முன்னுரை

உறவினர்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்களையும் நலம் விசாரிப்பது சிறந்த பண்பாடும், பழக்க வழக்கமாகும். அத்தகைய பண்பாட்டிற்கும், பழக்கவழக்கங்களுக்கும் கொண்ட நலம் விசாரித்தலுக்கு கம்பர் தன் இராமாயணத்தில் முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதனைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

1.நகர மக்களின் நலனை இராமன் விசாரித்தல்

இராமன் தன் எதிரே வரும் ஊர் மக்களிடம் மிகுந்த கருணையோடு, செந்தாமரை மலர் போன்ற தன் முகம் ஒளி வீச,உமக்கு நான் செய்யத்தக்க செயல் எது? துன்பம் ஏதும் இல்லையல்லவா? உம் மனைவியும், புத்திசாலிகளான புதல்வர்களும் சுகமாகவும், நோயற்று வலிமை பெற் றவராகவும் இருக்கின்றனரா? என்று வினவுவான்.

"எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிதும் நும் மனைவியும்
மதி தரும் குமரரும் வலியர்கொல் எனவே"
(திரு அவதாரப்படலம் 312)

2.தசரதன் நலம் விசாரித்தல்

இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக தசரதன் தன் படைகளுடன் மிதிலை வருகிறான். அவனை எதிரே சென்று ஜனகர் வந்து வரவேற்கின்றார். ஜனகர் தேரை விட்டு இறங்கி வருகிறார். தசரதன் தன் செய்கையினால் ஜனகனை தனது தேருக்கு அழைக்கின்றான். ஜனகன் தேரில் ஏறியவுடன் அவனைத் தசரதன் கட்டித் தழுவுகின்றான். பின்பு ஒவ்வொருவராக தசரதன் நலம் விசாரிக்கின்றான்.

தசரதன், ஜனகனை தழுவிய படியே அவனுடைய எண்ணற்ற சுற்றத்தாரையும் அவனுடைய நண்பர்களையும் பற்றி குற்றமற்ற முறையில் வரிசை முறைப்படி நலம் விசாரித்தான். பின்னே மிதிலை நகருக்குள் செல்ல முற்பட்டு எழுக என்று ஜனகன் கூற, இன்பத்தோடு வந்து எய்தினான் தசரதன்.

“தழுவி நின்று அவன் இருங்கிளையும் தமரையும்
வலு இல் சிந்தையினான் வரிசையின் அளவளாய்
எழுத முந்துற எனா இனிது வந்து எய்தினான்
உழுவை முந்து அரி அனான் எவரினும் உயிரினான்”
(எதிர்கொள் படலம் 995)

3.பரதன், தூதர்களிடம் தந்தையின் நலம் விசாரித்தல்

தசரதன் இறந்ததால், பரதனை அழைத்துவர வசிட்டர் ஓலை கொடுத்து தூதர்களை, பரதனிடம் அனுப்புகிறார். தூதர்களும் பரதன் தங்கியுள்ள கேகயநாட்டு அரண்மனையை அடைந்தனர். காவலரிடம், உங்கள் தந்தை அனுப்பிய செய்தியோடு தூதர்கள் வந்துள்ளனர் என்று வாயிற்காவலர்கள் அறிவித்தார்கள். அதைக் கேட்டு அன்பு பெருக, ஆனந்தப்படும் மனத்தினனான பரதன், அவர்கள் இங்கே வருவராக என்று கூற, அதன்படி வந்த தூதர்கள் பரதனை வணங்கினார்கள். அவர்களை நோக்கி, ‘சக்கரவர்த்தி தீதின்றி நலமாக இருக்கிறாரா? என்று கேட்டான் பரதன்.

"தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என
காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ
தீது இலன்கொல் திரு முடியோன் என்றான்
(பள்ளிப்படைப் படலம் 785)

4.கைகேயி நலம் விசாரித்தல்

ஒரு பெண் தன் தாய் வீட்டிலிருந்து வந்த ஒருவரை நோக்கி, என் பெற்றோர், உடன் பிறந்தோர் எல்லோரும் குறைவின்றி நலமாயுள்ளனரா என்று வினவுவர். கேகய நாட்டிலிருந்து பரதன் வந்தவுடன், தன் தாயாகிய கைகேயியைக் கண்டு வணங்கியதும் அவள் இவ்வாறு வினவினாள்.

"வந்து தாயை அடியில் வணங்குதலும்
சிந்தை ஆரத் தழுவினள் தீது இலர்
எந்தை என்னையர் எங்கையர் என்றனற்
அந்தமில் குணத்தானும் இது ஆம் என்றான்"
(பள்ளிப்படைப் படலம் 825)


5.இராமன், பரதனிடம் நலம் விசாரித்தல்

காடு சென்ற இராமனை நாட்டிற்கு அழைத்துவரச் சென்ற பரதனிடம் இராமன் அவன் புனைந்துள்ள தவவேடத்தைப் பலமுறை உற்றுப் பார்த்தான். அவனது உள்ளத்தில் பலவகையான சிந்தனைகள் எழும்பின.அதன்பின் அவனை நோக்கி, " ஐயனே நீ இப்போது பெரும் துன்பத்தில் மூழ்கியுள்ளாய் என்பது தெரிகிறது.மல்லாற்றலில் வல்ல தோள்களைப் பெற்று இவ்வுலகத்தினை ஆளும் நம் தந்தையாகிய தசரதன் நலமுடன் உள்ளானா? என்று கேட்டான்.

" புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தைப்
பல்முறை நோக்கினன் பலவும் உன்னினான்
அல்லனின் அழுங்கினை ஐய ஆளுடை
மல் உயர் தோளினான் வலியனோ என்றான்"
(திருவடிசூட்டுப்படலம் 1112)

6.சடாயு நலம் விசாரித்தல்

வனத்தில் இராம இலட்சுமணர் சீதையைக் கண்ட சடாயு, இராமனைப் பார்த்தவுடன் தசரதனின் சாயலில் இருப்பதை உணர்ந்து அவனிடம், தசரதனுடைய நலத்தை விசாரிக்கின்றான்.இந்திரனுக்காக தசரதன், சம்பராசுரனுடன் போரிடும் போது, சடாயு அவனுக்கு உதவியது. அன்று முதல் இருவரும் உடலும், உயிரும் போல நல்ல நண்பர்கள் ஆனார்கள். தசரதனுடைய இறப்புச் செய்தியை அறிந்தவுடன் மூர்ச்சித்து வீழ்கின்றான்.

"உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன்
தரைத்தலை இழிந்து அவர்த்தழுவு காதலன்
விரைத் தடந் தாரினான் வேந்தர் வேந்தன் தன்
வரைத் தடந்தோள் இணை வலியவோ என்றான்"
(சடாயு காண் படலம் 192)

7. இராவணன் நலம் விசாரித்தல்

அனைத்துத் தீவுகளிலிருந்தும் இராவணனுக்கு உதவ அனைத்து அரக்கவீரர்களும் வந்தனர்.அனைவரும் இராவணன் அருகில் சென்று அவன் பாதங்களை முறையாகத் தொழுது, வணங்கி, அங்கு மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தபோது, இராவணன், அவர்களை நோக்கி, " உங்களின் வரவு என்னுடைய நலத்தினையே கருதும் நல்வரவாக ஆகுக" எனக்கூறி, மன நிறைவுடன், " உங்களுடைய மனைவிமாரும், மக்களும் நலமுடன் உள்ளனரா? என்று நலம் கேட்டான்.

"அனையர் யாவரும் அருகுசென்று அடிமுறை வணங்கி
வினையம் மேவினர் இனிதின் அங்கு இருந்த்து ஓர் வேலை
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி
மனையும் மக்களும் வலியரோ என்றனன் மறவோன்"
(படை காட்சிப் படலம் 3218)

8.இராமன், குகனிடம் நலம் விசாரித்தல்

இராம-இராவணயுத்தம் முடிந்த பிறகு இராமன் அயோத்தி வரும் வழியில் குகனைக் காண்கிறான். குகன், இராமனைக் கண்களால் கண்டு தொழுது, மனமும் கண்களும் ஒளிவரப்பெற்றவனாய் அவனைச் சுற்றி வந்து நீண்ட காலம் பிரிந்ததற்கு வருந்தி அழுதவனாய், தாமரை மலர் போன்ற இராமனின் அடியில் விழுந்து வணங்கினான். அப்போது இராமன் அந்த குகனை தன் கையால் உயர்த்தி எடுத்து தன் தம்பியை அணைப்பதைப் போன்று மார்பில் தழுவி, உன் மக்களும் மனைவியும் குறைவற்ற நலம் வாய்ந்தவராய் உள்ளனர் அல்லரோ என்று நலம் உசாவினான்.

“தொழுதனன் மனமும் கண்ணும் துளங்கினன் சூழ ஓடி

அழுதனன் கமலம் அன்ன வடித்தலம் அதனின் வீழ்ந்தான்
தழுதனன் எடுத்து மார்பில் தம்பியைத் தழுவுமா போல்
வலு இலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான்”
(மீட்சிப் படலம் 4188)

குகன், இராமனைப் பார்த்து ’அடியேனிடம் உன் அருள் இருக்கின்றது. மனைவி மக்கள் அனைவரும் அடியேனுக்கு அரிய பொருளாக மாட்டார். உன்னை விட்டுப் பிரியாத பற்றுடனே பின்தொடர்ந்து வந்து மெய் உணர்வுடைய இலக்குமணன் செய்த தொண்டுகளைச் செய்யக் கொடுத்து வைக்காதவனான அறியாமை மிக்க உள்ளத்தை உடைய எனக்கு, உயிர் வாழ்க்கை நன்றாக உள்ளது ஒன்றன்றோ! இனியது அன்று என்றான்.

“அருள் உனது உளது நாயேற்கு அவர் எல்லாம் அரிய ஆய
பொருள் அவர் நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்
மருள் வரும் மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ”
(மீட்சிப்படலம் 4189)

முடிவுரை

நமக்கு வேண்டியவர்கள் நலமுடன் உள்ளனரா என்று அன்புடன் விசாரித்தல் நமது பழக்கமாகும். கம்பராமாயணத்தில் நகர மக்களின் நலனை இராமன் விசாரித்தல், தசரதன், சனகனின் சுற்றத்தினரை நலம் விசாரித்தல், பரதன், தூதர்களிடம் தந்தையின் நலம் விசாரித்தல், கைகேயி, பரதனிடம் தன் தாய் தந்தையர் நலம் விசாரித்தல் ,இராமன், பரதனிடம் நலம் விசாரித்தல், சடாயு, தசரதனின் நலம் விசாரித்தல் . இராவணன், நண்பர்களிடம் நலம் விசாரித்தல் இராமன், குகனிடம் நலம் விசாரித்தல் என்று பலர் நலம் விசாரித்ததைக் கம்பராமாயணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R