இனிதாய் வந்திடும் பொங்கலே
உள்ளங்கள் மகிழ்ந்திடும் பொங்கலே
உலகமே கொண்டாடும் பொங்கலே
உழைப்பை நினைவூட்டும் பொங்கலே!
தமிழர்கள் ஒன்றாகும் பொங்கலே
தன்மானம் வளர்த்திடும் பொங்கலே
பொங்கும் தமிழரின் பொங்கலே
போற்றும் ஒற்றுமைப் பொங்கலே!
மலையகம் கண்டநற் பொங்கலே
மாண்பையும் உயர்த்திடும் பொங்கலே
மனமிறங்கி மகிழ்ந்திடும் பொங்கலே
மாசுகொண்ட சாதியழிக்கும் பொங்கலே!
சத்தியமாய் நலம்பயக்கும் பொங்கலே
சாதகமாய் வாழ்த்தவரும் பொங்கலே
தெம்புடனே தீமையழி பொங்கலே
தமிழரிங்கே செழிக்கனுமே பொங்கலே!
பொங்கியெழு வீரமுடனே பொங்கலே
போர்குணம் கொண்டெழு பொங்கலே
தமிழரினம் கூடிபொங்கும் பொங்கலே
தரமுயரவே பொங்கிடுவாய்ப் பொங்கலே!
பல்லினம் மெச்சிடுமே பொங்கலே
பாசத்தினை வளர்க்கனுமே பொங்கலே
எந்நாளும் இணைவோம் பொங்கலே
ஏற்றமேயினி வந்திடுமே பொங்கலே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.