முன்னொரு காலத்தில்
எனக்கோர் கனவு இருந்தது.
உழைத்துப் பயன் பெறுதல்
உன்னத வாழ்வாய்த் தோன்றியது.
கிடைக்கப் போகும் கனிக்காகப்
பூக்களையும் பிஞ்சுகளையும் பார்த்துப்
பெருமை கொண்டது மரம்.
வசதிகளுக்காய் வாழ்வை அடகு வைத்துக்
கடிகாரத்தைத் துரத்திக் கொண்டு
எதிர்காலம் நோக்கி ஓடும்
நிகழ்காலப் பொழுதுகள் உணர்த்துகின்றன -
மரம் எப்போதும் கனிகளை
ருசிக்க முடியாதென்ற
கசப்பான உண்மையை!