‘மலம் கழித்துக் கொண்டிருக்கிறேன்
என்னருகில் தயவுசெய்து யாரும் வர வேண்டாம்’
என்கிற எச்சரிக்கை வாசகத்தை
மிருதுவான கரும்பலகையில் எழுதிவிட்டு,
மீண்டும் மலம் கழிக்கும் வேலையை அல்லது தொழிலை
அழுத்தம் திருத்தமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.
சில நேரங்களில் சலிப்புத் தட்டும்போது
நான் நூலகத்திலிருந்துப் படிக்க எடுத்து வந்த
பழுதானவையும், பழுது நீக்கப்பட்டுள்ள
புதிய ஏடுகளைச் சுமந்த புத்தகங்களை
உறங்கும் நேரம்போகக் கழிவறையிலிருந்தே
பல நேரங்களில் எடுத்து வந்திருக்கிறேன்.
துருப்பிடித்த படைப்பு முதல்
பாலிஷ்டர் அப்பியிருக்கும் படைப்பு வரை
ஏற இறக்கம் பார்க்காமல்
என் வாசிப்பின் சமதளத்திலே வைத்து
அதனை மோப்பம் பிடித்தே
இதுநாள் வரையிலும் வந்திருக்கிறேன்.
சிலது நறுமணம் கமழும்;
சிலது மொப்பு அடிக்கும்.
என்ன செய்வது
வாசித்தாக வேண்டிய பொறுப்பிலே
என்னை அமர்த்திவிட்டார்கள்
சில கசப்பான மனிதர்கள்.
இன்னும்
என் வேலை முடிந்தபாடில்லை
தொடர்ந்து மலத்தை
வெளியேற்றிக்கொண்டுதான்
இருக்கிறேன்.
இப்போது
என்னை மறந்து
என் எண்ணத்தில் ஓடும்
நிர்வாணமாயிருக்கும்
ஒரு பெண்ணின் ஓவியத்தை
என் நினைவினில்
வரைந்துப் பார்க்கின்றேன்.
எழுதுவதைவிட
ஓவியத்தின் மீது
எனக்குப் பற்று இருப்பது மட்டும்
நான் ஓரளவு எழுத வந்ததிலிருந்துத்
தெரிந்துகொண்டேன்.
அது என்னவோ,
இதுநாள் வரையிலும்
என் கற்பனைக்கு அகப்படாமலே இருந்த
வண்ணம் தீட்டும் தூரிகைகள்
தொலைந்தே இருந்து வந்துள்ளன.
ஆனால்,
இப்போது இந்த ஓவியத்தை
அல்லது ஓவியப் பெண்ணை
எந்தப் புள்ளியிலிருந்து தொடங்கினேன் என்று தெரியவில்லை
எந்தப் புள்ளியிலிருந்து முடிப்பேனென்றும் எனக்குத் தோன்றவில்லை.
கதவைத் தட்டும் ஓசைக் கேட்கிறது
என் இன்பத்தை நேரம் காவு வாங்கிக்கொண்டிருந்தது
என் கண்ணில் அப்பிய இருள் விலகிருந்ததை,
வெளிச்சம் என்னைக் காட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தது.
கண்கள் விரித்தபோது
கதவு தாழ்பாளின் முனை
தேய்ந்துவிட்டதாக
எனக்கு நினைவு தட்டியது.
இன்னும் மலம்
என் உடலை விட்டுக் கழிவிறங்காமல்
தப்பித்துக் கொண்டேயிருக்கிறது
முடிவில் நான் அதனிடம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.