முன்னுரை
யாதும் ஊரே யாவரும் உறவினர்கள் என்று வாழ்ந்துவந்தவன் தமிழன். தீதும் நன்றும் அவர்அவர் செயல்களால் விளைவது என்ற யதார்த்ததை இலக்கியத்தில் பதிவு செய்து வாழ்தவன் தமிழன். இன்றைய கவிதைகளில் பாடுப்பொருள் புதுமைகளைப்பற்றி இக்கட்டூரையில் ஆய்வோம்
புதுக்கவிதைகள்
தமிழ் யாப்பு மரபில் சங்ககாலத்தில் ஆசிரியப்பாவும், நீதியிலக்கிய காலத்தில் வெண்பாவும், காப்பியக்காலத்தில் விருத்தப்பாவும் கொலோச்சியது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிபா, பரிப்பா என்று யாப்பு அடிப்படையில் பாடிவந்த மரபை உடைத்து எந்த யாப்பு வகையும், இலக்கணமும் இன்றி எழுதப்படுவதே புதுக்கவிதைகள் ஆகும்.
பாடுப்பொருள்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறுபட்ட பாடுப்பொருள்கள் காலம்தோறும் தோன்றிவந்துள்ளன. சங்ககாலத்தில் காதல், வீரம் என்ற பாடுப்பொருளையும், நீதியிலக்கியத்தில் அறம் மட்டும் பாடுப்பொருளாகவும், பக்த்தியிலக்கியத்தில் இறையுணர்;வையும், காப்பியக்காலத்தில் அறம்,பொருள், இன்பம்,வீடுப்பெறும், என்ற பாடுப்பொருள்களும், சிற்றிலக்கிய காலத்தில் தனிப்பட்ட ஒருவர் வாழ்வியல் பற்றியும் பாடுப்பொருளாக பாடப்பட்டுள்ளது. இக்காலத்தில் அனைத்து துறைகளும் பாடுப்பொருளாக வைத்து பாடப்படுகின்றன.
அரசியல்
ஒவ்வொருவரும் கணவில் ஒரு கோட்டையை கட்ட நினைப்பதும் உண்மையே சிலர் அதிகார கணவில் இருப்பர், சிலர் வாழ்கையே கணவு போல முடியும். சிலர் பணம் மட்டுமே வாழ்கையாக கொண்டுள்ளனர். அரசியலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்கிற வேட்கையில் பலகுழப்பங்களை செய்கின்றனர். மக்கள் பலரையும் குழப்பி எளிதில் அரசியல்வாதிகள் வெற்றிப்பெறுகின்றனர். இதை
“வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகின்ற மீன்கள்”
(காக்கையின் வண்ணப்படம்)
என்ற பாடலில் கவிஞர் ந.க துறைவன் இக்கருத்தை காக்கையின் வண்ணப்படம் எனும் நூலில் பாடுப்பொருளாக பதிவுசெய்கிறார்.
அரசன் படையெடுத்து வென்று நாட்டை கைப்பற்றினான் என்று வரலாற்று இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இன்றை அரசியல்வாதிகள் எதை முன்னிறுத்துகின்றனர் என்றால் மற்றவர் செய்த குற்றங்களைதான் இதை
“குற்றவாளிகளே
குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்
கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள்”.
(காக்கையின் வண்ணப்படம்)
புதுக்கவிதையில் கவிஞர்கள் இவ்வாறாக பதிவு செய்கின்றனர். மேலும் நீதி வழங்கவேண்டிய நீதி பதிகளே குற்றம் இழைக்கும் சமுக அவலத்தை புதுக்கவிதையின் பாடுப்பொருளாக கொண்டு
“உன் தராசுத் தட்டுகளைக்
கொஞ்சம் கண்திறந்து பார்
அங்கே
புறாவின் மாமிசத்தை
சிபிகள் உண்ண ஆரம்பித்து விட்டனர்”
( அப்துல் ரகுமன் கவிதை தொகுப்புகள்)
என்றவாறு பதிவு செய்துள்ளனர்.
எங்கு சென்றாலும் தமக்கு நீதி மறுக்கப்படுவதை பலரும் அனுபவக்கின்றனர். எல்லாம் தலைவிதி என்று பலர் கூறுவதை நம்மால் பார்க்கத்தான் முடிகிறது இதை
“சிலம்பை
உடைத்து என்ன பயன்
அரியணையிலும்
அந்தக் கொல்லன்”
(தமிழன்பன் கவிதைகள்)
என்று முறைக்கேட்டையும், அதை அனுபவிப்பவரின் மனவோட்டத்தையும் பாடுப்பொருளாக கொண்டு கவிதை இயற்றியுள்ளனர்.
தண்ணீர் பஞ்சம்
மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகதான் இருக்கும் என்பர் அறிஞர்கள். கையால் அள்ளி பருகிய தண்ணீரை இன்று பைகளில் அடைத்து வைத்து விற்கும் நிலைதான் நிலவுகிறது. இதை
‘சுட்டெரிக்கும் வெயில்
தாகமாய் நடக்கும் மனிதர்கள்
பாதையோரம் தர்பூசணிகள்”
(காக்கையின் வண்ணப்படம்)
என்ற பாடலில் ந.க துறைவன் பதிவு செய்கிறார். கூடவே தர்பூசணியும் விற்கப்படுவதாக மாற்றையும் பதிவுசெய்கிறார்.
தொழில் நூட்ப தோல்வி
இருபதாம் நூற்றாண்டில் நாம் தொழில் நூட்ப யுகத்தில் வாழ்ந்துக்கொண்டுள்ளோம். தொழிநுட்பத்தின் வளர்ச்சியை மட்டும் அல்லாமல் அதன் தோல்வியையும் நகையாடுவதாக
“எங்கிருக்கிறது என்று
மீன்கள் அறியுமா
தேடப்படும் விமானம”;
(காக்கையின் வண்ணப்படம்)
என்று கவிதையாக கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.
கலவரம்
மனித மரபணுவிலே சுயநலம், ஆதிக்கப்போட்டிகள் நிறைந்துள்ளன. இந்திய வரலாற்றிலே தந்தையை சிறைப்படுத்தி அல்லது கொன்றும், இரத்த உறவுகளை கொன்றும் அரசாச்சி கைப்பற்றி ஆண்டதையும் அறிகிறோம். அதுப்போல ஊர் திருவிழாக்களில் வெளிப்படும் கலவரத்தை
“அம்மன் கொடை விழாவில்
ஆதிக்கப் போட்டி
ஊருக்குள் கலவரம்”
(காக்கையின் வண்ணப்படம்)
என்று கவிதையாக கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.
விலைமகளிர்
சமுகத்தில் உள்ள அனைத்து மக்களின் மன உணர்வுகளும் புதுக்கவிதையாக மிளிர்வதை நம்மாள் பார்க்க முடிகிறது. விளைமகளிரின் வருமையை கவிஞர்
“நாங்கள் நிர்வாணத்தை
விற்பனை செய்கிறோம்
ஆடைவாங்குவதற்காக”.
(கருப்பு மலர்கள்)
இவ்வாறாக பதிவு செய்கிறார்.
தவிப்பு
நிலைத்தை இழந்த ஒருவரின் தவிப்பையம் புதுகவியாளர்கள் பதிவு செய்ய தவறவில்லை வலியோடு
“தந்தையிடம் நிலமிருந்தது
மகனிடம் நிலமிருந்தது
இழந்த நிலத்தில் அடுக்கங்கள”;.
(காக்கையின் வண்ணப்படம்)
இவ்வாறாக பதிவுசெய்துள்ளனர்.
ஏமாற்றம்.
தமக்கு கிடைக்கவேண்டிய உண்மையான உரிமைகள் கிடைக்காமல் மக்கள் பலர் உள்ளனர். அவர்களின் உள்ளத்தை புரிந்துக்கொண்டு அவர் தம் நிலையை
“அணைக்கட்டில் இருந்து
திறக்கப்படும் தண்ணீரானது
பள்ளங்களை ஏமாற்றி
மேட்டை நோக்கியே பாய்கின்றன”.
(கண்ணிர் பூக்கள்)
என்று பாடுப்பொருளாக கொண்டு புதுக்கவிதை படைக்கப்பட்டுள்ளது.
அழகு
சங்க காலம் முதல் அழகு முக்கியத்துவம் கொடுத்து பாடப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கவிதையில் பெண்களின் யாதார்த்த அழகையும் அவர்களை கானும் ஆணின் மனவோட்டத்தையும் அழகாக
“அழகாய் இல்லாததால்
அவள் எனக்கு
தங்கையாகிவிட்டாள்”
(அவளின் பார்வை)
அழகு குறையைக் கூட பாடுப்பொருளாக பதிவு செய்துள்ளனர்.
திருநங்கை
சமுகத்தில் குற்றம் சுமத்தவும், திட்டவுமே ஒரு சிலரை பதிவு செய்து வைத்த நிலை போக அவர்களின் மன உணர்வுகளையும் பதிசெய்யும் நிலையில் புதுக்கவிதையின் பாடுப்பொருள்கள் அமைந்துள்ளன.
“அருகில் யாரமில்லை
எடுத்துப் பூசிக்கொண்டான்
முகம்மெல்லாம் மஞ்சள் சாந்து”
(காக்கையின் வண்ணப்படம்)
என்று புறக்கனித்தவர்களைப் பற்றியும் புதுகவிதையில் அவர்கள் உணர்வையும் பாடுப்பொருளாக கொண்டு படைக்கப்படுவதை அறியமுடிகிறது.
முடிவுரை
புதுக்கவிதைகளில் ஒரு குறிப்பிட்ட பாடுப்பொருள்களை கூறாமல் பல்வேறுபட்ட பாடுப்பொருள்களை கொண்டு கவிதை படைக்கப்படுகின்றன. சான்றாக அரசியல், காதல், வீரம், மற்றும் சமுக அவலங்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள், புறக்கணிக்கபடுவர்களின், நிலை மற்றும் விலைமகளிர் பற்றியும் ஒரு பரந்துபட்ட பாடுப்பொருளைக்கொண்டே பல்வேறு புதுக்கவிதை தொகுப்புகள் உருவாகின்றன. இத்தகைய பாடுப்பொருள்கள் தமிழ் மரபுக்கே புதுமையானது. அரசன், தலைவன், இறைவன் என்று பாடியிருந்த பாடுப்பொருள்களும் இக்காலத்தில் புதுமையாக்கம் பெற்று பல்வேறு பாடுப்பொருளை கொண்டு கவிதைகள் உருவாக்கபடுகின்றன.
துணைநூல்கள்.
1) காக்கையின் வண்ணப்படம்( சென்ரியு கவிதைகள்)— ந.க துறைவன்
2) தவளை குதித்த குளம் --- ந.க துறைவன்
3) கருப்பு மலர்கள்--நா. காமராசன்
4) மீனாட்சி கவிதைகள்--மீனாட்சி
5) கண்ணீர் பூக்கள்--மு. மேத்தா
6) அவளின் பார்வை – கலாப்ரியா
7) தமிழன்பன் கவிதைகள்- ஈரோடு தமிழன்பன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.