- வாய்ப்பாடு: இரண்டு விளம் சக ஒருகாய் -
மானிடம் தேனகம் வளம்பெருக
வையகம் வானகம் மறைபெருக
ஞானமும் மந்திரம் நறைபெருக
நற்றமிழ் புத்தகம் நலம்பெருக
பானிதம் பூத்திடும் பரம்பெருக
பைஞ்;ஞிலம் பஞ்சமில் லாதுயர
கானிடும் மாமழைக் கார்பெருக
கனடியப் பொன்மகள் பிறந்தனளே!
பதிவுகள் படைப்புகள் பார்பெருக
பாவொடும் காப்;பியம்; பண்ணெழுத
விதிசெய முத்தமிழ் விதித்தெழுக
விளைந்திட அறுவடை மேடுறுக
நதிதொறும் நீர்முகம் நர்த்தமிட
நம்பரும் ஆலயம் நலந்திகழப்
பதிதொறும் இன்னருள் படர்ந்தொழுகப்
பான்மகள் கனடியம் பயின்றனளே!
இலகிடும் இலக்கியம் ஏர்பெருக
இலக்கணம் மரபொடும் இயல்பெருக
அலகிடும் உலகெலாம் அழகெழுத
அத்திரம் அறிவென ஆர்த்தெழுத
கலகமும் குருதியும் கட்டிறுகக்
கருவறை புனிதமாய்க் கண்பெருக
நிலமும் மன்புகல் நிறைந்தொழுக
நித்திலகக் கனடாவும் மலர்ந்தனளே !
அரசியல் அனைவருக் காயெழுத
ஆஎனும் வாள்முகம் அழிந்தொழியத்
திரளொடும் திட்டுதல் தீர்ந்தழியத்
தேயரும் மூதரும் தீர்ப்பெழுத
மதியுடைத் தானவர் மன்றெழுத
வாதிட மான்முகம் மத்துருக
உதிரலை யானவர் ஓடிவிட
உண்மையும் நீதியும் ஓங்குகவே!
மக்களே எழுதுவர் வாருடைத்தும்;
மக்களே எழுதுவர் மதியுடைத்தும்;
மக்களே எழுதுவர் வகிபாகம்
மக்களே எழுதுவர் மண்ணொடுங்காண்
மக்களே எழுதுவர் தீர்ப்புகளே
வாயினாற் கீறுதல் வரும்முடையே
மக்களே எழுதுவர் முடிவுகளே
வாய்மையின் கனடியம் வெல்லுகவே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.