மீண்டும் ழகரம் சஞ்சிகை எதிர்வரும் ஜூன் 19ந்திகதி வெளிவரவுள்ளது. கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் 'ழகரம்' சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 என நான்கு இதழ்களே வெளிவந்துள்ள போதிலும் கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகை. 'ழகரம்' சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே சக எழுத்தாளர்களான கவிஞர் திருமாவளவன், பொன்னையா விவேகானந்தன் ஆகியோருடன் இணைந்து வெளியிட்டு வந்தார். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். கவிதைகள், தொடர்கதைகள் என பலவகைப்படைப்புகளைக் கனடாவில் வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தொண்ணூறுகளில் எழுதியிருக்கின்றார். 'கானல் நீர்க்கனவுகள்' என்னும் கவிதை நூலினை வெளியிட்டிருக்கின்றார். 'காலத்தின் பதிவுகள்' என்னும் கவிதைத்தொகுதி மலையன்பன், ரதன் ஆகியோரின் கவிதைகளுடன் இவரது கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வெளிவந்த 'ழ'கரம் சஞ்சிகை இதழ்களைப் 'படிப்பகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54#catid227
'ழகரம்' இதழ்கள் பற்றிய சுருக்கமான விபரங்கள் வருமாறு:
இதழ் 1 - ஆனி 1997:
உள் அட்டையில் விளம்பரத்துக்குப் பதில் கவிதை: திணிப்பு - ராவுத்தர். முதலாவது பக்கத்தில் ஒரு பக்க ழகரம் குழுவினரின் ஆசிரியத்தலையங்கம் 'குவியம்' என்னும் பெயரில் வெளியான அனைத்து இதழ்களிலும் வெளியாகியுள்ளது. ஆனால் ழகரம் குழு உறுப்பினர்கள் யார் யார் என்னும் விபரம் அறிவிக்கப்படவில்லை.
இதழ் ஒன்றில் வெளியான ஆக்கங்கள் விபரம் வருமாறு:
கவிதை: சந்தனக்கல் - பொன்னையா விவேகானந்தன்.
கவிதை: மின்மினிப்புள்ளி - அ.கந்தசாமி
பத்தி: கரிச்சான் கோலங்கள் - கரிச்சான் குஞ்சன்.
கவிதை: - சம்பாத்தியம் - நிலா குகதாசன் (இவர் அமரராகிவிட்டார்).
கவிதை: வேனில் - திருமாவளவன்
கவிதை: சங்காரம் - சிவவதனி பிரபாகர்
கட்டுரை: பேர்ரோல்ற் பிறேஷ்ட் - P.விக்கினேஸ்வரன்
கவிதை: பொழுது - சகாப்தன்
மொழிபெயர்ப்புக் கவிதை: கவிதையை நேசிக்கும் சிலர் - மூலம்: விஸ்லாவா ஸிம்ப்ரோஸ்கா; தமிழில் - ஜெகன்
கட்டுரை: கடலின் மீது ஒரு வண்ணத்துப் பூச்சி - சேரன் (பிரமிள் நினைவு தினக்கட்டுரையின் சுருக்கிய வடிவம்).
சிறுகதை: நானும் கேஸ்டினாவும் ஒரு பந்தயக் குதிரையும் - சக்கரவர்த்தி (சிறுகதை என்னும் பெயரில் வெளியான நெடுங்கதை; 14 பக்கங்கள்)
கட்டுரை: இளங்கறுவலின் பனிவயல் உழவு
ஓவியம் : கருணா
இதழ் 2 ஆடி 1997:
உள் அட்டைக் கவிதை: பனைகளின் துயரம் - தேவ அபிரா
ழகரம் குழுவின் ஆசிரியத்தலையங்கம்: குவியம்
கவிதை: பெயர்வுப் புலத்திலிருந்து - பொன்னையா விவேகானந்தன்
கட்டுரை: நாடக வளர்ச்சிப் படிகள் - ஞானம் லம்பேட்
புகைப்படம்: உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் அன்சல் அடம்ஸ் அவர்களின் புகைப்படம்.
கவிதை: வடலி வதை படலம் - திருமாவளவன்
சிறுகதை: மெளன யுத்தம் - இரா. சம்பந்தன்
பத்தி 'மீட்டல்': கரிச்சான் குஞ்சனின் கரிச்சான் கோலங்கள்.
கவிதை: எல்லாரையும் போல் அந்த நேரத்தில் நீ அழவில்லை - சேரன்
கட்டுரை 'எண்ண உலா': நான் பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும் - சக்கரவர்த்தி
கவிதை: இன்னும் வளராத பெரியவர்களுக்கு - இளவாலை விஜயேந்திரன்
பத்தி 'அது இது உது' : D.B.S..ஜெயராஜ்
புகைப்படம்: சல்வடோர் டாலி
பிரியாவிடைக் கவிதை: அமரரான நிலா குகதாசனுக்காக 'பிரியாநிலா'
மொழிபெயர்ப்புக் கவிதை: மாற்றம் வேண்டிப் பாடுவேன் - மூலம்: நியி ஒசுண்டேர்; தமிழில் - ரிஷி
சிறுகதை: மூன்றாம் உலகத்து விக்கிரமாதித்தன்கள் - வ.ந.கிரிதரன்
கவிதை: எதை எழுதித் தொலைக்க - ஜி.மொனிக்கா
கவிதை: நெருடல் - அ.கந்தசாமி
பத்தி 'எள்ளல்' : இளங்கறுவலின் பனிவயல் உழவு
ஓவியம் : கருணா
இதழ் 3 ஆவணி / புரட்டாதி 1997:
உள் அட்டைக் கவிதை: கவிதை - சேரன்
ழகரம் குழுவின் தலையங்கம் - குவியம்
தொடர் கட்டுரை 'நோக்கு': அமரர் அ.ந.கந்தசாமியின் பன்முக இலக்கிய ஆளுமை - வ.ந.கிரிதரன்
கவிதை: விடுமுறை - வசந்தி ராஜா
கட்டுரை: வெகுஜன வாராந்திரிகள் - ரிஷி
கவிதை: நிழல் - அடோனிஸ்
கவிதை: புதிய மயானம் -அமிர்தகன்
சிறுகதை; ஆடு, பலி, புல்லுக்கட்டு - சக்கரவர்த்தி
கவிதை: பிராமணச்சந்தைகள் - ப்ரணவன்
விமர்சனம்: என் நண்பனின் வீடு எங்கே? - ஞான ஆனந்தன்
ஊர்க்கடிதம்: யாழ்ப்பாணத்தில் புதிய தொற்றுநோய் - சூரசங்காரன்
கவிதை: கண்ணீர் - பிரியந்த்
ஓவியம்: சேதிகள் சேகரிக்கும் செவிகள் தேனீர்ச்சாலை - Ramananda Bandyopadhyay
பத்தி 'மீட்டல்': கரிச்சான் குஞ்சனின் 'கரிச்சான் கோலங்கள்'
கவிதை: ஒரு சொப்பனம் - அடோனிஸ்
கட்டுரை: அலென்கின்ஸ்பேர்க் - என்.கே.மகாலிங்கம்
கவிதை: இலையுதிர்காலத்திற்கு ஒரு கண்ணாடி - அடோனிஸ்
புகைப்படம்: "தலை"யாய சுமைகள் - ஹற்றன் தோட்டத்தில் - Dexter Cruez
பத்தி 'எள்ளல்': இளங்கறுவலில் பனிவயல் உழவு.
ஓவியம் : கருணா
இதழ் 4 ஐப்பசி 1997:
உள அட்டைக்கவிதை: தேடுகை - திருமாவளவன்
ஆசிரியத் தலையங்கம்: குவியம்
கவிதை: விளங்கிக் கொள்ள ஒரு கவிதை - பிரதீபா
நாடக விமர்சனம்: கிரீஷ் கர்நாட்டின் நாக மண்டலம் - என்.கே.மகாலிங்கம்
ஆங்கிலக் கவிதை: பின் விளைவு - மூலம்: Siegfried Sassoon ; தமிழில்: ஞானம் லம்பேட்
சிறுகதை: கறுவல் - மூர்த்தி
தொடர் கட்டுரை: அமரர் அ.ந.கந்தசாமியின் பன்முக இலக்கிய ஆளுகை - வ.ந.கிரிதரன்
கவிதை: அந்த(அ)ரங்கம் - பொ.விவேகானந்தன்
பத்தி: அது இது உது: D.B.S..ஜெயராஜ்
கவிதை: வெறுமை - கலாதரன்
கவிதை: சாஸ்வதம் - சக்கரவர்த்தி
கட்டுரை 'மீளாய்வு': பாலச்சந்தரும் பகடைகளும் - வினோதகன்
பத்தி 'மீட்டல்': கரிச்சான் குஞ்சன் - கரிச்சானின் கோலங்கள்.
இசைக்கட்டுரை: இக்கரைக்கு அக்கரை - ஜோ.அமல்ராஜ்
சிறுகதை: கடத்தல் - யோகி
கவிதை: கழிக்கப்படுவாய் - சிந்து
கட்டுரை 'அலசல்': அரங்கில்...
பத்தி 'எள்ளல்': இளங்கறுவலின் பனிவயல் உழவு.
ஓவியம் : கருணா