‘1824ஆம் ஆண்டுக்குப்பின் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்தபோது பட்ட துயரங்களை இன்று ஏழாவது தலைமுறையினரும் அனுபவித்துக்கொண்டிருக்கும் போக்கு மிகவும் கவலை தரும் விடயமாகும். மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறும் பிரஜைகளாக இன்றும் காணப்படும் அவர்களின் வாழ்க்கைநிலை இருப்பிடம், போசாக்கின்மை, சுகாதார வசதிகள், கல்வி போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். ஆண்களைவிடப் பெண்களே உடற்பலத்தை இழந்து வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிசெய்து உழைக்;கும் சக்திகளாகத் திகழ்கின்றார்கள் ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் அவர்களுக்கு கிடைக்காததால் தமது குடும்பத்தை கவனிக்கவோ போசாக்கு நிறைந்த உணவை தமது குழந்தைகளுக்கு வழங்க முடியாது மிகவும் துன்பநிலையில் காணப்படுகின்றனர்’ என்று இலங்கை பண்டாரவளையிலிருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை கீதபொங்கலன் அவர்கள் ‘லண்டன் தமிழர் தகவல் நிலையத்தில்’ இடம்பெற்ற தமிழ்ப்பெண்கள் வலுவூட்ட ஒன்றுகூடலில் கலந்து பேசியபோது தனது ஆய்வுரையில் தெரிவித்தார்.
மலையகப் பெண்களில் பெரும்பாலானோர்; தமது குடும்பம், வாழ்க்ககைச் செலவுகள், பொருளாதார வசதிகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு; வெளிநாட்டுக்குச் செல்கின்றார்கள். வீட்டுத் தலைவியின் கண்காணிப்பின்றி கணவன், பிள்ளைகள் பிறழ்வான செயல்களில் ஈடுபட்டு மேலும் துன்பத்தைச் சம்பாதிக்கும் நிலையே காணப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும். பல்வேறு மன்றங்கள், அரசியல், தொழிற்ச்சங்கங்கள் என்று இருந்தபோதும் அவர்கள்பால் அக்கறை காட்டாது செயற்படுவது கவலை தரும் விடயமாகும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார். மலையகப் பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் போதிய இடவசதியோ, ; தொழிற்நுட்ப உபகரணங்களோ, போக்குவரத்து வசதிகள், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாட ஆசிரியர்களின் பற்றாக்குறை போன்ற பல குறைபாடுகள் நிலவிக்கொண்டிருப்பது மற்றுமொரு கவலை தரும் விடயமாகும். உயர்கல்வியில் மிகவும் பின்தங்கியவர்களாகக் காணப்படுவதற்கு போதியளவு போசாக்கின்மை மிக முக்கிய காரணமாக அவதானிக்க முடிகின்றது’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘மலையகப் பெண்கள் இலக்கியம், அரசியலில் போன்றவற்றிலும் சிறந்து விளங்குபவர்களாக திகழ்கின்றபோதும்;, தற்போது அரசியல் பாராளுமன்றத்தில் முப்பத்திமூன்று பெண்கள் பதவிகளில் ஈடுபட்டு செற்படுவதற்கான சந்தர்ப்பங்களை அரசாங்கம் வழங்கிவரும் இத்தருணத்தில், மலையகப் பெண்களுக்கு உற்சாகம் வழங்குவதோடு லண்டன் வலுவூட்டல் திட்டம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
‘வடக்கு, கிழக்கு, மலையகப் பெண்களை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளில் லண்டன் பெண்கள் வலுவூட்ட திட்ட அமைப்பு முனைப்பாகச் செயற்பட்டு வருவதாகவும், ‘மகளிர் மேம்பாட்டு மாலை’ யினை ஜனவரி மாதத்தில் நடாத்தத் திட்டமிட்டிருப்பாதாகவும் அவ்வமைப்பின் தலைவி ரஞ்சனா’ தனது உரையில் தெரிவித்தார். லண்டன் வாழ் மக்களின் ஆதரவோடு கல்வி, கைத்தொழில், சுயதொழிற் செயற்பாடுகள் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிகளை மேற்கொண்டு ஊக்கமளிப்தற்கான உணர்வு தம்மிடம் மேலோங்கி நிற்பதாகவும்’ மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.