அவுஸ்திரேலியா : 30 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும்
இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும் இம்மாதம் 27 ஆம் திகதி ( 27-10-2018) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House - Karobran Drive, Vermont South VIC 3133) நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தன் தலைமையில் நடைபெறும்.
இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான செயல் அமர்வும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிதியத்தின் உறுப்பினர்களையும், மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது இலங்கை மாணவர் கல்வி நிதியம்.
இந்நிகழ்வில், கலந்துரையாடலும் இராப்போசன விருந்தும் இடம்பெறவிருப்பதனால், தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும். இந்நிகழ்வில் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் நிதியத்திற்கே வழங்கப்பட்டு, மாணவர்களின் நிதிக்கொடுப்பனவில் சேர்த்துக்கொள்ளப்படும்.
2017 - 2018 காலப்பகுதிக்கான ஆண்டறிக்கை - நிதியறிக்கை என்பனவும் இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு:
விமல் அரவிந்தன் ( தலைவர்) 04 144 46 796
வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா ( நிதிச்செயலாளர்) 04 048 08 250
முருகபூபதி ( துணை நிதிச்செயலாளர்) 04 166 25 766
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.