அனைவருக்கும் வணக்கம், வரும் ஜனவரி 3 2012 அன்று திருவல்லிக்கேணி பெரியதேருவில் உள்ள நூலகத்தில் என்னுடைய இரண்டாவது நூல் (முதல் ஹைக்கூ நூல்) 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' வெளியிடப்பட உள்ளது. நூலின் பெயர்: 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்'; ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்; விலை: ரூ.60; பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்; நூலின் வகை: ஹைக்கூ கவிதைகள். முழுக்க முழுக்க குழந்தைகளைப் பற்றிய ஹைக்கூ கவிதைகள் மட்டுமே மட்டுமே இந்த நூலில் இடம்பெறுகின்றன. வாங்கிப் படியுங்கள். உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். கவிதை நூல் வெளிவரப்போகும் விடயத்தைத் தெரியப்படுத்துங்கள். அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் என்னுடைய கீழ்க்கண்ட இரண்டு கவிதை நூல்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் இருவாச்சி இலக்கியத் துறைமுகம் சார்பில் கடை எண் 554 ல் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
1. அழகு ராட்சசி (விலை ரூ. 60)
2. குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் (விலை ரூ. 60)
மேலும் இருவாச்சி இலக்கியத் துறைமுகம் சார்பில் ஓவியா பதிப்பக நூல்கள் (என்னுடைய இரு நூல்கள் உட்பட), இருவாச்சி பதிப்பக நூல்கள், அன்னை இராஜேஸ்வரி பதிப்பக நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. வாங்கிப் படியுங்கள். அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.