முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் கபிலர். இவர் சிவன், திருமால், பிரம்மன் முருகன் முதலிய நால்வரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது. இந்நூலில் அமைந்துள்ள நாற்பது பாடல்களிலும் 160 கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இந்நூலில் இடம்பெறும் அரசியல் நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அரசன்
இன்னா நாற்பதில் அரசியல் நெறி அரசனையே மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அரசன் என்னும் சொல்லிற்கு தமிழ் மொழி அகராதி இராசன் எப்பொருட்கு மிறைவன்,எழுத்து தானம் ஐந்தினொன்று,கார் முகிற் பா~hனம்,துருசு,பாணகெந்தகம்,முக்குவர் தலைவன்,வியாழன் என்று பொருள் கூறுகிறது.(பக்.113)
அரசன் என்பதற்கு க்ரியா அகராதி பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையை பெற்றவர் என்றும் மiபெ என்றும் பொருள் கூறுகிறது.மேலும் அரசன் செய்யும் அரசாட்சியை ஆளுகை,நிர்வாகம் சரடந ழச சநபைn ழக ய மiபெ என்று பொருள் உரைக்கிறது. (ப.38)
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி.இதற்கு காரணம் மன்னது நீதி ஆட்சி முறையில் தான் மக்களது நல்வாழ்வு அடங்கும்.ஆட்சியின் உயர்வும் தாழ்வும் மக்களை நேரிடையாகப் பாதிக்கும் என்பதை மோசிகீரனார்,
நெல்லும் உயிரென்றே நீரும் உயிரென்றே
மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்ப தற்கை
வேல்மிகு தானே வேந்தற்குக் கடனே (புறம்.186)
என்ற பாடலின் மூலம் மக்கள் மகிழ்ச்சியுடனும்,செழுமையுடனும் வாழ்வதும,; பகை,பஞ்சம்,பிணி போன்றவற்றிலிருந்து காப்பதும் மன்னன் ஆகையால் நெல்லும் நீரும் உயிரன்று மன்னனே மக்களுக்கு உயிர் போன்றவன் என்கிறது.மேலும் புலி தன் குருளைகளை பேணுவதைப் போல அரசன் மக்களைப் பேணி காத்தான் என்பதை,
புலி புறங்காங்கும் குறளை போல
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப (புறம்.42:10-11)
என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.
கொடுங்கோன்மை :
ஒருவர் தம் நாட்டில் செங்கோல் செலுத்துவதில் தவறிக் கொடுமையான முறையில் ஆட்சி புரிவது கொடுங்கோன்மை எனப்படும்.கொடுங்கோல் அரசனின் நாடானது காட்டை விடக் கொடியதாகத் தோன்றும்.பின்னர் அழிவுப் பாதையில் அரசின் நாடானது காட்டை விடக் கொடியதாகத் தோன்றும்.பின்னர் அழிவுப்பாதையில் சென்று மறைந்து விடும்.கொலை செய்பவர்களைக் காட்டிலும் கொடுங்கோலாட்சி செய்யும் மன்னர்கள் கொடியவர்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றர்.இதனை,
கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து (551)
என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.
கொடுங்கோலாட்சி செய்யும் அரசனைப் பற்றி 2 பாடல்களில் கபிலர் கூறியுள்ளார். கொடுங்கோலாட்சி செய்யும் மன்னன் கீழ் வாழ்தல்,நீதிநெறி தவறி ஆளுகின்ற மன்னரது ஆட்சி துன்பம் என 3,5 ஆகிய பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா (இன்.3:1)
முறையின்றி ஆளும் அரசின்னா (இன்.5:3)
என்ற பாடலடியால் அறியலாம்.
மேலும் கொடுங்கோல்; மன்னனால் குடிகள் துன்புறுவார்கள் என்பதை நல்லாதனார்,
கொள்பொருள் வெஃ கிக் குடி அலைக்கும் வேந்தனும் (திரி.50:1)
என்ற பாடலடியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசர் படைகள்
வள்ளுவர்; அரசனுக்கு உரிய உறுப்புகளில் ஒன்றாக படையைக் குறிப்பிட்டுள்ளார்.இதனை
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (581)
என்;ற குறளில் அறியலாம்.
சுக்கிர நீதியானது அரசின் உறுப்புகள் பற்றி வரையறை செய்யுமிடத்து அரசு,அமைச்சு, நட்பு,பொருள்,நாடு,அரண் ,படை, என்றும் அவற்றுள் அமைச்சு கண்ணாகவும், நட்பு செவியாகவும் பொருள் முகமாகவும்,படை மனமாகவும்,அரண் கையாகவும் ,நாடு காலாகவும் அரசுறுப்புகள் அமையும் என விளக்குகிறது.(பக்.8-9)
படைமாட்சி,படைச்செருக்கு என்னும் அதிகாரங்கள் படைத்தொழில் அக்காலத்துப் பெற்றிருந்த சிறப்பைக் காட்டும். வள்ளுவர் காலத்தில் நால்வகைப் படைகளும் இருந்தன என்பதற்குச் சான்றாக பின்வரும் குறள் அமைந்துள்ளது.
உறுப்பறைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை (761)
யானை முதலிய நான்குறுப்பானும் நிறைந்து உறுபடுதற்கஞ்சாது நின்று பகையை வெல்வதாய படையை வெல்வதாய படை,அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் ,தலையாய செல்வம் (திருக்குறள் பரிமேலழகர், குறள்.761)
நாட்டை ஆளும் மன்னன் படையையும் ஆளும் தன்மை பெற்றவனாக இருக்க வேண்டும் என்று இனியவை நாற்பது கூறுகிறது.இதனை
…………………………………படையாண்மை முன் இனிதே (இனி.7:2)
என்ற பாடலடி மூலம் புலப்படுகிறது.
யானைப்படை
அரசர்களுக்கு படைகளில் யானைப் படை முக்கியம்.இன்னா நாற்பதில் யானைப்படை குறித்த செய்திகள் மூன்று இடங்களில் (13,22,30) இடம்பெறுகின்றன.இதனை,
மணியில்லா குஞ்சரம் வேந்தூர்தல் இன்னா (இன்.13:1)
யானையில் மன்னரைக் காண்டல் நனி இன்னா (இன்.22:1)
கடுஞ்சின வேழத்து எதிர்சேறல் இன்னா (இன்.30:2)
மேற்கூறப்பட்ட பாடலடிகள் ஆனது மணிகள் கட்;டப்பெற்ற யானைகளின் மீதே வேந்தன் ஏறி செல்ல வேண்டும் என்றும் அவனுக்கு யானைப்படை இருக்க வேண்டும் என்றும் மதம் கொண்ட யானைக்கு எதிரே செல்லக்கூடாது என்றும் கூறுகிறது.
இதன் மேலும் படைகளில் அரசனுக்கு யானைப் படை முதன்மையாக இருந்தது என்பதை ;அறியமுடிகிறது.
குதிரைப்படை
அரசனுக்கு சிறப்பு தரும் படைகளில் ஒன்று குதிரைப்படை ஆகும்.அரசருக்கு உரியவையாக குதிரைப்படையை தொல்காப்பியர் கூறியுள்ளார்.இதனை,
படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும்,களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய (தொல்.பொருள்.1571)
என்ற நூற்பாவின் வழி அறியமுடிகிறது.
இன்னா நாற்பதில் குதிரைப்படைக் குறித்த செய்திகள் நான்கு இடங்களில் (9,15,28,38) சொல்லப்பட்டுள்ளன.
இதனை,
…………………………….ஆங்கின்னா
பண்ணில் புரவி ( இன்.9:3-4)
புல்லார் புரவி மணியின்றி ஊர்வின்னா (இன்.15:1)
கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா (இன்.28:1)
வெறும்புறம் வெம்புறவி யேற்றின்னா இன்னா (இன்.38:3)
மேற்கூறப்பட்ட பாடலடிகள் ஆனது சேணத்துடன் குதிரைச் சவாரி செய்ய வேண்டும் என்றும் மணிகள் கட்டப்பெற்ற குதிரையில் ஏறிச்செல்ல வேண்டும் என்றும் பயிற்சியுடன் குதிரைச் சவாரி செய்ய வேண்டும் என்றும் வேகமாகச் செல்லும் குதிரைக்கு சேணம் முக்கியம் என்றும் கூறுகின்றன.
போர்க்கள வீரர்கள்
காலாட்படை
‘பொரு’ என்னும் வேர்ச்சொல்லின் அடியாக பிறந்தது ‘போர்’ எனும் சொல்.ஆற்றலிலும் படைப்பலத்திலும் ஒத்த தன்மையரோடு பொருதலை போர் என்பது பண்டையத் தமிழரின் கொள்கை. தற்காலத்தில் நிகழ்வது போல் எதர்பாராது தாக்குதல் மறைந்திருந்து தாக்குதல் போன்ற முறைகளில் போர் நிகழவில்லை.போர் செய்யப் போவதை அறிவித்தப் பின்னர் செய்வது மரபாக நிலவியது .தேர்,யானை ,குதிரை ,காலாள் என நால்வகைப் படைகளும் அணிவகுத்துப் போரில் ஈடுபட்டன.வில்,வாள், வேல் போன்ற படைக்கலங்கள் போரில் ஈடுபட்டன.வில் போன்ற படைக்கலங்கள் போரில் ஈடுபட்டன.போர்ப்பண்பு என்பது என்றும் மாறாத உலகியற்கை எனபார் வே.முத்துலெட்சுமி (பண்பாட்டுச் சிந்தனைகள் ப.59)
ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும்
புகுவது அன்றிவ் வுலகத் தியற்கை (புறம். )
என்ற பாடலடி உணர்த்துகிறது.
வீரர்கள் போர்க்களத்தில் சோர்வடைதல் கூடாது என்பதை கபிலர்,
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுகல் இன்னா (இன்.6:2)
என்ற பாடலடி மூலம் அறியலாம்.
போர்த்திறன் உடையவனாக இரு
ஒருவன் போர்த்திறன் உடையவனாக இருப்பதே சிறந்தது. போர்த்திறன் இல்லாதவன் கையில் இருக்கும் படைக்கலனால் சிறப்பு இல்லை என்கிறார் கபிலர் இதனை,
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா (இன்.7:1)
என்ற பாடலடி குறிப்பிடுகிறது. இதன் மூலம் போர்ச்செய்யும் ஒருவனுக்கு படைக்கலனைக் காட்டிலும் போர்த்திறன் முக்கியம் என்பது புலப்படுகிறது.
தனித்துப் போர்க்கு செல்லக் கூடாது
பொதுவாக அரசர்கள் வீரம் நிறைந்தவராகவும், போருக்கு அஞ்சாதவர்களாகவும் இருக்க வேண்டும்.வீரங்காரணமாக நிகழும் போர்களிலும் பழந்தமிழர் அறமே வெற்றிக்கு அடிப்படை என்று கருதினர் என்பதை,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்புரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும்
என நான்குடன் மாண்டதாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அறநெறி கொற்றம் (புறம்.55;:7-10)
என்ற பாடலடி உணர்த்துகின்றது.
இத்தகையப் போரில் வீரம் மிக்க படைகளையுடையவன் மார்தட்டித் தனித்துத் தனித்து செல்லக் கூடாது.என்பதை,
மறனுடை ஆளுடையான் மார்பு ஆர்த்தல் இன்னா (இன்.18:2)
என்ற பாடலடி உணர்த்துகின்றது.இதன் மூலம் போரில் படைகளுடன் தான் செல்ல வேண்டும் என்பது புலப்படுகிறது. மேலும் போருக்கு படையே இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.
வலிமையற்ற வேந்தரை வணங்க கூடாது
வலிமைமிக்க வேந்தர்கள், தம்மினும் குறைந்த வலிமையுடைய வேந்தர்களை வணங்குவது துன்பம் தரும் என்பதை,
பணியாத மன்னர் பணிவின்னா (இன்.13:3)
என்ற பாடலடி விளக்குகிறது.
வீரம் இல்லாதவர் கடுஞ்சொல்
கடுஞ்சொல் பேசுதல் அறமன்று. அதிலும் வீரம் இல்லாதவர் கடுஞ்சொல் பேசக் கூடாது என்பதை,
வீரர் இலாளர் கடுமொழிக் கூற்று இன்னா (இன்.20:2)
என்ற பாடலடி மூலம் அறியலாம். இதன் மூலம் கொடுஞ்சொல் பேசக் கூடாது என்ற கருத்து புலப்படுகிறது.
அரசனுக்கு கொடை உள்ளம்
க்ரியா அகராதி கொடை என்பதற்கு நன்கொடை,பரிசு, பகைவ என்று பொருள் உரைக்கிறது.(ப.371)
செய்யுள் இயற்றுபவர்க்கு அரசன் பரிசுளைக் கொடுக்காமல் இருக்க கூடாது என்பதை
கொடுத்து விடாமை கவிக்கு இன்னா (இன்.39:3)
என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.இதன் மூலம் அரசனுக்கு கொடை உள்ளம் இருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
வெற்றுரைக் கூறுதல் கூடாது
பகைவரை வெல்லும் தன்மையற்றவர்கள் கூறும் வீரமொழிகள் துன்பம் தரும் என்பதை
துணிவில்லார் சொல்லும் தறுகண்மை இன்னா (இன்.13:2)
என்ற பாடலடி உணர்த்துகிறது.
வீரம் இல்லா அரசன்
அரசனுக்கு வீரமும்,கொடையும் மேம்பட்டிருத்தல் வேண்டும்.அதனால் நாட்டில் அறிஞர்களும்,கலைஞர்களும் ஒங்கி மக்கட்கு வாழ்க்கையில் விளக்கம் உண்டாகி வாழ்த்தும் மிகும்.தெருவெல்லாம் அவன் புகழ் முழக்கம் பெருகும். வீPரம் இல்லா மன்னர்கள் போர்க்களம் புகுதல் துன்பம் என்பதை,
மறமில்லா மன்னர் செருப்புகுதல் இன்னா (இன். 38:2)
என்ற பாடலடியில் கபிலர் புலப்படுத்தியுள்ளார்.இதன் மூலம் மன்னருக்கு வீரம் இருப்பது சிறந்து என்றும் மன்னருக்கு வீரம் இருக்க வேண்டும் என்ற கருத்தை உணரமுடிகிறது.
குடிமக்களை பாதுகாத்தல் செய்
அரசன் குடிமக்களைப் பாதுகாக்கும் இயல்பு படைத்தவனாக இருந்தால் தான் மக்களால் இறை என்று எண்ணப்படுவான் என்பதை வள்ளுவர்,
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு
இறையென்று வைக்கப் படும் (388)
என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.அரசனால் குடிமக்கள் பாதுகாக்க N;வண்டும் என்கிறது இன்னா நாற்பது இல்லையென்றால் அந்நாடு துன்ப மடையும் என்பதை,
காப்பாற்றா வேந்தன் உலகு (இன்;.2:4)
என்ற பாடலடி உணர்த்துகிறது.
புறமுதுகிடல்
போர்ச் செய்யும் போர்க்களத்தில் புறமுதுகு காட்டல் அறமன்று.படைக்கருவிகள் இழந்த நிலை ஏற்படும் போது புறமுதுகுகாட்டல் துன்பத்தை விளைவிக்கும் என்பதை,
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா (இன்.4:2)
என்ற பாடலடி குறிப்பிடுகிறது.இதன் மூலம் ஒரு வீரர் புறமுதுகிட்டு ஓடாமல் இருப்பதற்கு படைக்கருவி இன்றியமையாத பங்கு வகுக்கிறது என்பது புலனாகிறது.
அமைச்சர்
அரசனுடனுடன் சேர்ந்து தொழில் நாடத்துபவனே அமைச்சர் ஆவார்.அரசனின் எண்பெருராயம்,ஐம்பெருக்குழு இவற்றில் பங்கு பெறுபவர்களே அமைச்சர் ஆவார். வள்ளுவர் அரசனுக்கு உரிய உறுப்புகளில் ஒன்றாக அமைச்சரைக் குறிப்பிடுகிறார்.இதனை,(581) ஆவது குறளில் குறிப்பிட்டுள்ளார்.
கௌரா தமிழ் அகராதி அமைச்சன் என்பதற்கு மந்தரி, வியாழன்,என்று பொருள் கூறுகிறது.(ப.25)
அரசனாவன் அமைச்சர் முதலோரின் ஆலோசனைக் கேட்டு ஒரு செயலை செய்ய வேண்டும் என்பதை,
மறையின்றிச் செய்யும் வினை (இன்.5:4)
என்ற பாடலடி உணர்த்துகிறது.தமிழ் இலக்கியங்கள் அமைச்சனுக்கு மதி நுட்பம் வேண்டும் என்று எடுத்துரைத்தப் பாங்கை இங்கு நினைவு கொள்ளுதல் நோக்கதக்கது.
அரசனின் மதிலும் காவலும்
செங்கோலாட்சி செய்யும் மன்னது நகரில் மதில் சுவர் வலிமையுடையதாக எழும்பியிருத்தல் வேண்டும்.அப்பொழுது தான் குடிமக்களுக்குச் சிறப்புடையதாக மன்னர் ஆட்சி அமையும் மதிலில்லா ஊரினது வாயிலைக் காத்தல்,மதி;ல் காவல் அரசு காவல் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் துன்பம் என 23,24 ஆகிய பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
சிறையில்லா மூதூர் வாயில் காப்பின்னா (இன்.1)
ஏமமில் மூதூர் இருத்தல் மிக இன்னா (இன்.1)
முடிவுரை
இன்னா நாற்பதில் அரசியல் நெறிகளாக கொடுங்கோலாட்சி கூடாது என்ற கருத்தை கபிலர் கூறியுள்ளதை அறியமுடிகிறது. அரசனின் படைகளான காலாட்படை ,யானைப் படை, குதிரைப்படை,ஆகிய படைகளைப் பற்றியும் அறியமுடிகிறது. போர்க்களச் செய்திகள், குடிமக்களைப் பாதுகாக்கும் விதம் அமைச்சரின் செயல்கள் ஆகியவற்றைப் பற்றியும் உணரமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1
செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001
முதற்பதிப்பு -2009
2. இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3
செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001
முதற்பதிப்பு -2009.
3. மணிக்கவாசகன், ஞா சிறுபஞ்சமூலம்
உமா பதிப்பகம்
சென்னை -600017
முதற்பதிப்பு -2009
4. மாணிக்கம், அ திருக்குறள்
தென்றல் நிலையம்
சிதம்பரம் -608001
முதற்பதிப்பு -1999
5. பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம்
கொற்றவை வெளியீடு
சென்னை -600017
முதற்பதிப்பு -2014
6. அகராதி சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கட்டுரையாளர்: * சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -