சிறிலங்கா விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களின் 524 ஏக்கர் சொந்த
நிலத்தை தங்களிடம் கையளிக்க கோரியும் 84 குடும்பங்களை சேர்ந்த கேப்பாபிலவு
மக்கள், தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியும் இருபதாவது
நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக வருகிற செவ்வாய்க்கிழமை (21.02.2017) மாலை
ஆறு மணி தொடக்கம் ஏழு மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவிருக்கின்றது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் எல்லோரும் கலந்து கொண்டு கேப்பாபிலவு
மக்களுக்கும் மற்றும் தமது சொந்த மண்ணை மீட்பேடுப்பு போராட்டத்தில் ஈடுபடும்
அணைத்து மக்களுக்கும் கரம் கொடுப்போம், வாருங்கள்.
ஒழுங்கமைப்பு: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நோர்வே ஈழத்தமிழர் அவை
“வீழ்வது அவமானமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.