுத்து வருபவர்.
இந்த நூல்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளவர்கள்
* ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சினைகள் - தோழர் மகாலிங்கம் மகா உத்தமன்
1970களின் ஆரம்பத்திலிருந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர், மாணவர் பேரவையின் செயற்பாட்டாளர்களில் ஒருவர். அரசியல் நெருக்கடிகளின் காரணமாக புலம்பெயர்ந்து, தனது முனைவர் பட்டப்படிப்பினை யோர்க் பல்கலக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் மேற்கொண்டார். என்பதுகளில் பலஸ்தீன விடுதலை அமைப்புகள் போன்ற விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகள் ஏற்பட காரணமாகவிருந்தவர். கழகத்திற்குள் அரசியல் முரண்பாடுகள் தோன்றிய போது அதிலிருந்து வெளியேறி, தீப்பொறி அமைப்பின் அனைத்து செயற்பாடுகளிலும் பங்காற்றி, அமைப்பினை வழி நடத்தினார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை விடுதலை, புரட்சி போன்ற நோக்கங்களுக்காகவே அர்ப்பணித்தார்.
00000
*ஈழப்போராட்டத்தின் மூலோபாய ,தந்திரோபாய பிரச்சினைகள் - தோழர் சூசப்பிள்ளை நோபட்
திருமலையில் உருவாகிய முதல் தலைமுறை பட்டதாரிகளில் ஒருவர், அரச பணியைத் துறந்து முழு நேர செயற்பாட்டாளரானவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினுள் தோன்றிய அராஜக போக்குகளுக்கு எதிராக போராடியவர், "புதியதோர் உலகம்" நாவலின் ஆசிரியர். யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்து அமைப்பு பணி செய்த போது 1991 மேயில் புலிகளால் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
*ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகள் - தோழர் ஏ.எம். கோதண்டராமன்
தமிழகத்தில் மார்க்சிய லெனினிய கட்சியின் (மக்கள் யுத்தம்) தாபகர். ஈழப்போராட்டத்தினை அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே உறுதியாக ஆதரித்து வந்தவர். கோட்பாட்டு, அரசியல் விவாதங்களில் ஈழ விடுதலை அமைப்புகளுடன் பங்கெடுத்தவர். இந்திய அரசின் ஆதிக்க நோக்கங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தவர்.
இந்த நிகழ்வு முக்கியமான ஒரு அரசியல், சமூக நிகழ்வாகும், நூல் களின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் இந்த நிகழ்வில் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறார். உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
ஏற்பாடு - இலண்டன் நண்பர்கள்
தொடர்புகளுக்கு-Raj Kutty, 07956523377, T.Jeyapalan 07800596786, S. Barathi - 07450363671, M.Fauzer 07817262980,
Mahroof Fauzar <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>